டிசா மாநிலம் திங்கியா கிராமத்தில், ஜிண்டால் எஃகு ஆலை அமைப்பதற்காக 20 வீடுகளை இடிக்கப்பட்டுள்ளது.

திங்கியா கிராமத்தில் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இதில் வெற்றிலை விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வசிக்கின்றனர்.

இதற்குமுன், திங்கியா மக்கள் தென் கொரிய பெஹிமோத் போஸ்கோவின் பிராந்தியத்தில் எஃகு ஆலையை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்தினர். இப்போது அவர்கள் JSW-இன்(ஜிண்டால்) ரூ.65,000 கோடி எஃகு ஆலைக்காக சுமார் 1,174 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடுகிறார்கள்.

நிலத்தை ஜிண்டால் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதற்காக பல்வேறு அடக்குமுறைகள் மக்கள் மீது ஏவப்படுவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

படிக்க : ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

ஜிண்டால் எதிர்ப்பு, போஸ்கோ எதிர்ப்பு பிரதிரோத் சங்க்ராம் சமிதியின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் பைக்ரே, “அக்டோபர் 22 அன்று, முன்மொழியப்பட்ட JSW உட்கல் ஸ்டீல் லிமிடெட் திட்டத்தின் சில அதிகாரிகள், மனிதவள மேலாளர் சுபாஷ் பரிதா தலைமையில், மற்றும் சில உள்ளூர் குண்டர்கள் எட்டு-பத்து போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் திங்கியா கிராமவாசிகளின் வீடுகளை வலுக்கட்டாயமாக இடித்தார்கள். அவர்களின் உணவுப் பொருட்கள் அல்லது ரேஷன்கள் உட்பட தங்கள் உடமைகளை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. வீடுகள் இடிக்கப்பட்ட மக்கள் நிலமற்ற மக்கள் என்பதால் பல ஆண்டுகளாக காடுகளில் வசித்து வருகின்றனர். இந்த காடுகள் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம்” என்றார்.

வீடு இடிக்கப்பட்ட குடியிருப்பாளரான சரணா சமல், “கிட்டத்தட்ட 20 வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்பட்டுள்ளன. எங்களுடைய எல்லாப் பொருட்களும் இன்னும் வீட்டில் இருக்கிறது. எங்கள் வீடு ஜிண்டால் நிலத்தில் உள்ளதாக கூறுகிறார்கள், ஆனால் நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்த நிலத்தில்தான் வசித்து வருகிறோம். இது எங்கள் ஜல் (தண்ணீர்), ஜங்கல் (காடு) மற்றும் ஜமீன் (நிலம்). நான் ஒரு வெற்றிலை விவசாயி, என் வயல் பாழாகிவிட்டது. எனது வயல் அழிக்கப்பட்ட பிறகு, நான் தடுத்து வைக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எங்களை அகற்ற முயன்றனர். ஊடகவியலாளர்களை விரட்டியடித்தனர். மேலும் யாராவது இடிக்கப்படுவதை ஆவணப்படுத்த முயன்றால் தொலைபேசிகளைப் பறிக்க முயன்றனர்” என்று கூறினார்.

நிலு மொஹபத்ரா என்ற சிறுவன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து பின்னர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதால் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக பைக்ரே கூறினார்.

படிக்க : ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !

முன்னதாக, அந்த இடத்தில் ரூ.52,000 கோடி முதலீட்டில் 12 மில்லியன் டன் திறன் கொண்ட எஃகு ஆலை திட்டத்தை அமைக்க போஸ்கோ திட்டமிட்டிருந்தது. இந்த திட்டம் கிராம மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது, மேலும் 2017 இல், தென் கொரிய எஃகு நிறுவனம் திட்டத்திலிருந்து வெளியேறியது.

இந்த ஆண்டு ஜனவரியில், திங்கியாவில் முன்மொழியப்பட்ட JSW ஸ்டீல் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன், செயல்பாட்டாளர்களையும் கைது செய்தனர். ஜகத்சிங்பூரின் திங்கியா பகுதியில் தொடர்ந்து அடக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தேபேந்திர ஸ்வைன் உட்பட பல ஆர்வலர்கள் தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜிண்டால் எஃகு ஆலைக்கான பழங்குடி மக்களின் வீடுகளை இடித்து நாசம் செய்துள்ளது மாநில அரசு. கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாபத்திற்காக சொந்தநாட்டு மக்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக, உழைக்கும் மக்கள் அனைவரும் கிளர்ந்தெழுவது காலத்தின் கட்டாயம்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க