வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீழைக்காற்று !

வெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்!

முற்போக்கு நூல்களை ஒரே கூரையின் கீழ் கிடைக்க செய்திருக்கும் கீழைக்காற்று வெளியீட்டகம் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கீழைக்காற்று வெளியீட்டகத்தின் விற்பனையகம் இதுவரை செயல்பட்டுவந்த எல்லீசு சாலையிலிருந்து, நெற்குன்றம் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அறிவுத் தேடலுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல…
செயலின் தாகத்திற்கு நேரம் ஒரு தடையல்ல…
எப்போதும் போல்
உங்கள் தேவையின் காத்திருப்பில் நாங்கள்!
வாருங்கள்!

வெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்!

புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
(வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் எதிரில், சிவா ஜிம் மாடியில்)

6 மறுமொழிகள்

  1. வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீழைக்காற்றுக்கு எங்களது வாழ்த்துக்கள்!

    முன்பு எங்கள் பகுதியிலிருந்து தூரமாக இருந்தது! இப்பொழுது எங்களுக்கு பக்கமாக வந்துவிட்டீர்கள். நன்றி. இனி அடிக்கடி வரமுடியும்.

  2. மகிழ்ச்சி… கீழைக்காற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள்…. வீடியோவில் பின்னணி இசை இடையூறாக இருக்கிறது. நன்றி!

  3. 25 ஆண்டுகள் என்பது உண்மையிலே ஒரு நெடிய பயணம் தான். இன்னும் தொடர்ந்து பல்லாண்டுகள் வெற்றிகரமாக செய்லபட வாழ்த்துக்கள். ஆன்லைன் புத்தக விற்பனை ஆரம்பிக்காமல் கடையை மாற்றி கொண்டிருப்பது எந்த வகையில் பயனளிக்கும் ? காலத்துக்கு ஏற்ற முறையில் மாறுமாறு உரிமையுடன் ஒரு கோரிக்கை .

  4. கீழைக் காற்றின் நூல் பட்டியல் வெளியிடலாம்.மேலும் அடையாளம் காணவும் வழி அறியவும் , கூகுள் வரைபடம் பகிரலாமே மிகவும் உதவிகரமாக இருக்கும்.வாழ்க பல்லாண்டு, வளர்க மென்மேலும் வளர்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க