ரஜினியை என்கவுண்டர் செய்யும் தமிழ் ஃபேஸ்புக் !

நிழல் உலகில் நீலம் நிஜ உலகில் காவி - பரட்டை மக்கள் விரோதி. மீத்தேன், அணு உலைக்கதிர்வீச்சு, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் - தாமிரம் என ஒட்டுமொத்த விஷமும் கலந்த கலவைதான் ரஜினிகாந்த்!!!

Deepa Lakshmi is feeling depressed.
தமிழகமே கொண்டாடும் சினிமா பிரபலம்
பெருஞ்செல்வமும் செல்வாக்கும்
உலகளாவிய புகழும்
காக்கிச் சட்டைக்கும் இந்த அரசு அதிகாரத்துக்கும் எதிராக உண்மையைப் பேச நடுங்குகிறதென்றால்…
என்ன …க்குச் சமம் உன் புகழ்?
போலிசுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் போது…சீ
ரஜினி,
சிறுவயதில், உங்களுடைய‌ எத்தனை படங்களை ரசித்துப் பார்த்திருப்போம். அதில் நீங்கள் காட்டிய நாயக பிம்பம் எங்களையுமறியாமல் ஆளுமைகளில் கலந்திருக்கலாம். சினிமா கலாசாரத்தில் இயைந்தது தானே எங்கள் வாழ்க்கை.
இன்று அரசின் பக்கம், அதிகாரத்தின் பக்கம் நின்று கொண்டு நெஞ்சறியப் பொய் சொல்லும் உனைப் பார்க்கக் கண்கள் கூசுகின்றன. காலா என்ன, என்ன வண்ணம் பூசிக் கொண்டு நீ வந்தாலும், அதைத் தாண்டி உன் தோல் உரிக்கப் பட்டு விட்டது.
வீழ்ந்தாய் நீ ரஜினி.

Muralikrishnan Chinnadurai
ஏய் இரசினியை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். சமூக விரோதிகள் யாரென்று தனக்குத் தெரியும் என்று பத்திரிகையாளர் வினாவுக்கு பதிலளித்துள்ளார். ஆகவே ஏய் இரசினியை கைது செய்து விசாரிக்க வேண்டும் 13 உயிர்கள் சும்மா இல்லை!

Deepa Lakshmi
வேற கேள்வி இருக்கா?
ம்…உனக்கு வெக்கமே இல்லியா?
ஜெயலலிதாவைத் தைரியலெச்சுமின்னு சொன்ன வாய்க்கு ஸ்னோலின் பத்தி ஒரு வார்த்த சொல்ல முடியல?
அம்புலிமாமா படிச்சிட்டு ஒப்பிக்கிற மாதிரி ‘சமூகவிரோதி இருக்காங்க… புடிக்கிணும் காட்ணும்’ ங்கிறே?
#யார்நீங்க
#நாந்தான்பாரஜினிகாந்த்

_____

_____

Yuva Krishna
பத்திரிகையாளர்கள் மட்டும் வானத்தில் இருந்தா குதித்தார்கள்? அவர்கள் மத்தியிலும் தரை டிக்கெட்டு ரஜினி ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில், தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்காக தீர்மானம் நிறைவேற்றுகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தீர்மானம் நிறைவேற்றிய கையோடு அலங்காநல்லூருக்கு சென்றவருக்கு, ரஜினிக்கு தூத்துக்குடியில் கிடைத்ததைவிட கூடுதலான அவமரியாதை நடக்கிறது.

உடனடியாக சென்னைக்கு திரும்பியவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.

“உங்களை மிக கேவலமாக விமர்சிக்கிறார்களே?”

“அரசியலுக்கு வந்துவிட்டால் பாராட்டு மட்டுமல்ல, வசவும் சேர்த்து கிடைப்பதுதான் இயல்பு. இரண்டையுமே தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது” என்று ஃப்ரெண்ட்லியாக சொல்லிவிட்டு சிரித்தார் ஓ.பி.எஸ்.

அவர் அரசியல்வாதி. ரஜினி வெறும் நடிகர் மட்டுமே. ஒருவேளை ரஜினி அரசியலில் குதித்து, துரதிருஷ்டவசமாக ஆட்சியைப் பிடித்தாரேயானால், சட்டமன்றம் என்பது மேய்ச்சல் மைதானம் மாதிரி நடத்தப்படும்

Mathavaraj
ரஜினி மட்டும் அன்றைக்கு தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரனாய் இருந்திருந்தால், போரடிய மக்களை என்னவெல்லாம் செய்திருப்பார் என்று தெரியவில்லை. அத்தனை கோபம், வன்மம், வெறுப்பு எல்லாம் போராடியவர்கள் மீதும், போராட்டங்கள் மீதும் மண்டிக் கிடப்பதை பார்த்து விட்டோம்.

கட்சி ஆரம்பிக்கவில்லை, ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை, அதற்கு முன்னரே இத்தனை உச்சபட்ச திமிரும், அகம்பாவமும் இருக்கிறதென்றால், அது பார்ப்பனியக் கொழுப்பு அன்றி வேறில்லை.

இந்துத்துவ பாசிசத்தின் இன்னொரு ஆபத்தான முகம்.

குறிஞ்சி நாதன்
தமிழின விரோதி ரஜினியின் காலா படத்தை தியேட்டரில் போய் பார்ப்பவன் #சமூக_விரோதிகளே

Thameem Tantra
ரஜினியை விஜயகாந்துடன் ஒப்பிடுவது அயோக்கியத்தனம்.

விஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் போனதால் மட்டுமே உளறினார். ரஜினிகாந்த் உளறியதால் மட்டுமே உடம்பு சரியில்லாமல் போனார்.

எளிமை பூனைக்குட்டி என்று அவர் புகழ்பாடி கொண்டு இருந்தவர்கள் இன்று அவரின் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்து அதிர்ச்சியாகுகிறார்கள். நூறு நாள் அமைதியாக நடந்த போராட்டம் கடைசி கட்டத்தில் வன்முறைக்கு பலியானதை சமூக விரோதம் என்று ஆவேசபடும் ரஜினி, இன்று பத்திரிக்கையாளர்கள் வெறும் நான்கு கேள்விகள் கேட்டதற்கு, நாளாவது கேள்வியில் “யோவ் வேற கேள்வி கேளுய்யா” என்று கையை நீட்டி வாயால் அடிக்க வருகிறார்.

இன்னொரு விசயம், இன்று மக்களை சமூக விரோதி என்றும் போலீஸ்/அரசாங்க அராஜகத்தை நியாயப்படுத்திய ரஜினிக்கே தெரியும்.. இப்படி பேசினால் பொதுப்புத்தி அவருக்கு எதிராக திரும்பும் என்று…

அப்படி இருந்தும் ஏன் பேசினார் ?

ஏன் என்றால்.. ரஜினியின் அரசியல் வருகை நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இல்லை. மாறாக பல தொகுதிகளில் 1000-4000ரம் ஓட்டை பிரித்து எதிர்க்கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது மட்டுமே. இது சத்தியமாக பலன் தரும் உத்தி. ஜெயலலிதா இதை பலமுறை திமுகவிற்கு எதிராக வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்… அதையே ரஜினியை வைத்து பாஜக செய்கிறது… இது பாஜகவின் நேரடி ஆட்சியையோ அல்லது எடப்பாடி போன்ற ஆட்சியையோ உறுதிப்படுத்தும்.

திரும்பவும் சொல்கிறேன்…. எடப்பாடியை உதாசீனப்படுத்தினீர்கள்….நடுரோட்டில் அனைவரைரும் சுட்டு தள்ளி உங்களின் மடமை அம்பலப்படுத்தினர்.

இப்போது ரஜினியை குறைத்து எடைபோட்டால் என்ன நடக்கும் என்று …. அடுத்த தூத்துக்குடி படுகொலை சம்பவம் போல் ஒரு சம்பவத்தில் விரிவாக சொல்கிறேன் !

Anbalagan Veerappan

ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டின் முன்பு குவிக்கப்பட்ட போலீசார்!

காலாவுக்கு காவல்துறை பாதுகாப்பு… சத்திய சோதனை!
பாதுகாப்பு வளையத்துக்குள் நடிகர் ரஜினிகாந்த் வீடு
நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு டார்ஜிலிங் செல்கிறார். இரண்டு மாதம் படப்பிடிப்பாம்…

LR Jagadheesan
ரஞ்சித்துக்காக ரஜினிக்கு முட்டுக்கொடுக்கும் தலித்திய மேதாவிகள் யாரும் ஆ ராசாவுக்காக கருணாநிதிக்கு இப்படி முட்டுக்கொடுத்ததில்லையே ஏன்? ஆ ராசாவைவிட ரஞ்சித் மேதாவி என்பதாலா? அல்லது கருணாநிதியைவிட ரஜினி தலித்துகளுக்கு அதிக நன்மைகள் செய்ததாலா? தலித் அரசியல் என்கிற பெயரில் ரஞ்சித் முன்னுறுத்துவது ஆண்டபரம்பரை templateஐ அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து உல்டாவாக்கி சுயஜாதி பெருமை பேசும் ஒற்றை ஜாதி heroism. திட்டமிட்ட திராவிட இயக்க நிராகரிப்பு மற்றும் இருட்டடிப்பு. அது உங்களின் சுயஜாதிபற்றுக்கு சொறிந்துகொடுக்கிறது. அதனால் ரஜினி மாதிரி ஒரு facist உடன் கைகோர்த்தாலும் ரஞ்சித் உங்களுக்கு தலித் icon. அப்படியான உங்களின் ஜாதி அரசியலுக்கு பயன்படாத ஆ ராசாவை நீங்கள் கண்டுகொள்ள மறுப்பீர்கள். ராசாவை கடைசிவரை பாதுகாத்து சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது மாலைபோட்டு வரவேற்ற கருணாநிதிக்காக நீங்கள் ஒருநாளும் இப்படி களமாடியதில்லை. ஒட்டுமொத்த இந்திய கட்டமைப்புமே சேர்ந்து நின்று மூர்க்கமாக எதிர்த்தபோது அதை அவர்கள் வகுத்த ஆட்டக்களத்தில் அவர்கள் வரையறை செய்த விதிகளுக்கு உட்பட்டு ஆடி வென்று திரும்பிய ஆ ராசாவை நீங்கள் என்றாவது கொண்டாடியதுண்டா? அவரைப்போன்ற நிஜ உலக போராளிகள் பல்லாயிரம் பேரை உருவாக்கி பாதுகாத்த திமுகவை அதன் தாய் அமைப்பான திராவிடர் இயக்கத்தை ஆண்டைகளின் அமைப்பு சூத்திர இயக்கம் தலித் விரோதிகள் என்று முத்திரை குத்திய மூடர் கூடம் அட்டைக்கத்தி ரஞ்சித்துக்காக ரஜினிக்கு காவடி எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஆண்டி முத்து ராசாக்களை உருவாக்கி பாதுகாக்கவல்ல ஒரு இயக்கத்துக்கு அசல் எது போலி எது என்றும் தெரியும். உண்மைப்போராளி யார் நிழலுலக அட்டைக்கத்தி எது என்றும் தெரியும். சினிமா ரசிக கும்பல் சினிமாக்காரர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதில் தவறில்லை. அது அவர்களின் உரிமை. அரசியலில் வந்து உங்கள் மொன்னையான அட்டைக்கத்திகளை சுழற்ற வேண்டாம். அதுவும் ரஜினிமாதிரி ஒரு காலிப்பயலுக்காக.

Saravana Kanth
சரிடா நாங்க சமூக விரோதியாவே இருந்துகிறோம். அடிமை காலத்தில் இருந்து உரிமைக்காக குரல் கொடுப்பவனுக்கு இதான் பெயர். ஆகையால் வருந்த ஏதுமில்லை…

ஆனால் ஆலயத்தில் கொலை செய்ய ஏவியவர்கள், ஆலயத்தில் குழந்தையை வன்புணர்வு செய்து கொண்டாடியவர்கள், விபத்தா சதியா என தெரியும் முன்னரே மாற்று மத சகோதரகளை கொன்றழித்த கொடூரர்கள், ஒரு மாநில அரசு மெஜாரிட்டி இழந்த பின்னரும் பொய்யான நீதி மூலம் காப்பாற்றி, அவர்களின் ஊழலில் மிரட்டி பங்கு பெறும் ஆட்சியாளர்கள் …. இவர்களுக்கு என்ன பெயர்… ?

ரஜினி ஒரு படத்தில் சொல்லுவது தான்… எச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்சச்ச… புரியலையா… நானே யாருக்கோ சொம்பா இருக்கிறேன். எனக்கும் சொம்பா இருக்கீங்களேனு அர்த்தமாம்.

Abdul Hameed Sheik Mohamed

ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி?

ரஜினி நேற்று தூத்துக்குடி சென்று அளித்த மக்கள் விரோத பேட்டியை தொடர்ந்து காலாவை புறக்கணிக்க வேண்டும் என்று எழுதினேன். காலாவை தோற்கடிப்பதாக நினைத்து ரஞ்சிதை தோற்கடித்துவிடாதீர்கள் என்ற அழுகுரல்கள் ஒரு புறம். ரஜினியை தோற்கடித்து ரஞ்சித்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற போர்தந்திர அறைகூவல் இன்னொரு புறம். தூத்துக்குடியில் மக்கள் செத்ததைவிட காலா தோற்றுவிடக்கூடாது என்ற பதட்டம் பலரிடமும் இருக்கிறது. தூத்துக்குடி பிரச்சினையில் காலாவை கொண்டுவரக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் காவிரிக்காக ஐ.பி.எல் லை துரத்தியதை ஆரவாரமாக ஆதரித்தவர்கள். ஐ.பி.எல் நடத்துகிறவர்களா காவிரியில் தண்ணீர்விடமாட்டேன் என்று சொன்னார்கள்? அது ஒரு போராட்டத்தின் மீதான கவன ஈர்ப்பு. ரஜினி ஒரு குடிமை சமூகத்தின் உணர்வுகளை மோசமாக அவமானப்படுத்தியிருக்கிறார். அவரை எப்படி எதிர்ப்பது? அவர் படத்தைதான் எதிர்க்க முடியும். ரஜினியினால் ரஞ்சித் ஆதாயம் அடைகிறார் எனில் ரஜினிக்கு ஏற்படும் இழப்புகளிலும் ரஞ்சித் பங்குபெறுவதுதான் நியாயமானது.

காலா ரஜினி படம் அல்ல , ரஞ்சித் படம் என்று சொல்பவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா அல்லது மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கபாலிக்கு முன்பும் ரஞ்சித் படம் எடுத்திருக்கிறார். அதில் அவர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். கபாலி மற்றும் இப்போது காலாவிற்கு கிடைக்கும் இந்த அதீத முக்கியத்துவம் ரஜினியின் சந்தை மதிப்பிற்கேயன்றி ரஞ்சித் என்ற சிறந்த இயக்குனருக்கு அல்ல. ரஞ்சித் மட்டுமல்ல எந்த சிறந்த இயக்குனருமே தோற்கக்கூடாது என்று விரும்புகிறவன் நான். ஆனால் தமிழ்நாட்டில் இந்துத்துவா அரசியலை விதைக்கும் நாசகார சக்தியாக ரஜினி உருவெடுத்து வருகிறார். அவருடைய அகங்காரம் என்பது அவருடைய சினிமா வெற்றிகளிலிருந்தே பிறக்கிறது. அதைத்தான் பா.ஜ.க இப்போது தனது ஆயுதமாக பயன்படுத்துகிறது.

ரஜினியின் படத்தில் சில தலித்திய குறியீடுகளையும் வசனங்களையும் வைத்து வளர வேண்டிய அளவு தலித்தியம் பலவீனமானதா? கத்தி படத்தில் விஜய் பேசிய வசனத்தால் மார்க்சியம் வளர்ந்ததுபோலத்தான்.

ரஞ்சித் ரஜினியைவைத்து மெட்ராஸ்போன்ற ஒரு எதார்த்த சினிமாவை உருவாக்க முடியுமா? கபாலி போன்ற கேங்க்ஸ்டர் படங்களுக்கு எதற்கு இத்தனை தத்துவார்த்த அரசியல் முகமூடிகள்?

ரஜினியை பயன்படுத்தி ரஞ்சித் வளரலாம். அப்படி வளர்ந்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ரஜினி படங்கள் மூலமாக தலித்தியம் ஒரு போதும் வளராது. மாறாக ரஞ்சித் போன்றவர்கள் பா.ஜ.கவின் அடியாளான ரஜினியை ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒரு புரட்சிநாயகன் போல காட்டும் வரலாற்று தவறையே செய்கிறார்கள். ஒரு வேளை பல மாநிலங்களில் நடந்ததுபோல ஒரு இந்துத்துவா- தலித் கூட்டணிக்கு ரஞ்சித் பயன்படக்கூடும்.

ஜோடி குரூஸ் என்ற எழுத்தாளர் மோடியை ஆதரித்தற்காக அவரை கடுமையாக எதிர்த்தவர்கள்தான் நாம். ஆனால் இப்போது ரஜினியின் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க வேண்டும் என்றால் எப்படி? ஒரு ப்ராஜெக்டில் இருவர் வேலை செய்யும்போது ஒருவரை தோற்கடித்து ஒருவரை வெற்றிபெறச் செய்யும் உத்திதான் என்ன? பாதிப்படத்தில் எழுந்து வந்துவிடவேண்டுமா?

ரஞ்சித் ரஜினியை விமர்சிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ரஜினியை வைத்து படம் எடுப்பதற்காக நான் ரஞ்சித்தை விமர்சிக்கப்போவதும் இல்லை. அது அவரது தொழில். அவருக்கு கிடைத்த புதையல். ஆனால் ரஞ்சித் தலித்திய சிந்தனை உள்ளவர் என்பதற்காக ரஜினி என்ற இந்துத்துவா ஏஜெண்டிற்கு எதிராக யாரும் போராடக் கூடாது என்பது என்ன நியாயம்? ரஜினியை மன்னித்து ரஞ்சித்தை காப்பாற்ற வேண்டி அவசியம் ஒன்றுமில்லை.

ரஞ்சித்தை ஒரு அவதாரமாக கருதுபவர்கள் கோயில் கட்டி கும்பிடட்டும். என்னைப் பொறுத்தவரை அவர் தமிழில் உள்ள பல நல்ல இயக்குனர்களில் ஒரு நல்ல இயக்குனர். அவ்வளவுதான். இன்றைய காலகட்டத்த்தில் புரட்சிகர உணர்வுள்ள ஒரு இயக்குனர் ரஜினி போன்ற ஒரு அதிகாரவர்க்க- இந்துத்துவா ஏஜெண்டுடன் சேர்ந்து வேலை செய்கிறார் என்பது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது.

அம்பேத்கரைகூட விமர்சித்துவிடலாம். ரஞ்சித்தை தொட முடியாது போலும்.

சினிமா தமிழனின் அபின்

– மனுஷ்ய புத்திரன்

Vinoth Kumar
ஓர் இளைஞர், “யாரு நீங்க?” என்று கேட்கிறார்.

கடந்த அரைநூற்றாண்டில் ரஜினி எதிர்கொண்டிராத கேள்வி. நிலைகுலைந்துப் போய், “நான் ரஜினிகாந்த், சென்னையிலிருந்து வர்றேன்” என்று இருளடைந்த முகத்தோடு பிளாஸ்டிக் சிரிப்போடு ‘வணக்கம்’ வைக்கிறார்.

மார்பில் வாங்கிய தோட்டாவுக்கு நிகரானதுஅந்த ஒரு வார்த்தை…. ரஜினி மீள சில தினங்கள் ஆகும்

முதல் அடி தூத்துகுடி மக்களிடமிருந்து….

Mano Soundar Mano
மீத்தேன், அணு உலைக்கதிர்வீச்சு, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட்-தாமிரம் என ஒட்டுமொத்த விஷமும் கலந்த கலவைதான் ரஜினிகாந்த்!!!

Guna
நிழல் உலகில் நீலம் நிஜ உலகில் காவி – பரட்டை மக்கள் விரோதி.

வி.சி. வில்வம்
ஜெயலலிதா விஷக் கிருமிகளை அடக்கி வைத்திருந்தார் – ரஜினி
எனக்குத் தெரிந்து 2 விஷக் கிருமிகளை அவர் அடக்கி வைத்திருந்தார்.

1)ரஜினி
2) கமல்

Palanivel
சமூக விரோதிகளை ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார்__ரசினி.
அவரு அதிமுக காரங்களை தான் சொல்றாரு.

Arun Bhagath
வேதாந்தா அனில் அகர்வாலுக்கும் , ரரஜினிகாந்துக்கும் சிந்தனையளவில் எந்த வேறுபாடும் இல்லை.
ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு செல்வது உயிர் நீத்த தியாகிகளுக்கு செய்யும் அவமரியாதை.

மனுஷ்ய புத்திரன்
ரஜினி அரசு எந்திரத்தின் அடியாள்
…….

தூத்துக்குடியில் ரஜினி சற்றுமுன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு அவர் ஒரு அரச பயங்கரவாதத்தின் கொள்கைப் பிரச்சாரகர் என்பதையும் மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் ஒரு சமூக விரோதி என்பதையும் மறுபடி நிரூபித்திருக்கிறார். காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்குப்பதில் ‘ காவல் துறை மேல் கல்லெறிந்தவர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு’ அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்டவேண்டும் என்கிறார். போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள் என்று எடப்பாடி- சங்கி கும்பல் எடுக்கும் வாந்தியை மறுபடி எடுக்கிறார். தமிழகத்தில் அதிகரித்துவிட்ட சமூகவிரோத சக்திகளை ஜெயலலிதாபோல இரும்புக்கரம்கொண்டு அடக்கவேண்டும் என்கிறார். துப்பாக்குச்சூட்டிற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கைப்பற்றிக் கேட்டால் ‘ எல்லாத்துக்கும் பதவி விலகச் சொன்னா என்ன அர்த்தம்? சும்மா அரசியல் பண்றாங்க’ என்கிறார். போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது இனிமேல் அரசு ஸ்டரிக்டாக இருக்கவெண்டும் என்கிறார். இப்படியே போராடிக்கொண்டே இருந்தால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கவலைப்படுகிறார்.

அரசு எந்திரத்தின் பச்சை ரத்தப்படுகொலையை நியாயப்படுத்தி அதற்கான பொறுப்பிலிருந்து ஆட்சியாளர்களை விடுவிப்பத்கற்காக அவர்களால் அனுப்பப்பட்ட அடியாள் ரஜினி. மக்களின் பிணங்ககளை தன்னுடையை பிரபல்யத்தினால் விற்றுக்கொண்டிருக்கிறார் ரஜினி. ரஜினியின் குரல் எடப்பாடியின் குரல். பா.ஜ.கவின் குரல். போலீசின் குரல்.

ரஜினி ஏன் முன்னிறுத்தப்படுகிறார் என்பதற்கு இனியும் பதில் தேடவேண்டியதில்லை. அடியாள்கள் உதவியின்றி அதிகாரம் சாத்தியமில்லை.

ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிர் அரசியலை சிதைக்க அனுப்பப்பட்டிருக்கும் நச்சுக்கிருமிகளில் தலையாய கிருமி.

Ra Sindhan
ரஜினியை யார் நீங்க என்று கேட்ட அந்த இளைஞர் ஒன்றை நமக்கு உணர்த்துகிறார். போராட்டக் களமே நமக்கு நாயகர்களை அறிமுகப்படுத்துகிறது. அப்போது நாம் பிம்பங்களை தூசாகத் தூக்கியெறிவோம்.

Manikandan Rajendiran
30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், கோடிகளில் சம்பளம் பெறுகிறோம், அதிக ரசிகர் மன்றங்களை கொண்டிருக்கிறோம், உலகம் முழுவதும் நமக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள், மீடியாக்கள் நம்மையே என்னேரமும் சுற்றி கொண்டிருக்கும், புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறோம், நமக்கு தான் 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன என்ற ஆயிரமாயிரம் எண்ணங்களோடு ஒருவர் பாதிக்கபட்ட மக்கள் முன்னால் நின்றால்…

யார் நீங்க? என்ற ஒற்றை கேள்வியால் செருப்பால் அடித்து அவரின் எல்லா எண்ணங்களையும் கனவுகளையும் சிதைத்து அனுப்பி வைத்துள்ளனர்..
#WAT A MOMENT

Murugeswari Madurai
இனிமேல் ….
ரஜினிகாந்த் என்ற நடிகனின் மூலமாக சமூக புரட்சி , தலித்திய புரட்சி பேச நினைக்கும் சினிமா இயக்குனர் எவரானாலும் அவர்கள் இயக்கும் திரைப்படத்தை அறிவுள்ள மக்கள் புறக்கணிக்கட்டும் .

அதை ” காலா ” – வில் இருந்து தொடங்குவோம் .

வேற நடிகனே கிடைக்கலையா உன் சமூவப்புரட்சிக் கதையில் நடிக்க ?

காலா ரஜினியின் கடைசிப்படமாக இருக்க மானமுள்ள மக்கள் முன்வரவேண்டும் .

Prabhu Rajendiran
பாப்பானுக்கு பல்லுபடாம வேலைபாத்து விட்டா தேசபக்தன் !
மன்னின் மைந்தர்களாம் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்காக போராடினால் சமூகவிரோதி , தேசதுரோகி!
Proud to be தேசதுரோகி!

Samsu Deen Heera
ஒரு ஆர்.எஸ்.எஸ் பார்ப்பானுக்கு இருக்கக்கூடிய அதே அகம்பாவமும் திமிரும்

வெளிப்படுத்துகிற ரஜினியின் உடல்மொழி தான் யாரின் கையாள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது…

மக்கள் போராடிக்கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடுமாம்.

ஆமாம் ரஜினி அவர்களே… ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்துறந்து போராடிய சுதந்திரப்போரில், காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் வெள்ளையனின் காலைநக்கிக் குடித்த கும்பலின் அடிமையல்லவா நீங்கள். உங்களுக்கு போராட்டங்களின் மான்புகள் குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

R Muthu Kumar
சென்னை விமான நிலையத்தில் ரஜினி முகத்தில் வெடித்தது தூத்துக்குடியில் பற்ற வைக்கப்பட்ட ‘யார் நீங்க?’ ப்ராண்ட் பட்டாசுதானே தவிர வேறல்ல! #கற்றவைபற்றவை

Aazhi Senthil Nathan
“காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்”

எவ்வளவு திமிர் ரஜினிக்கு? தூத்துக்குடியிலிருந்து திரும்பிவந்தவரின் விமானநிலையப் பேட்டியைப் பார்த்தீர்களா? அவரது உடல்மொழி! செய்தியாளரை நோக்கி எப்படி ஒரு ஆணவம்!

போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகுமா?

முட்டாளே, தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடுமோ என்கிற அச்சத்தால்தானே இங்கே போராடுகிறோம்.
உன்னை வாழவைத்தது தமிழ்நாடு. அதை சாகவைக்க வந்திருக்கிறாயா நன்றிகெட்டவனே?

இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது தமிழ்ச்சமூகத்தின் விரோதியான ரஜினிக்கு?
நாம் தான் கொடுத்தோம்.
கோடம்பாக்கம் கொடுத்தது, மக்களே, கோடம்பாக்கம் கொடுத்தது. எத்தனை வருசம் பாலாபிஷேகம் பண்ணீங்க. உங்களுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வந்துகிட்டிருக்காரு இந்த ஆளு.

இருபத்தைந்து ஆண்டு காலமாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா வருவாரா மாட்டாரா வருவாரா மாட்டாரா, எப்போ கட்சித் தொடங்குவார், எப்படித் தொடங்குவார் என்று ரன்னிங் கமென்டரி கொடுத்துக்கொண்டு அலம்பல் பண்ணிக்கொண்டிருந்த ஊடகங்களை நோக்கி பாயாமல் என்ன செய்வார்? எத்தனை நூறு கவர்ஸ்டோரிகள், எத்தனை ஆயிரம் மணி நேரம் விவாதங்கள்…

ஒளிவுமறைவற்ற பாசிஸ்ட்டான ரஜினி பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு. தமிழ்நாட்டில் மீண்டும் சர்வவியாபகமாகப் பரவிக்கொண்டிருக்கும் பார்ப்பனீயத்தின் முதல் தளபதி. தமிழ்நாட்டை காலனிநாடாக ஆக்கி இதை கருவறுக்க விரும்பும் மோடி கும்பலின் ரத்த ஏஜென்ட். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யத் தயங்காத தமிழர்களின் நெ.1 விரோதி.

ரஜினியை தலைதூக்கவிடாமல் அடிக்கவேண்டியது நம் அனைவரின் கடமை.

“காலா,
உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்,
என்றன் காலருகே வாடா,
சற்றே உனை மிதிக்கிறேன்”
என்கிற வார்த்தைகள் இந்த விஷக்கிருமிக்குத்தான் தகும்.

Suba.Veerapandian
“அவ்வண்ணமே கோரும் …….” – #ரஜினிகாந்த்!
————————————————————————

விஷக்கிருமி என்ற சொல் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாவலாகப் பேசப்பட்ட ஒரு சொல். 1967 ஆம் ஆண்டு திமுக பதவிக்கு வந்ததும், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம், “தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன” என்றார். அது குறித்த கடுமையான விமர்சனங்கள் பல அன்று வெளிவந்தன.

பிறகு பலரும் அந்தச் சொல்லை அல்லது அப்பொருள்படும் சொல்லை அடிக்கடி கையாண்டனர். அண்மையில் சல்லிக்கட்டுப் போராட்டத்திலும், இப்போது தூத்துக்குடியிலும் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டது. இப்போது மீண்டும் தூத்துக்குடிப் போராட்டத்தில் விஷமிகள் பரவி விட்டனர் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் கூறினர். இப்போது அதே சொல்லையும், கருத்தையும் ஊடக நேர்காணலில் ரஜினி பயன்படுத்தியுள்ளார்,

கொதித்துக் கொந்தளித்து எழுந்த மக்களின் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று சொல்வது மக்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா? 99 நாள்கள் அமைதியாக மக்கள் நடத்திய போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்கிறபோது, மக்களிடம் ஒரு கோபம் குடிகொள்ளாதா? அந்தக் கோபம் சற்றுச் சூடேறி வன்முறையில் போய் முடிந்திருக்கிறது. அந்த வன்முறையைப் பற்றி மட்டும் கவலைப்படும் புதிய தேசபக்தர் ரஜினி, அந்த வன்முறையைத் தூண்டிய வன்முறை பற்றி அறிவாரா? மக்களின் உடல்நலம், உயிர்ப்பாதுகாப்பு என எது குறித்தும் கவலை கொள்ளாமல், தனியார் ஆலைக்கு அரசுகள் அளித்த ஆதரவுக்கு என்ன பெயர்? அது வன்முறையில்லையா?

தன் திரைப்படங்களில் ‘வேங்கை மகன் ஒத்தையில நின்னு’ எத்தனை வன்முறைகளை அரங்கேற்றியிருக்கிறார்! அதுதான் வீரம் என்று எத்தனை படங்களில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அவையெல்லாம் வன்முறைக்கான தூண்டுதல்தானே! ஆனால் அவற்றையெல்லாம் நினைப்பில் வைத்தன்று, தங்கள் வாழ்வுக்காக, உயிருக்காகப் போராடிய மக்களிடையே விஷக்கிருமிகளை புகுந்துவிட்டனர் என்பதற்கு என்ன ஆதாரம்? அரசு சொல்வதை அப்படியே திரும்பிச் சொல்வதற்கு ஒருவர் தூத்துக்குடி வரை பயணம் செய்ய வேண்டியதில்லை.எடப்பாடியின் அறிக்கைக்கும், பொன். ராதாகிருஷ்ணன் நேர்காணலுக்கும் கீழே, “அவ்வண்ணமே கோரும்” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கலாம் ரஜினி!

ஆலையை மீண்டும் திறக்க நீதிமன்றம் சென்றால், இனி அவர்கள் மனுஷங்களே இல்லை என்று கூறும் ரஜினிகாந்த்தான், எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்குத்தான் போகணும் என்கிறார். என்ன முரண் இது! விஷமிகள் நடத்திய வன்முறை எதிர்ப்புப் போராட்டம்தானே, அதற்காக நாங்கள் ஏன் எங்கள் ஆலையை மூட வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றம் சென்று கேட்கமாட்டார்களா? மக்கள் போராட்டத்தை விஷமிகள் நடத்திய போராட்டம் என்று திரித்துச் சொல்வதை விட, ஆலை முதலாளிகளுக்கு வேறு எப்படி உதவ முடியும்?

கூட்டத்தை நோக்கிக் கூட இல்லை, குறிபார்த்துச் சுட்டிருக்கின்றனர் காவல்துறையினர். இனிவரும் காலங்களில் எவரும் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடாது என்னும் ஆகப் பெரிய மிரட்டல்தானே இது! அதனைக் கண்டித்து விட்டல்லவா காவல்துறையினரைத் தாக்கியவர்களைக் கண்டித்திருக்க வேண்டும்?

ஒரு நபர் ஆணையம் மீது நம்பிக்கையில்லை, உளவுத்துறையின் பிழைதான் இது என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு, ஒட்டுமொத்தமாய் மக்கள் போராட்டத்தை விஷமிகளின் வன்முறைப் போராட்டம் என்று சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்!

ஜெயலலிதாவின் இரும்புக்கரத்தைப் பாராட்டும் இவர் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இரும்புக்கரங்கள் மட்டும்தான் மிஞ்சும். மக்கள் மிஞ்ச மாட்டார்கள்! கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை போதாது என்பது போலல்லவா உள்ளது அவருடைய நேர்காணல்!

பூனைக்குட்டி வெளியில் வந்தது ஒருவிதத்தில் நல்லதுதான். ரஜினியின் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பே தோல்வியடைந்துள்ளது!

Arul Narayana
வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்னு சொல்லிட்டு…. (திரைப்படத்தில்)
100 நாள் போராட்டத்தை
துப்பாக்கி சூடு நடத்தி முடித்துவைத்து….
பொதுமக்கள்… அடிபட்டு…
மருத்துவமனையில் மருத்துவம் எடுக்க துவங்கி…
8 நாள் கழித்து எட்டிப்பார்க்கும்…
ரஜினி…
Just… another IMPOTENT politician…

செ. விக்னேசு
உங்களுக்கு என்ன தகுதி இருக்கிது ரஜினி……?
இயல்பிலே நடிகனான உங்களின் இந்த வசனமும் நிச்சயம் உங்களுடையது இல்லை, ஆடிட்டர் குருமூர்த்தியினுடையதாக தான் இருக்கும்.

போராட்டத்திற்க்கு தலைமை ஏற்றவர்களை சமூக விரோதி என்கிறீர்கள், காக்கி சட்டைகாரர்களை கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு சித்தரிக்குறீர்கள், ஜல்லிகட்டு போராட்டத்தை இணைத்து பேசுகிறீர்கள் (அப் போராட்டத்தில் யார் வன்முறையை தூண்டினார்கள், யார் தீவைத்தார்கள் என நாடறியும் ) தற்போதைய ஸ்டெர்லைட் போராட்டத்தில் யார் சமூக விரோதிகள் என்று மக்கள் அறிவர். 100 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள் அப்பொழுது வாய் திறக்கவில்லை, 13 பேரை காட்டுமிராண்டித்தனமாக சுட்டு படுகொலை செய்துள்ளார்கள் அப்போதெல்லாம் வாய்திறக்காத நீங்கள் இப்போது காலா பட விளம்பரத்திற்கு செல்வதை மறுத்துவிட்டு நான் தூத்துகுடிக்கு வருவேன் என வந்து பொய் பரப்புறை செய்து கொண்டு இருக்கிறீர்கள். காவிரி சிக்கல் பற்றி எறிந்த பொழுது நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்ல கூடாது என வாய் பூட்டு போட்டவரல்லவா நீங்கள். உங்கள் உபதேசம் எங்களுக்கு தேவை இல்லை, அதை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை ரஜினி.

Arul Ezhilan
ரஜினியை விட ஆபத்தானவர் கமல். கமலை விட ஆபத்தானவர் ரஜினி. ஒருவர் தூத்துக்குடி செல்வதற்கு முன்பே “இப்படி எல்லாம் நடந்திடும்ணுதான் நான் போகல்ல” என்பார். ஒருவர் போய் விட்டு வந்து “போராடிட்டே இருந்தா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடாதாணு “ கேட்பார்….. இந்த இருவரிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

Anbe selva
போராடும் மக்களை சமூக விரோதிகள்னு சொன்ன நாயே நீ யாருடா?..

மருது சகோதரர்களில் இருந்து சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை கட்டபொம்மன் வரைக்கும் போராடவில்லை என்றால் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை ஏதடா?..

காந்தி நேதாஜி போன்ற தலைவர்களை போராடவில்லை என்றால் இந்திய சுதந்திரம் ஏதடா நாயே ?..

8 நாடார் பெண்கள் போராடவில்லை என்றால் முலை வரிக்கும் திரைசீலை கொடுமைக்கும் விடிவு ஏதடா நாயே ?..

முக்குலத்து மக்கள் பெருங்காமநல்லூரில் போராடவில்லை என்றால் குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்து விடிவு ஏதடா நாயே ?..

வன்னிய மக்கள் போராடவில்லை என்று சொன்னால் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ஏதடா நாயே..

எண்ணற்ற பெருந்தலைவர்கள் கோவில் நுழைவுக்காக போராடவில்லை என்று சொன்னால் இன்றைக்கும் நீயும் நானும் தெருவிலடா நாயே?..

அம்பேதகர் போராடவில்லை என்று சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு ஏதடா நாயே?.

பெரியாரும் எண்ணற்ற பெரியோர்களும் இடஒதுக்கீட்டிற்காக போராடவில்லை என்று சொன்னால் இங்கே சமூக விடுதலை ஏதடா நாயே..

18ம் நூற்றாண்டில் அமெரிக்க சமூக விரோதிகள் போராடவில்லை என்று சொன்னால் இன்னைக்கும் 8 மணி நேர வேலை முடிந்து நீயும் நானும் வீட்டுக்கு போகமுடியாதடா நாயே..

போராட்டம்தான் உன்னையும் என்னையும் விடுவித்தது. வரலாற்றில் உனக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்திய போராளிகளின் தியாகத்தில் வயிறு வளர்த்திட்டு, வரலாறு முழுவதும் உன்னையும் என்னையும் ஒடுக்குபவனின் பக்கம் ஒதுங்கும் பொருக்கி நாயே.. புரிந்துகொள்ளடா..

7 மறுமொழிகள்

  1. *எல்லாத்துக்கும் பதவி விலகச் சொன்னா என்ன அர்த்தம்?*

    _*விசக் கிருமி ரசினிகாந்த் :*_ எல்லாத்துக்கும் பதவி விலகச் சொன்னா என்ன அர்த்தம்?

    _*மக்கள் :*_ அதுக்கு நீ இலாயக்கு இல்லேன்னு அர்த்தம்டா முண்டக் கலப்பை!

  2. அடே காலா! சற்றே என் முன்னே வாடா;
    உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன்!!

    – பாரதியார்

  3. //எச்சச்ச எச்சச்ச கெச்சச்ச கெச்சச்ச… புரியலையா… நானே யாருக்கோ சொம்பா இருக்கிறேன். எனக்கும் சொம்பா இருக்கீங்களேனு அர்த்தமாம்.// i like this comment.
    தோழர்களே , ‘காலா’ வை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டாம்! என்று kettukolhirom.The protest against sterlite is justifiable ! The Sterlite Industries, is a part of London-based Vedanta resource. ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர் . ஸ்டெரிலைட் பிளான்ட் offects the health of Tuthukudi inhabitants.The increased prevalence rate of asthma and respiratory infections are due to the air pollution caused by the plant. Residents wake up to itchy eyes, burning throat and breathing trouble.It is daily nesance for tutukudi people. people are seen running about the streets of Anna Nagar, Toovipuram, Bryant Nagar and George Road, fearing for their well-being. the DEE report says that after the repair work was completed, sulphur-di-oxide levels suddenly shot up from 20 ug/cubic metre to 62 ug/cubic metre, Sterlite denies all allegations. The company says it was given a clean chit by the district environmental engineer. it is contray to the report of DEE. Except people from Tutukudi, nobody can understand their problem! Actually, வெளிநாட்டு செம்புக்காசுகளுக்கு விலை போன்றவர்கள்தான் ஸ்டெர்லிட் வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்க. Sterlite is a London based Vedantha Resouce, headquatered in Bombay in India, whos CEO is Anil Agarval. அதற்க்கு ஏன் இவளவு தேசபக்தியோடு குறைகின்றனர் என்று தெரியவில்லை. இதனுடைய ஆதாயம் எல்லாம் velinaattu kaarane அனுபவிப்பான்! கச்டப்படுறவன் தூத்துக்குடி மனுஷர்கள்! என்ன ஞாயம் மக்களே! The tobacco industry did this the same thing for decades asking victims to prove co that their lung or throat cancers were caused by cigarette smoking. Asbestos manufacturers continue to successfully stave off international legislation on the carcinogenic fiber citing lack of scientific certainty. Unilever wishes us to believe that mercury is not the cause of the high incidence of nervous disorders, memory loss, dental disorders and kidney failures among the workers at its thermometer factory in Kodaikanal! ஒரே ஒரு மாசம் மட்டும் இங்கு வந்து வசித்துப்பாருங்கள். யாம் படும் அவதிகளை கண்டு விட்டு அதன் பின் கொமெண்ட் எழுதுங்கள் ப்ளீஸ்! வாழ்வாதாரத்துக்கு போராடுகிறவனால் தீவிரவாதி என்று அழைப்பன்தான் தீவிரவாதி மற்றும், தேச துரோகி.

  4. “18ம் நூற்றாண்டில் அமெரிக்க சமூக விரோதிகள் போராடவில்லை என்று சொன்னால் இன்னைக்கும் 8 மணி நேர வேலை முடிந்து நீயும் நானும் வீட்டுக்கு போகமுடியாதடா நாயே..” – அற்புதம்

  5. காலா படத்தை புறக்கணிப்போம் . எச்ச ரஜினியை சினிமாவிலும் தோற்கடித்து ஓட விடுவோம்

  6. சித்திரச் சோலைகளே!
    உமை நன்கு திருத்த இப்பாரினிலே
    முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
    உங்கள் வேரினிலே

    நித்தம் திருத்திய நேர்மையினால்
    மிகு நெல்விளை நன்னிலமே!
    உனக்கெத்தனை மாந்தர்கள்
    நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே

    தாமரை பூத்த தடாகங்களே!
    உமைத்தந்த அக்காலத்திலே
    எங்கள் தூய்மைச் சகோதரர்
    தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே!

    மாமிகு பாதைகளே!
    உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
    அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
    அந்தியெலாம் உழைத்தார்
    ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
    உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
    நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
    உதித்தது மெய் அல்லவோ?

    கீர்த்திகொள் போகப்பொருட்புவியே!
    உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
    எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற்
    சிதைந்த நரம்புகள் தோல்!

    நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
    நின்ற இயற்கைகளே!
    உம்மைச்சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
    தொழிலாளார் தடக்கைகளே! தாரணியே!
    தொழிலாளர் உழைப்புக்குச்சாட்சியும் நீயன்றோ?
    பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
    செல்வர்கள் நீதிநன்றோ ?

    எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே
    சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
    இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே
    பெரும் புதரினில் தூங்கிடுமோ?

    கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார்
    இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
    சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
    இந்த வார்த்தைக்கு மோசமில்லை

    — பாரதிதாசன்.

  7. ரஜினி இந்துத்துவான்னு எதிர்ப்பதெல்லாம் சரி, இந்துத்துவ சாதி இந்துக்களின் தொடர் சாதிய படுகொலைகளின் அடுத்ததாக வந்திருக்கும் “கச்சநத்தம்” சாதி கொலை பற்றி நீங்கள் எழுதாமல் இருப்பது எதை வகை அரசியல்.

Leave a Reply to Divya பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க