மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி | நூல் அறிமுகம்

மார்க்சிய பார்வையில் இன்றைய உலக நிலைமைகளோடு இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு விவரிக்கும் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சியத்தின் சிறப்பியல்பையும், மார்க்சியத்தின் தேவையையும் இந்நூலில் சுருங்கக்கூறியிருக்கிறார்.

லண்டனில் 2018 மே-5 அன்று, மார்க்ஸ் 200 சர்வேதேச மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை மற்றும் 1883 – ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று இலண்டனில் உள்ள ஹைகேட் கல்லறையில் கார்ல் மார்க்ஸ் இறுதி நிகழ்வில் எங்கெல்ஸ் ஆற்றிய உரை ஆகியன இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

வளர்ச்சி குறித்த விதியை அல்லது இயற்கையில் உள்ளமைந்த கட்டமைப்பை எவ்வாறு டார்வின் கண்டுபிடித்தாரோ, அதைப் போன்றே மனித வரலாற்றின் வளர்ச்சி குறித்த விதியை, மிக எளிமையான உண்மையை, தத்துவத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்த உண்மையை மார்க்ஸ் கண்டறிந்தார்.

…இன்றைய முதலாளித்துவ வகைப்பட்ட உற்பத்தி முறையை, இந்த உற்பத்தி முறை உருவாக்கிய முதலாளித்துவ சமூகத்தை மேலாண்மை செய்யும் சிறப்பான செயல்பாட்டு விதியையும் மார்க்ஸ் கண்டறிந்தார். அவருக்கு முன்னாள் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களும், சமூகத்தை விமர்சித்து வந்தவர்களும் மேற்கொண்டு வந்த அனைத்து ஆய்வுகளிலும் அவர்கள் இருட்டிலேயே உழன்று கொண்டிருந்த போது, மார்க்ஸின் உபரி மதிப்பு என்ற இந்த கண்டுபிடிப்பு நீண்ட நாட்களாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது.

காலங்களை எல்லாம் கடந்து அவரது பெயர் நிலைத்திருக்கும். அதைப் போலவே அவரது எழுத்துக்களும் சாகாவரம் பெற்றவையே. (எங்கெல்ஸ்)

”மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி” என்ற தலைப்பில் மார்க்சியத்தின் சிறப்பியல்பையும், மார்க்சிய பார்வையில் இன்றைய உலக நிலைமைகளோடு இந்திய நிலைமையையும் ஒப்பிட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி,

”…மார்க்சியம் ஒரு வறட்டுச் சூத்திரமல்ல, மாறாக, அது ஓர் ‘ஆக்கப்பூர்வமான அறிவியல்’. அது, இதர அனைத்தையும் விட, ”துல்லியமான நிலைமைகள் குறித்த ஒரு துல்லியமான ஆய்வின்” அடிப்படையில் அமைந்துள்ளதாகும்… மார்க்சால் அளிக்கப்பட்ட அடித்தளத்தின் அடிப்படையில் இன்றைய சமூகநிலைமையைப் புரிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தில் எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியக் கூறுகளை அறிந்து கொள்வதற்கும், நாம் நம்முடைய சிந்தனையை தொடர்ந்து வளப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மார்க்சியம் ஒரு மூடப்பட்ட தத்துவார்த்த சிந்தனை என்ற நிலையிலிருந்து, தொடர்ந்து செறிவூட்டப்பட்டு ஒரு வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்திடும்.” என்கிறார்.

”ஜனரஞ்சக தேசியவாதம்: இந்தியப் பின்னணி” என்ற தலைப்பிலான மற்றொரு உரையில்,

ஒரு நாட்டில் உள்ள அபரிமிதமான செல்வ வளத்தைச் சூறையாடுவதன் மூலமும், தொடர்ந்து நாட்டிலுள்ள தங்கங்கள், வைரங்கள், மற்றும் இதர கனிம வளங்களை அடிமை உழைப்பாளர்களைக் கொண்டு நேரடியாகவே சூறையாடுவதன் மூலமும், தங்களுடைய ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கான வழிமுறைகளாகத்தான் இவர்கள் ‘தேசியவாதம்’ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்களேயொழிய, அந்நாட்டிலுள்ள மக்களில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நிலைமைகளை முன்னேற்றுவதற்கும் இதற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

இந்தியாவில், தற்போது, கார்ப்பரேட்டுகளும், இந்துத்துவா மதவெறியர்களும் கை கோர்த்துக்கொண்டு, ‘தேசம்’ என்ற பெயரால் ஜனநாயக உரிமைகள் உட்பட மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் தியாகம் செய்திட வேண்டும் என்றும், மக்களின் நலன்களுக்கும் மேலானது ‘அபரிமிதமான தேசியவாதம்’ என்கிற சிந்தனை என்றும் தீவிரமாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களுக்கு மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் தங்களுக்குக் கீழ்பட்டு வாழ்ந்திட வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக இப்போதுள்ள ”இந்திய தேசம்” என்பதை ”இந்து தேசியவாதம்” என்று மாற்றியமைத்திட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

இவர்கள் தற்போதுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்புவது போல ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ – ஆக முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று கோருகிறார்கள்.”

இவ்வாறு இந்திய நிலைமைகளை விவரிக்கும் யெச்சூரி, மார்க்சியத்தின் தேவையை இந்நூலில் சுருங்கக் கூறியிருக்கிறார்.

நூல்: மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி
ஆசிரியர்: சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்: ச.வீரமணி)

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018.
தொலைபேசி
: 044 – 24332924, 9444960935.
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 24
விலை: ரூ.20.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க