Saturday, May 10, 2025
முகப்புசெய்திஐ.டி துறையில் தொழிற்சங்கம் - சென்னையில் கூட்டம் - வருக

ஐ.டி துறையில் தொழிற்சங்கம் – சென்னையில் கூட்டம் – வருக

-

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனம் 25,000-க்கும் அதிகமான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக செய்திகள் வெளியான உடன், கடந்த டிசம்பர் 20அன்று வினவு தளத்தில் ஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு என்ற தலைப்பில் இந்த ஆட்குறைப்புக்கு ஊழியர்களின் திறமைக் குறைவே காரணம் என்று நிர்வாகம் கூறுவதை அம்பலப்படுத்தி, அதன் உண்மையான நோக்கம் ஊழியர்களின் வாழ்க்கையை பலியிட்டு நிறுவன லாபத்தை அதிகரிப்பதே என்று தெளிவுபடுத்தினோம். திடீரென்று வேலை இழக்கும் ஊழியர்கள் இதை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தோம்.

இதைத் தொடர்ந்து பல ஐ.டி துறை ஊழியர்கள் எங்களை மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டனர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி ஊழியர்களை தொழிற்சங்கமாக அணிதிரட்டும் முயற்சிகளில் இறங்கியது  (TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பை நிறுத்தும் சக்தி எது ?).

ஐ.டி ஊழியர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையும், கருத்துக்களையும் TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பு – அழக்கூட முடியவில்லை  தொகுத்து எழுதியதோடு, குறிப்பான விபரமாக, டி.சி.எஸ் கொச்சி கிளையில் 500 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றி எழுதினோம். ( TCS கொச்சி அராஜகம் – 500 ஊழியர்கள் வேலை நீக்கம்)

ஐரோப்பிய நாடுகளில் தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கான தொழிற்சங்கங்கள் செயல்படுவது குறித்த கடிதம் டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம் ஒன்று ஜனவரி 2-ம் தேதி வெளியானது.

ஜனவரி 7-ம் தேதியன்று, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த ஆலைத் தொழிலாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்ட டி.சி.எஸ் ஊழியர்களுக்கு தமது ஆதரவை தெரிவித்தும், ஐ.டி ஊழியர்கள் யூனியனாக அணி திரளும்படி அறைகூவல் விடுத்தும் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூர் சிக்னலில் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் வினியோகித்து பிரச்சாரம் செய்தனர்.

tcs-layoff-ndlf-campaign-2

ஐ.டி துறை ஊழியர்களின் பணி பாதுகாப்பையும், பணியிட உரிமைகளையும் உறுதி செய்ய அவர்களை  சங்கமாக அணி திரட்டி போராடும் இம்முயற்சியின் தொடர்ச்சியாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 10-1-2015
நேரம் : மாலை 5 மணி

இடம் :
பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம்
OMR சாலையில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் போகும் வழியில்
பேருந்து வழித்தடங்கள் – 21H, 19B, 151C, 570

தலைமை : தோழர் முகுந்தன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு
ஒருங்கிணைத்து நடத்துபவர் : தோழர் விஜயகுமார், மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு

வல்லுனர்கள் குழு

  • மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ்
  • மனநல மருத்துவர் டாக்டர் ருத்ரன்
  • வழக்கறிஞர் பார்த்தசாரதி, மனித உரிமை பாதுகாப்பு மையம்
  • வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், மனித உரிமை பாதுகாப்பு மையம்
  • வழக்கறிஞர் இந்திரா, மனித உரிமை பாதுகாப்பு மையம்
  • வழக்கறிஞர் மீனாட்சி, மனித உரிமை பாதுகாப்பு மையம்
  • வழக்கறிஞர் பொற்கொடி, மனித உரிமை பாதுகாப்பு மையம்

ஐ.டி துறையைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமது கேள்விகளையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு :

  • நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஐ.டி ஊழியர்களின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, அனுமதிக்கப்பட்ட நபர்கள் தவிர யாரும் அரங்கினுள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி இல்லை.
  • ஊழியர்களை கண்காணிக்கும் நோக்கில் வரும் ஐ.டி நிறுவனங்களை சேர்ந்த எச்.ஆர் உள்ளிட்டவர்களுக்கு அரங்கினுள் அனுமதி இல்லை.

tcs-layoff-ndlf-campaign-1

மேலும் படிக்க