”பணத்தை தண்ணீர் போலச் செலவழிக்காதே” என்றொரு சொல் வழக்கு உண்டு. ஆனால் இன்றைய நிலையோ பணம் இருந்தால் தான் குடிநீர் கூடக் கிடைக்கும். அப்படி கொடுப்பதற்கு பணமும், இருக்கும் இடத்தில் நீர் இல்லாமலும் இருக்கும் மக்களே அதிகம்.

இந்த உலகின் பரப்பில் 70% நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் நன்னீரின் பங்கு வெறும் 2%தான். அதிலும் 1.6% பனிப்பாறைகளாகவும், துருவ பனி முகடுகளாகவும் இருக்கின்றன. நீரின்றி அமையாத இவ்வுலகில் நீருக்கான போராட்டம் தெருக்குழாய் தொடங்கி மாநில எல்லைகள், தேச எல்லைகள் வரை எங்கும் நிறைந்துள்ளது.

இந்த வினாடி வினாவில் குடிநீர் குறித்த சில கேள்விகள். முயன்று பாருங்கள் !

1. குடிப்பதற்கான நீரை சுத்தகரிக்கும் வழிமுறை எது ?
2. நீரின் மூலம் பரவும் நோயினால் நாளொன்றுக்கு எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் ?
3. தனிநபருக்கான குடிநீரில் பெருமளவிலான புட்டி குடிநீர் நுகரும் நாடு எது?
4. ஆறு, குளங்களில் உள்ள நன்னீரை அப்படியே குடிப்பது பாதுகாப்பற்றது – ஏன்?
5.உலகில் எத்தனை பேர் சுத்தமான குடிநீர் பருகும் வசதி கிடைக்கப்பெறாத நிலையில் உள்ளனர்?
6. ஒரு லிட்டர் புட்டியிலடைக்கப்பட்ட குடிநீரைத் தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது ?
7. உலக அளவில் எத்தனை சதவீத மக்கள் தங்கள் வீட்டில் குழாய் மூலம் தண்ணீர் வரப் பெறாதவர்களாக இருக்கின்றனர்?
8. உப்புநீக்கம் செய்யும் நிலையங்கள் ஆண்டுக்கு எத்தனை லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்கின்றன?
9. குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது ?
10. வளரும் நாடுகளில் உள்ள பெண்கள் நீர் எடுப்பதற்காக சராசரியாக எவ்வளவு தூரம் நடக்கின்றனர்?

– வினவு செய்திப் பிரிவு