தேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. ஊடகங்களும் பத்திரிகைகளும் “தேர்தல் திருவிழா”, “ஜனநாயகத் திருவிழா”, “தேர்தல் தீபாவளி”, “தேர்தல் சூறாவளி” என விதவிதமாகப் பெயரிட்டு, தத்தமது புரவலர்களின் புகழ்பாடத் தொடங்கிவிட்டன. மக்களின் சிந்தனையும் தேர்தல்  மயமாகிவிட்டது. சரி இந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்த விவரங்கள் நம்மில் எத்தனை பேருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்கின்றன என்று பார்க்கலாம். கீழ்கண்ட கேள்விகளை முயற்சித்துப் பாருங்கள்.

(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)

கேள்விகள்:

1. இந்த பாராளுமன்றத் தேர்தலோடு சில மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடக்கின்றன. கீழ்க்கண்ட மாநிலங்களில் அப்படி தேர்தல் நடக்கும் மாநிலம் எது?
2. இந்தியப் பாராளுமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
3. கீழ்க்கண்டவற்றில் எது பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வராது?
4. கீழ்க்கண்ட அரசு உறுப்புகளில் அதிக அதிகாரம் படைத்த உறுப்பு எது?
5. போதிய பிரதிநிதித்துவம் இல்லை என எந்த பிரிவினரில் இருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்?
6. மோடி அரசாங்கம் இந்திய அரசின் ஜனநாயக உறுப்புக்களை அழித்து வருகின்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கீழ்கண்டவற்றில் அந்தப் பட்டியலில் இடம்பெறாத உறுப்பு எது?
7. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால் அதிகார வர்க்கமோ நிரந்தரமாக பதவியில் இருக்கிறது. அதை தெரிவு செய்யும் உரிமை மக்களிடத்தில் இல்லை. எனில் இந்த ஆட்சி முறையை எப்படி அழைப்பது?
8. மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் படைத்த சாதனை என்ன?
9. கீழ்க்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன?
10. கடந்த மூன்று மாதங்களில் நடந்த கருத்துக் கணிப்பில் எந்த ஊடகம் பாஜக கூட்டணிக்கு 336 தொகுதிகள் கிடைக்குமென தெரிவித்தது?
11. அதிக பாராளுமன்றத் தொகுதிகள் கொண்ட மாநிலம் எது?
12. தொங்குநிலை பாராளுமன்றம் ஏற்படும் போது இந்திய அரசு செயல்படுமா, முடங்கி விடுமா?
13. பாராளுமன்றம், சட்டமன்றம் மூலம் தெரிவு செய்யப்படும் ஒரு கட்சியின் ஆட்சியை எப்படி அழைக்க வேண்டும்?
14. அரசு, அரசாங்கம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
15. ஓட்டு போட்டு தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டா?

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !

1 மறுமொழி

  1. நாட்டில் மூலை முடுக்கெல்லாம் WWF நடந்துகொண்டிருக்கும்போது ஓரமா ஒக்காந்து இப்புடி கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் ஆடிக்கிட்டிருக்கீங்களே; இது உங்களுக்கே நல்லா இருக்கா?

    இந்தியாவில் தற்போது நிலவும் பாஜகவின் வெறுப்பரசியலுக்கு முடிவுகட்டி, சமத்துவமான, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாரம்பரிய இந்தியாவை கட்டமைப்போம் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், அருந்ததி ராய் உள்ளிட்ட ஆங்கிலம், இந்தி, தமிழ், உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளைச் சேர்ந்த 200 எழுத்தாளர்கள் வாக்காளர்களுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். ……. – நக்கீரன் செய்தியிலிருந்து எடுத்தது.

    இது பற்றி வினவின் தெளிவான நிலைப்பாடு – இந்த தேர்தலை எதிர்கொள்ளும் செயல்பாட்டுக்கான நிலைப்பாடு – என்ன என்பதை இப்போது விட்டால் எப்போது எழுதுவீர்கள்.

    மோடி கும்பலைத் தேர்தலில் தோற்கடிக்கவேண்டிய அவசியம் பற்றி ஆனந்த் தெல்தும்டே சென்னைக் கூட்டத்தில் பேசினார்; அருந்ததி ராய் திருச்சி மாநாட்டில் பேசியிருக்கிறார்.

    எதார்த்த நிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் பாரதூரமான மாற்றத்தையும் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தேர்தல் மூலமாக மாற்றம் வராது; மக்கள் போராட்டம் இன்றேல் மாற்றம் இல்லை, சிறு சீர்திருத்தத்துக்குக்கூட, உயிர் வாழு உரிமைக்குக் கூட மக்கள் போராடித்தான் ஆகவேண்டும்என்பது மெய்தான். இருப்பினும்,

    மோடி என்ற கேடியின் – இது திட்டு அல்ல, எது செய்யவும் தயங்காத பண்பினால் அவர் உண்மையில் வாங்கிய டிகிரி- செயல் வீச்சை எதிர்கொள்ளும் நிலையில் நாட்டில் எந்த இயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்களின் துயரம் கொஞ்சநஞ்சம் இல்லை. எந்த கெடு வழி வாய்ப்பிருப்பினும் பயன்படுத்தி மீண்டும் அதிகாரத்துக்கு வர துடிக்கிறது மோடிக் கும்பல். வந்தால், வரப்போகின்ற பேரழிவை உங்களுக்கு விளக்கத் தேவையில்லை.

    மோடியை தேர்தலில் தோற்க்கடிப்பதற்கான அவசியம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்றே கருதுகிறேன். இந்த உடனடி இலக்கை முன்வைத்து தேர்தல் பற்றிய செயல்பாடு இருப்பதுதான் சரியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

    இந்த நிலையில் இந்தத் தேர்தலை ஒட்டி எந்த முழக்கத்தை முன்வைக்கப்போகிறீர்கள்?

    தேர்தல் பாதை திருடர் பாதை! மக்கள் பாதை புரட்சிப்பாதை!!
    ஓட்டுப்போடாதே! புரட்சி செய்!!
    என்ற வழக்கமான பொது முழக்கங்களையா?

    தயவு செய்து விரைவாகவும் தீர்மானகரமாகவும் விளக்கக் கட்டுரை எழுதவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க