இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்!
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவைத் தனித்தனிப் பிரச்சினைகள் அல்ல. அனைத்திலும் சட்டம், விதிகள், மரபுகள் அனைத்தையும் அலட்சிய மாக மீறி, ஆணவமாகத் தூக்கியெறிந்துவிட்டுத் தமிழகத்தின் மீது ஒரு போரைத் தொடுத்திருக்கிறது மோடி அரசு.
2. முதலில் வாத்தியாரைப் போடு, மற்றதை அப்புறம் பேசு!
ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத அவலம். இன்னொருபுறமோ நீட் தேர்வுக்கு 412 பயிற்சி மையங் களை அமைத்தல், 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் திறன் வகுப்புகளைத் தொடங்குதல், அடுத்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ.-க்கு இணையான புதிய பாடத்திட்டம் என அதிரடியான அறிவிப்புகள்.
3. காவிரி : தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!
மேலாண்மை வாரியம் அமைக்காத மைய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது ? நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது.
4. வேதங்கள் முதல் செல்லூர் ராஜு வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி!
இந்துக்கள்தான் இந்த நாட்டின் பூர்வ குடிகள், வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருப்பவை கதை அல்ல, வரலாற்று உண்மைகள்” என்று நிரூபிப் பதற்குப் பொருத்தமான வகையில் புதை பொருள் ஆதாரங்களையும், மரபணு ஆய்வு களையும் தொகுத்து முன் வைப்பதுதான் இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை.
5. மிஸ்டர் மோ(ச)டி!
பொதுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடுவதுதான் குஜராத் பாணி வளர்ச்சி.
6. இனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை!
பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் மாநில அரசுகளின் உரிமையை மட்டும் ரங்கராஜன் கமிட்டி ரத்து செய்ய வில்லை. 1966-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்க்கரை கட்டுப்பாடு சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது.
7. நேரடி மானியத் திட்டம்: ரேஷன் அரிசிக்கும் வந்தது ஆபத்து!
கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்குக் கோடிகோடியாய் வாரிக் கொடுக்கும் மோடி அரசு, ஆதார் இணைப்பு, நேரடி மானியத் திட்டம் என்ற போர்வையில் பொது மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
8. சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட்-உடன் ஒரு நேர்காணல்
ஃபிரட் எங்ஸ்ட் (Fred Engst) (சீனப் பெயர் யாங் ஹெபிங் Yang Heping) உடனான இந்த நேர்முகத்தை ஒனுர்கன் உல்கர் (Onurcan Ulker) 2017 ஏப்ரல் 7-ம் தேதி யன்று பெய்ஜிங்கில் எடுத்துள்ளார்.
9. ஹம் ஆப் கே ஹை கோன்?
நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு? நமோவுக்கும் அம்பானிக்கும் என்ன உறவு? அம்பானிக்கும் நிமோவுக்கும் என்ன உறவு? நிமோவுக்கும் அதானிக்கும் என்ன உறவு?
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
கட்டுரைகள் சிறப்பு