Tuesday, October 15, 2024
முகப்புஉலகம்அமெரிக்காதலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !

தலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !

-

சேகர் குப்தா
சேகர் குப்தா

சேகர் குப்தா என்பவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர். அவர் என்டிடிவி தொலைக்காட்சிக்காக “வாக் த டாக்” (பிரபலங்களுடன் நடந்து கொண்டே பேசும் நிகழ்ச்சி) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நாட்டில் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் பெரிய மனிதர்களுடன் பேச்சு கொடுத்து அவர்களுடைய கருத்துக்களை மக்களிடம் திணிப்பதுதான் அவரது பணி.

சுவாமிநாதன் அங்கேஷ்வர் அய்யர் என்று ஒரு பத்தி எழுத்தாளர் இருக்கிறார். பொருளாதாரம் படித்து ‘தேர்ந்த’ அவர் ஒவ்வொரு பத்திக்கும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு இருண்டு போன முதலாளித்துவ உலகிற்கு ஒளிவட்டம் போட்டுக் காட்டும் திருப்பணியைச் செய்து வருகிறார்.

ப. சிதம்பரம் என்ற செட்டிநாட்டு கோமான் இருக்கிறார். இந்தியாவையும் இந்திய மக்களையும் எவ்வளவு குறைந்த விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முடியும் என்பதை தீர்மானித்து செயல்படுத்துவதற்கு கடந்த 30 ஆண்டுகளாக அல்லும் பகலும் பாடு பாட்டு வருபவர்.

டாடா குழுமம் என்று ஒன்று இருக்கிறது 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு கஞ்சா வியாபாரம் செய்வதில் ஆரம்பித்து, மகாராணி மில்ஸ் என்று பேரரசி விக்டோரியாவுக்கு விசுவாசமாக துணித் தொழிலில் இறங்கி, அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு எஃகு முதல் மென்பொருள் வரை வளர்த்துக் கொண்ட பெருமகன்கள் அவர்கள்.

இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோஷ்டி கானம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். “சாதியை ஒழிப்பதில் மார்க்சையும் மாயாவதியையும் விட மார்க்கெட்தான் சிறப்பாக செயல்படுகிறது’. மனுவின் எதிரியாகவும், ஆடம் ஸ்மித்தின் நண்பராகவும் மான்டேக் சிங் அலுவாலியா இருப்பதால் அவர்தான் தலித் மக்களின் உற்ற நண்பன்” என்பது அந்த பாட்டின் பல்லவி.

சுவாமிநாதன் அங்கலேஷ்வர் அய்யர்
சுவாமிநாதன் அங்கலேஷ்வர் அய்யர்

தலித் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரி (இந்திய தலித் வர்த்தக, தொழில் கூட்டமைப்பு) என்ற தலித் முதலாளிகளின் கூட்டமைப்பு ஒன்றை மிலிந்த் காம்ப்ளே என்பவர் உருவாக்கியிருக்கிறார். சுமார் 3,000 தலித் முதலாளிகள் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களில் 10 சதவீதம் தலித் முதலாளிகளால் நடத்தப்படுபவையாம். அதாவது சுமார் 1.64 லட்சம் தலித் முதலாளிகள் நாடு முழுவதும் இருக்கிறார்களாம். அவர்களை எல்லாம் திரட்டி தலித் முதலாளிகள் சங்கத்தை வலுப்படுத்துவதும், ரூ 500 கோடி முதலீட்டு நிதியம் மூலமாக தலித் மக்களின் தொழில் முனைவை ஊக்குவிப்பதும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மிலிந்த் காம்ப்ளேவின் திட்டம். இந்த முதலாளிகள் சங்கத்திற்கு ஆலோசகராக இருப்பவர் உத்தர பிரதேசம் அசம்கரைச் சேர்ந்த சந்த்ர பான் பிரசாத் என்ற எழுத்தாளர்.

இந்த நிதியத்துக்கு ப சிதம்பரத்தின் தூண்டுதலின் பேரில் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) ரூ 10 கோடி முதல் முதலீட்டை வழங்கியிருக்கிறது. இன்னும் பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களை இந்த நிதியத்தில் பணம் போடும்படி வலியுறுத்தப் போவதாக ப சிதம்பரம் உறுதி அளித்திருக்கிறார். இந்த நிதியத்தில் முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு 25% லாபம் கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுமாம். இந்த நிதியத்திலிருந்து தலித் மற்றும் பழங்குடி தொழில் முனைவோருக்கு தொழில் நடத்த நிதி வழங்கப்படுமாம்.

ரூ 5.5 லட்சம் கோடி மதிப்புடைய டாடா குழுமத்தின் 21-ம் நூற்றாண்டின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சைரஸ் மிஸ்திரி சந்தன் & சந்தன் இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலை தலைக் கவசம் (industrial helmet) உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் 33.3% பங்குகளை வாங்கியிருக்கிறாராம். அந்த நிறுவனத்தின் முதலாளி நந்த் கிஷோர் சந்தன் எஞ்சிய 66.6% பங்குகளை வைத்திருப்பார். முக்கியமான இந்த முதலாளி சந்தன் ஒரு தலித். சந்தன் தொழிற்சாலையிலிருந்து டாடா குழும தொழிற்சாலைகளுக்கு தேவையான தலைக்கவசங்களை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். டாடா குழும நிறுவனங்கள் இன்னும் பல தலித் நிறுவனங்களில் முதலீடு செய்யப் போவதாக திட்டமிட்டுள்ளன.

சைரஸ் மிஸ்திரி
சைரஸ் மிஸ்திரி

இந்த நிகழ்வுகள் இந்திய தலித் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று கொண்டாடுகிறார்கள் ஷேகர் குப்தாவும், ஸ்வாமிநாதன் அங்கலேஷ்வர் அய்யரும். ‘மார்க்சையும், மாயாவதியையும் மார்க்கெட் தோற்கடித்து விட்டது’. ‘அம்பேத்கர் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாததை முதலாளித்துவ சந்தை சாதித்து வருகிறது’ என்று பஜனை பாடுகிறார்கள். ‘அமெரிக்காவில் கருப்பின முதலாளித்துவத்தைப் போல இந்தியாவில் தலித் முதலாளித்துவம் தழைக்க வேண்டும்’. ‘கருப்பின மக்கள் அமெரிக்க வால் வீதியில் நுழைந்ததன் மூலம் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனது போல, இந்திய தலித் மக்களை தலால் வீதியில் நுழைய வைத்து சமூக அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று திட்டம் வகுத்துக் கொடுக்கிறார்கள்.

முதலாளிகளின் கூட்டம் தம் பணப்பையோடு ஒரு இடத்துக்கு வந்து பையை திறந்து, கரன்சியை எடுத்து விட ஆரம்பித்தால் அதற்குப் பின்னால் நீண்ட திட்டமிடலும், ஆழமான தயாரிப்பும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்குள் வர்த்தகர்களாக வந்த ஆங்கிலேய முதலாளிகள், கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். 100 ஆண்டுகளுக்கு மேல் நாடு முழுவதையும் தம் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அவர்களது முதலாளித்துவமும் சந்தையும் தீண்டாமையை ஒழித்து தாழ்த்தப்பட்ட மக்களை ஏன் விடுவிக்க முடியவில்லை?

ஆயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், அஸ்ஸாமுக்கும், இலங்கைக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகவும், தென் ஆப்பிரிக்கா, பிஜி தீவுகளுக்கும் கொத்தடிமைகளாக அழைத்துப் போனதுதான் ஆங்கிலேய முதலாளித்துவத்தின் சாதி ஒழிப்பு சாதனை. கொள்ளை நோய்களுக்கும், அடி உதைகளுக்கும் பலியான தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைதான் சாதியை ஒழிப்பதில் ஆங்கிலேய முதலாளிகளுக்கு இருந்த ஆர்வத்தை பதிவு செய்து வைத்திருக்கிறது. பழங்குடி மக்களை வேரோடு அழித்து அவர்களது நிலங்களை கைப்பற்றிக் கொண்டதும் காலனிய முதலாளித்துவத்தின் சாதனைதான்.

காலனிய அடிமைத்தனம்
முதலாளித்துவம் உருவாக்கிய காலனிய அடிமைகள்

ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பு இன மக்களை கடத்திச் சென்று அடிமைகளாக அமெரிக்காவிலும், மேற்கு இந்திய தீவுகளிலும் விற்றதும் ஐரோப்பிய அடிமை வர்த்தக முதலாளிகள்தான். 200 ஆண்டுகளுக்கு மேல் அவர்களை அடிமைகளாக வேலை வாங்கி, சுரண்டி, கொள்ளை லாபம் சம்பாதித்தனர் 19-ம் நூற்றாண்டில் அடிமை முறையை ஒழித்த பிறகு, பல தலைமுறைகளாக சுரண்டப்பட்ட கருப்பின மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்காமல், சுமார் 4 கோடி கறுப்பு இன மக்களை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வைத்து சுரண்டி வருகின்றனர். இன்று கருப்பு இன முதலாளித்துவம் தளைக்கிறது என்று இந்த பாணபத்திர ஓணாண்டிகள் சொல்லும் அமெரிக்காவில் 25% கருப்பு இன மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவிலும் ஜிம்பாப்வேயிலும் கருப்பின மக்களை அடிமைப்படுத்தி நிறவெறி அரசுகளை ஏற்படுத்தி நிறத்தின் அடிப்படையிலான நவீன சாதியத்தை ஏற்படுத்தியது ‘சமூக நீதி’ போராளிகளான ஐரோப்பிய முதலாளிகள். தற்போதும் இதே ஐரோப்பா, அமெரிக்காவில் கருப்பின மக்கள் ஏழைகளாகத்தான் காலம் தள்ளுகிறார்கள்.

இதுதான் முதலாளித்துவமும் சந்தையும் ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்டு சுரண்டப்பட்ட மக்களை விடுவிக்க செய்த சாதனைகள்.

சமூக பொறுப்புணர்வுடன் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நிறுவனங்களில் முதலீடு செய்யப் போவதாகச் சொல்லும் இதே முதலாளிகள் அவர்களது நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை முழு மூச்சுடன் எதிர்த்தார்கள். ‘தனியார் நிறுவனங்களில் சாதி பார்க்க முடியாது, எல்லாமே மெரிட்தான்’ என்று சாதித்தார்கள். இப்போதும் தமது நிறுவன ஊழியர்களில் அரசு பதவிகளைப் போல அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 20% தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு ஒதுக்குவதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இவர்கள்.

தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் தொழிற்சங்கம் அமைத்து தமது உரிமைகளுக்காக கூட்டாக பேரம் பேசுவதை பயங்கரவாதமாக சித்தரித்து அரசு எந்திரத்தை ஏவி விடுபவர்களும் இதே முதலாளித்துவ ‘சமூக நீதி போராளிகள்தான்’.

ஆனால், தமக்கு லாபம் சம்பாதித்துத் தர, தமது நேரடி ஈடுபாடு இல்லாமல் குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி செய்து தர படித்த, நடுத்தர வர்க்க தலித் மக்களை கங்காணிகளாக ஆக்க முயல்கிறார்கள்.

மிலிந்த் காம்ப்ளே
தலித் முதலாளிகள் சங்கமும் மிலிந்த் காம்ப்ளேவும்

தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (தலித் முதலாளிகளின் கூட்டமைப்பு) தலைவர் மிலிந்த் காம்ப்ளே கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளாராம்.

“மகாராஷ்டிராவில் உங்களது குடும்பப் பெயர் உங்கள் சாதியை காட்டிக் கொடுத்து விடுகிறது. என் பெயரைப் பாருங்கள் : மிலிந்த் காம்ப்ளே. காம்ப்ளே என்பது அனைவருக்கும் தெரிந்த தலித் குடும்பப் பெயர். நான் ஈடுபட்டுள்ள கட்டுமானத் துறையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர். அந்த வேலையில் கடும் உழைப்பு தேவைப்படுகிறது. அது எங்களால் மட்டுமே முடியும். அதனால் என்னுடைய தொழிலில் சாதீய பாகுபாடு காரணமாக ஒதுக்கப்படுவது இல்லை”.

இன்னும் டாடா நேனோ காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கமானி டியூப்ஸ் நிறுவன முதலாளி கல்பனா சரோஜ், தொழில் முனைவர், ஹீரோ பைக்குக்கு ஸ்டேண்ட் தயாரிக்கும் காசியாபாத்தைச் சேர்ந்த சுசில் குமார், டாடா இண்டிகோ காருக்கு பாகங்கள் தயாரிக்கும் கோகுல் கெய்க்வாட் என்று தமது உழைப்பையும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பையும், சிறிதளவு மூலதனத்தையும் பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு வழங்கும் சுமார் 3,000 தலித் முதலாளிகள் தொழில் செய்கின்றனர்.

பெரு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யாமல், தொழிலாளர் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல், மலிவான விலையில் சிறு நிறுவனங்களிடமிருந்து தமக்குத் தேவையான பொருட்களை வாங்க ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் 100 தலித் கோடீஸ்வரர்களை உருவாக்கப் போகிறார்களாம். எல்ஐசி, சிட்பி போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடுகளை தலித் முதலாளிகள் பயன்படுத்துவார்களாம். பிறகு இந்த தலித் முதலாளிகள் டாடா முதலான கார்ப்பரேட்டுகளுடன் வர்த்தகம் புரிந்து கோடிஸ்வரராக மாறுவார்களாம். அதாவது டாடா போன்ற பெரு நிறுவனங்கள் இந்த தலித் முதலாளிகளை வைத்து 1,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதன் மூலம் 100 தலித் முதலாளிகளை கோடீஸ்வரர்கள் ஆக்கப் போகிறார்களாம். இதுதான் சமூக நீதி சூத்திரம்.

இப்போது இந்த சூத்திரத்தின் அடிப்படையில் தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற பெயரில் திடீரென்று பணப்பைகள் திறக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகள் தமது தேவைகளில் 4% தாழ்த்தப்பட்ட சாதி/பழங்குடி தொழில் முனைவோர் நடத்தும் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களின் நிலங்களை கைப்பற்றி, அவர்களை விரட்டி விட்டு, இயற்கை வளங்களை கைப்பற்றுவதில் பன்னாட்டு, இன்னாட்டு பெருமுதலாளிகள் தற்காலிகமாக பின்னடைவு கண்டுள்ளனர். அரசு எந்திரம், சல்வா ஜூடும் போன்ற கூலிப்படை உத்திகள் மக்கள் படையின் முன்பு தோல்வியடைந்து முட்டுச் சந்தில் நிற்கின்றனர்.

எனவே தலித் தொழில் முனைவர்கள் மூலம் தலித் மக்களின் உழைப்பையும், பழங்குடி தொழில் முனைவர்கள் மூலம் இயற்கை வளங்களையும் சுரண்டி லாபம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். தேயிலைத் தோட்டங்களுக்கு கொத்தடிமை உழைப்பாளிகளாக பிடித்துச் சென்ற தலித் மக்களை திரட்டுவதற்கு தலித் கங்காணிகளை பயன்படுத்தியது போல இன்றைய இந்தியாவின் உழைக்கும் மக்களை திரட்டித் தருவதற்கு தலித் தொழில் முனைவோர் என்ற கவர்ச்சியை முன் வைக்கின்றனர். கங்காணிகளுக்கு முன்பணம் கொடுக்க நிதி அளித்தது போல, கோடிக்கணக்கான உழைக்கும் தலித்/பழங்குடி மக்களின் உழைப்பையும், பழங்குடி மக்களின் நிலங்களையும் கைப்பற்றி பெருநிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கான டிரோஜன் குதிரைதான் இந்த தலித் தொழில் முனைவு நிதியம்.

இப்போது புரிகிறதா சோழியன் குடுமி ஏன் ஆடுகிறது என்று?

தலித் சிறுவர்கள்
இந்தியாவின் தலித் மக்களுக்கு முதலாளித்துவம் தருவது நவீன அடிமைத்தனம்.

இதன் மூலம் இந்தியாவின் 20 கோடி தலித் மக்களுக்கும், 10 கோடி பழங்குடி மக்களுக்கும் என்ன கிடைக்கும்? 200 ஆண்டுகள் முதலாளித்துவ ஆட்சிக்குப் பிறகு இந்தியாவின் 20 கோடி தலித் மக்களுக்கு சொந்த நிலமில்லை, தலித் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மாறாக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான மக்கள் விடுதலைக்கு மார்க்சியம் சாதித்ததை பார்ப்போம்.

1917 நவம்பர் புரட்சிக்குப் பிந்தைய ரஷ்யாவில் பண்ணை அடிமை முறையை கட்டோடு ஒழித்துக் கட்டியது சோசலிசம். இன்றைய ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளிலும் பண்டைக்கால பண்ணையாரின் நிலத்தில் கட்டாய வேலை செய்ய பணிப்பது, பெண் அடிமைத்தனம், மதகுருக்களின் ஆதிக்கம், போன்ற நிலப்பிரபுத்துவ சாதீய கூறுகள் சுவடே இல்லாமல் துடைத்து எறியப்பட்டுள்ளன. அரை நிலப்பிரபுத்துவ நாடாக விளங்கிய சீனாவில் 1949 புரட்சிக்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் கிராமப்புற ஜமீன்தார்களும், நிலப்பிரபுக்களும் அடக்கப்பட்டு கூலி விவசாயிகளும், அடிமைகளும் நிலவுடமையாளர்கள் ஆக்கப்பட்டார்கள். சோசலிசத்தின் பின்னடைவுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் புகுத்தப்பட்ட பிறகும் கூட பிற்போக்கான நிலவுடமை சமூகத்தின் சுவடுகள் துளிர்க்க முடியாமல் அவை துடைத்தொழிக்கப்பட்டுள்ளன.

ஆனால், முதலாளித்துவ பொருளாதாரம் நவீன தீண்டத்தகாதவர்களையும் கொத்தடிமைகளையும் உருவாக்கி நகர்ப்புற சேரிகளிலும், தொழிற்சாலைகளிலும் குவித்துள்ளது.

காரல் மார்க்ஸ்
காரல் மார்க்ஸ்

ஒரு திறமையான இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் போல சந்தையின் செயல்பாட்டையும், முதலாளித்துவத்தையும் அறுத்து, ஆராய்ந்து அதன் கொடூரங்களை அம்பலப்படுத்தியவர் மார்க்ஸ். நிலப்பிரபுத்துவ சாதீய அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்கும் பாத்திரத்தை முதலாளிகள் இழந்து விட்டார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் நிரூபித்துக் காட்டியவர் லெனின். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் அனைத்து மக்களின் விடுதலையும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசில்தான் சாத்தியமாகும் என்பதை அறிவியல் ரீதியாக மார்க்சிய ஆசான்கள் நிருபித்திருக்கின்றனர்.

மார்க்சியம் சாதித்ததை, சாதிக்கவிருப்பதை தனி நபர் லாபத்தின் அடிப்படையிலான, தனி நபர் சொத்துரிமை அடிப்படையிலான முதலாளித்துவம் ஒரு போதும் நெருங்கக் கூட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இந்நிலையில் தலித் முதலாளிகள் எனும் இந்த இந்திய அரசு, தரகு முதலாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன அறிவாளிகளின் திட்டம் தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஒரு துரோகத் திட்டமாகும். நிலமற்ற விவசாயிகளாக கிராமத்திலும், உதிரிப்பாட்டாளிகளாக நகரத்திலும் இருக்கும் தலித் மக்களின் விடுதலை என்பது உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் முழக்கத்திலும், உழைப்பவனுக்கே அதிகாரம் எனும் முழக்கத்திலும் மட்டும்தான் அடைய முடியும்.

இதன்றி முதலாளிகள் போன்ற சுய முன்னேற்றத் திட்டங்கள் சாதியின் பெயரில் தலித் மக்களை மேலும் சுரண்டுவதற்கே பயன்படும். நாட்டில் உள்ள 20 கோடி தலித் மக்களில் 200 பேரை முதலாளிகளாக்கினால் அது தலித்துக்களை விடுதலை செய்ததாக ஆகும் என்பது மோசடியில்லையா? தலித் முதலாளிகள் என்ற சாதிய அடையாளத்தை முன்வைத்து தலித் முதலாளிகளும், அரசும், தரகு முதலாளிகளும் தலித் மக்களைத்தான் மேலும் சுரண்ட இருக்கிறார்கள். இது ஆதிக்க சாதி முதலாளியை விட தலித் முதலாளியை வைத்து சுரண்டுவது சுலபம் என்ற தந்திரமே ஆகும்.

படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தலித் மக்களை இப்படி அரசியல் ரீதியாக காயடிப்பதற்குத்தான் இந்த தலித் முதலாளி திட்டம் பயன்படும். ஏற்கனவே இட ஒதுக்கீடு மற்றும் உரிமைகளால் முன்னுக்கு வந்த தலித் நடுத்தர வர்க்கம் தனது உயர்வை வைத்து கீழே இருக்கும் தலித் மக்களுக்காக அரசியல், சமூக ரீதியாக போராட முன்வருவதில்லை. இவர்கள் தலித்துகளுக்குள் ஒரு மேட்டுக்குடி வர்க்கமாக மாறுகிறார்கள். இவர்களே தலித் கட்சிகளின் தலைமைகளாகவும் இருக்கிறார்கள். சுருக்கமாக ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக தங்களை ஒப்படைத்துக் கொள்கிறார்கள்.

தேஜஸ்வினி திட்டத்தின் மூலம் பழங்குடி பெண்களை போராளிகளாக மாற்றினோம் என்று கதை விட்ட டாடா நிறுவனம் இப்போது தலித்துக்களை விடுவிப்பதற்காக இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறது. தலித் மக்களும், தலித் விடுதலை பேசுவோரும் இந்த சதிகளை எதிர்க்க வேண்டும். புரட்சிகர அமைப்புகளோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். கீழிருந்து, பார்ப்பனிய நிலவுடமை சமூக அமைப்பிலிருந்து தலித் மக்களை விடுவிப்பதற்க்கான பார்வையையும், நடைமுறையையும் மாக்சிய லெனினிய அமைப்புகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. மாறாக தலித் அமைப்புகளும், தலித் முதலாளியமும் அத்தகைய விடுதலைப் போராட்டத்திற்கான தடையாக, தீர்வைத் தடுக்கும் சமரச சக்திகளாக, சமயத்தில் ஆளும் வர்க்கங்களின் கேடான நோக்கங்களுக்கும் பயன்படுகின்றன.

_______________________________________________

– பண்பரசு

_______________________________________________

  1. இந்த பதிவு தொடர்பாக நண்பர் அதியமான் பேஸ்புக்கில் போட்டிருக்கும் கமென்ட்:

    முதலில் வழக்கமான பல்லவி (பதிவை படிக்காமலேயே போட்டது போலயே இருக்கும்)


    Athiyaman de Libertarian:
    would you then prefer the old status quo of daliths then ? something is better than nothing. and can you prescribe any alternative path for betterment and empowerment of daliths ? something practical and viable ? of course you can’t. all you can harp is on the impending revolution after which every thing will be fine and all problems solved.

    அப்புறம் போன மாசம் கலந்து கொண்ட மீட்டிங்க் பற்றி அவரது ஸ்டேட்டசுக்கு லிங்க்: மாவோ பத்தின செமினார், சிபிஎம் ரங்கராஜன் சொன்னதை மேற்கோள் காட்டுதல் என்று கலக்குகிறார். இவருக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்குன்னு பார்த்தா, அனுபவந்தான் எல்லாம்னு சொல்ற ரங்கராஜன் கிட்ட பாடம் கேட்டிருக்காரேன்னு ஏமாத்தமா போகுது.


    Athiyaman de Libertarian
    சென்ற மாதம் மாவோ பற்றிய ஒரு செமினாரில் கலந்து கொண்டேன். an eye opener. முதலில் பேசிய சி.பி.எம் எம்.பி திரு.ரங்கராஜன் மிக முக்கிய கருத்து ஒன்றை சொன்னார் : ‘தத்துவம், சித்தாந்தம், ஏட்டு படிப்பு : இவைகள் அத்தனை முக்கியம் இல்லை. கள அனுபவம், வாழ்க்கை பாடம் தான் மிக மிக முக்கியம். அந்த அடிப்படை இல்லாவிட்டால் இந்த ஏட்டு சுரைக்காய்கள் குப்பை தான். very very true. இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளாமல் இத்தனை காலம் தோழர்களுடன் மார்கசியம் / முதலாளித்துவம் பற்றி நிறைய விவாதம் செய்திருக்கிறேன் !!

    இப்போ ஸ்டேட்டஸ்ல அடுத்த பார்ட்: அனுபவ சூத்திரத்தில 45 வயசான தன்னோட அனுபவத்தையும் அதை விட கூடக் குறைய அனுபவம் பார்த்த மத்தவங்களையும் நினைச்சு பார்த்து ஒரு ஆன்மீக அமைதி நிலையை வந்தடைந்திருக்கிறார்.


    எனக்கு இப்ப வயது 45. சுமார் 23 ஆண்டுகால அனுபவம் (பல தளங்களில், ஊர்களில், வேலைகளில், தொழிகளில்) உண்டு. தொழில் முனைவோராக, தொழிலாளியாக, மற்றும் பல விதமாக பல நிறுவனங்களில் அனுபவம். அரசு எந்திரம் எப்படி வேலை செய்கிறது, சக ஊழியர்கள் எப்படி வேலை செய்கின்றனர், ஒருவரை எப்படி சிறந்து முறையில் வேலை செய்ய வைப்பது, what motivates a worker, a staff, a boss, an entrepreneur, difference in motivation levels of permanent and temp staff, the work atmosphere, work ethic, productivity in a typical govt company, in a private company, in a MNC, etc : இவை பற்றி எல்லாம் கிடைத்த பல்லாண்டு அனுபவங்களே எமது பார்வையை, கருத்துக்களை தீர்மானிக்கிறது. இன்னும் வாழ்க்கையை பற்றி, சக மனிதர்களை பற்றி, சூழ்நிலைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளம். எனவே மார்க்சியமா அல்லது முதலாளித்துவமா என்பது கருப்பு வெளுப்பாக அணுக வேண்டிய எளிய விசியம் அல்ல. மிக சிக்கலான, ஆழமான விசியம். திறந்த மனமும், கற்க்கும் ஆர்வமும் வேண்டும்.

    • தொண்டமான்,

      ///(பதிவை படிக்காமலேயே போட்டது போலயே இருக்கும்)/// ; படித்துவிட்டு தான் எழுதினேன். ஆங்கிலத்தில் எழுதியது உங்களுக்கு சரியா புரியவில்லை போல ! அதாவது, நடைமுறையில், தலித் மேம்பாட்டிற்க்கு இதை விட சிறந்த மாற்று வழிமுறைகளை சொல்ல முடியாமல், சும்மா, சுரண்டல், வர்கம் என்ற பழைய பல்லவிய மட்டும் பாடினா எப்படி என்ற அர்த்ததில் சொன்னேன். இங்கு இப்ப இருப்பது (உங்க பாசைலை சொன்னா) ‘அரை முதலாளித்துவம், அரை ஜனனாயகம்’ !! இரண்டும் முழுமையடைய பல நூற்றாண்டுகள் ஆகலாம். ஆனாலும் தாரளமயமாக்கலுக்கு பிறகு தலித்துகள் நிலை முன்னேறி தான் உள்ளது. நிலப்பிரத்துவ பண்ணை அடிமை முறையில் இருந்து விடுபட இன்று ஏராளமான மாற்று வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. முக்கியமாக தமிழகத்தில் இதை அனுபவத்தில் காணலாம். 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயக கூலிகளாக, பண்ணையாட்களாக (ஏறக்குறைய bonded labour போல) இருந்த தலித்கள் நிலை இன்று எவ்வளவோ பரவாயில்லை. இன்னும் மாற வேண்டியது ஏராளம் தான். ஆனால் நூற்றாண்டுகளில் இல்லாத மாற்றம் உருவாகியுள்ளது என்பது உண்மை. இது உங்களுக்கு பொறுக்கவில்லை !! பிறகு என்ன தான் செய்ய வேண்டுமாம் ? உங்க முறையில் இதற்க்கு ஒரு தீர்வை எப்ப, எப்படி கொண்டு வ்ரப்போக்கிறீர்கள் ? அதாவ்து செம்புரட்சி ஒன்று தானே உங்களின் ஒரே தீர்வு ? அதை தான் சுருக்கமாக ஆங்கிலத்தில் சொன்னேன். ஓகே ?

      • அதியமான் சார்,

        சாதீய அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு உரிமைகள் எதுவும் இல்லாத, கொத்தடிமைகளாக கன்ஸ்ட்ரக்சன், ரெஸ்டாரண்ட் போன்றவற்றில் ஊர் விட்டு ஊர் போய் வேலை செய்ய வைத்திருக்கிறது முதலாளித்துவம் (அதாவது கொதிக்கும் எண்ணையிலிருந்து எரியும் தீயில விழ வச்சிருக்கு). மெட்ராசில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் சிறு நகரங்களில் கூட குடும்பங்களை விட்டு பல ஆயிரம் கிலோமீட்டர் வந்து சொற்ப கூலிக்கு அடிமைகளாக வேலை செய்ய வைத்திருப்பதுதான் முதலாளித்துவம் கொடுத்திருக்கிற விடுதலை. தமிழ்நாட்டிலேருந்து பெங்களூரு, ஹைதராபாத்துன்னு அலைய வைச்சிருப்பதும் அதே முதாலளித்துவம்தான்.

        நியாயமான கூலி, பாதுகாப்பான வேலை முறை போன்ற உரிமைகளை கேட்க யூனியன் வைச்சா அது முதலாளித்துவத்துக்கு எதிர், தொழில் முனைவுக்கு அபாயம் என்று பயங்கரவாதத்தை அவுத்து விடுவதும் (மாருதி மானேசரில் ஆரம்பித்து நாடெங்கிலும் நூத்துக் கணக்கான தொழிற்சாலைகளில்) முதலாளித்துவமும் அதுக்கு ஆதரவா நிக்கிற அரசும்தான்.

        இதைத்தான் மாத்தம்னு அங்கலேஷ்வர் அய்யரும் அதியமானும் கொண்டாடறீங்க. இதுக்கு நடுவில 100 கோடீஸ்வரங்களை உருவாக்குறதுதான் இவங்க முதலாளித்துவம் சாதிக்கப் போற ‘சிறு’ மாற்றமாம்.

        20 கோடி தலித், பிற உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவத்துல என்ன விடுதலைன்னு சொல்லுங்க. சுவீடன்ல மொத்தமே 95 லட்சம் பேர்தான், பின்லாந்தில 54 லட்சம் பேருதாங்கிறதயும் நினைவுல வச்சிகிட்டு விளக்குங்க.

        • ///அதாவது கொதிக்கும் எண்ணையிலிருந்து எரியும் தீயில விழ வச்சிருக்கு)///

          இல்லை, அது உங்க கருத்து. உண்மை நிலை அப்படி அல்ல. கீழே ஒரு பின்னூட்டத்தில் உத்திர பிரதேச தலித்துகளின் நிலை பற்றி சாமினாதன் அங்கலேஸ்வரின் இரு முக்கிய பதிவுகளை பார்க்கவும். சரி, இதெல்லாம் இருக்கட்டும். இதற்க்கு தீர்வாக, உருப்படியா ஏதாவது ஒரு வழிமுறைய சொல்லுக என்று கேட்டால், பதில் சொல்ல முடியாமல் அதே பல்லவியை பாடுறீகளே !! :))).

          • சேகர் குப்தாவோட வாக் த டாக்கை வச்சு ஒரு பதிவு தேத்திய அங்கலேஷ்வர் அய்யரைப் பத்தி நீங்கதான் மெச்சிக்கணும்.

            //இதற்க்கு தீர்வாக, உருப்படியா ஏதாவது ஒரு வழிமுறைய சொல்லுக என்று கேட்டால், பதில் சொல்ல முடியாமல் அதே பல்லவியை பாடுறீகளே//

            அதுக்குத்தான் பதிவை ஒழுங்கா படிங்கன்னு சொன்னது

            “நிலமற்ற விவசாயிகளாக கிராமத்திலும், உதிரிப்பாட்டாளிகளாக நகரத்திலும் இருக்கும் தலித் மக்களின் விடுதலை என்பது உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் முழக்கத்திலும், உழைப்பவனுக்கே அதிகாரம் எனும் முழக்கத்திலும் மட்டும்தான் அடைய முடியும்.”

            நூத்துக் கணக்கான ஏக்கர் நெலத்தை குவிச்சு வச்சிருக்கிற பண்ணையாருங்க, புதுசா நிலம் கைப்பத்தி வைச்சிருக்கி ரியல் எஸ்டேட் மொதலாளிங்க எல்லாம் இதை எதிர்ப்பாங்க. அடுத்தவன் உழைப்பையும், நாட்டோட பெட்ரோலையும் கொள்ளை அடிச்சி ஆன்டிலியா கட்டியிருக்கிற அம்பானி (அல்லது ஐபிஎல் நடத்துற சீனிவாசன், அல்லது அழகி காலண்டர் போடும் விஜய் மல்லையா, அல்லது சிங்கூர் புகழ் டாடா, அல்லது அமெரிக்காவுக்கு கங்காணி வேலை பார்த்த நாராயணமூர்த்தி) இதை எதிர்ப்பாரு.

            ஆமாமா, இதெல்லாம் தனிச்சொத்துரிமைக்கு எதிரானதுன்னு அதியமானும் எதிர்ப்பீங்க. பண்ணையாருக்கும், ரியல் எஸ்டேட் மொதலாளிக்கும், அம்பானிக்கும்தான் உங்க முதலாளித்துவம் இனிக்கும், ஏழை விவசாயிகளுக்கும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் கம்யூனிசம்தான் தீர்வு.

            • ///உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் முழக்கத்திலும், உழைப்பவனுக்கே அதிகாரம் எனும் முழக்கத்திலும் மட்டும்தான் அடைய முடியும்.”///

              போகாது ஊருக்கு வழி சொல்றீக. இதுவும் மிக பழைய பல்லவி தான். மொதல்ல average land holding in rural India பற்றி படித்து, விசாரித்து, உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளவும். 2 ஏக்கருக்கு குறைவு தான் சராசரி. பெரும் பண்ணையார்கள் காலம் எல்லாம் மலையேறி பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. மேலும் இப்படி துண்டான விளைநிலங்களில் விவசாயம் செய்து கட்டுபடியாகவில்லை. மேலும் fragmentation க்கு வழி செய்தால், இன்னும் நிலை மோசமாகும். எல்லாத்தைவிட, இத்தனை கோடி நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு அளிக்க போதிய நிலம் இந்தியாவில் இல்லை. அபறம் எப்படி ?

              யதார்தத்தை (ground reality) புரிந்து கொள்ள வாழ்க்கை அனுபவம் தேவை என்று நான் சொன்னது இதை தான். அல்லது திறந்த மனமாவது வேண்டும். இரண்டும் போதாமையால் தான் இப்படி காற்றில் கோட்டை கட்டுறீக. இது போன்ற unrealistic assessments and views ஆல் தான் உங்களை போன்ற மார்க்சியவாதிகளால் இங்கு வெற்றி பெறவே முடியவில்லை. முடியவும் முடியாது.

              • அப்பாடா, நண்பர் அதியமான் சொத்து வச்சிருக்கிறது அடிப்படை உரிமைங்கறதால கம்யூனிசத்த எதிர்க்கலையாம் (அம்பானி, மல்லையா, சீனிவாசன், கலாநிதி மாறன் எல்லாம் கோச்சுக்கப் போறாங்க) சாத்தியமில்லை என்றுதான் எதிர்க்கிறாராம்.

                மொதல்ல, அவர் கேட்குற விவசாய நில அளவையே பாக்கலாம். இந்தியால விவசாய நிலத்தின் அளவு 15.97 கோடி ஹெக்டேர் அல்லது 39.46 கோடி ஏக்கர் (சுட்டி – http://en.wikipedia.org/wiki/Agriculture_in_India). நிலமில்லாத ஏழை விவசாய குடும்பங்கள் 20 கோடின்னு வச்சுக்கிட்டாலும் (குடும்பத்துக்கு 4 பேர் இருந்தா 80 கோடி பேர்) ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கலாம்.

                இது சரியா போச்சா. இத்தோட சாத்தியம் பத்தின கேள்வியைப் பொறுத்த வரை சோசலிசத்த நண்பர் ஏத்துக்கணும். வேற வழியில மாத்தி, மாத்தி பேசக் கூடாது.

                அடுத்ததா, நிலம் பிளவுபட்டுருமேங்கற கவலைய பாரக்கலாம்.

                சோசலிச, கம்யூனிச விவசாயம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் உரிமையை வச்சு கிராமத்தோட எல்லா விவசாயிகளும் ஒட்டு மொத்த நிலத்திலும் கூட்டாக விவசாயம் செய்றத வச்சு நடக்கறது. அதனால 500 ஏக்கர், 1000 ஏக்கர் பண்ணைகள்ள பெரிய அளவு விவசாயத்த மெசின்கள் வச்சு செய்யலாம்.

                இல்ல, இல்ல அதெல்லாம் சாத்தியமில்ல. அம்பானியும், டாடாவும், வால்மார்ட்டும் மொத்தமா நெலத்த வாங்கி, அவங்க சொத்து குவிக்கும் பேராசைல நம்ம ஆளுங்கள அதில கூலியா வேலை வாங்கினாதான் விவசாயம் நடக்கும்னு இப்ப பேச்ச மாத்தக் கூடாது.

                • தொண்டமான்,

                  இதுக்கும் மேல உங்க கூட ‘விவாதிக்க’ எமக்கு பொறுமை பத்தலை !!
                  சென்ற ஆண்டு ஒரு கருத்தரங்களில் விசிய ஞானம் உடைய நண்பர் ஒருவர்
                  present செய்த ppt show about Indian agriculture இது :

                  http://tinyurl.com/indian-agri-ppt

                  விக்கிபீடியாவ நான் உதராணம் காட்டினா நக்கலடிக்கும் உங்க குழு, நீங்க எடுத்துக்காட்டும்
                  போது அமோதிக்கிறதி !! :)) ; ஆனால் உங்க வாதம் தவறு என்பதை மேலே உள்ள பி.பி.டி நிருபிக்கிறது. வந்தனம்.

                  • அய்யா அதியமான்,

                    ஒரு மொழ நீளத்துக்கான பக்கத்துக்கு சுட்டிய கொடுத்து போய்ப் படிச்சுக்கோன்னு சுட்டி கொடுக்கறது அதியமான் பாணி, சொன்ன விவரத்துக்கு ஆதாரமா சுட்டி கொடுக்கறது சரியான பாணி. அதுக்கு குறிப்பா பதில் சொல்லாம இன்னொரு முழ நீள பிபிடி சுட்டி கொடுத்துட்டு வந்தனம் போட்டுட்டாரு அதியமான்.

                    அந்த பிபிடில இந்தியால இருக்கற மொத்த விவசாய நிலத்தைப் பத்தி எதுவும் பேச்சே இல்லங்க. அது ஏதோ ஐஐஎம், பெங்களூருல காட்டுன பிபிடியாம். (ஐஐஎம்னாலே கொஞ்சம் குனிஞ்சு பயபக்தியா நிக்கணும்னு நெனைக்கறவங்க வேண்ணா அது விசிய ஞானம்னு போற்றி பாடலாம்). அந்த அம்பி நூத்துக்கணக்கான முதலாளித்துவ புக்ல போட்டிருக்கறத எடுத்து ஷோ காட்டியிருக்கான். அவரு என்ன சொல்றாருன்னா இந்தியால நெறைய பேரு விவசாயத்துல இருக்காங்களாம், அதனாலதான் வருமானம் கொறைவாம். சேவைத்துறைல (ஷேர் டிரேடிங், இன்சூரன்ஸ் வகையறா, வகையறா) வருமானம் அதிகமாம், ஆளு கொறைவாம். அதனால விவசாயிங்க எல்லாம் ஊரை விட்டுட்டு வந்து சேவைத்துறைல எறங்கறதுதான் (அதாவது ஆன்லைன் டிரேடிங் வகையறாவுல)விடிவுன்னு சொல்லியிருக்கான்.

                    அப்புறம் வளர்ந்த நாடுகள்ள எல்லாம் விவசாயிங்க கொறைவாம். அதனால இந்தியாலையும் விவசாயிங்களை குறைச்சிட்டா வளர்ந்துடலாமாம். அட, நாடு வளரணும்னா நாட்டுல இருக்கற மக்கள் முன்னேறணும். அத விட்டுட்டு மக்களை கொறைச்சுட்டு நாட்டை வளர்த்தணும்கற இந்த முதலாளித்துவ வளர்ப்பு பிராணிகளை என்னன்னு சொல்றது.

                    இருக்கற மக்களுக்கு ஏத்த பொருளாதாரம் கட்டணும்னு காலுக்குத் தக்கன செருப்பைத் தைக்க சொல்ற கம்யூனிஸ்டுங்கள பிராக்டிகல் இல்லன்னு நக்கலடிக்கிராரு அதியமான். ஆனா பொருளாதாரத்துக்கு தக்கன ஆளை வெட்டுன்னு செருப்புக்கு ஏத்தபடி கால வெட்டச் சொல்ற அம்பியோட பிபிடிக்கு சுட்டி கொடுக்குறாரு.

                    நல்லா இருக்குங்க, உங்க வாதம், விதண்டாவாதம்

                    • தொண்டமான்,

                      அந்த பி.பி.டிய புரிஞ்சுக்க கொஞ்சம் விசிய ஞானம் தேவை தான். இருக்கிற விவசாயிகளுக்கே நிலம் பத்திலை என்பதை தெளிவாக்குகிறது. இதில இன்ன்ம் பிரிச்சு கொடுக்க போராட போகிறீகளாம் !! :))))

                      அந்த பி.பி.டி அய் உருவாக்கியவர் ஒடுக்க பட்ட சாதிய சேர்ந்த எம் நண்பர். ’அம்பி’ என்று அவசரகுடுக்கைதனமாக, மேட்டிமை திமிரோடு பேசுறீகளே. நவ பார்பனியம் என்பது இது தான்.

                      சரி, விவசாயத்தை உருப்பட உடுல உம்மை போன்றவர்கள். தொழில்துறை வளர்ந்து அதன் மூலம் தலித்துகள் முன்னேறினாலும், அதையும் ‘எதிர்பீர்கள்’ ; பிறகு என்ன தான் செய்வார்களாம் ? உங்க குழு ஏன் இன்னும் சிறு குழுவாகவே இருக்கிறது, ஏன் பெரிய இயக்கமாக வளர முடியவில்லை என்பதற்க்கு இது போன்ற யதார்த்தை புரிந்து கொள்ளாத நெருப்புகோழி மனோபாவம் தான் காரணம்.

                      சரி. போதும் இந்த ‘விவாதம்’ ; உங்க புரட்சி வெற்றி பெற எம் வாழ்த்துகள். வந்தனம்.

                    • வந்தனம் அதியமான்,

                      அந்த பிபிடி ‘இருக்கிற விவசாயிங்களுக்கே நிலம் பத்திலை என்பதை’ குழப்பத்தான் செய்யுது. மொத்தம் 39 கோடி ஏக்கர் நிலம் இதில பத்தலைங்கறது எங்க வருது?

                      அந்த அம்பி (ஐஐஎம்ல படிச்சவர அம்பின்னு கூப்பிட்டா சரியாத்தான் படுது எனக்கு) சில அசம்ப்ஷன்களை செய்து கிட்டு (வளர்ச்சின்னா சேவைத் துறை வளரணும், விவசாயம் இருக்கக் கூடாது) பிபிடி செய்திருக்காரு. அதிலேருந்து செருப்புக்கேத்தபடி காலை வெட்டுன்னுதான் முடிவு சொல்ல முடியும்.

                      அசம்ப்ஷன்களை மாத்துங்க, சரியான விடை கெடைக்கும்.

                  • மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உணவுப்பொருள் விலை பார்த்து விட்டு உங்கள் டுபாக்கூர் ppt பாருங்கள்.

                    • பரலோக பாண்டியன்,

                      எது டுபாக்கூர், யார் டூபாக்கூர் உடுபவர் என்பதை அருள் கூர்ந்து நீவீர் சொல்ல வேண்டாமே. அதை வாசகர்களுக்கு விட்டுவிடுவோம். மே.அய்ரோப்பாவில் உணவு விலைகள் உயரவே செய்யும். ‘முதலாளித்துவத்தை’ ஒழுங்கா, சரியா அமல்படுத்தாவிட்டால் இப்படி தான் ஆகும் !!

                      அந்த பி.பி.டி மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. அதற்க்கு உள்ளே சென்று விவாதிக்கி துப்பில்லாமல் சும்மா மேம்போக்காக, போலி அய்டியில் ஒளிந்து கொண்டு உதார் விடுவது சும்மா வேஸ்ட்.

                      Economics of scale பற்றி தான் அதில் பேசப்படுகிறது. விவசாய பண்ணைகள் சிறு துண்டுகளாகும் போது farm productivity falls to very low levels and costs rise. உலகெங்கிலும் வளர்ந்த நாடுகளில் (முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் தான்) சராசரி பண்ணைகளின் அளவு பல ஆயிரம் ஏக்கர்கள். அதனால் தான் வளர்ந்த நாடுகளில் உணவு விலை இந்தியாவை விட மிக மலிவு. அங்கு வறுமை என்பது உணவு சம்பந்தப்பட்டது அல்ல. இருப்பிடம், மருத்துவம் போன்றவைகளில் தான்.

                      நான் முன்பு எழுதிய பதிவில் இருந்து :

                      நில சீர்திருத்தம் என்ற பெயரில், பெரும் பண்ணைகள் இன்று துண்டு
                      துண்டாக்கப்பட்டு, ஒரு விவ‌சாயின் சராசரி நிலம் 2 ஏக்கருக்கும்
                      குறைவானது. முன்னேறிய நாடுகள், சைனாவிலும் இதற்க்கு நேர் எதிராக மிக
                      பெரிய பண்னைகள், நவீன தொழில்னுட்பம் பயன் படுத்தபடுகின்றன. economics of
                      scale and minimum farm size..

                      3.இந்தியாவில் நாம் 1991 வரி கடைபிடித்த லைசென்ஸ், பெர்மிட் ராஜ்
                      பொருளாதார கொளகைகிளினால், தொழில்துறை முடக்கபட்டது. இல்லவிட்டால், பல
                      கோடி கிராம மக்கள், அந்தந்த பகுதிகளிலேயே உருவாகும் உற்பத்தி துறை வேலை
                      வாய்ப்பை பெற்று படிப்படியாக மாற்று வழி பெற்றிருப்பர். சீனாவில் அதுதான்
                      நடந்தது. The bulk of the population migrated gradually from farming to
                      manufacturing and finally to service sector, unlike India.

                      4.அர‌சின் பற்றாக்குறைகளால் ப‌ண‌வீக்கம் அதிகரித்து, அனைத்து
                      விலைவாசிகளும், கூலியும் மிக அதிகமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சுமை அதிகம்.

                      5.அரசு அளிக்கவேண்டிய அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள், ஊழல் மற்றும்
                      பொறுப்பற்ற அர‌சு ஊழிய‌ர்க‌ளினால் ச‌ரியாக‌ விவசாயிக‌ளுக்கும்
                      ஏழைக‌ளுக்கும் கிடைக்காத்தால், அவ‌ர்க‌ள் த‌னியார் துறைக‌ளை நாட‌
                      வேண்டிய‌ அவ‌ல‌ம். மேலும் செல‌வுக‌ள். சுமைக‌ள்.

                    • I can point to fallacies in paradigm and data in the ppt.slide by slide. But we cannot do it here.This is another mans topic.The ppt is junk and it is my view. I am not generalizing it. You are saying it is good-and it is your opinion. All are entitled to their views like you.Why are you so much agitated?

                      Near my town there was a Cooperative farm- Kumarappa Kudil- formed under the guidance of sarvodya movement under Vinobaji. Its members were only Devendrakula Vellalars. The land was taken from boodhan. It was a successful venture and in many nearby villages it was replicated. But unfortunately due to rabid[not rapid] industrialization, combined with poor prices for agro produce because of the wrong policy of the govt. and green revolution scam the farm became uneconomical.The members children got educated and left for jobs and the farm was sold. This was not failure of the Sarvodaya model but due to wrong priorities set by the govts.
                      Well I was talking about the ppt not you. Your intellectual aura is brilliant. I wanted to criticize your views. But going through your superb ppt link I was discouraged. I just wanted to say that is junk. Well that is my opinion. Regarding you esteemed opinion about my inability and bogus id etc. Thank you Sir.

  2. Dear பண்பரசு & Vinavu,

    I agree with this article except for 2 following points

    1.

    //இந்தியாவுக்குள் வர்த்தகர்களாக வந்த ஆங்கிலேய முதலாளிகள், கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். 100 ஆண்டுகளுக்கு மேல் நாடு முழுவதையும் தம் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அவர்களது முதலாளித்துவமும் சந்தையும் தீண்டாமையை ஒழித்து தாழ்த்தப்பட்ட மக்களை ஏன் விடுவிக்க முடியவில்லை?//

    A section of Europeans brought in capitalism while others brought in Equality, Fraternity, etc. Ambedkar has written a detailled thesis named ‘THE UNTOUCHABLES AND THE PAX BRITANNICA’. (http://www.ambedkar.org/ambcd/49.%20The%20Untouchables%20and%20the%20Pax%20Britannica.htm) The last paragraph in it is as follows.

    “What good has British conquest done to the Untouchables ? In education, nothing ; in service, nothing ; in status, nothing. There is one thing in which they have gained and that is equality in the eye of the law. There is of course nothing special in it because equality before law is common to all. There is of course nothing tangible in it because those who hold office often prostitute their position and deny to the Untouchables the benefit of this rule. With all this, the principle of equality before law has been of special benefit to the Untouchables for the simple reason that they never had it before the days of the British. The Law of Manu did not recognize the principle of equality. Inequality was the soul of the Law of Manu. It pervaded all walks of life, all social relationships and all departments of state. It had fouled the air and the Untouchables were simply smothered. The principle of equality before law has served as a great disinfectant. It has cleansed the air and the Untouchable is permitted to breath the air of freedom. This is a real gain to the Untouchables and having regard to the ancient past it is no small gain.”

    2.

    //ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பு இன மக்களை கடத்திச் சென்று அடிமைகளாக அமெரிக்காவிலும், மேற்கு இந்திய தீவுகளிலும் விற்றதும் ஐரோப்பிய அடிமை வர்த்தக முதலாளிகள்தான். //

    By saying ஐரோப்பிய அடிமை வர்த்தக முதலாளிகள்தான் you are hiding or ignoring very important fact in this issue. It is Muslims who supplied slaves to European colonisers. Even in the image you have used to illustrate this point, it is a muslim with a fire-arm who leads the enslaved people in shakles. See his ‘kulla’ and beard.

    For detailled account on slavery by Muslims, Read the chapter VII, on Islamic slavery in the book

    Islamic jihad: A legacy of forced conversion imperialism slavery by M.A. Khan.

    (http://www.islam-watch.org/authors/65-khan/809-islamic-slavery-part-1.html)

  3. ஜனநாயகம் வேண்டாம் இந்தியாவில் சிறுபான்மையினர்களும் தொழில் செய்ய வேண்டாம்..
    அது சரி இந்த கம்யுனிசம் என்ன கிழித்தது எனக்கூறமுடியுமா.

    கம்யுனிசவாதிகளே நீங்கள் எங்களுக்கு கம்யுனிச நாட்டை உருவாக்க வேண்டாம். இங்கே உள்ள கம்யுனிசவாதிகள் எல்லாரும் ஓன்று சேர்ந்து, ஓர் கம்யுனிச கிராமத்தை உருவாக்கி அதை குறைந்து பத்து வருடங்கள் பிரச்சனைகள் இல்லாமல் நிர்வகித்து காட்டுங்கள். அதாவது கிராமத்தில் விவசாயத்தில் இருந்து நிர்வாகிகள் வரை அனைவரும் மேடை மற்றும் பிளாக்கில் வாய்கிழியும் பேசும் கம்யினிஸ்ட்கள் மட்டும் இருக்க வேண்டும்…

    கம்யுனிசக் கொள்கை படி ஓரு ஆட்டோ சங்கத்தை கூட நடத்தமுடியாதவர்கள் எப்படி இந்திய பொருளாதரத்தை வழிநடத்துவீர்கள். மாவேகளால் ஓரு குழந்தைக்கு தூப்பாக்கி பயிற்சி அளிக்க முடிகிறது. ஆனால் கேவலம் ஓர் IAS, IFS, IES அதிகாரிகளை உருவாக்க முடியவில்லை. இதே நக்சல்கள் வெடிகுண்டை கடத்துவதிலும் ரயில்களை தகர்ப்பதிலும் உள்ளவர்களால் புத்தங்களை எடுத்து படிக்க முடியவில்லை.. மாவேகள் இன்றைக்கு கம்யுனிச கொள்கைப்படி IAS,IFS அதிகாரிகளை அந்த சமுகங்களில் இருந்து உருவாக்கி இருந்தால் என்றோ அவர்கள் முன்னேறி இருப்பார்கள்.

    • they will say a communist village can’t sustain. Only when the whole world is communist, it can sustain and survive like that. sappaikattu!!!

      but to be frank, Socialist Russia was on top of space race and nuclear power. And we can’t deny American plot in bringing down Soviet.

      China is also progressing at the cost of pollution and suffering of people.

      North Korea is starving.

      All we need is grassroot democracy with decentralized authority. That is never gonna happen. Communism or capitalism both focus on centralization, monopoly and strict control and monitoring. Freedom is exactly opposite to these.

  4. நடுத்தர வர்க்க கனவு விற்க இட ஒதுக்கீடு.
    இப்போது முதலாளி கனவு விற்பனை.

    நிலத்தை கேக்க தெரியாதவன் உள்ள வரை கனுவுகளை விற்றே காலத்தை போக்கிவிடலாம்!

    • @பரலோகபாண்டியன்
      உரிமை என்ற பெயரில் வேற என்ன கிரமம் எல்லாம் ஓசியில வேண்டும். ஓசி டீ கூட ரொம்ப நாள் கிடைக்காது

      • உழைப்பவன் கேட்டால் ஓசியா? வன்முறையாக அடித்து பிடுங்கியதை நாகரிகமாக கேட்டால் நக்கலா? உன் பாட்டன் என் பாட்டனிடம் பிடுங்கியதை நான் உன்னிடம் பகிர்ந்துகொள்வோம் என்று கேட்டால் அது காட்டுமிராண்டிதனமா? எங்களையும் வாழவிடுங்கள் என்று தான் சொல்கிறோம். நீங்கள் நாசமாய் போகவும் என்று சொல்லவில்லை. அது சரி அடுத்தவன் உழைப்பில் வாழ்வது மேன்மக்களுக்கு அழகோ?

  5. //நாட்டில் உள்ள 20 கோடி தலித் மக்களில் 200 பேரை முதலாளிகளாக்கினால் அது தலித்துக்களை விடுதலை செய்ததாக ஆகும் என்பது மோசடியில்லையா? //
    2000 பேரை அரசு அதிகாரிகளாக்கினால் மட்டும் சித்தாந்தம் ஜெயித்துவிடுகிறதே…அது எப்படி? அந்த 2000 அதிகாரிகள் குடும்பம் மட்டும் தானே முன்னேறுகிறது..அடுத்த தலைமுறையில் தனது இனத்தவரை அமிழ்த்தி விட்டு தன் வாரிசுகளுக்கும், சலுகை பெற்றுக் கொள்கிறது!

    • இட ஒதுக்கீடு ஒரு தீர்வு என்று இடதுசாரிகள் என்றும் சொன்னதில்லை. அது ஒரு ஏமாற்று வேலையே. அதனால் சமூகம் முன்னேறபோவதில்லை என்பதை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் அனுபவத்தில் தெரிந்துகொள்ளவேண்டும். தீர்வு இல்லை என்று சொல்லலாமே தவிர கூடாது என்று சொல்ல முடியாது. மனித உறவுகளில் எழும் அதிகாரத்தை கைப்பற்றுவது தான் அரசியல் என்று சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களும் தவறான பார்வை கொண்டுள்ளனர். அதிகாரத்தை மறுப்பதே அரசியல் என்பதை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் போது சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோர் வர்க்கமாக அணிதிரள்வர்.

      • கருத்திற்கு மிக்க நன்றி..பாண்டியன்! //இட ஒதுக்கீடு ஒரு தீர்வு என்று இடதுசாரிகள் என்றும் சொன்னதில்லை//

  6. Thanks for this article in which you have highlighted the excellent post by Swaminathan A Aiyar !! Even though many of us here will disagree with your ‘interpretation’ of his post, it is heartening to note that you take him seriously enough to follow his blog !! Good for you Comrades. shows your vision is improving slightly! :)))

    And i would be happy if you can ‘interpret’ the following two posts by Swaminathan, which too are very relavant for this post :

    Dalits are marching ahead in Uttar Pradesh
    http://swaminomics.org/dalits-are-marching-ahead-in-uttar-pradesh/

    The social revolution in Uttar Pradesh
    http://swaminomics.org/the-social-revolution-in-uttar-pradesh/

    மேலே உள்ள இரு பதிவுகளும் மிக முக்கிய தகவல்களை, கருத்துகளை கொண்டவை.
    அவசியம் அவைகளை பற்றியும் ஒரு பதிவு இட்டால் நன்றியுள்ளவனாவேன்.

  7. /// combined with poor prices for agro produce because of the wrong policy of the govt. and green revolution scam the farm became uneconomical.///

    Wrong inference Paralohapandiyan. Indian farms become ‘uneconomical’ due to fragmentation and subsequent stagnation (while in most nations the opposite happened). And your example is just one instance. and you fall into the error of generalising from one instance. I have good exposure to rural farming and i can show hundreds of instances where the farms located in far flung villages (With no urbanisation or major roads nearby) which suffer due to fragmentation and low productivitiy, lack of credit, inputs, etc.

    The crux of this post is the condition of dalit labourers who now have a better chance to improve their lot, than ever before in history. Fragmenting farms further will only harm them. and the concept of ‘co-operative’ farming is utopian and unrealistic. it will not work and hence was abandoned long back. Why don’t you people try to bring together say 100 farmers with tiny and adjutant farms and form a co-operative to cultivate in joint manner. It is humanly impossible to make this happen. It is against basic human nature and hence could not be implemented in India in spite of a lot of enthusiasm from many socialistic leaders in the past.

    this is what i meant by ‘practical experience’ over theory. and as for the PPT, try to argue within the context of what it elaborates. esp about the percentage of population still dependent of it while the income from farms stagnate.

  8. //concept of ‘co-operative’ farming is utopian and unrealistic. it will not work and hence was abandoned long back. Why don’t you people try to bring together say 100 farmers with tiny and adjutant farms and form a co-operative to cultivate in joint manner. It is humanly impossible to make this happen. It is against basic human nature and hence could not be implemented in India in spite of a lot of enthusiasm from many socialistic leaders in the past.//

    1.The experiments were lopsided and flopped. But that does not mean the model is a failure.
    2.You are underestimating the impact of green revolution it seems.
    3.Please go and see how the Chinese are managing their industrial labor force. They have displaced large no. of worker from agri to industry and in order to sustain the industrial worker population they are unable to mechanize toxic manufacturing processes and asking the unskilled labor to do it manually exposing them to health hazards. The no of products you can imagine for public consumption is not exhaustible-the PLA knows that. The collapse of Soviet economy post cold war testifies that.
    4.Dalits value self respect more than money. Please ask them.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க