தலித் வன்னியர் ஜோடியை பிரிக்க முயற்சித்த பா.ம.க. சதித்திட்டம் முறியடிப்பு !

24

ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் 16-7-13 அன்று நீதிபதி கீழ்க்கண்டவாறு உத்திரவு வழங்கினார்.

செந்தமிழ்ச் செல்வி, “என்னை யாரும் கடத்தவில்லை, நானாகத்தான் விரும்பி விமல் ராஜை காதலித்து திருப்பனந்தாள் எனும் ஊரில் பதிவு திருமணம் செய்து கொண்டேன். அவர் என் கணவர், அவருடன்தான் செல்ல விரும்புகிறேன். நான் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிறந்த தேதி படி நான் மைனர் அல்ல” என்ற வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், திருமணத்தை சட்டப்படி சார்பதிவாளரிடம் பதிவு செய்துள்ள சான்றிதழ்படியும், விமல் ராஜ் செந்தமிழ்ச்செல்வியின் சட்டப்படியான கணவர். எனவே அவருடன் அனுப்ப இந்நீதிமன்றம் உத்திரவிடுகிறது. மைனர் என்பதற்காக பெற்றோர்கள் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் குறித்த நம்பகத் தன்மையை விசாரிக்கும் அதிகாரம் இந்நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே உரிய சிவில் நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் நிவாரணம் பெறலாம்.

என்று கூறி மைனர் பெண்ணை காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் பா.ம.க வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

விமல் ராஜ், செந்தமிழ்ச் செல்வி
விமல் ராஜ், செந்தமிழ்ச் செல்வி

இந்த வழக்கில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் விமல் ராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் நேரடியாக ஆஜராகி காதலர்களை பிரிக்காமல் ,பெண்ணை கடத்தியதாக பதியப்பட்ட பொய் வழக்கிலிருந்து மீட்டு திருப்பனந்தாள் ஊருக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ், தலித் சமூகத்தை சார்ந்தவர் . இவர் ஜெயங்கொண்டத்தில் தனியார் கேஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார். செந்தமிழ்ச் செல்வி பெண்கள் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்.

இவர்களது காதல் விவகாரம் செந்தமிழ்ச்செல்வியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் உள்ள வேறு ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்து, ஒரு லட்சம் முன் பணம் வாங்கி விட்டனர். செந்தமிழ்ச் செல்வி இந்தத் திருமணத்திற்கு மறுக்கவே, அவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நெசவுத் தொழில் செய்வதற்கு வாங்கிய முன்பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என பெற்றோர் செல்வராஜ், உமாராணி பெண்ணை நிர்பந்தித்தனர். இவரது தங்கை நன்றாக படிக்கக் கூடியவர் அவரையும் 10-ம் வகுப்போடு நிறுத்தி பஞ்சு மில்லிற்கு வேலைக்கு அனுப்பி விட்டனர்.

இச்சூழலில்தான் செந்தமிழ்ச் செல்வி வீட்டை விட்டு வெளியேறி விமல்ராஜிடம் சென்று விட்டார். பெற்றோர்கள் கஷ்டப்பட்டாலும் வன்னியர் சங்கம் இந்த காதலை பிரிக்க ரூ 1 ½ லட்சம் பணம் ஒதுக்கி விமல்ராஜ் பெற்றோர்களை மிரட்டியது. காதலர்களை தேடியது. விமல்ராஜின் வன்னியர் நண்பர்களதான் இச்செய்தியை அவருக்குச் சொல்லி பத்திரமாக இரு என எச்சரித்தனர்.

இந்நிலையில் காதல் தம்பதிகள் இருவரும் கடந்த ஜூன் 25 அன்று திருப்பனந்தாள் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். அதே ஊரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். பா.ம.க வின் தூண்டுதலின் பேரில், “விமல் ராஜ் எனது பெண்ணை கடத்தி சென்று விட்டதாக” கூறி செந்தமிழ்ச்செல்வியின் தந்தை செல்வராஜ் புதிதாக வாங்கிய பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடத்தல் வழக்கும் பதிவு செய்யபட்டது.

001திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தம்பதிகள் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் பெண்ணை கடத்தி விட்டார் என விமல் ராஜ், தாய்மாமன் பரமேஸ்வரன் ஆகியோரை போலீசார் தேடினர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்து அவ்வாறே உத்திரவும் பெற்றனர்.

இதற்கிடையில் உயிருக்கு பயந்த தம்பதிகள் தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்து தஞ்சம் அடைந்தனர். இவர்களை ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார் எஸ்.பி. ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

செந்தமிழ்ச்செல்வியின் பெற்றோர் சார்பில் குருவுக்கு ஆஜராகும் பா.ம.க வை சேர்ந்த அதே 10- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், செந்தமிழ்ச்செல்வி மைனர் என்பதற்கான பிறப்புச் சான்றிதழை தாக்கல் செய்தனர். அது 2-7-13 தேதியில் வாங்கப்பட்ட சான்றிதழ். “பிறப்பு சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி படி அந்த பெண் மைனர். எனவே பெண்ணை அரசு காப்பகத்திற்குதான் அனுப்ப வேண்டும். பையனோடு அனுப்பக் கூடாது” என வாதம் புரிந்தனர்.

மணமக்கள் தரப்பு வழக்கறிஞர்கள், “பிறப்பு சான்றிதழை ஏற்க முடியாது. பள்ளிச் சான்றிதழில் கொடுத்த பிறந்த தேதியும் அவர்கள் பெற்றோர்கள் கொடுத்ததுதான். சட்டப்படி இருவரும் மேஜர். திருமணமும் பதிவு செய்யப்பட்டு விட்டது. எனவே யாரும் தடுக்க முடியாது” என வாதிட்டனர்.

இச்சூழலில்தான் குற்றவியல் நீதிபதி முத்து மனோகரன் பா.ம.க வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து காதல் தம்பதிகளை அவர்கள் விருப்படி போலீஸ் பாதுகாப்புடன் திருப்பனந்தாள் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

பா.ம.க வை சேர்ந்த பிரமுகர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லையே தவிர இவர்களை பிரிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தனர் ஆனால் பொது மக்களில் பலரும் ஆதரவு அளிக்கும் முகமாக கருத்து கூறினார். ஜெயங்கொண்டம் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இறுதி வரை உடன் இருந்தனர்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்.

24 மறுமொழிகள்

  1. அந்த பெண் வன்னியன் என்பதால் அவ சொந்தகாரன பலரும் பா ம க வில் இருப்பன் அதுதான் உங்க பாசையில் ஜாதி கட்சி, இதுல என்ன கத்சி தலைமை கட்டளை இட்டதுபோல பா ம க எதிர் அரசியல் கட்டுரை , எனது பெண் இப்படி செய்தாலும் பெற்றோர் என்றா முறையிலோ நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் அப்பா உடனே பா ம க செய்தது என்று சொல்லுவிய , எப்படி ஒரு தலித்துக்கு தலித்து கட்சி வக்கீல் வருகிறார்களோ அதுபோல ஒரு வன்னியர்க்கு வன்னியர் சார்ந்த வக்கீல் வாரோவ்ர்கள் இதுல எங்க பா ம க , இது எல்லாம் வன்னியர் பூமி அங்க வன்னியர்கள் அதிகம் யுர்ப்பதால் அவர்கள் பா ம க உறுபினர இருக்கலாம் நாட்டில் உள்ள பலரும் எதாவது ஒரு கட்சில் இருப்பன் அதை வைத்து ஏதோ அந்த கட்சி பண்ணியதுபோல உனது வன்னியர்களுக்கு பா ம க வுக்கு எதிரரன் விசம பிரசாரம் தேவை இல்லாத ஓன்று கட்டுரை எழுத இப்ப புது விசயம் கிடைச்சிடுச்சி

  2. கட்டுரை எழுத உண்மையிலேயே நல்ல விடயம் கிடைத்துள்ளது, நல்ல செயல் நடந்துள்ளது. நன்றி…

  3. இதற்கு ஒரே தீர்வு…
    காதலிக்கும் வயதை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே..
    பெண்ணின் திருமண வயது 18
    ஆணனின் திருமண வயது நியாய படி 21
    அவர்கள் காதலிக்கும் வயது நிச்சயமாக 13 அல்லது 16 கிடையாது
    ஆக காதலிக்கும் வயதை அரசு நிர்ணயம் செய்யப் நாம் போராட வேண்டும்

  4. இளவரசன் மதுவருந்திவிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பற்றி எந்த செய்தியும் காணுமே வினவில்…

    அதற்குள் அடுத்த ஜோடியா?

    வினவுபாடு ரொம்ப திண்டாட்டப்பா!

  5. ஒரு குடும்பத்தை பிரிக்க எவ்வளவு முயற்சி பன்றான்கீங்க. அட ஜாதிவெறி —–களா

    • அருந்ததியர் பெண்கள் ஏன் புறக்கணிக்கபடுகின்றனர் ?

      எதையும் பிளான் பண்ணி பண்ணனும்கிறது இதுதானோ.

  6. அட பாவிங்களா, பெத்தவங்க பொண்ணு திருமணத்தை ஒத்துக்கலன்னா அதுக்கும் பா.ம.க தான் காரணமா? இனி உங்களுக்கு மூத்திரம் வரலன்னா கூட எதிர்க்கட்சி சதி என்று சொல்வீங்க போல. நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்கனு சொல்லிக்கிட்டாங்க, அடுத்த்தவன் குடியை கெடுப்பதில் தீவிரமாக ஈடுபடும் நீங்கள் வாழ்க. (எவன் செத்தா என்ன உங்க(வினவு) பாடு கொண்டாட்டம்தான்).

    • //பெற்றோர் சார்பில் குருவுக்கு ஆஜராகும் பா.ம.க வை சேர்ந்த அதே 10- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்….//

      குருவுக்கு ஆஜராகும் இவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள்????

      • இது வன்னியர்களுக்கு பா.ம.க மட்டுமே நாதி,கதி என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.

  7. As soon as a child born in the world, it has to be sent to the orphanage irrespective of its sex (Male or Female). So there should be no hold or responsibility over the children to their parents. The orphanage has to run by government and young mothers are recruited to feed (obviously milk) the orphans. The system supposed to be implemented all over India and hence a Tamil mother may feed Bihari girl and a Bengali mother may feed Punjabi boy. So there should be no family, no culture, no religion and no language. By force Hindi may be implemented as a mother tongue of these orphanage ‘products’. After 30 years (one generation passed) caste, community, religion and race will disappear and all are equal. If the same system is implemented all over the world, nationality will also be wiped-out. We could not know the origin of these products; a person (from the product) can marry anybody from the product. Some ‘lucky girl’ may get married with his own brother luckily (after all they are boy and girl nothing more than that). The word marriage is somewhat uneasy, so a person can enjoy with other person as long as they love each other. If they feel bore they can look for something new (person). Anyway the outcome (byproduct) of their so called ‘married’ life is not their own and it has to go to yet another unknown orphanage and no need of worry about byproduct. A dictator is needed to implement the above system in Tamilnadu first and then in India next, finally to the world, if possible. I hope, at least my grandson can love & live with Ethiopian girl and granddaughter may love and live with a Mongolian boy.

    • I don’t know who u r or where u r from… as chilling as ur words are,this is exactly the world these marxist b******s are trying to create as stated in the novel 1984.u have my utmost respect……..

    • @hu(wo)man,
      நீங்கள் குறிப்பிடிடும் சமுகம் அடுத்த நிலையிலானது, அதில்.
      இப்போ இருக்கும் இன, மத , சாதி அமைப்புக்கு குடும்பமே அடிப்படை கட்டுமானம், குடும்பம் இல்லைன்னா இது எதுவும் இருக்காது.. அதை தெளிவா புரிஞ்சு தீர்வு கொடுத்திருக்கீங்க…

      ஆனா கடைசியில் இன்றய நடப்பை பார்க்காமல் சர்வதிகாரி வந்து இதை அமல் படுத்தவேண்டும் என்கிறீர்கள்…

      தேவையற்ற கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்றால் அதற்கு பல வழி உள்ளது..
      1) வெளியில் இருந்து ஒரே அடியாக இடிக்கலாம்..
      2) உள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கலாம்…
      3) வெடி வைக்கலாம்..
      4) தானாக உடையும் படி செய்யலாம்..செங்கற்களை உதிர்க்கும் வழிமுறையால்…

      இதே போல் இந்த சமுதாய .. மத , இன, அரசு அமைப்பை இடிப்பது குண்டு வைத்து அழிப்பது போன்று யாரவது செய்யவேண்டும் என்கிறீர்கள்..

      சமுதாய கட்டிடத்தில் ஒவ்வொறு குடும்பமும் ஒவ்வொறு செங்கல்லே..
      சமுதாய கட்டமைப்பு இப்போதே நம் கண் முன் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டு இருக்கிறது கவனிக்கவில்லையா?

      50 வருடம் முன் காதல் என்பதே மிக பெரிய புரட்சி, ஆனால் இன்று அது சாதாரண வாழ்க்கை நிகழ்வு. அதே போல் கலப்பு மணம் நினைத்து கூட பார்க்க முடியாத புரட்சி, ஆனால், இன்று அது அன்றாட நிகழ்வு.. அதை தடுக்க சாதி, வர்க மத அடிப்படைவாதிகள் படாதபாடு படவேண்டி இருக்கிறது… பலவீனமான இளவரசன் திவ்யா போன்றோரிடமே இவர்களின் வீரம் செல்லுபடியாவதில்லை. பலம் வாய்ந்தவர்கள் முன் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள்.
      இனி வரும் காலங்களில் அடிப்படை வாதிகளும் இயல்பு வாழ்கையை( காதல், கலப்பு மணம்) ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

      அடுத்த நிலை சமூகத்திற்கு திருமணம் / குடும்பம் அற்ற வாழ்கையே அடிப்படை.. அப்படி அமையும்போது, குழந்தைகளை மட்டும் அல்ல, வயதானவர்கள், நோயாளிகள், வேலையற்றோர், அனைவரையும் காக்கும் பொறுப்பு அரசுக்கு வந்து விடும்,

      அப்போது செய்யும் வேலையின் அடிப்படையில் குழுக்களாக இருப்பர், அதுவும் 4 குழுக்களாக இருக்கவே அதிக வாய்ப்பு உண்டு.

      இதே இடத்தில் தான் மனித சமுதாயம் முன்பும் இருந்தது, செய்யும் வேலையின் அடிப்படையில் நான்கு குழுக்கள் நான்கு வர்ணக்களாக, அவையே பின் சாதிகளாகி இருக்க வேண்டும். இனி அப்படி சாதி உருவாக வழியில்லை.

      லிவ் டு கேதர் என்ற ஒன்றை 30 வருடம் முன் நினைத்து கூட பார்க்க முடியாது.. இன்று அதில் ஈடுபடும் ஆண் பெண் நிலைபற்றி நீதிமன்றம் தீர்ப்பு தருகின்றது. எப்படிபட்ட மாற்றம் ?

      காரணம் பெண் கல்வியும், பெண் பொருளாதார சுய சார்புமே, பொருளாதாரம் ஆண்களிடம் மட்டும் இருந்தவரை, இதேல்லாம் நினைத்துபார்த்திருக்க கூட முடியாத மாற்றம். இத்துடன் ஊடகங்கள், மருத்துவம், சானிடரி நாப்கின்.. போன்றவற்றையும் குறிப்பிடலாம், ஆனால் அவை எல்லாம் உடன் காரணகள் மட்டுமே, பெண் கல்வியும், சுய சார்புமே முக்கிய காரணம்.

      இனி வரும் காலத்தில் பெண்கல்வியும் பொருளாதார சுய சார்பும் அதிகரிகவே செய்யும், அப்படி அமையும்போது, அவர்கள் தங்களுக்கு தகுந்த துனையே தேர்தெடுப்பர், சாதி மத அடிப்படையில் அல்ல..

      மேலும் குழந்தை பேறுவதும் சுய முடிவாக வே இருக்கும், பெண் கல்வி சுய சார்புக்கும் , குழந்தை பிறப்புக்கும் தலை கீழ் விகித தொடர்பு இருப்பதை உலக அளவில் பார்க்க முடியும்.

      பெண்கல்வி அதிகம் இல்லாத ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் ஒவ்வொறு பெண்ணும் 6-8 குழந்தைகள் பெறுவது சாதரணம், நம் நாட்டிலேயே 50 வருடம் முன் இது தான் நிலைமை, இப்போது அப்படிபட்டவர்களை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது அல்லவா?

      பெண் கல்வியில் எதிர் மறையான ஒரு அம்சமும் இதில் உள்ளது.

      பெண்கல்வி, சுயசார்புள்ள ஐரோப்பிய நாடுகளில் லிவ் இன் கலாச்சாரமும், குழந்தை பிறப்பு விகித் குறைவை எதிர் நோக்கி பிறப்பை ஊக்குவிக்க பல சலுகைகளை அரசுகள் கொடுக்கின்றது.. ஆனால் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டிய வாழ்கையில் 2-3 ஆண்டு காலத்தை முழுவதுமாக, பின்பு 10 ஆணடு காலதை பகுதியாக கொடுக்க பல இளம் பெண்கள் தயாராக இல்லாததால், குழந்தை பிறப்பு விகிதமே குறைகிறது.

      இனி வரும் காலங்களில் இங்கும் அதே நிலை வரும், அப்போது குடும்பம் என்ற அமைப்பே படிப்படியாக இல்லாமல் போகும், அரசு அனைத்துக்கும் பொறுப்பாகும், அதனால் உடன் விழைவாக வரிகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அவ்வளவு தான்.

      இதில் உங்கள் பங்களிப்பும் தேவைப்படும், நீங்களூம் சாதி, மத இன அடிப்படை வாதிகளுக்கு எதிரான உங்கள் குரலை பதிவு செய்ய வேண்டும், அப்போது தான் தாம் தனிமைபடுத்தபடுவது அவர்களுக்கு உடனே விளங்கும்.

      ஒரு முக்கியமான விஷ்யம், சமுதாய மாற்றத்தை நாம் விரும்பினால் அதை நாம் ஆரம்பித்து அதை நாம் நடத்தவும் கொண்டு சொல்லவும் வேண்டும், யாரவது குழி தோண்டி மண் சுமந்து வீடு கட்டி வைத்தல், நாம் நிதானமாக குடி புகலாம் என்பது போல இருக்கிறது உங்கள் சர்வாதிகாரி கனவு.

      சர்வாதிகாரியாக ஒருவர் ஆக, எத்தனை உழைப்பு, திட்டமிடல், பலம்.. இன்னம் சொல்லவேண்டுமானால் எத்தனை உளவு பார்த்தல் அரசியல் அழிப்பு வேலைகள் செய்யவேண்டி இருக்கும்… அதேல்லாம் செய்து ஆட்சியை கைப்பற்றும்போது இருப்பது இப்போது இருக்கும் இதே தனியார் பொருளாதார , தந்தை வழி சமூகத்தில் தான்.

      அப்போது அத்தனை உழைப்பு, திட்டமிடல் எல்லம் செய்யும் ஒருவர், அதன் பலன் தன் வாரிசுக்கு போக வேண்டும் என்று நினைப்பார, இல்லை தனக்கும் வாரிசே இல்லாமல் , யாருக்கும் வாரிசே இல்லாமல் போக வேண்டும் என்று நினைப்பார ? யாருக்கும் வாரிசில்லை என்றால் தனக்கும் இருப்பதில் அர்த்தமே இருக்காதே..?

      காலையில் இருந்து குடும்பம் குழந்தை, வேலை என்று போராடி, அலுத்து சலித்து வரும் பெண்கள்.. யாராவது வீட்டை கூட்டி, பாத்திரம், விளக்கி, துவைத்து, சமைத்து, குழந்தையைம் கவனித்து கொண்டால் , நான் நிம்மதியாக இன்று தூங்குவேன் என்று புலம்புவார்களே..அப்படி யார் பார்ப்பார்கள் ? அது போல் இருக்கிறது.. உங்களின் சர்வாதிகரிகான தேடல்..

      நமது வீடு சுத்தமில்லை என்றால் யாரவது வந்து சுத்தம் பண்ணுவர்கள் என்று எதிர்பார்த்தால் காலம் முழுவது காத்திருந்து சாக வேண்டியது தான்….

      உங்களை வருத்தபடுத்தும் நோக்கம் எனக்கில்லை. அப்படி ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும்…

      நன்றி..
      வினோத்

  8. இந்த இருவகளுக்கும் பிறக்கும் குழந்தை தலித் இன குழந்தையாகவே வளரும்,படிக்கும்,வாழும்…
    இங்க எப்படி சாதி ஒழிந்தது,அழிந்தது காதல் கலப்பு திருமணத்தின் மூலம்?

    • மன்னகட்டி குழந்த பொறக்கர வரைக்கும் ஒன்னா இருக்கஙலா பார்ப்பொம்

  9. I do support love marriage, i do support non-caste love marriage, but whats happening now a days does not look like real respectful love marriage. i don’t accept love at very young age where they doesn’t even start knowing the values and virtues of life. Hormonal push and age infatuation are not called as real love. We should enjoy those physical action, but should not surrender to it. Love should have courage to fight back to get trust among their parents. Love is not for breaking the family sentimental roots. Love is not to throw up your bonds with your family. We cannot have a grateful life by harming the hearts of our parents. Please Try to get trust from them.

  10. இந்த வினவுக்கு வெற வேலையே இல்ல எப்ப பார்த்தாலும் பாமக வ குற்றம் சொல்ரதே வேலை

  11. குழந்தை பிறக்கும் வரைக்கும் நாங்க சேர்ந்து வாழ விடமாட்டோமே! அப்படிதானே கார்த்திகேயன் ?

    • ஆமாம் நாங்க பிரிக்கிறோம் சொல்லிடாரு உண்மையா சொன்ன மீடியா தான் அவங்கள பிரிச்சிடுவாங்க

  12. As i already guessed ,i stopped reading after the first paragraph which states that “he” belongs to a dalit community and i suppose its the usual story.But i do have one question why no vanniyar men seduce and marry dalit girls.Are there no cases like that or i am just ignorant..some communist,dalitist,feminist,forwardist just enlighten me??serious

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க