மே-22 பொதுவேலைநிறுத்தம் – ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மற்றும் மாநகர மக்கள் ஒன்றிணைந்து  “ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை” ஏற்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்வேறு மனுக்கள் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில் இன்று கூட்டமைப்பின் சார்பில் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுகின்றனர். போலீஸ் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதோடு, 144 தடை உத்திரவையும் அமல்படுத்தியிருக்கின்றனர். ஆனால் ஸ்டெர்லைட்டை மூடாமல் விடுவதில்லை என்று மக்கள் அணி சேர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்டச் செய்திகளை நேரலையாக தருகிறோம். தூத்துக்குடியில் இருக்கும் எமது செய்தியாளர்கள், மற்றும் ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் மூலம் வரும் செய்திகளை உடனுக்குடன் தருகிறோம்.

ஸ்டெர்லைட்டை மூடுவது தூத்துக்குடி மக்களது கடமை மட்டுமல்ல, தமிழக மக்களின் கடமையும் கூட! நேரலை செய்தியை பரப்புங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க