வெள்ளாறு எங்கள் ஆறு– மணல் கொள்ளையனே வெளியேறு!
20-12-2014
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்
மற்றும்
ஜி.பஞ்சமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர்,
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்
பத்திரிகை செய்தி

கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தமாக மூடக்கோரி 15,16-12-14 அன்று நடந்த முற்றுகை போராட்டத்தில் கொட்டும் மழையிலும் நடந்த பல கட்ட பேச்சு வார்த்தையில் மக்கள் கோரியுள்ள அனைத்து ஆவணங்களையும் தருவது, 20-12-2014 அன்று மக்கள் முன்பாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது வரை குவாரியை தற்காலிகமாக மூட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு முற்றுகை போராட்டம் இரண்டாம் நாள் மாலை 3-00 மணியளவில் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.
வருவாய்த்துறையும், பொதுப்பணித்துறையும் தர வேண்டிய ஆவணங்கள் …
-
2-12-14 அன்று நடந்த முற்றுகைப் போரட்டத்தின் விளைவாக மணல் குவாரியை தற்காலிகமாக மூடுவதற்கான மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு நகல்
-
மேற்படி உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை.
-
மீண்டும் மணல் குவாரி இயங்கும் என மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு நகல்.
-
மாநில சுற்றுச் சூழல் ஆணையம் கார்மாங்குடி மணல் குவாரிக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழ் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கி உத்தரவு நகல்.
-
மேற்கண்ட உத்தரவுகளின் அடிப்படையில் குவாரி துவங்கிய நாள் முதல் இன்று வரை எடுக்கப்பட்ட மணலின் அளவு, லாரி லோடுகளின் எண்ணிக்கை, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்ட மொத்த தொகை விபரம் – மாத வாரியாக
-
கார்மாங்குடி ஊராட்சியில் மேற்படி மணல் குவாரியில் அள்ளப்பட்ட மணலின் மூலம் வந்த மொத்த வருமானம் – மாத வாரியாக
-
கார்மாங்குடி மணல் சேமிப்பு கிடங்கில் (யார்டில்) இருந்து குவாரிதொடஙகியதிலிருந்து இன்று வரை சென்ற மணலின் விபரம் மற்றும் வழங்கப்பட்ட பெர்மிட்டுகள் விபரம் – நாள் வாரியாக.
-
குவாரியில் பயன்படுத்தபட்ட ஜே.சி.பி.எந்திரங்களுக்கு பி.டபிள்யூ.டி அல்லது அரசு மூலம் வழங்கப்பட்ட மொத்த தொகை எந்த ஒப்பந்ததாரர்களுகக்கு வழங்கபட்டது – நாள் வாரியாக
-
கார்மாங்குடி ஊராட்சியில் மணல் குவாரி ஒப்புதலுக்காக இயற்றப்பட்ட தீர்மான நகல்
-
கருவேப்பிலங்குறிச்சி தேவங்குடி சாலை அமைப்பு மற்றும் பராமரிப்பு திட்ட மதிப்பீடு என்ன? கால நிர்ணயம் எனன்?
-
மாவட்டம் மற்றும் வட்ட அளவில் அரசாணை எண் 135-ன் படி அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவின் அறிக்கை – மாத வாரியாக
-
கார்மாங்குடி வெள்ளாற்று மணல் குவாரி சர்வே எண்.398/1- ல் குவாரி தொடங்குவதற்கு முன் இருந்த அ) மணலின் அளவு விபரம் ஆ) குவாரி தொடங்கிய பிறகு எடுத்த மொத்த மணலின் அளவு இ) இன்னும் எடுக்கப்பட வேண்டிய மணலின் அளவு
மேற்கண்ட ஆவணங்களை 17-12-2014 அன்று மாலை தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். நமது வழக்கறிஞர்கள் பல முறை அணுகிய போதும் அதிகாரிகள் தரப்பில் “பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சென்னை மீட்டிங் சென்றுள்ளார். தாசில்தார், கலெக்டர் மீட்டிங் சென்றுள்ளார்.” என பதிலளித்தார்கள்.
“அனைத்தும் அரசு ஆவணங்கள், எனவே தகவல் அறியும் சட்டப்படி விண்ணப்பம் கொடுங்கள்” என கோட்டாட்சியர் நம்மிடம் வலியுறுத்தினார்.
“நாங்கள் எந்த அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுக்க மாட்டோம். நீங்கள் தான் பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்தீர்கள். கேட்ட ஆவணங்களை வாங்கிக் கொடுப்பது உங்கள் கடமை” என வலியுறுத்தி, “பேச்சுவார்த்தையை காலம் கடத்தி மணல் குவாரியை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என கூறினோம்.
அதற்கு ஒப்புக் கொண்டு, “இரண்டு நாட்களில் ஆவணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என கோட்டாட்சியர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
எனவே விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 20-12-2014 அன்று நடக்க இருந்த பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. நாம் கேட்ட ஆவணங்கள் கிடைத்ததும் நமது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், மண்ணியல் வல்லுநர்களின் கருத்து அறிந்த பிறகு போராட்டக் குழு நிர்வாகிகள் உரிய அதிகாரிகளை கலந்து பேசி, பேச்சு வார்த்தைக்கான தேதியை பின்னர் அறிவிக்கிறோம்.
இப்படிக்கு
உண்மையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
முந்தைய பதிவுகள்
- மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?
- வெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் – HRPC ஆர்ப்பாட்டம்
- மணல் கொள்ளை : விருதை தாசில்தார் அலுவலக முற்றுகை
- மணல் குவாரியை இழுத்து மூடிய மக்கள் போராட்டம்
- பொதுக்கூட்டம் : மணல் கொள்ளையர்களுக்கு என்ன தண்டனை ?
- மணல் கொள்ளை : பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – முற்றுகை அறிவிப்பு
- மணல் கொள்ளை எதிர்த்து முற்றுகை – நேரடி ரிப்போர்ட்
- மணல் கொள்ளையரை முறியடித்த மக்கள் – வீடியோ
- நள்ளிரவிலும் தொடர்கிறது வெள்ளாறு முற்றுகை – ராஜுவுடன் நேர்காணல்
- வெள்ளாறு பாதுகாப்பு முற்றுகை போராட்டம் : 2-ம் நாள்
- மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்