பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !

46

1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல் பாபர் மசூதியினுள் அத்துமீறி நுழைய முற்படுகிறது. அபிராம் தாசு ஒரு சிறு ராமர் சிலையை தன் மார்போடு அணைத்திருக்கிறார். பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளரான முகமது இசுமாயில் விபரீதத்தை உணர்ந்து அவர்களைத் தடுக்க முனைகிறார். அவர்கள் வெறி கொண்டு தாக்குகிறார்கள், இசுமாயில் உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார். தப்பி ஓடும் இசுமாயிலுக்கு ஒரு விடயம் உறுதியாகிறது, இனி வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்க போகிறது, இனி பாபர் மசூதி முன்னெப்போதும் போல் இருக்கப் போவதில்லை.

அபிராம் தாசு
அபிராம் தாசு : திருட்டு ராமர் சிலை வழக்கில் முதல் குற்றவாளி !

இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கமாகவும், கசப்பான நிகழ்வாகவும் மாற்றப்பட்ட அயோத்தி பிரச்சினையின் முக்கிய விதை விதைக்கப்பட்டது அந்த இரவில் தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணைப் பிரிவான இந்து மகா சபையின் நேர்த்தியான திட்டத்தால் அந்த இரவும், அந்த சம்பவமும் கமுக்கமாக மறைக்கப்பட்டது.

சமீபத்தில் தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களான கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜா ஆகியோர் இணைந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து, அயோத்தியில் மசூதியை கைப்பற்ற முனைந்த அந்த இரவின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். பார்ப்பன இந்து மதவெறி அடிப்படையிலான செயல்திட்டம் கொண்ட இந்து மகா சபையின் திட்டம், அதற்கு உதவி புரிந்த காங்கிரசு வலதுசாரிகள், இந்து வெறி அதிகாரிகள், வாய்ச் சொல்லில் மட்டும் மதச்சார்பின்மையைப் பேசி வந்த இந்திய அரசின் கையாலாகாத்தனம் என அனைத்தையும் அம்பலப்படுத்தியிருக்கும் புத்தகம்தான் ‘அயோத்தியின் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு‘ (Ayodhya : The Dark Night & The Secret history of RAMA’s appearance in babri Masjid).

புத்தகம் ஒரு வரலாற்று ஆவணத்துடன் தொடங்குகிறது – காலை 9.00 மணி, 23 டிசம்பர், 1949. உத்திர பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகர காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த பண்டிட் ராம் தியோ துபே என்பவர் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன் தாசு மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்  பிரிவு 147 (கலகம் செய்தல்) பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குவது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்கிறார்.

அந்த முதல் தகவலறிக்கையின் சுருக்கம் – காலை 7 மணியளவில் நான் (ராம் தியோ துபே) ஜன்ம பூமியை அடைந்தபோது, அங்கிருந்த மாதா பிரசாத் (காவலர் எண் 7) மூலம் தெரிந்து கொண்டது என்னவெனில், சுமார் 50 முதல் 60 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியினுள் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து ஒரு ராமர் சிலையை வைத்துள்ளனர். அதோடு மசூதியின் சுவற்றில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் ராமர், சீதை, அனுமான் படங்களை வரைந்துள்ளனர். அப்பொழுது அங்கு காவலுக்கிருந்த ஹன்ஸ் ராஜ் எனும் காவலர் தடுத்தும் யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை.

இந்த குற்றத்தைச் செய்தவர்கள் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன தாசு இன்னும் அடையாளம் தெரியாத 50 முதல் 60 பேர். இவர்கள் மசூதியினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ராமர் சிலையை வைத்து கலகம் செய்துள்ளனர். அங்கு பொறுப்பில் இருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் இதை நேரில் கண்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யபட்டுள்ளது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்பிருந்தே இரண்டு பொய்களை பா.ஜ.க தொடர்ந்து சொல்லி வருகிறது. ஒன்று, பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை; இரண்டாவது, மசூதியினுள் ராமர் சிலை தன் பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றியது.

இந்த இரண்டு பொய்களும் எப்படி திட்டமிட்டு இந்து மகா சபையினரால் உருவாக்கப்பட்டன என்பதையும், அவை எப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றப்பட்டன என்பதையும் புத்தகம் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் விவரிக்கிறது.

1947-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து பெரிய அளவில் கலவரங்கள் நாடு முழுவதும் வெடித்தன. மத வெறியர்களால் இந்துக்களும், முசுலீம்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். இந்து ராஷ்டிரத்தை தம் கனவாகவும், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அடிமைகளாக்கும் பாசிச திட்டத்துடனும் செயல்படத் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற அமைப்புகள் இந்தக் கலவரங்களை பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. இதன் ஒரு பகுதியாக அவர்கள் காந்தியை கொலை செய்துவிட்டு, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

காந்தி கொலையானது பெரும்பான்மை இந்துக்களிடமிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபையை தனிமைப்படுத்தியது. கூடவே இந்திய அரசு இவர்களை தடை செய்தது; இந்து மகா சபையோ அரசியல் திட்டத்தை கைவிட்டதாக சொல்லிக் கொண்டு தன்னை இந்துக்களின் கலாச்சார அமைப்பாக வெளியில் காட்டிக் கொண்டது. இவர்களின் ஞானகுரு சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். எனினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கர் விடுதலை அடையவே, ஆர்.எஸ்.எஸ் மீதான தடை 1949-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. காங்கிரசில் இருந்த பல வலதுசாரிகள் இந்து மகா சபையில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.

கிருஷ்ண ஜா-ன் புத்தகம்
அயோத்தியின் இருண்ட இரவுகள் பற்றிய கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜாவின் புத்தகம்

1947-ம் ஆண்டு பல்ராம்பூர் அரசர் ஒரு யாகம் நடத்தினார். அதற்கு தன் உற்ற நண்பர்களான பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயர், இந்து மகா சபையின் உத்திர பிரதேச தலைவரான திக் விஜய்நாத் ஆகியோரை அழைத்திருந்தார். அப்பொழுது நாயரிடமும், மன்னரிடமும் சாவர்க்கரின் திட்டம் ஒன்றை திக் விஜயநாத் விவரித்தார். இந்தியாவில் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களை மீட்பது; இதன் மூலம் மக்கள் மத்தியில் தாங்கள் வளருவது; அயோத்தியில் ராமர் கோவில், வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டுவது ஆகிய திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விளக்கினார் திக் விஜய்நாத். இந்தத் திட்டம் நிறைவேற, தான் எந்தவிதமான தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக நாயர் வாக்குக் கொடுத்தார்.

காந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகு, 1949 மே மாதம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உடனடியாக செய்ய வேண்டியவற்றைப் பற்றி சாவர்க்கரும், இந்து மகா சபையினரும் சேர்ந்து  திட்டமிடத் தொடங்கினர். அயோத்தியின் ராமர் கோவில் அவர்களுக்கு ஒரு பெரும் புதையலாக காட்சியளித்தது. அயோத்தியை மையமாகக் கொண்ட ராமாயண மகா சபை உருவாக்கப்பட்டது. அதற்கு பொறுப்பாளராக மகா சபையின் நகர தலைவர் ராமச்சந்திர தாசு பரமஹம்சு என்பவர் நியமிக்கப்பட்டார்.

பரமஹம்சு இந்தத் திட்டத்திற்கு இரண்டு பேரை தன் கூட்டாளிகளாக இருந்தவர்களில் தேர்ந்தெடுத்தார், ஒருவர் சந்நியாசி அபிராம் தாசு, மற்றொருவர் அச்சக உரிமையாளரும், பைசாபாத் மாவட்ட செயலாளருமான கோபால்சிங் விஷ்ராத். இன்னொரு புறம் பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயருடன் அயோத்தி நகர நீதிபதியும், நாயரின் சீடருமான இந்து மகா சபையின் ஆதரவாளர் குரு தத் சிங் என்பவரும் இந்தத் திட்டத்தில் மறைமுகமாக பங்கெடுத்தனர்.

அபிராம் தாசு ஒரு சந்நியாசி, அவரின் உண்மையான பெயர் அபிநந்தன் மிஸ்ரா. பீகாரில் உள்ள ரஹரி கிராமத்தை சேர்ந்த பார்ப்பனர். குடும்ப ஏழ்மை அபிநந்தனை நாடோடியாக்கியது. அவரின் குடும்பத் தொழிலான அர்ச்சகர் பணி சில இடங்களில் அவருக்கு உணவளித்தாலும், ப்ளேக் நோய் பரவல் அவரை பரதேசியாக அயோத்திக்கு அழைத்து வந்தது. அங்கு அனுமான் கர்ஹியைச் (அனுமான் கோவில்) சேர்ந்த துறவி சராயு தாசின் சீடரானார். சராயு தாசு மறைவுக்குப் பிறகு அனுமான் கர்ஹிக்கு அபிநந்தன் மிஸ்ரா பொறுப்பாளாரானார். சந்நியாசியாகி விட்ட பின் தன் பூர்வீகப் பெயரை துறந்தார்; அபிநந்தன் மிஸ்ரா அபிராம் தாசானார். ஆனால் துறவிக்கான நடைமுறைகளை மீறி, தன் உறவினர்களை அயோத்திக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பல உதவிகள் புரிந்தார். அவர்களுடனான குடும்ப உறவுகளை தொடர்ச்சியாக பேணி வந்தார்.

அபிராம் தாசுக்கு அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அது தனது மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கவசம் என்பதும் அவருக்கு புரிந்திருந்தது. கூடவே இசுலாமியர்கள் மீது நஞ்சு கக்குமளவு அவருக்கு இந்து மகா சபையுடன் நெருக்கம் வளர்ந்தது. அதன் ஒரு பகுதியாக பாபர் மசூதியை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றார்.

பாபர் மசூதி அருகில் சுமார் 50 அடி தொலைவில் ஒரு ராமர் கோவில் இருந்தது. பாபர் மசூதியில் தொழுகை அழைப்பாளராக இருந்த முகமது இசுமாயிலும், ராமர் கோவில் அர்ச்சகர்களும் பரஸ்பரம் நல்லுறவையே பேணி வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் அயோத்தியில் இருந்த துறவிகளிடையே சில பிரிவுகள் இருந்தன. அவற்றில் முக்கியமான வகைகள் நிர்மோகி அகோரி, நிர்வாண அகோரி. அபிராம் தாசு நிர்வாண அகோரி பிரிவை சேர்ந்தவர். நிர்வாண அகோரிகள் இயல்பில் ஒரு ரவுடிகளைப் போன்ற துறவிகள் குழு. இவர்கள் அயோத்தியில் பலமாக இருந்த சைவ துறவிகளை அடித்து துரத்திவிட்டு  ஆஞ்சநேயர் கோவிலைக் (அனுமான் கர்ஹி) கைப்பற்றி, அதன் நிலங்களையும், உண்டியல், காணிக்கை பணத்தையும் அனுபவிக்கத் துவங்கினர்.  இன்னொரு பிரிவினர் நிர்மோகி அகோரி, இவர்கள் பாபர் மசூதி அருகில் இருந்த ராமர் கோவிலை நிர்வகித்து வருவதுடன் அதன் காணிக்கைகளையும் அனுபவித்து வந்தனர்.

அபிராம் தாசு பாபர் மசூதியை கைப்பற்றும் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, பாபர் மசூதியைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் அருகில் உள்ள ராமர் கோவிலை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, நிர்மோகி அகோரிகளை  ஒன்றுமில்லாதவர்களாக்குவது; இரண்டாவது, ராமஜன்ம பூமியின் காவலர் என்ற புகழைப் பெறுவது. இப்படி சாமியார் குழுக்களுக்கிடையே இருந்த சொத்துச் சண்டைகளும், கட்டைப் பஞ்சாயத்தும் பாபர் மசூதி பிரச்சினைக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்து மகாசபையும், ராமாயண மகா சபையும் அயோத்தியில் பல நிகழ்வுகள், திருவிழாக்கள், பூஜைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக நடத்தினர். பாரம்பரியமாக அயோத்தியின் துறவிகள் ராமர் பிறந்த தினமான ராம நவமியை கொண்டாடுவார்கள், ராமர் திருமணத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். சீதை பெண் என்பதனால் ஆண் துறவிகள் அவளை வணங்க கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள் அவர்கள். ஆனால் 1949-ம் ஆண்டு ராமரது திருமண நாள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் அயோத்தியில் வலிந்து நடத்தப்பட்டன.

மசூதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக மசூதிக்கு போகும் வழிகளில் வசித்த இசுலாமியர்கள் வம்படியாக சண்டைக்கு இழுக்கப்பட்டனர். மசூதி அருகில் இருந்த இசுலாமியர்களின் மயானம் கைப்பற்றப்பட்டு அது தோண்டி சுத்தம் செய்யப்பட்டது. இசுலாமியர்களின் பிணங்களை அங்கு புதைக்க விடாமல் தடுத்து, பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதுபற்றி நகர நீதிபதிக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார்கள் தரப்பட்டன. இந்து மகா சபையின் தீவிர ஆதரவாளர்களான நீதிபதிகள் இருவரும் புகார்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்கள். இதனால் பாபர் மசூதியை காப்பாற்றும் இசுலாமியர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகின.

அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்த் தீவிர வலதுசாரி, குறிப்பாக இந்து மதவெறியின் ஆதரவாளர். அயோத்தியில் அப்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்டு ஆச்சார்யா நரேந்திர தேவ்-ஐ வீழ்த்த, ‘நரேந்திர தேவ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்‘ எனப் பிரச்சாரம் செய்து இந்துக்களின் ஓட்டைக் கைப்பற்ற முனைந்தார் பந்த். அதோடு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரான பாபா ராகவ் தாசும் இந்து மகா சபைக்கு தனது ஆதரவை அளித்தார்.

அரசு அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டதால் இந்து மகா சபைக்கு தன் காரியத்தை முடிப்பது எளிதாக இருந்தது. இசுலாமியர்களோ அரசும், அதிகாரிகளும் கைவிட்ட நிலையில் பீதியில் உறைந்து போய் இருந்தனர். இந்து மகா சபை இன்னும் வேகமாக வேலை பார்த்தது. பாபர் மசூதியே ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடம் என பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள், கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்டன. அச்சக உரிமையாளாரான விஷ்ராத், பரமஹம்சின் கூட்டாளியானதால் பிரசுரங்கள்  அயோத்தியெங்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டன.

டிசம்பர் 22-ம் தேதி அபிராம் தாசு ராமர் சிலையை மசூதியினுள் வைத்து விட்டார். மறுநாள் இந்து மகாசபை ஆதரவு பத்திரிகைகள், அயோத்தியில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும், அங்கு தன் பிறப்பிடத்தில் (மசூதியினுள்) ராமரது சிலை ஒன்று சுயம்புவாகவே தோன்றியுள்ளது என்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. இந்து மகாசபையால் திரட்டப்பட்ட மக்கள் மசூதியை நோக்கி படையெடுக்கவே,  பூசைகள், பாடல்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிலையை அகற்றாமல் பிரச்சினையை தள்ளிப் போட்டார் மாவட்ட நீதிபதியான நாயர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தவறான தகவல்களை அறிக்கைகளாக கொடுத்ததுடன்,  கலவரங்கள் வராமல் தான் தடுப்பதாகவும் ஒரு பிம்பத்தை நாயர் ஏற்படுத்தினார். அதிகாரிகளோ மாவட்ட இணை ஆணையாளரும், நீதிபதியுமான நாயரின் அனுமதிக்காக காத்திருந்தனர். சிலையை அப்புறப்படுத்தலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தாலும் அதனால் பெரும் கலவரங்கள் வரும் என பயம் காட்டி தள்ளிப்போட்டார் நாயர். நாயரின் இந்த கடும் உழைப்பிற்கு சன்மானமாக 1967-ல் ஜன சங்கத்தின் சார்பில் பஹ்ரைச் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

காவல்துறையினர் இதை வெறும் குற்றவியல் வழக்காகவே பதிவு செய்தனர். நேருவின் தலைமையிலான மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றிய விபரங்களை தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால் மாநில அரசோ அயோத்தி முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாக திரும்ப திரும்ப சொல்லி வந்தது. ராமர் சிலை அங்கிருந்து அகற்றப்படவேயில்லை. பல காங்கிரசுக்காரர்கள் மசூதி ஆக்கிரமிப்பை தாம் ஒரு இந்து என்கிற முறையில் வரவேற்கவே செய்தனர். மறுபுறம் சோசலிசம், மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்ட காங்கிரசின் சிறு பிரிவினர், இதனை மென்மையாகக் கையாண்டதன் மூலம் மறைமுகமாக உதவி புரிந்தனர்.

அக்ஷ்ய் பிரம்மச்சாரி
பாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி

காங்கிரசின் பைசாபாத் மாவட்ட செயலாளரும், காந்தியவாதியுமான அக்ஷய் பிரம்மச்சாரி இசுலாமியர்களுக்கு ஆதரவாக, குறிப்பாக அவர்களின் பயத்தைப் போக்க தொடர்ந்து போராடினார். ஆரம்ப கட்டத்தில் மாவட்ட நீதிபதி மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனக் கருதி பல புகார்களை அவரிடம் கொண்டு சென்ற அக்ஷய் பிரம்மச்சாரி மெல்ல நாயரை பற்றி புரிந்து கொண்டார். பின்பு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் இந்து மகாசபையின் ரவுடிகள் அவரை ஊரை விட்டே அடித்துத் துரத்தினர்.

ஆனாலும், அக்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லவும், பிரதமரிடமே எடுத்துச் செல்வதிலும் உறுதி காட்டினார். நேரு அவரை லால் பகதூர் சாஸ்திரியைப் பார்க்கச் சொன்னார். உத்திர பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரியோ அயோத்தியில் ஒரு பிரச்சினையும் இல்லை என சட்டசபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார். அக்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சு வரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த மோசமான காலகட்டத்தில் எண்ணற்ற அயோத்தி இசுலாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பியோட முனைந்தனர். தங்கள் சொத்துக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக கிழக்கு பாகிஸ்தானுக்கு ஓடினார்கள்.

அன்று முதல் இந்த மோசடி நிகழ்வின் அரசியல் ஆதாயங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள்  தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றன. மசூதியைக் கைப்பற்றிய பின் அது ராமர் கோவிலாகி விட்டது என்று சொல்கின்றனர். தூண் பூசை, கர சேவை,மசூதி இடிப்பு,செங்கல் பூசை என்று 1949-ல் விதைத்த விதைக்கான பலனை அறுவடை செய்யும் பணியில் சங்க பரிவார அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இசுலாமியர்களுக்கு சொந்தமான மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்து, அடுத்தடுத்து சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் இந்துத்துவா கும்பல்களை எதிர்த்து நின்று, அந்த இடத்தை அதன் உரிமையாளர்களான இசுலாமியர்களிடம் ஒப்படைப்பது தான் நியாயமானதாக இருக்க முடியும். ஆனால் அந்த நியாயத்தை செய்யும் வண்ணம் இங்கே எந்த ஓட்டுக் கட்சியும் உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றவில்லை. முதன்மையாக மதச்சார்பின்மை பேசும் காங்கிரசுதான் 1949-ல் மட்டுமல்ல, பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்ட 1992-ம் ஆண்டிலும் அதிகாரத்தில் இருந்தது.

இந்து மதவெறியின் செல்வாக்கினால் இந்துக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் காங்கிரசு கட்சி, பா.ஜ.க.-க்கு போட்டியாக இத்தகைய சதி வேலைகளுக்கு மறைமுகமாக ஆதரவாகவே இருந்தது. எனவே பாபர் மசூதி இடிப்பையும், ராமர் சிலை திணிப்பையும் ஏதோ இந்துமத வெறியர்களின் செயலாக மட்டும் நாம் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு துணையாக ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் என அனைத்தும் இருக்கின்றன என்பதே இந்துமத வெறியர்களின் பலம்.

இந்த பலத்தை தகர்த்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையினை உணர்த்தாத வரையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பது வரலாற்றில் கருப்பு தினமாகவே தொடரும்.

-ஆதவன்
__________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
__________________________________________

46 மறுமொழிகள்

  1. வெறும் 3 சதவிகிதமே உள்ள கூட்டம் நாட்டின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் வேட்டுவைக்கிறதே… பெரியார் வந்து இவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக்காட்டியும் மக்கள் திருந்த மறுக்கின்றனரே…. இந்த காலத்திலும் நான்தான் பிறப்பால் உயர்ந்தவன் மற்றவன் எல்லாம் தன்னைவிட தாழ்ந்தவன் என்று ஆணித்தரமாக ரேசிஸ்ட் பேசும் இந்த சிறுக்கூட்டத்தினை ஒதுக்கி வைக்க மக்கள் மறுக்கின்றனரே…. மக்களுக்கு சுயமரியாதை என்பது இல்லாமலே போய் இந்த கூட்டத்திற்கு வால் பிடிக்கின்றனரே … அறிவுக்கு பொருந்தாத பொய்களையும், புரட்டுகளையும், இதிகாசம், புராணம், என்றும், இவைகள் தான் இந்துமதத்தின் கொள்கை கோட்பாடு, வரலாறு என்றும் கூறி மக்களை ஜெயிக்க முடிகிறதே…. இவைகளெல்லாம் எப்படி இவர்களால் முடிகிறது ? காலம் சென்ற காஞ்சி பெரியவா சொன்னது போல் வெள்ளைக்காரன் ஹிந்து என்ற வார்த்தையை பிரயோகிக்கவில்லை என்றால் நம்மவாக்கள் கரை ஏறி இருக்க முடியாது என்றார். அவர் கூற்று முற்றிலும் உண்மை. இந்தியாவின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் முஸ்லீம் அல்லாத இந்திய மக்களை ஹிந்துஸ்தாநியர்கள் என்று கூறினார்கள். அதன் பிறகு வந்த வெள்ளையர்கள் ஹிந்துக்கள் என்று கூறினார்கள். இந்த ஹிந்து என்ற சொல்லைத்தான் ஆரியர்கள் இருக்கப்பற்றிக்கொண்டார்கள். தங்களுக்கென்று மதம் இல்லாமல் மதம் பிடிக்காமல் வாழ்ந்த திராவிட மக்களும் இவர்களின் பின்னால் ஒதுங்கவேண்டிய சூழ்நிலையை வரலாறு உருவாக்கிவிட்டது. இன்று ஆரியர்கள் சொல்லும் தங்களையே (திராவிடர்களையே) இழிவுபடுத்தும் கொள்கைகளும் கோட்பாடுகளும் தான் தங்களுடைய கலாச்சாரமும், வரலாறும் என்று நம்புகின்றனர். நம்பவைக்கப்படுகின்றனர். இந்த போலி நிலை மாறவேண்டுமானால் திராவிடர்கள் தங்களின் உண்மையான வரலாறை ஆராய்ந்து அறிந்துக்கொள்ள முன்வர வேண்டும். அப்பொழுதுதான் ஆரியர்களின் பிடியில் இருந்து திராவிடர்கள் மீள முடியும். சுயமரியாதையுடன் வாழ முடியும்.

      • முதல்ல சண்முகவேல் சொல்றதுக்கு பதில் சொல்லுபா .முடியலையா கம்முன்னு இரு..காப்பி பேஸ்ட் பண்ணியிருந்தா இதுல ஒரு பகுதியை எடுத்து சர்ச் குடுத்தா ஒரிஜினல் வெப்சைட் தெரிஞ்சுருமே.அப்படி கண்டு பிடிச்சு போடு அய்யிரே.அத்த உட்டு ஏன் பொம்மை போடுற .அசடு வழியுது தொடச்சுக்கோ.சரி,உங்களவாளுக்கு காப்பி பேஸ்ட் பண்ணா கொலைக் குத்தமா அய்யிரே.

        • copy paste செஞ்சா சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கும் திறன் இல்லாதவர் என்று பொருள் கொள்ளலாம்.

          • எரிமலை சொல்வது போல் “காப்பி பேஸ்ட் பண்ணியிருந்தா இதுல ஒரு பகுதியை எடுத்து சர்ச் குடுத்தா ஒரிஜினல் வெப்சைட் தெரிஞ்சுருமே” அந்த அறிவுகூட அரை டவுசர்களுக்கு இல்லையா ?!!!!! இந்த அரைவேக்காட்டு அரை டவுசருங்க எப்படி 97% மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கு ?!!!!!!

            • மிஸ்டர் அரேபிய அடிமை…இது காப்பி பேஸ்ட் விசயமல்ல…இந்தக் கண்டெண்டிலும் விசயமில்லை…

              • இந்த பார்பன (பைய்யன்) பூனை கண்ணை இருக்க மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக திருப்தி கொள்கிறது. யாரும் தொந்தரவு பண்ணாதீங்க….

    • யாரு இவரு,பாவம். மறுபடியும் மறுபடியும் மொதல்ல இருந்தா?

      ஆண்டவா,இப்பவே கண்ண கட்துதே?

      • ஹரி.. நீங்க இங்கிலிபிஷ்ல தான எழுதுவீங்க வெள்ளைக்கார தொற மாதிரி…. இப்போ அழகா தமிழ்ல கூட எழுதுறீங்க…. எவனோ ஒருத்தன் அவாக்களின் உண்மைய சொல்றான்னு பதட்டத்துல மறந்துட்டு தமிழ்ல எழுதிட்டீங்களா…. ? well done. i am appreciate you.

        • தலீவா கலக்குறீங்க போங்க. இதுகள் எப்பவுமே இப்பூடிதே. இதெல்லாம் coming na, going na , what yea, coming yea.. go yea… அந்த கேசு. ரெண்டும் கெட்டான் குரூப்பு.

        • தமிழை காட்டு மிரான்டி மொழினு சொன்ன ராமசாமி சீடன் சொல்வது, இப்போது அழகு தமிழாக! சிரிப்புதான் வரும்.

      • ஏம்பா ஹரி குமார் நீ எப்பவுமே இப்படியா இல்ல, இப்படிதான் எப்பவுமே வா.

  2. you are welcome.

    உண்மை உண்மை, உலகத்துல எத்தனை உண்மை. புறுதாவின் பிறப்பிடமே திராவிடர் கழகம் தான்,ஒதுக்குறேன் நான் தோற்று விட்டேன் என்பதை ஒத்து கொள்கிறேன்.

  3. இஸ்லாம் மாதத்தில், சிலை வழிபாடு மறுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் ஒருவனை தவிர வேறு எதயும் தொழுவது கூஃபர்,பாவம்.

    சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் கோவிலை இடித்து,அந்த இடத்தில் பள்ளிவாசல் அமைப்பது இஸ்லத்ிர்க்கு எதிரான ஒன்று.

    ஆதலால் அது ஒரு பள்ளிவாசலே இல்லை என்னும் பொழுது,அங்கு முஸ்லிம்களுக்கு எந்த உரிமயும் கிடாயாது.

  4. அரை டவுசர் அறி… நீங்க தமிழ்ல எழுதுவது முதல் சந்தோஷம். நீங்கள் தோற்றுவிட்டேன்னு சொன்னது இரண்டாவது சந்தோஷம். உங்க கும்பல் புருடா மலை அளவுன்னா…. மற்றவர்கள் புருடா கடுகளவு. உங்க கும்பலின் புருடா காலம் காலமாக பெரும் இனத்தையே சுரண்டுவதற்காகவும், மற்ற இனத்தையே அழிப்பதற்காகவும் தான். மற்றவர்கள் அப்படி அல்ல.

  5. இனிமேல் இங்கே யாரும் English, Taminilish பயன்படுத்தினால் பதில் சொல்லவேண்டாம்.அவர்களை சட்டை செய்யவேண்டாம். இன்வனுங்க தமிங்கிலிஷ் படிச்சி எனக்கு பல்லு ஓடஞ்சதுதான் மிச்சம். .

    • ஈல்லை, அப்பவும் பதில் வரும்.

      கனினியய் பயன்படுதும மக்கலுல் அடிபடை ஆஙில அரிவு. ஈல்லதொர். குரைவு.

  6. We are already submerged in religious hatred, let us try to find solution for peace, rather publishing articles that add more fuel to the fire. Ignoring the sensitive issue alone will bring peace. There is nothing to argue and say who is right and who is not, certain things has happened for the bad of the society, either we have to accept the bitter past and walk forward, or keep the unholy thoughts alive and live in grudge and hatred. the choice is ours.
    Let there be peace and make sure history is not repeating, that is how we can create a society with harmony.
    When it comes to religious sensitivity, it is better not to substantiate who is right. Every coin has two sides, but the truth can be only one and only the supreme power knows it and let us not judge based on datas and statistics.

  7. அண்டபுளுகும்,அயொக்கியத்தனமும் நிறைந்ததுதான் ஆர் எஸ் எஸ் வரலாறு! பார்பனிய ஆட்சியை தக்கவைத்துகொள்வதுதான் அதன்நிரந்தர கொள்கை! அரசு அதிகார வர்க்கத்தில் முக்கிய பதவிகளும், வியாபார சந்தையில் முக்கியநிருவனங்கலும் அவாள் கையில்! வெங்காயவிலையும், தங்கம் விலையும் ஏறுவதும், இறங்குவதும் அவாள் கண்ணசைவில்! இந்திரர்கள் பலர் மாறினாலும், இந்திராணி மாறுவதில்லையாம்! அதைபோல, தெர்ந்தெடுக்கபட்ட அரசுகளையும் ஆட்டிப்படைக்க அவாள் பிரமாஸ்திரம் ஒன்றே போதும்! அலகாபாத்நீதிமன்ற தீர்ப்பின்மூலம் இந்திராவை சீண்டியதும், பின்னர் எமெர்ஜன்சியை வரவேற்று, இந்திராவுடன் கைகோர்த்து, பல முண்ணனி பின் தங்கிய வகுப்பு எதிர்க்கட்சியினரை குறிவைத்து அடக்குமுறையை ஏவியதும் அவாளே!நன்றி கெட்ட சாமியை காப்பற்றி, இந்திராவின் கோபத்திற்கு ஆளான , கருணனிதி அரசை கலைத்ததுடன் காமராஜரின் உயிருக்கே எமனாய் வந்ததும் அவாளே!

    • 1949 க்கு முன் உள்ள வரலாறுக்கு சென்றால் வெள்ளைக்காரனுக்கு பார்பனர்கள் சொம்பு தூக்கிய வரலாறு தெரியும். வெள்ளைக்கார அரசு உத்தியோகங்களில் வெறும் 3 சதவீதமே உள்ள பார்பனர்கள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பி இருந்தார்கள். அதற்கும் முன்னோக்கி சென்றால் முகமதியர் வருகைனால் தன கூட்டம் பிழைக்க இந்திய அரசர்களுக்கு செய்த துரோகம் தெரியும், இஸ்லாமிய அரசர்களிடம் சரணாகதியடைந்து அவர்களிளிடம் சேவகம் புரிந்து அவர்களின் அரசவையில் உயர்ந்த பதவியுடன் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தது தெரியும், அதற்கும் முன்னோக்கி சென்றால் பார்பனர்கள் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு மத்திய ஆசியாவிலிருந்து போலன், கைபர் கணவாய் வழியாக இந்தியாவந்து தஞ்சம் அடைந்ததும், தஞ்சம் அடைந்த வந்தேறிகள் பூர்விக குடி மக்களான திராவிடர்களை உழைக்காமல் சுரண்டி தின்றதும் தெரியும்.

      • திராவிடம் என்பது கட்டு கதை . கஜினி பாபர் எப்படி வந்தாஙக. கப்பலா இல்லை விமானமா? கைபர் பொலன் வழி தான்.நீ ஒட்டகம் ஒட்டி வந்தாயா?

      • // 1949 க்கு முன் உள்ள வரலாறுக்கு சென்றால் வெள்ளைக்காரனுக்கு பார்பனர்கள் சொம்பு தூக்கிய வரலாறு தெரியும். வெள்ளைக்கார அரசு உத்தியோகங்களில் வெறும் 3 சதவீதமே உள்ள பார்பனர்கள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பி இருந்தார்கள். //

        வெள்ளைக்காரனுக்கு சொம்பு தூக்க பார்ப்பனர்களுடன் போட்டி போட்டவர்கள் யார்..? இதற்கு ‘நீதிக் கட்சி’ என்று பெயரும் வைத்துக் கொண்டு திராவிடம் பேசியதும் வரலாறுதான்..

        //அதற்கும் முன்னோக்கி சென்றால் முகமதியர் வருகைனால் தன கூட்டம் பிழைக்க இந்திய அரசர்களுக்கு செய்த துரோகம் தெரியும், இஸ்லாமிய அரசர்களிடம் சரணாகதியடைந்து அவர்களிளிடம் சேவகம் புரிந்து அவர்களின் அரசவையில் உயர்ந்த பதவியுடன் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தது தெரியும்,//

        இசுலாமிய அரசர்களிடம் சரணாகதியடைந்து சேவகம் செய்த பார்ப்பனர்களின் பட்டியலை நீங்கள் கொடுங்கள்.. இசுலாமிய மத மாற்றத்தை எதிர்த்து மடிந்த பார்ப்பனர்களின் எண்ணிக்கையை (ஆயிரக்கணக்கில்) நானும் கொடுக்கிறேன்..

        // அதற்கும் முன்னோக்கி சென்றால் பார்பனர்கள் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு மத்திய ஆசியாவிலிருந்து போலன், கைபர் கணவாய் வழியாக இந்தியாவந்து தஞ்சம் அடைந்ததும், தஞ்சம் அடைந்த வந்தேறிகள் பூர்விக குடி மக்களான திராவிடர்களை உழைக்காமல் சுரண்டி தின்றதும் தெரியும்.//

        பூர்வ குடிகள் திராவிடர்களா..? ஆரியமும், தமிழும் கலந்த கலப்புதானே திராவிடம்..!

        • “பூர்வ குடிகள் திராவிடர்களா..? ஆரியமும், தமிழும் கலந்த கலப்புதானே திராவிடம்..!” இது ஒன்று போதும் நீ ஒரு முட்டாள் என்பதற்கு. போய் வரலாறு படி அம்பி…. இப்போது சில பார்பனர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தை பார்பனர்களுடைய நாகரீகமாக சொல்லி பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். மக்கள் கவனமாக இருக்கணும்.

          • தொல்காப்பியம் —- 4 பிரிவில் முதல் யார்? அப்போதே ஆரியம் — வந்துவிட்டது !நீ நல்லா படி ! ! திராவிடம் ! கால்டு வெல் சொன்ன கதை தானே ?

  8. Everyone of you giving same bullshit – ULAIPU – do u think only physical work is ullaipu? Do u think british or muslim kings or present corporates are FOOLS to pay money for the Brahmins'(or any other caste) mental & limited ulaipu? If you think only UDAL ULAIPU is best, why they hell you guys are banging on RESERVATION quota in education and try to educate this generation? Please don’t say education is to improve their knowledge. If you can take a survey of parents, not even 1% say its just to improve their knowledge. Education in their view is to get so called ‘white colour job’

    Other biggest nonsense comedy is 3% ruling 97%; In Dharmapuri and other communcal clashes, do you know how many Brahmins’ are involved? Again don’t say parpaniam is root cause !! – Every human being has their own brain/thinking, particularly it should have improved a lot in last 2-3 decades after the reservations. If you say no, then there is no use in reservation -:)

  9. அய்யா 3% ! உங்களின் மூளை உழைப்பின் பலன் தான் தெரிந்து விட்டதே! அரசுத்துறை அத்தனையிலும் ஊழல்! பாதுகாப்பு துறையிலோ பகாசுர ஊழல்! இன்று இந்தியாவின் அவலமே உங்கள் 3% காரர்களின் மூளையால்தான்! ஒரு கட்சி காஷ்மீர் பார்பன கட்சி, மற்றொன்றோ சித்பவன் பார்ப்பன கட்சி! இந்தியா எப்படி அய்யா முன்னேறும்?

  10. உங்கள் திறமையே, பிரித்தாளுவதும், பலவான் முதுகுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு இளைத்தவன் பால் ஏவி விடுவதும் தானே! ஜனநாயகம் அண்ட முடியாத நீதிதுறையிலும், அய் எ ஸ் முதலிய அதிகார வர்க்க அமைப்பிலும் நீங்கள் எத்தனை சதவீதம்? அமெரிக்க அடிமை சட்டம் விலக்கப்பட்டு,ஒழிக்கப்பட்டுவிட்டது! ஆனால் இந்தியாவில் அடுக்கு அடுக்காக அமைக்கப்பட்ட அடிமை முறை இன்னும் ஒழிக்கப்படவில்லையே! சாதி பேதம் ஒழிய கட்டாய இட ஒதுக்கீடு, அனைத்து துறையிலும் தேவை!

    • Again other comedy. Do you have any statistics of how many % of State/Central Govt employees now is Brahmins’? Particularly when you compare the % in 1960-70’s and now, you will understand the fact that corruption, irresponsibility increased multi fold as the % of Brahmin’s in Govt position is decreased in these few decades.

      Are you so innocent to claim that IAS/IPS officers are RULING the country now? They are simply EXECUTING the directions/orders of Ministers/MLA/MPs…

  11. அருமையான, பல உண்மைகளை தெளிவு படுத்தும் விளக்க கட்டுரை வினவு. மிகுந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

  12. வந்தேறிகள் பூர்விக குடி மக்களான திராவிடர்களை உழைக்காமல் சுரண்டிணார்கள் என்ட்ரால் ஆதி திராவிடர்கள் யார் அண்ணே ? இவர்களை சுரண்டுபவர்கள் யார்? வந்தேறிகள் யார் யார் ? மன்ணுக்கு சொந்தமான பூர்விக குடி மக்கள் ( மீனவர் , பழண்குடி போன்ற) தவிர அனைவரும் வந்தேறிகளே.
    அய்யா ஆஜாட்கசத்ரு – 3 விழுக்காடு என இன்னும் பல்ல்வி பாடாதீர் ? அவ்ர்கள் விழுக்காடு கிட்டதட்ட 10 விழுக்காடு – தெரியுமா?

    • மொத்தம் 3% ல 1% “அவாக்கள்” அமேரிக்கா, கனடா, ஆஸ்திரேலியான்னு பேஷா செட்டிலாகியாச்சி. நம்ம கவெர்மெண்ட் செலவுல படிச்சி அறிவ வளர்த்துவிட்டு இப்போ அங்கே போயி செட்டிலாகி வெள்ளைக்காரனுக்கு நன்னா விசுவாசத்தை காண்பிக்கிறாள். வளைகுடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்லும் நம்மக்கள் உழைத்து அனுப்பும் பணம் நம் இந்திய அரசுக்கு அந்நிய செலாநியாக கணிசமாக கிடைக்கிறது. ஆனால் “அவாக்கள்” எல்லாம் சம்பாரித்த பணத்தை எல்லாம் அங்கேயே கார், பங்களா ன்னு வாங்கி அருமையா செட்டிலாகிவிட்டார்கள். தம்படி இங்கே வராது. அனால் இவர்கள் தான் தேசப்பற்றில் சிறந்தவர்கள் என்று நம் மீடியாக்கள் சொல்லிக்கிட்டே இருக்கும். எல்லாம் அவா மீடியாக்கள் தானே அப்படித்தான் சொல்லும். நாமளும் அதை கேட்டுக்கணும்.

      • இந்தியாவில் கல்வி , ஊடகஙகள் எல்லாம் தனியாரனா அவாளிடம் இல்லை மதகுபட்டி சண்முகவேல் அம்பி. இவாளிடம்தான் உள்ள்து. உம் கூற்றுபடி அங்கே போயி செட்டிலாகி வெள்ளைக்காரனுக்கு நன்னா விசுவாசத்தை எல்லோரும் காண்பிக்கிறார்கள்? நீர் இங்கேயே குண்டு சட்டியில் குதிரை ஓட்டவும்.

      • // மொத்தம் 3% ல 1% “அவாக்கள்” அமேரிக்கா, கனடா, ஆஸ்திரேலியான்னு பேஷா செட்டிலாகியாச்சி. நம்ம கவெர்மெண்ட் செலவுல படிச்சி அறிவ வளர்த்துவிட்டு இப்போ அங்கே போயி செட்டிலாகி வெள்ளைக்காரனுக்கு நன்னா விசுவாசத்தை காண்பிக்கிறாள். //

        1% அவாக்களில் எத்தனை பேர் ’உங்க’ கவர்மெண்டு செலவுல படிச்சுட்டுப் போனாளோ..?

        // வளைகுடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்லும் நம்மக்கள் உழைத்து அனுப்பும் பணம் நம் இந்திய அரசுக்கு அந்நிய செலாநியாக கணிசமாக கிடைக்கிறது. ஆனால் “அவாக்கள்” எல்லாம் சம்பாரித்த பணத்தை எல்லாம் அங்கேயே கார், பங்களா ன்னு வாங்கி அருமையா செட்டிலாகிவிட்டார்கள். தம்படி இங்கே வராது. //

        வளைகுடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு மட்டும்தான் ‘உம் மக்கள்’ போனார்களா.. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எல்லாம் போகவேயில்லையா.. அங்கே போனவா எல்லாம் அவாக்கள் மட்டும்தானா.. அப்ப அவாளும் இவாளும் இந்தியாவுக்கு அனுப்பும் அன்னியச் செலாவணி கிட்டத்தட்ட 60 : 40 சதவீதமாக இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி சொல்வது உண்மையா..?! 1 % அவாக்கள் 60 % NRI remittance-ஐ அன்னியச் செலாவணியா இந்தியாவுக்கு அனுப்பறாளா.. பேஷ்.. பேஷ்..

  13. முசாபர்நகர் கலவரம் பற்றி வாய்மூடி மெளனம் சாதிப்பதேன் வினவு ! இறந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்கள் கலவரம் செய்து கொன்றவர்கள் முஸ்லீம்கள் !

    இதை உங்கள் பார்க்காது காதுகள் கேட்காது வாய் ஊமையாகிவிடும்

    இதுவே முஸ்லீம்களுக்கு ஒன்று என்றால் தோளில் தூக்கி போட்டு கொண்டு கொட்டை வாய்வழிய வர கூவும் வினவே நீ நடுநிலையாளன் என்றால் இதனை கண்டித்து ஒர் பதிவிடு பார்ப்போம்

    • ஏன்பா தம்பி நீ facebook ல தான் செய்தி வாசிப்பியோ? இங்க எல்லா செய்தித்தாள்லையும் ஹிந்து பயங்கரவாத கும்பல் எவ்வாறு கலவரத்தையும் வதந்தியையும் பரப்புச்சுனு எழுதிக்கிட்டு இருக்காங்க. ஏன் இந்த கட்டுரையே ஹிந்து பயங்கரவாத கும்பல் கலவரத்தையும் வதந்தியையும் எப்படி பரப்பினார்கள் என்று ஒரு நல்ல வரலாற்று சான்று. மொதல்ல கட்டுரைய படுச்சிட்டு comment போடு.

  14. வினவு வாசகர்களே –
    வினவின் பதிவுகலின் மையகருத்து என்ன என்று தற்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும்- இப்படி தனக்கு சாதகமான ஏதாவது பதிவுகளை , எஙகிருந்தோ எடுத்து பதியவிட்டு நமக்குள் மத வேறுபாடு (அ) ஜாதி வேறுபாடுகளை தூண்டி விட்டு -நாம் அடித்து கொல்வதை வேடிக்கை பார்க்கிறது-
    சரியாக சொன்னால் தன் ஊருக்கு அருகே உள்ள ஊரான அய்யம்பேட்டை வேலை என்று சொல்வார்களே அது போல . வேற்று மொழிக்காரான் இஙுகு வந்து கடை விறித்து வணிகம் பண்ணுவது போல் உள்ளது-

    • “வினவின் பதிவுகலின் மையகருத்து என்ன என்று தற்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும்- இப்படி தனக்கு சாதகமான ஏதாவது பதிவுகளை , எஙகிருந்தோ எடுத்து பதியவிட்டு நமக்குள் மத வேறுபாடு (அ) ஜாதி வேறுபாடுகளை தூண்டி விட்டு -நாம் அடித்து கொல்வதை வேடிக்கை பார்க்கிறது”””””””” நடந்ததை சான்றுகளுடன் சொன்னாலே நாமெல்லாம் இங்கு அடித்துக்கொள்வோம் என்று பதறுகிற உங்கள் மனம்…. காந்தி கொலையிலிருந்து, பாபர்மசூதி இடிப்பு, நாடெங்கிலும் குண்டு வைப்பது, ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்துக்கொண்டது, பாகிஸ்தான் கொடியை ஏற்றியது, கோயிலில் மாட்டுக்கறியை வீசியது போன்ற ஏராளமான பிரச்சனைகளில்(அடித்துக்கொல்வதர்காகவே) தொடர்ந்து தவறான தகவல்களை கொடுத்து ஒரு சமூகத்தையே கலவரங்களால் அழிக்க துடிக்கும் நயவஞ்சகக்கூட்டம் செய்யும் செயல்களை கண்டு உங்கள் மனம் பதற மறுக்கிறதே ஏன் ? நீங்களும் அவர்களை போல் நடிக்கிறீர்களா ? போலித்தனத்துடன் கருத்தை பதிய வைக்காதீர்கள். கட்டுரையை தவறானது என்று ஆதாரங்களுடன் மறுக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. உண்மையை சொல்லக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.

  15. அய்யா இனியன் –
    நீஙகள் வினவுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிரீர்? நான் சொன்ன வேற்று மொழிக்காரானா நீஙகள் ? நம்நாட்டில்நடக்கும் அத்தனை அவலஙகளையும் மத வேறுபாடு (அ) ஜாதி வேறுபாடுகள் இன்றி வினவு பதியட்டும் ? நாம் வரவேற்போம்-நாம் படித்த சில பதிவுகளில் தமிழரை மட்டம் தட்டிய மறுமொழி (உண்மைக்கு மாறாக ) வந்தபோது உம் வீர்ம் எங்கெ போனது ? என் மறுமொழிக்கு , மறுமொழி வினவிடமிருந்து எதிர்பார்த்ததேன். எப்போதும் போல அதன் அல்லக்கைதான் பதில் சொல்லியுள்ளது

  16. சந்தை என்று கூடும்போது பல பொருட் களை விற்பவர்களும், வாங்குபவர்களும் வரத்தான் செய்வார்கள்! வினவு ஒரு சந்தைக்கடையை (கமிசனல்லா மண்டி?) ஆரம்பிக்கிறது, எல்லோரும் வந்து அவரவர் கருத்தை சொல்லலாமே! சிலர் சீரியசாக விவாதிப்பர், சிலர் திசை திருப்புவர்! எனக்கு கூட வினவின் சில பதிவுகளில் உடன்பாடில்லைதான்! அதற்காக கருத்து பரிமாற்றங்களை தவிர்க்ககூடாது! பலர் திறந்த மன துடன் விவாதிப்பர், சிலர் திட்டமிட்டு திசைதிருப்புவர்! சிலர் மட்டும் ஏடாகூடமாய் பேசி எகத்தாளமாய் எக்களிப்பர்! கடைசியில் அம்பலப்பட்டு போவர்! எல்லாவற்றிலும் மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு!

Leave a Reply to Harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க