சிறுவணிகத்தை விழுங்கவரும் அந்நிய மூலதனத்தை விரட்டியடிப்போம் என்ற தலைப்பில் அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலர் தோழர்.பழனிச்சாமி தலைமையில் 28.12.12 அன்று காலை 10 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியூட்டும் முழக்கத்துடன் சிறப்பான முறையில் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாற்று வணிக சங்கத்தினர், கட்சியினர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். அதில் மனித நேய நல சங்கத்தின் சார்ப்பில் வழக்குரைஞர் காஜாமைதீன் கலந்துகொண்டு அந்நிய மூலதனத்தால் சில்லறை வர்த்தகம் பாதிப்பதை எளிய உதாரணங்களுடன் விளக்கி அம்பலப்படுத்தி பேசினார்.
அடுத்ததாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணை செயலர். திரு.ஆனந்தன் அவர்கள் தமது சங்கம் நடத்திய கருப்பு கொடி, ரயில் மறியல் போராட்டம் போன்றவற்றின் அனுபவத்தையும் விளக்கி பேசினார். அடுத்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர செயலர் தோழர்.சுரேஷ் அவர்கள் தமது உரையில் அந்நிய மூலதனம் சிறுவணிகத்தில் நுழைவதால் ஏற்ப்படும் பாதிப்புகளை விளக்கியும் சென்னை அண்ணா நகரில் திறக்கவுள்ள வால்மார்ட் கடையை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்ஸ்சிட் கட்சியும் இணைந்து நடத்திய போராட்டங்களை பற்றி ஒப்பிட்டு பேசினார்.
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர்.சேகர் தனது உரையில் அந்நிய மூலதனம் வால்மார்ட் வந்தால் வேலை கிடைக்கும் என்ற மத்திய அரசின் பேச்சை கண்டித்து வெளிநாட்டுகாரன் வந்தால்தான் எங்களுக்கு வேலை கிடைக்கும் என்றால் நீங்கள்(மத்திய அரசு) எதற்கு இருக்கிறீர்கள். எங்களுக்கு வேலை உருவாக்கி தருவதைவிட உங்களுக்கு என்ன வேலை? உங்களால் வேலை தரமுடியாது என்றால் பதவியை விட்டு போங்கள் என்றும் வால்மார்ட் வந்துதான் தரமான பொருளை தருவான் என்றால் இதுவரை வியாபாரிகள் தரம் கெட்ட பொருளையா விற்கிறார்கள்? என கேள்வி எழுப்பி வால்மார்ட் வருவதன் நோக்கம் மக்களை கொள்ளையடிக்கவே என்றும் இதுநாள் வரையில் பெரிய கடை, வியாபாரிக்கும் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் இடையில் ஒற்றுமையின்றி இருந்தோம். தற்போது ஒன்றுபட்டு வால்மார்ட்டை எதிர்க்கிறோம். அதனால் வால்மார்ட்டை விரட்டியடிப்பது உறுதி என்று பேசினார்.
அடுத்து ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர்.தர்மராஜ் பேசுகையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனம் நுழைவதை எதிர்த்து பலபேர் போராடி வருகிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங் பூனை கண்ணை கட்டிகொண்டு இருப்பது போல இருக்கிறார். கண்ணை திறந்துபார் எவ்வளவு பேர் வேலையில்லாமல் அவதிக்குள்ளாகிறார்கள். சென்ற மாதத்தில் சித்தார் வெசல்ஸ் என்ற கம்பெனியில் வேலை தராததால் மனமுடைந்து தீக்குளித்து இறந்துபோனார் ஒரு இளைஞர் என்பதை பற்றி நினைவுபடுத்தியதோடு அந்நிய மூலதனம் நம் நாட்டில் நுழைவதற்க்கும் வேலையின்மைக்கும் பல்வேறு விதமான துயரங்களுக்கும் காரணமான தனியார்மய கொள்கைக்கதிராக போராட வேண்டும் என்று பேசினார்.
சிறப்புரை நிகழ்த்திய மனித உரிமை பாதுகாப்பு மைய புதுக்கோட்டை மாவட்ட செயலர் வழக்கறிஞர் இராமலிங்கம் நமது பிரதமர் மனித முகம் கொண்டவர் அல்ல நாய் முகம் கொண்டவர் என்றும் அதனால்தான் மக்கள் படும் துயரத்தை பற்றி கவலைப்படாமல் அமெரிக்காவின் அல்லக்கையாக செயல்படுகிறார். வால்மார்ட்டையும், அந்நிய மூலதனத்தையும் கொண்டு வருகிறார் இதனால் சிறு தொழில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்க்ள் என்பதை பல்வேறு உதாரணங்கங்களுடன் பேசியதோடு, இதற்கு காரணமான தனியார்மயம், தாரளமயம், உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக போராடவேண்டிய தேவையை உணர்த்தி பேசி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்ட்த்தின் இடை இடையே மைய கலைகுழுவினரின் புரட்சிகர பாடல்கள் இடம்பெற்றது. திரளானவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஜனநாயக பூர்வமாக திரட்டி நடத்தியது சிறப்பு என்று பேச்சாளராக வந்த மற்ற அமைப்பினர் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
_________________________________________________________________________
செய்தி: அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், திருச்சி.
__________________________________________________________________________
“சில்லரை வணிகத்தில், அன்னியர்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம். சில்லரை வணிகர்கள், சின்னாபின்னமாக சிதறுண்டு போக, துணை போகமாட்டோம்’ என, வாய்ச்சவடால் பேசிய கருணாநிதி, பார்லிமென்டில், இது சம்பந்தமாக விவாதம் நடத்தப்பட்டு, ஓட்டெடுப்பு நடத்தினால், ஐக்கிய முன்னணி அரசைக் காப்பாற்ற, நிபந்தனையற்ற ஆதரவைத் தர முடிவெடுத்து விட்டாராம்.அப்படிச் செய்யத் தவறினால், பா.ஜ., ஆட்சியைப் பிடித்துவிடுமாம். “எங்களது முடிவு, மற்றவர்களுக்கு கசப்பாக இருக்கலாம். அரசியலில் பிழைப்பு நடத்த, வேறு வழியே இல்லை’ என்று சொல்லாமல் சொல்கிறார், கருணாநிதி.அந்தர் பல்டி அடிக்கும் கலையில், கருணாநிதியை வெல்ல, யாராலும் முடியாது.இப்படி, இவர் எடுத்திருக்கும் கசப்பான முடிவுகள், கணக்கில் அடங்காது. அவை…
*கச்சத்தீவை, இந்திரா, இலங்கைக்கு தாரை வார்த்த போது, பக்க பலமாக இருந்து, காரியத்தை கச்சிதமாக நடத்தினார்.
*சர்க்காரியா கமிஷனின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க, இந்திராவின் காலில் சரணாகதி அடைந்தார்.
*தன் அன்புமகன் மு.க.முத்துவை ஹீரோவாக்க, எம்.ஜி.ஆர்., மன்றங்களை, முத்துவின் ரசிகர் மன்றங்களாக்க பிரயத்தனம் செய்தார்.
*தி.மு.க.,வினர் செய்த ஊழல்களை, அம்பலத்திற்குக் கொண்டு வர நினைத்த எம்.ஜி.ஆரை, தி.மு.க.,விலிருந்து நீக்கினார்.
*சட்டசபையில், ஜெயலலிதாவை அசிங்கப்படுத்த, துரைமுருகன் எடுத்த முயற்சிகளைக் கண்டு, அளவற்ற ஆனந்தம் அடைந்தார்.
*திருவாரூர் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்து, அந்தத் தொகுதி மக்களுக்கு, “பட்டை நாமம்’ சாத்தினார்.
*”2ஜி’ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய கனிமொழியைக் காப்பாற்ற, சோனியாவிடம் சரணாகதி அடைந்தார்.
* இன்று தனது பரம்பரைச்சொத்தான தீமுகாவை தனது மகன் ஸ்டாலினுக்கு எழுதிக்கொடுத்து விட்டார்…
* தனது அனைத்து குடும்பத்தாருக்கும் தாராளமாக சொத்து சேர்த்து விட்டார்..
* அன்பழகனுக்கு கட்சித்தலைவர் பதவியோ, அல்லது முதலமைச்சர் பதவியோ தராமல், இவருக்கும் இவர் மகனுக்கும் சிங்ச்சா போட வைத்தார்…(எத்தனாயிரம் கோடி கொடுத்தாரோ)
இது போல், எத்தனையோ, கசப்பான முடிவுகளை எடுத்து, தமிழர்கள் காதுகளில், மலர் சூடியிருக்கும் கருணாநிதியின் ராஜதந்திரத்தைப் பார்த்தால், அந்த சாணக்கியரே, வியந்து போய், இவரிடம் பாடம் கற்க நினைத்திருப்பார்.இப்படி முடிவுகள் எடுப்பதால் தான், இவரது குடும்பம் கோடீஸ்வரக் குடும்பமாக, இன்று வரை பரிமளிக்க முடிகிறது.
வாழ்த்துகள்!
We have to welcome Walmart and other big stores to India because we need their investment but we should not shop in them. I think Walmart will never succeed in India. Their business model is not suited for India. We can relax and welcome Walmart only for them to close shop in 6 months. Beleive it or not it will happen !
why we allow walmart for investment it is not true because lic will ready to give one lakh crore to central govt but central govt not to buy (source told by lic secretay in tv interview i forget date)and we all know lic helped many projects but our govt motto is welcoming mnc mnc mnc they give some commission why the govt pay their own money to build infrastructure for agriculture farmers they told walmart and many one will come and help farmers it will never happen ,mnc will come for india to grab high profit and they never mind social help thanks valga india valarga