திருநெல்வேலி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் நீதிமன்ற புறக்கணிப்பு !

ஜூலை 02, 2018 அன்று தோழர் வாஞ்சிநாதன் கைதை கண்டித்து திருநெல்வேலியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கலந்துக்கொண்ட திருநெல்வேலி வழக்கறிஞர்கள் “போலி வழக்குகள் பதிவு செய்து, மக்களை கைது செய்யாதே!”, ” போராடும் மக்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வாஞ்சிநாதன் மற்றும் பிற‌ வழக்கறிஞர்களை கைது செய்யாதே!” என தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

    • தகவல்: திருநெல்வேலி வழக்கறிஞர்கள்
      திருநெல்வேலி.

டந்த ஜீலை 02, 2018 அன்று ‍திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தோழர் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட நபரை கண்டறிந்து வழக்கில் முதல் குற்றவாளியாக்கு” என்கிற முழக்கங்களை முன்வைத்தும் போராட்டம் நடைப்பெற்றது.

நேற்று (02/07/2018) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலிருந்து…

  • ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களுக்கு
    சட்ட உதவி செய்த
    வழக்கறிஞர் வாஞ்சிநாதனை விடுதலை செய்!
  • சுட்டுக்கொன்ற போலீஸ் மீது
    கொலை வழக்கை பதிவு செய்!
  • போராடிய மக்கள் மீது
    பொய் வழக்குகளை
    வாபஸ் வாங்கு!

 

– ‍திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம்,
திருச்சி.

***

”வழக்கறிஞர் வாஞ்சிநாதனை நிபந்தனையின்றி விடுதலை செய்!” – என்கிற முழக்கத்தை முன்வைத்து உயர்நீதிமன்றம் – மதுரை கிளை வழக்கறிஞர் சங்க  வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டமானது நச்சு ஆலை ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு சட்ட உதவி செய்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைதை கண்டித்தும், நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் நடைபெற்றது.

– உயர்நீதிமன்றம் – மதுரை கிளை வழக்கறிஞர் சங்கம்
மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க