ந்தை பெரியாரின் தேவை இன்று தமிழகத்துக்கு கட்டாயம் அவசியப்படுகிறது. அந்த வகையில் அவரைப் பற்றிய சில முக்கியமான விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனை நிறைவேற்றும் வகையில் இந்த வினாடி வினா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சியுங்கள்.

(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)

 1. பெரியார் பிறந்த ஆண்டு எது?
 2. 1921-ம் ஆண்டில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஈரோட்டில் தலைமை தாங்கிய போராட்டம் எது?
 3. கேரளாவில் ஈழவர், தீயர், புலையர் முதலானோர்க்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க, வைக்கம் ஊரில் உள்ள மகாதேவர் கோவில் முன்பாக நடந்த போராட்டத்தில் பெரியார் தனது துணைவியார், தங்கையாருடன் கலந்து கொண்டு ஒரு மாத தண்டனை பெற்றார். தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு 4 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்தப் போராட்டம் நடந்த ஆண்டு எது?
 4. வ.வே.சு அய்யர் நடத்திய “பாலபாரதி தமிழ்க் குருகுலம் பரத்துவாஜ ஆசிரமத்தில்” பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உப்புமாவும், மற்றவர்களுக்கு பழைய சோறும் இருவருக்கும் தனிப்பந்தியும், தனி தண்ணீர் பானைகளும் வைத்திருந்தார். இதை பெரியார் எதிர்த்து காங்கிரசு சார்பில் அளிக்கப்பட்டு வந்த நிதியை நிறுத்துவதற்கு போராடினார். இந்த ஆசிரமம் எந்த ஊரில் இருந்தது?
 5. ஈரோட்டில் 2.5.1925 அன்று பெரியார் துவக்கிய வார இதழின் பெயர் என்ன?
 6. 1925-ம் ஆண்டு பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி “இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை” என்று முழங்கியதற்கு காரணம் என்ன?
 7. 1927-ம் ஆண்டில் பெரியார் செய்தவற்றில் முக்கியமானவை என்னென்ன?
 8. 1928-ம் ஆண்டில் எந்தப் போராட்டத்திற்காக பெரியார் சிறை வைக்கப்பட்டார்?
 9. முக்கியத்துவம் வாய்ந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டினை பெரியார் 1929-ம் ஆண்டில் நடத்தினார். டபிள்யூ.பி.ஏ. சவுந்திர பாண்டியன் இம்மாநாட்டுக்குத் தலைமையேற்றார். முக்கியத்துவம் வாய்ந்த 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாடு எந்த ஊரில் நடந்தது?
 10. 1930-ம் ஆண்டில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் போது பெரியார் ஆதரித்த மசோதா எது?
 11. சோவியத் யூனியனை பெரியார் சுற்றிப் பார்த்த ஆண்டு எது?
 12. 1944-ல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்ட சங்கத்தின் பெயர் என்ன?
 13. பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து அண்ணா பிரிந்து சென்று தி.மு.க. துவங்கிய ஆண்டு எது?
 14. 1956-ம் ஆண்டில் எந்தக் கடவுளின் படத்தை கொளுத்துமாறு பெரியார் அறைகூவல் விடுத்தார்?
 15. 1957-ம் ஆண்டில் பெரியார் அறிவித்த போராட்டம் எது?
 16. பெரியார் இறந்த ஆண்டு எது?

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !

 

4 மறுமொழிகள்

 1. ஏன் மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டார் என்பது மிக முதன்மையான கேள்வி, அதை விடுத்து மணியம்மையாரைத் திருமணம் செய்ததால், அண்ணா பிரிந்த ஆண்டு எது என்று கேள்வி அமைத்திருப்பது, உள்நோக்கம் உள்ளது போன்று தெரிகிறது எனக்கு..

  • இந்தப் பதிவில் வீடியோ எதுவும் கொடுக்கப்படவில்லை.. வினாடி வினா விற்கு பதிலளிக்கும் வகையிலான ஃபார்ம் இருக்கும். அதில் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க