privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு - செய்தி - படங்கள்

தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்

-

மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதலை கண்டித்து பு.மா.இ.மு கண்டன அறிக்கை!

புதிய கல்விக் கொள்கை- 2016: பார்ப்பன பாசிச ஜெயா அரசின் சாயம் வெளுத்தது!

nep-burning-rsyf-chennai-bannerபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடிய பு.மா.இ.மு மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி 4 பேரை கைது செய்து சிறையிலடைத்ததை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது!

சமஸ்கிருதத்தை திணித்து நாட்டை பார்ப்பனியமயமாக்குவது, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தேவையான திறமையான கொத்தடிமைகளை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது மோடி அரசு. அதை முழுமையாக வெளியிட்டால் நாடு முழுவதும் பெரிய எதிர்ப்பு கிளம்பும் என்பதால் “தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்” என்ற பெயரில் 43 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பக்கத்துக்குப் பக்கம் கொடிய பார்ப்பனிய விசத்தைக் கக்கும் புதிய கல்விக் கொள்கை நகல் அறிக்கை வெளிவந்தது முதல் அதை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாணவர்களைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, திருச்சி, கோவை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தினோம். போராடிய எமது பு.மா.இ.மு மாணவ – மாணவிகள் மீது போலீசை ஏவி கொலைவெறித்தாக்குதலை நடத்தியது, ஜெயா அரசு. மாணவ – மாணவிகளை தரத்தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். சென்னை, கோவையில் ஆண் போலீசார் மாணவிகள் – இளம்பெண்களை சாலையில் தள்ளி ஆடையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தினார்கள். விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை விரட்டியடித்துவிட்டு பு.மா.இ.மு முன்னணியாளர்களான ஞானவேல், சதீஸ், வித்யாசாகர், பிராங்க்ளின் ஆகிய நான்கு மாணவர்களை மட்டும் கைது செய்து 143, 285, 188 IPC ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாட்டின் பெருவாரியான மாணவர்களின் கல்வி உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடிய பு.மா.இ.மு மாணவ – மாணவிகள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதையும், 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய பி.ஜே.பி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் தமிழக அரசு பேசியது ஒரு நாடகம்தான். பிற்போக்கு சக்திகள், தனியார்பள்ளி முதலாளிகளின் நலனுக்காக அன்று அறிவியல் பூர்வமான – சிந்தனையாற்றல் கொண்ட சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கியது இதே ஜெயலலிதா அரசுதான். உண்மையில் அதே வழியில்தான் இன்று சமஸ்கிருதத்தை திணிக்கும், தனியார் கல்விக் கொள்கையர்களுக்கு கல்வியை ஒட்டுமொத்தமாக தாரைவார்த்து, பெருவாரியான ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய மனுநீதியான புதிய கல்விக் கொள்கை விசயத்திலும் பி.ஜே.பி க்கு ஆதரவாக நிற்கிறது என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட – இந்தித் திணிப்பை விரட்டியடித்த தமிழ் மண்ணில் இதை அனுமதிக்கக் கூடாது.

எனவே, விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட 4 பு.மா.இ.மு மாணவர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும். இதற்கு மாணவர்கள் – பேராசியர்கள் – ஜனநாயக சக்திகள் குரல்கொடுக்க வேண்டும்.

சிதம்பரத்தில் வரும் 25-ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேரணி -கருத்தரங்கம் – பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு கடந்த 10 நாட்களாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இன்று போலீசார் அனுமதியை மறுத்துள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். தமிழக அரசின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஒருபோதும் அஞ்சாது போராட்டத்தைத் தொடரும்.

இவண்
த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம் செய்தி, படங்கள்

1. சென்னை

20-09-2016 அன்று புதிய கல்விக்கொள்கை நகல் எரிப்புப் போராட்டம் நடத்தபோவதாக, அண்ணாசாலை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்து பீதி அடைந்த போலீசு காலை 8.00 மணியில் இருந்தே அண்ணாசாலை தபால்நிலையத்தில் 6-க்கும் மேற்ப்பட்ட போலீசு வேன்கள், பேரிகாடுகளுடன் எரிப்பதை தடுக்க நின்று கொண்டிருந்தது.

nep-burning-chennai-police-in-forceஅதில் ஒரு போலீசு “நா.. பாத்ததுலயே இவங்க மட்டும் தா…ப… விடாபிடியா போராடுவாங்க…” என்று பத்திரிகை நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.

“இவங்க மட்டும் தான் எப்போமே நமக்கு ஹாட் நியூஸ் தருவாங்க! இவங்க எங்க போராட்டம் பண்ணும்-னு நினைக்கிறாங்களோ அங்கதான் போராட்டம் பண்ணுவாங்க பா… போலீசெல்லாம் இவங்க மதிக்கவே மாட்டாங்க” என்று ஒரு பத்திரிகையாளர் புதிதாக வந்த பத்திரிகை நண்பரிடம் பு.மா.இ.மு-வை பற்றி அறிமுகப்படுத்தினார்.

ஒரு பெண் பத்திரிகை நண்பர் “நான், RSYF – க்கு போன் பன்னிக்கேட்டேன் அவங்க ரெண்டு பக்கம் இருந்தும் வருவாங்களாம். நம்ம எப்பிடி, ரெண்டு பக்கமும் விஷுவல் எடுக்கிறது” என்ற ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இதை ஒட்டுக்கேட்ட போலீசு, தாங்கள் அழைத்து வந்த 100-க்கும் மேற்ப்பட்ட அடியாட்களை இரண்டு பக்கமும் செல்வதற்காக 50 – 50 போலீசாக பிரித்து நிற்க வைத்துக் கொண்டிருந்தது.

சரியாக, நண்பகல் 1.00 மணியளவில், சென்னை அண்ணாசாலை தர்கா அருகிலிருந்து சாலையே அதிரும் அளவிற்கு முழக்கவிட்டபடி, தபால்நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் போராட்டம் துவங்கியது. ஏற்கனவே பிரிக்கப்பட்ட போலீசுகள் ஓட ஆரம்பித்தனர். மீதி இருந்த போலீசு, சாலையில் அந்தப்பக்கம் வந்துவிட போகிறார்கள் என தாபால்நிலையத்தின் வாயிலிலேயே ஈ அடித்துக்கொண்டிருந்தது.

nep-burning-chennai-rsyf-03மற்ற கட்சிகாரர்களிடம் கேட்பது போல “அங்கவந்து கைதுஆவுங்க” என்றது போலீசு. தோழர்கள், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் போலீசு அதிகாரி போராட்ட தலைவர் சாரதியிடம், “என்ன சாரதி அங்கவந்து கைதாவுறீங்களா? இல்ல இங்கயே கைதாவுறீங்களா?” என்று கேட்டார்.

தோழர்கள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், திடீரென கல்வி மறுப்புக்கொள்கை நகலை பற்ற வைத்தனர். பதறிப்போனது, போலீசு. “ஏய், என்ன பண்ற என்ன பண்ற” என பீதியில் கத்தியது. உடனே ஓடிவந்து எரிந்துக் கொண்டிருந்த பேப்பரை அணைத்து வீரச்செயல் புரிந்தது போலீசு. மறுபுறம், பேப்பரை கொளுத்தத் துவங்கினர் தோழர்கள், போலீசு பாய்ந்து வந்து பேப்பர்களை பிடுங்கிச் சென்றனர். இந்த வீரசெயலில் ஈடுபட்டதற்கு அம்மாவிருது வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

nep-burning-chennai-rsyf-02போலீசு தோழர்களை கைதுசெய்ய துவங்கியது. எரிப்புப்போராட்டத்தை அடுத்து மறியலாக போராட்டத்தை நீட்டித்தார்கள் தோழர்கள். பெண்கள் குழந்தைகள் என பாராமல் அனைவரையும் ரோட்டில் தரதரவென இழுத்து வேனில் ஏற்றியது போலீசு. இதில் ஒரு பெண் தோழர் மயக்கமடைந்தார். அதற்கு, “உன் புள்ள படிக்கதான நாங்க போராடுறோம்” என்று முழங்கினர் பு.மா.இ.மு தோழர்கள்.

பெண் தோழர்களை கைதுசெய்ய அழைத்து வரப்பட்ட பெண் போலீசுகள், பெண் தோழர்களை பார்த்து, பயந்து தொலைவிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே கோபமாக இருக்கும் போலீசு அதிகாரி, “ஏய்! அங்க என்ன பன்ற இங்க வா!”- என கத்தி கூச்சலிட ஆரம்பித்துவிட்டார். உண்மையில் மறியலுக்கு போலீசே அனுமதியளித்து நடத்தியது போலும், ஏனெனில் தோழர்களை கைதுசெய்ய, என்ன செய்வது என தெரியாமல், வாகனங்களை நடுரோட்டில் போட்டுவிட்டது. இதனால், அந்த சாலையில் அரைமணிநேரம் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

30 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கைதுசெய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை சமூகநலக்கூடத்தில் அடைத்தது போலீசு. காகிதத்தை காப்பாற்றிய போலீசே, இந்த கல்விக் கொள்கையால் உன்வீட்டில் தீப்பற்றி எரியும் அப்போது வருவாய் எங்களிடம்!

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

2. கோவை

 

 

கோவை – காந்திபுரம் டவுன் பஸ்டாண்டு போர்க்களமானது.nep-burning-kovai-rsyf-12

ரியாக 11 மணியளவில் போராட்டம் துவங்கியது. காலையில் இருந்தே காத்துக் கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட போலீசு, வந்த ஐந்து நிமிடத்திலேயே கைதுசெய்ய முற்ப்பட்டது. தோழர்கள் கல்வி மறுப்புக் கொள்கை நகலை எரிக்க ஆரம்பித்தனர். காகிதத்தை எரிய விடாமல் காப்பாற்றுவதற்காகவே அழைத்துவரப்பட்ட IS போலீசுகள் 4 பேர் அந்த காகிதத்தை பிடுங்கிக் கொண்டனர். அதன் பின் போலீசுக்கும், தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. தோழர்களை தள்ளிவிடுவது, ரோட்டில் தரதரவென இழுத்து செல்வது என தனக்கே உரிய வெறிச்செயலை காட்ட ஆரம்பித்தது.

nep-burning-kovai-rsyf-11“ஆம்பளய ஏன் அணைச்சிட்டு இருக்க, மூடிட்டு வண்டில ஏறு” என்று பெண் தோழர்களையும், “ஏண்டா போய் பொம்பள பின்னாடி இருக்க” என ஆண் தோழர்களையும் ஆபாசமாக பேச ஆரம்பித்தது, காகிதம் பொறுக்க அழைத்து வரப்பட்ட IS போலீசுகள். பின்னர், போலீசுக்கும் தோழர்களுக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. தோழர்கள் பறையடித்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். கல்வி மறுப்புக் கொள்கை நகலை எரித்தனர். இந்த நகல் எரிப்புப் போராட்டம் கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் நடைபெற்றது. இதனால் கோவை-காந்திபுரம் டவுன்பஸ்டாண்டு போர்க்களமானது.

nep-burning-kovai-rsyf-10சுமார் 30-க்கும் மேற்ப்பட்ட தோழர்களை அடித்து தரதரவென இழுத்து வேனில் ஏற்றி கைதுசெய்தது. எஞ்சி இருந்து 4 பெண்தோழர்கள் கடைசிவரை முழக்கமிட்டு கொண்டிருந்தனர். ஒரு ஆண் பொறுக்கி போலீசு, ஒரு பெண் தோழரின் ஆடையை கிழித்தான். தோழர்களை இழுத்து சென்றதில் ஒரு புதிய தோழர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். பின் அனைவரையும் கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.

மண்டபத்தினுள் தோழர்கள், “பெண்களை இழுத்து ஆடையை கிழித்த பொறுக்கி போலீசையும், இன்னும் தோழர்களை அடித்து இழுத்து சென்ற போலீசுகளும், தோழர்களை ஆபாசமாக பேசிய IS போலீசுகளும், எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல், உணவு சாப்பிடமாட்டோம்” என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணிநேரத்திற்கு பின் போலீசு அனைவரும் வந்து தோழர்களிடம் மன்னிப்புக் கேட்டனர்.

தோழர்களின் இந்த விடாப்பிடியான போராட்டம், அரசுக்கு அஞ்சாத நெஞ்சூரத்தை நமக்கு பறைசாற்றுகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

3. திருச்சி

nep-burning-trichy-rsyf-07மோடி அரசின் புதியகல்விக் கொள்கையை எதிர்த்து புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி சார்பாக கடந்த இரண்டு மாதங்களாக தொடர் பிரச்சாரம் தமிழக அளவில் நடைபெற்று வருகிறது. செப் 1-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து மாவட்ட அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 20.09.2016 காலை 10.30 மணியளவில் திருச்சி தலைமை தபால் அலுவலகம் முன்பு புதிய கல்விக் கொள்கையின் வரைவுத் திட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் புதிய கல்விக் கொள்கையின் வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டிருந்தது. இதன் நகலை புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணியின் திருச்சி மாவட்ட செயலர் விக்கி தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 23 பேர் கலந்து கொண்டு எரித்து கைதாகினர். ஏற்கனவே இந்த நகலெரிப்பு போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி 10,000 துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு 15-க்கும் மேற்பட்டபள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருந்தது.

nep-burning-trichy-rsyf-04இதையறிந்த காவல்துறையினர் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை செயலருக்கு போன் செய்து, “எங்கு நடத்தப் போகிறீர்கள்? என்னசெய்யபோகிறீர்கள்? எத்தனைபேர் கலந்து கொள்ள்போகிறீர்கள்? சின்னக் குளூ கொடுங்கள்” என மாறி மாறி கேட்டுக் கொண்டே இருந்தனர். காவல்துறையினரை திசைதிருப்பும் வகையில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் என்று கூறி பிறகு திருச்சி ரயில் நிலையத்தில் ஒன்று கூடி அங்கிருந்து தலைமை தபால் அலுவலகம் முன்புவந்து போராட்டம் நடத்தப்பட்டது. சரியான நேரத்தில் துவங்கப்பட்டு தோழர்கள் பு.மா.இ.மு சீருடையுடன் அணிவகுத்து நின்று முழக்கமிட்டதும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த ஊடக நண்பர்கள் ஓடி வந்து புகைப்படமெடுத்தனர். சுமார் 20 நிமிடங்கள் தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் கூடியிருந்த மக்கள், வாகனத்தில் செல்பவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சட்டம் ஒழுங்கு போலீசார் வர தாமதம் ஆனதால் வரைவுத்திட்ட நகலை எரித்து கொண்டிருந்ததை அணைக்க உளவுப்பிரிவு போலீசர் ஒருவர் அங்கு ஜூஸ் கடை நடத்திக் கொண்டிருந்த பெண்மணியிடம் தண்ணீர் கேட்க அப்பெண்மணி அதை கவனிக்காதது போல் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தண்ணீரை தேடி கண்டு பிடிப்பதற்குள் நகலறிக்கை எரித்து முடிக்கப்பட்டது. போராட்டம் துவங்கிய உடனே அப்பகுதியில் உள்ள கடைகள், பொது மக்கள் மத்தியில் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்தது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றது. தலைமை தபால் அலுவலகம் நகரின் முக்கியமான பெரிய சிக்னல் அருகே அமைந்துள்ளதால் நமது போராட்டம் சிறிது நேர பரபரப்பை ஏற்படுத்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி
.
99431 76246

4. விழுப்புரம்

ர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பலின் அடியாளான மோடியின் புதிய கல்விக் கொள்கை –2016 ஐ எதிர்த்து புதிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டம் விழுப்புரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

nep-burning-vpm-rsyf-09முதலில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனுமதி கோரினோம். நகல் எரிப்பு வேண்டாம், போராட்ட வடிவத்தை மாற்றுங்கள் அனுமதி தருகிறோம் என்று தாலுக்கா காவல்நிலையம் சார்பில் நமக்கு பதிலளிக்கப்பட்டது. தொடர்ந்து போஸ்டர், நோட்டீஸ் போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். மீண்டும் காவல்துறை அதே பழைய பல்லவியையே பாடியது. அதனால் அனுமதி மறுப்பை மீறி நகல் எரிப்பை நடத்துவதென முடிவெடுத்தோம்.

nep-burning-vpm-rsyf-06விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி அருகில் மாணவர்கள் கூடும் மாதா கோயில் பேருந்து நிறுத்தத்தில், தாலுக்கா காவல் நிலையம் எதிரில் திடடமிட்டவாறு பு.மா.இ.மு.வின் அமைப்புக்குழு செயலாளர் தோழர் ஞானவேல்ராஜா தலைமையில் திரண்ட மாணவ – இளைஞர் படை, ஆர்.எஸ்.எஸ் அடியாளான மோடியின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாற்பத்தி மூன்று பக்க புதிய கல்விக் கொள்கை- 2016-ன் நகலை எரித்து, முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் திரண்டு செய்திகளை சேகரித்தனர். தாமதமாக தகவல் கிடைத்து வந்த காவல்துறையினர் நகல் எரித்து முடிந்தவுடன் ஆர்ப்பாட்ட முன்னணியாளர்கள் நான்கு பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வேடிக்கை பார்த்த மக்கள் நகல் எரிப்பிற்கு வாழ்த்துகளையும், ஆதரவையும் வெளிப்படுத்தினர். கைது செய்யப்பட்ட ஞானவேல், வித்யா சாகர், ஃபிராங்கிளின், சதீஷ் ஆகிய நான்கு தோழர்களும் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

இந்த கைது, சிறைவாசத்திற்கு அஞ்சாமல் பு.மா.இ.மு தொடர்ந்து மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒழிக்கும் வரை போராடும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு: 99650 97801

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க