(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)
அமெரிக்காவில் புஷ் பதவி விலகி ஒபாமா புதிய அதிபராகியிருக்கிறார். பதவியேற்பு விழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதிலும் கருப்பின மக்கள் வெள்ளை நிறவெறியை எதிர்த்து மார்டின் லூதர் கிங் கண்ட கனவு வெற்றியடைந்திருப்பதாக கொண்டாடி வரும் வேளையில் ஒபாமாவோ பயங்கரவாதிகளுக்கெதிரான போரில் அமெரிக்க வெற்றியடையுமென ஏகாதிபத்திய நலனிலிருந்து பேசுகிறார். ஈராக்கிலும், ஆப்கானிலும் “பயங்கரவாதிகளுக்கெதிரான” போரில் எத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் இறந்தனர் என்பது நமக்குத் தெரியும்.
கோழிமாக்கான் புஷ், செருப்படி பட்ட பிறகும் தனது போர்வெறியை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் பதவி விலகுவதற்கு முன்புதான் இசுரேல் ஒரு வெறிநாயைப் பல காசா பகுதியில் குண்டு போட்டு குதறி பல நூறு மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. அமெரிக்க புஷ்ஷின் இறுதி ஆசிர்வாதத்தோடு நடந்த இந்த போர்தான் ஒரு உண்மையை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. அதாவது பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் எத்தனை அப்பாவி மக்களை வேண்டுமானாலும் கொல்லுவோம், அது பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் அந்த உண்மை. ஹமாசின் ஆயுத பலத்தை ஒடுக்கவேண்டுமென்பதற்காக இந்த தாக்குதலை நடத்துவதாக இசுரேல் நாடகமாடினாலும் பல அப்பாவி மக்களை கொன்று ஒரு பீதியை பரவவிட்டு பாலஸ்தீன வேட்கையை அழிக்க நினைப்பதுதான் அதன் நோக்கம். அதாவது பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை கொன்று ஒரு பீதீயை பரவ்விட்டு தமது நோக்கத்தை சாதிக்க நினைப்பதையே இசுரேலும் அமெரிக்காவின் ஆசியுடன் செய்கிறது. இதற்கு முன்பும் இசுரேல் இத்தகைய தாக்குதலை நடத்தியிருந்தாலும் தற்போது கொத்துக் கொத்தாய் மக்கள் கொல்லப்படுவதை பார்க்கும் போது இதை பயங்கரவாதத்தை விட கொடியது என்றே சொல்ல முடியும். ஆயினும் கடைசி பாலஸ்தீனக் குழந்தை இருக்கும் வரையிலும் இசுரேல் தனது நோக்கத்தில் வெல்லவே முடியாது. ஏனெனில் விடுதலை வேட்கையும், அடிமைத்தனத்திற்கெதிரான ஆவேசமும் குண்டுகளால் முடக்கப்படுவதில்லை. அது இரத்தித்திலும், உயிரிலும் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று.
அதிபர் மாற்றம் எதையும் மாற்றாது 🙁
>>கோழிமாக்கான் புஷ், செருப்படி பட்ட பிறகும் …..
🙂
விடுதலை வேட்கையும், அடிமைத்தனத்திற்கெதிரான ஆவேசமும் குண்டுகளால் முடக்கப்படுவதில்லை. அது இரத்தித்திலும், உயிரிலும் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று.
UNKALIN SEITHIKAL ELLAM MIKAVUM NALLA IRUKKU ATHILUM EELA SEITHIKAL UNARVUDAN IRUKKU UNKALIN UNARVUKAL THODARA VALTHTHUKKAL.
ANPUDANUM NANRIUDANUM SHANGAR.
யார் இந்த யூதர்கள்? – ஒரு வரலாறு
http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_28.html
//கடைசி பாலஸ்தீனக் குழந்தை இருக்கும் வரையிலும் இசுரேல் தனது நோக்கத்தில் வெல்லவே முடியாது. ஏனெனில் விடுதலை வேட்கையும், அடிமைத்தனத்திற்கெதிரான ஆவேசமும் குண்டுகளால் முடக்கப் படுவதில்லை.//
ஆனால் ஆதிக்க வர்க்கத்துக்கு இது புரிவதே இல்லையே 🙁
இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்
http://kalaiy.blogspot.com/2008/05/blog-post_12.html
இஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்
http://kalaiy.blogspot.com/2009/01/blog-post_17.html
உலக ரவுடி அமெரிக்கா
பேட்டை ரவுடி இசுரேல்
நல்ல கூட்டனி
இதில் ஒபாமாவையும் சேர்த்திருக்கலாம் என்பது என் கருத்து…மேலும் புஷ்ஷின் பேர்வெல் பார்ட்டி போன்ற ஒரு படம் வரைந்தால் நன்றாக் இருக்கும்
புஷ் இந்தியாவுக்கு வரும்போது shoe மாதிரியான உடை அணீந்து வரவேற்பு அளீக்கக வெண்டும்
Just remember that Afghanistan was part of Bharat until the Hindus were massacared by the fanatical Muslims. Look into the history of Hindu Khush. Muslims have salughtered about 80 million Hindus so far. Why don’t you do a write up on the history of Jihad of Muslims against Hindus? More useful than worrying about what Usa does anywhere.
isis தீவிரவாதத்தைப் பற்றியும் வினவு கொஞ்சம் எழுதலாமே?
ஷியா மதவெறி
சன்னி மதவெறி என்று