தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி முதல் மக்களை சுட்ட போலீசு வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் | மருது வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

ரு மனிதன் சுத்தமான காற்று சுத்தமான நிலம் சுத்தமான நீர் வேண்டும் என்பதற்காக, இந்த வேதாந்தா கார்ப்பரேட்டுக்கு எதிராக போராடி, நாசகார ஸ்டெர்லைட் கம்பெனியை மூடிய தூத்துக்குடியின் தியாகிகளுக்கு நாம் என்னென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்திய அளவில் இலட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்ற முழக்கத்தின் கீழ் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முன்வைத்த முழக்கத்தை ஏற்று இலட்சம் மக்கள் கூடி அன்றைக்கு மே 22 தேதி போலீசின் துப்பாக்கிச்சூட்டில் அந்த இடத்திலேயே இறந்தவர்கள் 13 பேர் அதற்கு பிறகு இரண்டு மூன்று பேர் இறந்துள்ளனர். இன்றைக்கு போலீசு கொன்றது உண்மை என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க