தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

சிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா? நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா? புதைந்தது உடலல்ல விதையான வீரமடா! - ம.க.இ.க. பாடல்

1

பாடல் வரிகள் :

ழுவோம் எழுவோம் எழுவோம் எழுவோம்
இனி வீழ்ந்தது போதும் மீண்டு எழுவோம்
போராட்டம் என்பது எம் பிறவியிலே பிறந்தது
இனி வீழ்ந்தது போதும் மீண்டும் எழுந்து வா

உன்னாலே முடியாதென்று உலகிலே இல்லை இல்லை
கால்தீண்டும் தூரம்தானே வெற்றியின் எல்லை எல்லை
விதைகூட மண்ணை கிழித்து வெளியே வரும்
புழுகூட தீண்டிவிட்டால் சீண்டி எழும்
உன்னாலேதான் இம்மண்ணிலே மாற்றம் வரும்
துவளாதே சிதறாதே துருவமாய் ஒன்றாய் சேர்
தோல்விகள் என்பதே வெற்றியின் படிக்கல்லே

உன் கண்முன்னே இருப்பது கண்ணாடி துகள்களடா
அடங்கி நடந்தாலே ஆமை பாதம் தூரமடா
குருதியில் உறுதிகொள் நெஞ்சிலே வீரம் கொள்

லாபம் உனக்கு; சாவு எனக்கா
காப்பர் உனக்கு; கேன்சர் எனக்கா
பதவி உனக்கு; பாடை எனக்கா
சிரிப்பு உனக்கு; சோகம் எனக்கா

சிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா
நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா
புதைந்தது உடலல்ல விதையான வீரமடா