Sunday, September 15, 2024
முகப்புஉலகம்அமெரிக்காபாலஸ்தீன குழந்தைகள் சித்திரவதை!

பாலஸ்தீன குழந்தைகள் சித்திரவதை!

-

செய்தி -38

பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். 30 முன்னாள் படைவீரர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இஸ்ரேலிய படைவீரர்கள் செய்த எண்ணற்ற கொடுமைகளை விவரிக்கிறது.

2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரேக்கிங் சைலன்ஸ் (மௌனத்தை கலைக்கிறோம்) என்ற முன்னாள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கான அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இப்போதைய மற்றும் முன்னாள் இஸ்ரேலிய படைவீரர்கள் பங்கேற்ற அல்லது கண்ணுற்ற கொடுமைகளை பற்றி விவரிக்கும் 850 நிகழ்வுகளை திரட்டியிருக்கிறார்கள். இஸ்ரேலிய படைவீரர்கள் மீது கல்லெறியும் மைனர் குழந்தைகளை பிடித்து அடைத்து வைத்த நிகழ்வுகள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கவச வாகனப் படையின் முதன்மை சார்ஜண்ட் ஒருவர் தனது பணியை “மக்கள்  கட்டுப்பாடு” என்று அழைக்கிறார். பாலஸ்தீனிய கிராமங்களுக்குள் போய், தங்களது இருப்பை உணர்த்துவதுதான் அவரது படைப்பிரிவின் வேலை. அங்கு வசிக்கும் மண்ணின் மைந்தர்களிடம் அந்த பகுதியில் அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை நிலை நாட்டுவதுதான் படைப்பிரிவின் பணி.

“ஒன்று அல்லது இரண்டு ரோந்து அணியினர் கிராமங்களுக்குள் போய் அட்டகாசம் செய்வார்கள். ஒரு படைப்பிரிவே அனுப்பப்பட்டு கிராமத்து தெருக்களில் அணிவகுத்து சென்று கலவரத்தை தூண்டுவார்கள்” என்கிறார் அந்த முதன்மை சார்ஜண்ட். அவரது படைப்பிரிவு தலைவரின் நோக்கமே மக்களை காலடியில் நசுக்கி வைப்பதன் மூலம் தங்கள் மீது கல் எறிய நினைக்கக் கூட முடியாமல் செய்வதுதான்.

வெஸ்ட் பேங்கில் உள்ள காலந்தியா என்ற இடத்தில் பாலஸ்தீனிய குழந்தைகளை சூழ்ந்து கொண்ட ஒரு குழுவினர் அவர்களை மரத்தடிகளால் அடித்து துவைத்ததை ஒரு வாக்குமூலம் விவரிக்கிறது. “மக்களை தரையில் கீழே விழ வைத்த பிறகு படைவீரர்கள் போய் அவர்களை தடிகளால் அடிப்பார்கள். மெதுவாக ஓடுபவர் அடி வாங்குவார் என்பதுதான் விதி” என்கிறார் பொறியாளர் படைப்பிரிவின் ஒரு முதன்மை சார்ஜண்ட்.

பாலஸ்தின்-குழந்தைகள்-சித்திரவதை6 வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் காவலில் வைக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, உணவும் நீரும் கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டதை அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் போக முயற்சித்ததற்காக 12-14 வயதுடைய குழந்தைகளை கைது செய்ததாக சொல்லும் துணை ராணுவப் படை பிரிவின் முதன்மை சார்ஜன்ட் ஒருவர், குழந்தைகளை பயங்கரவாதிகளுக்கு துணை புரிபவர்களாகவே நடத்த வேண்டும் என்று தனக்கு சொல்லித் தரப்பட்டது என்கிறார்.

“பிடிக்கப்பட்டவர்களில் ஒருவரை இரண்டு படைவீரர்கள் அடிப்பதை அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார். எனது நினைவு சரியாக இருந்தால் பிடித்து வைக்கப்பட்டவர்களுக்கு 16 வயதுதான் இருக்கும்” என்றார் அவர். பொழுது போகாமல் போர் அடித்தால் கடைகளையும் கட்டிடங்களையும் அடித்து உடைப்பதன் மூலம் வேண்டுமென்றே கலவரங்களை அவரது படைப்பிரிவு தூண்டியது என்கிறார் அவர்.

இஸ்ரேலிய வீரர்கள் ஒரு மசூதிக்கு வெளியில் பொது மக்களுக்காக காத்திருந்து ரப்பர் குண்டுகளை சுடுவதன் மூலம் கலவரத்தை தூண்டிய நிகழ்வை பற்றி அவர் விவரிக்கிறார். பாலஸ்தீனிய குழந்தைகள் கற்களை வீசினால் அவர்களை பிடித்து மனித கேடயங்களாக பயன்படுத்துவது வழக்கம் என்கிறார் அவர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பை தொடர, முழு உலகமும் அமெரிக்காவிடம் சரணடைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மேற்கு கடற்கரையிலும் காசாவிலும் நடக்கின்றன என்பதற்கான முக்கிய ஆதாரங்கள் இவை.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

    • சொந்தமாக நாடு இல்லையென்பதற்காக மற்றவர்களை அடித்து விரட்டி விட்டு அந்நாட்டை சொந்தமாக்கிக் கொள்வதா?

    • யூதர்களின் தாயகம் ஜெர்மனி மற்றும் போலாந்து. அவர்கள் தான் நாஜிக்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமான யூதர்கள். தனிநாடு வேண்டுமாயின் ஜெர்மனி இரண்டாம் உலகப்போரில் கைப்பற்றப்போது அதன் ஒரு பகுதியைத் தங்கள் நாடாக அறிவித்திருக்கலாம். அவர்களுக்கு இருந்த அனுதாப அலைக்கு உலகநாடுகளும் அதை அங்கீகரித்திருக்கும். அதை விடுத்து தங்கள் ‘புனித நூலில்’ கூறியுள்ளது என்று கூறி அரபுநாடுகள் சூழ்ந்த பகுதியில் அந்த ஊர் மக்களையே விரட்டிவிட்டு, அகதிகளாயிருந்த யூதர்கள் பாலஸ்தீனர்களை அகதிகளாக்கிவிட்டனர்.

      பலர் நினைப்பது போல அமெரிக்கா எடுத்தவுடன் ஆதரவு தெரிவிக்கவில்லை.இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்த அமெரிக்க ஜனாதிபதியை தங்களின் செல்வாக்கை (உலக பொருளாதாரத்தில் பெரும்பாலான கன்ட்ரோல் யூதர்கள் வசம் இன்றும் உள்ளது)காட்டி மிரட்டி பணியவைத்து விட்டனர். அதேபோல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிதியிலும் யூதர்கள் பங்கு உள்ளது. அதனால் அடுத்தடுத்த ஜனாதிபதிகளும் இஸ்ரேலிய ஆதரவினர் ஆகி உள்ளனர். அமெரிக்காவின் பொதுமக்களைப் பொறுத்த அளவில் கணிசமான தொகையினர் இஸ்ரேலிய எதிர்ப்பினர்களாக தான் உள்ளனர். தங்கள் வரிப்பணத்தை இஸ்ரேலியர்களுக்காக அமெரிக்கா வளைகுடா நாடுகளில் விரயமாக்குவதாக அவர்கள் கருதுகின்றனர்.

  1. I also oppose Jewish domination in business and politics. But history says that Israel is their homeland and the al-asqa mosque standing there was once Jewish temple. With that said, the only modern democracy in Middle East is Israel. That’s why their own people are talking about these issues. Can any muslim nation talk about countless minorities killed there? or about thier own people raped/tortured and killed ther?

  2. யூதர்கள் வரலாறை படித்தால் அவர்களைப்போல் அடிமைகளாகவும், கொத்தடிமைகளாகவும், இருந்தவர்கள் வேறுஎவருமில்லை.முதலில் எகிப்திலும்,பின்பு பாபிலோனிலும்,…..கி.பி யில் நீரோவினாலும்,ஹிட்லரின் காலத்திலும் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம்மில்லை.யூதர்கள் கடவுளுக்கு விரோதமாய் பாவம் செய்தபோது கடவுள் அவர்களை அந்நியர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.நீ மனம்திரும்பி வந்தால் உன் தேசத்தைதிரும்ப உனக்குத்தருவேன்,என்று கடவுள் வாக்குபண்ணினார்.அதன்படி 1948 ல் யூதர்களுக்கு தனி நாடு கிடைத்தது.முன்பு இவர்கள் இழந்த பூமியை திரும்பபெற போராடுகிறார்கள்.

  3. பாலஸ்தீனம், யூதர்களின் பூர்வீகமே! அவர்கள், கிறித்தவர்களால் ஏசுவை கொன்றார்கள் என்றும், இசுலாமியர்களின் படையெடுப்பாலும் சின்னாபின்னமாக சிதறடிக்கப்பட்டவர்கள், கொத்துக்கொத்தாக கொலைசெய்யப்பட்டவர்கள். சிலுவைப்போர்களால் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் அரபு தேசங்களில்கூட பரவி சிறு குழுக்கலாக வாழ்ந்தவர்கள். அப்படி அரபு தேசங்களில் வாழ்ந்தவர்களையும் இசுலாம் தோன்றியபிறகு கொலைசெய்தும் அடித்து துரத்தபட்ட வரலாறுகளை இசுலாமி சரித்திரங்களிலேயே காணலாம். இக்கொடுமைகளுக்கெல்லாம் காரணம் மதவெறிதான்.
    பல நூற்றாண்டுகாளக வன்கொடுமைகளுக்கு ஆளான யூதர்கள் தங்களுடைய பூமியை இங்கிஇலாந்து, அமெரிக்கா ஆதரவுடன் கைப்பற்றினர். அதிலும்கூட இசுரேலின் சில பகுதிகளை விலைகொடுத்து வாங்கியே உருவாக்கினர். இவ்வளவு கொடுமைகளுக்கும் ஆளாகிய அவர்கள் தங்களின் பூமியை கைப்பற்றினாலும் பலநூறாண்டுகாளாக வாழ்ந்துவரும் பாலஸ்தீன இசுலாமியர்களை அடித்து விரட்டுவது மனிதசெயலல்ல. மதம் என்று வரும்போது வெறிமட்டுமே சிந்தையில் தோன்றும்போலும்.

    • //பாலஸ்தீனம், யூதர்களின் பூர்வீகமே! //

      அய்யா பெரியவரே இதற்கெல்லாம் மத நூலில்தான் ஆதாரம் திரட்ட வேண்டும். இதற்கு மட்டும் மதநூலை துணைக்கழைத்துக் கொள்ளலாமா?

      • Abu, matha noolai mattumey atharamagak kondu vazhum muslimgalai vida ithu evalavo thevalai! But coming to the point, if I give you proof from some other historic refrences that Israel is home of Jews, will you ask Palestine to stop fighting?

    • சகோதரரே, இஸ்லாமிய நூல்கலில் நிச்சயமாக இவ்வாரு வெரித்தனமான ஆதாரம் கிடயாது. எதிரியாக இருந்தால் எதிரியை மட்டுமே எதிர்ப்பான்… வெரியனாக இருந்தால் மட்டுமே குழந்தைகலையும் கொல்வான்…………

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க