பெரியார் 146 | செய்தி – புகைப்படம்

பெரியார் 146 | செய்தி – புகைப்படம்

சென்னை

ந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி பு.மா.இ.மு மற்றும்  மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அம்பேத்கர், பெரியார்  சிலைக்கு மாலை அணிவித்தும், பாசிச கும்பலுக்கு எதிராக முழக்கமிட்டும் உழைக்கும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதேபோல் ஓட்டேரி பகுதியிலும் பெரியார் படம் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. பெரியார் மாஸ்க் அணிந்து பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

நமது தோழர்கள் பறை இசையுடன் முழக்கமிடுதல் மற்றும் உரையாற்றும்போது பகுதி வாழ்வு உழைக்கும் மக்கள் சுற்றி நின்று நாம் பேசுவதைக் கவனித்தனர்.

தோழர்களின் பேச்சுக்களுக்கு இடையே மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஓட்டேரி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை அன்பு அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

எமது அமைப்புகள் சார்பாக சேத்துப்பட்டு பகுதியில் நடந்த நிகழ்வில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அதேபோல் ஓட்டேரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணை வேந்தன் அவர்களும் உரையாற்றினார்.

நிகழ்வில் பேசியவர்கள் அனைவரும் ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் ஒன்றிய மோடி அரசின் நீட், க்யூட் தேர்வுகள், ஜி எஸ் டி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற வக்கற்ற நாடு, மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய் என்ற வகையில் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம் என்று முழங்கினர்.

ஓட்டேரி

***

டி.ஐ.மெட்டல் ஃபார்மிங். இணைப்பு பு.ஜ.தொ.மு. மாநில ஒருங்கிணைப்புக் குழு

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பு சங்கமான டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 வது பிறந்த நாள் நிகழ்ச்சி ஆலைவாயில் கூட்டமாக நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்திற்குச் சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் கா. செல்வன் அவர்கள் தலைமை தாங்கினார். பெரியாரை தற்போது உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை அதிகமாக உள்ளது என்பதை எடுத்துரைத்தார்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ப.சக்திவேல் அவர்கள் சிறப்புரையாற்றினார். இன்று தொழிலாளர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளுக்கும், வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்க முடியாமல் போவதற்கு சமூகத்தில் நிலவக்கூடிய சாதி மத மொழி அடிப்படையான வேறுபாடுகளே முதன்மையாக உள்ளது. இதைக் கலைவதற்குப் பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார். பள்ளி குழந்தைகளுக்கு மூடநம்பிக்கை மற்றும் பிற்போக்கு கருத்துக்கள் திணிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் மக்களைச் சாதி மத ரீதியாகப் பிளவுபடுத்தி இந்த நாட்டை கார்ப்பரேட் கும்பலுக்குக் கூறு போட்டு விற்று வருகிறது. அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் ஒரு அணியாகத் திரள வேண்டும். வாருங்கள் தோழர்களே என்று தனது சிறப்பு உரையை நிறைவு செய்தார்.

இறுதியாகச் சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர். சண்முகம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

***

காஞ்சிபுரம் – இராணிப்பேட்டை

இன்று நடைபெற்ற பெரியார் 146 பிறந்தநாள் விழாவில் காஞ்சிபுரம் மற்றும் செய்யார் பகுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம், வி.சி.க, மே 17 ஆகிய அமைப்புகள் இணைந்தும், மாணவர்கள் கலந்து கொண்டும் பெரியாருடைய படத்திற்கும் பெரியார் உடைய சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

இன்று நமக்கு மீண்டும் பெரியார் வேண்டும் என்ற முழக்கத்துடன் தொழிலாளிகள் முழக்கமிட்டார்கள். பாசிச மோடி அரசின் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மக்கள் வரிப்பணத்தில் உருவாகக்கூடிய கட்டமைப்புக்களை கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், அதானி அம்பானி பாசிசக் கும்பலுக்குத் தாரை வார்க்கிறது இந்த மோடி அரசு. இதைக் கண்டித்தும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் இன் இந்துராஷ்ட்ர கனவைத் தகர்த்தெறிய வேண்டும் என்ற வகையில் முழக்கமிட்டனர். மற்றும் மாணவர்களுக்குப் பெரியாருடைய 100 போராட்ட அம்சங்களைப் பகுதியில் காணொளியாகவும் செய்திகளைப் பதிவிட்டோம். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள்.

தகவல்:
பு.ஜ.தொ.மு
காஞ்சிபுரம்

***

மதுரை

செப்டம்பர் 17 மதுரையில் காலை 10:30 மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் ஆகிய தோழர்கள் பங்கேற்று பெரியாருக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

***

நெல்லை

பெரியார் 146வது பிறந்தநாள்: தமிழ்நாடே, உன் போர்வாளைக் கூர் தீட்டு!

சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்ணடிமை எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, சமூக நீதி, (சனாதன) பார்ப்பனிய எதிர்ப்பை உயர்த்திப்பிடித்த பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கும், Dr. அம்பேத்கர் சிலைக்கும் ஜனநாயக சக்திகள் மற்றும் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாகத் தூத்துக்குடியில் மாலை அணிவித்து, முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

***

கோவை

கோவையில் மக்கள் அதிகாரம் சார்பாக பெரியாருக்கு மாலை அணிவித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

***

கடலூர்

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா மக்கள் அதிகாரம் சார்பாக கடலூர் பெரியார் சிலை முன்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.

தோழர்.தீனா தயாளன் அவர்கள் பெரியார் பற்றியும், ஜிஎஸ்டி-ஆல் நாடுபடும் அவதிகள் பற்றியும் விளக்கிப் பேசினார். தோழர் ராமலிங்கம் அவர்கள் பேசுகையில் பெரியாரை ஏன் இந்த காலகட்டத்தில் நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும், வ.உ.சி, பெரியார், பகத்சிங் பிறந்த இந்த மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி காவி கார்ப்பரேட் பாசத்தை வீழ்த்த  வேண்டும் என்றும் பேசினார். பெரியார் பெயரை வைத்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் முருகன் மாநாட்டையும், அம்மன் மாநாடு, கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது போன்ற வேலைகளைச் செய்து வருகிறது என்றும் பேசினார். பெரியாரை உயர்திப்பிடிப்போம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவோம் எனப் பேசி முடித்தார்.

***

உளுந்தூர்பேட்டை

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஜனநாயக சக்திகளுடன் இணைந்து உளுந்தாண்டார் காலனி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயம் முதல் உழவர் சந்தை அருகில் உள்ள காமராஜர் சிலை வரை முழக்கம் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. இறுதியில் பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தோழர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தோழர் அசோக், தோழர் வினவுவன், தோழர் மணிபால், தோழர் முருகன், தோழர் பஞ்சா, தோழர் வெங்கடேசன் (சி.பி.ஐ மாவட்ட பொருளாளர், மாவட்ட ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை செயலாளர்) மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க