மாட்டுக்கறி தடை என மத்தியில் ஆளும் மோடி அரசு அறிவித்தபோது, தென் மாநிலங்கள் முழுவதும், குறிப்பாக கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இணையவாசிகள் டிவிட்டரில் அதிகம் பகிர்ந்த சொல், #திராவிடநாடு
டில்லியின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் சொல் திராவிடம். இந்தோ ஆர்யன் மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்ட திராவிட மொழிக் குடும்பம் பண்பாட்டு அளவிலும் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டத்தை கொண்டிருக்கிறது. அதற்காக தனது இறுதிக் காலம் வரை உழைத்தவர் பெரியார்.
அவர் ஆரம்பித்த திராவிடர் கழகத்திலிருந்து சி.என். அண்ணாதுரை தலைமையில் ஒரு பிரிவினர் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் என தனிக்கட்சியைத் துவக்கினர். அண்ணாதுரை, கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன், எம்.ஜி.ஆர் என பன்முகங்களோடு உருவான திமுக-வின் வரலாறு பல்வேறு ஏற்ற இறங்கங்களைக் கொண்டிருக்கிறது.
திராவிடக் கொள்கைகளை அரியணையில் ஏற்றுவதாகக் கூறி பெரியாரிடமிருந்து பிரிந்தது முதல், திராவிடத்தைக் கருவருக்கப் போவதாகக் கருவிக் கொண்டிருக்கும் பாஜகவோடு கூட்டணி வைத்தது வரை, திமுகவின் வரலாறு உடன்பிறப்புகள் அறிந்தவையே என்றாலும் மற்றவர்கள் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த வினாடி வினாவை முயன்று பாருங்கள் !
கேள்விகள்:
- தந்தை பெரியாரால் துவங்கப்பட்ட “திராவிடர் கழகத்தில்” இருந்து பிரிந்து அண்ணாதுரையின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய ஆண்டு எது?
- திருச்சி மாவட்ட டால்மியா சிமெண்ட் ஆலைப் பகுதியை டால்மியாபுரம் என்று பெயர் மாற்றிய போது, 1953-ம் ஆண்டு எதிர்த்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. என்ன பெயரை வைக்கக் கோரியது? அதுதான் அந்த ஊரின் தமிழ்ப் பெயர்!
- தேர்தலில் பங்கேற்பதாக தி.மு.க-வின் இரண்டாவது மாநில மாநாடு 1956-ம் ஆண்டு முடிவெடுத்தது. மாநாடு நடந்த ஊர் எது?
- தி.மு.க-விலிருந்து ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் சிலர் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினர். ஆண்டு எது?
- 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை என்றாலும், தனது கோரிக்கையை ஏற்கும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அறிவித்தது. அது என்ன கொள்கை?
- சூலை 14, 15, 1953-ம் ஆண்டில் தி.மு.க அறிவித்த மும்முனைப் போராட்டத்தில் டால்மியாபுரம் பெயர் மாற்றம் போக இடம்பெற்ற ஏனைய இரு போராட்டங்களில் ஒன்று பதில்களில் இருக்கிறது. அது எது?
- 1959-ம் ஆண்டில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க முதன்முறையாக மேயர் பதவியில் பொறுப்பேற்றது. அந்த மாநகராட்சி எது?
- 1962-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க போட்டியிட்டது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எது?
- 1963 சூன் 8,9,10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலைக் கோரிக்கை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களை பெற்று திராவிட கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது என்று மாற்றப்பட்டது, ஏன்?
- 1965 சனவரி 26 இந்திய குடியரசு நாளை தி.மு.க துக்க நாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது, காரணம் என்ன?
- 1967-ம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க மொத்தம் எத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளை வென்றது?
- 1967 மார்ச் 6 முதல் 1969 பிப்ரவரி 3-ம் தேதியில் மறையும் வரை முதல்வராக இருந்த அண்ணாதுரை, ஆட்சியில் செய்த முக்கிய அம்சங்கள் என்ன?
- அண்ணாவின் மறைவையடுத்து முதலமைச்சராக ஆவதற்கு கருணாநிதிக்கு தடை போட்டவர் யார்? எங்கிருந்தாலும் இவர்தான் நம்பர் 2 என்கிறார்கள்.
- 1972-ம் ஆண்டில் தி.மு.க.வில் இருந்து விலகி அண்ணா தி.மு.க ஆரம்பித்த நடிகர் எம்.ஜி.ஆர், தி.மு.க -வில் இருக்கும் போது வகித்த பதவி எது?
- கருணாநிதி இரண்டாம் முறையாக முதலமைச்சர் பதவி ஏற்றபின் மாநில சட்டப் பேரவையில் கொண்டு வந்த “மாநில சுயாட்சி” தீர்மானம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
- 1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளான தி.மு.க அதை மறந்துவிட்டு 1980-பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. வெற்றி பெற்றதா?
- தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது 1983 ஆகஸ்டில் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து என்ன செய்தது?
- எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு 1989 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடித்தாலும் 1991-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டது. என்ன காரணத்தை மத்திய அரசு கூறியது?
- 1991-ம் ஆண்டு தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க.விற்கு 2 இடங்களே கிடைத்ததற்கு காரணம் என்ன?
- தி.மு.க தனது அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடன் முதன் முதலில் கூட்டணி வைத்த ஆண்டு எது?
பதிலளிக்க:
– வினவு செய்திப் பிரிவு
19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளின் மிகப்பெரிய மோசடி என்றால் அது ‘திராவிடம்’ தான். இந்த ‘திராவிடத்தை’ பயன்படுத்தி ‘வினாடி வினா’ வேறு. கஷ்ட காலம்
நீங்கள் நடத்திய தமிழ் மக்கள் இசை விழா தி.மு.க மேடையில் ஏன் நடந்தது.?
உங்கள் பாடகர் கைதாகி. விடுதலை ஆனதும் கருணாநிதி காலை நக்கியது ஏன்.?
இதற்கான பதில் அனைத்துப்பத்திரிக்கைகளிலும் உள்ளது.
Regarding Q 19 , assembly election was held in 1989 not in 1987. Please correct it.
நன்றி திப்பு, திருத்தி விட்டோம்.
பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் திராவிடத்தை ஆதரித்தனர்.
ஆரிய பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலே திராவிட வெறுப்புணர்வு அரசியல்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறு மதிப்பீடு செய்வதில் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டின் முதல்தர பல்கலைக்கழகத்தின் லட்சணமே இப்படி என்றால் மற்ற பல்கலைக்கழகங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. திராவிட இயக்க ஆட்சி எந்த அளவுக்கு குப்பையான, அராஜகமான ஆட்சி என்பதற்கு இது ஒரு உதாரணம். பல்கலைக்கழக தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களை வைத்து உயர் கல்வியும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என பல சமூக நீதி காவலர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள். பிளஸ் டூ மார்க் அடிப்படையில்தான் எம்பிபிஎஸ், பிஇ சேர்க்கை ஆகியன நடத்த வேண்டும் என ஒப்பாரி வைக்கிறார்கள். எங்கே போய் முடியும் என்பதற்கு இந்த ஊழல் ஒரு உதாரணம். மருத்துவத்துக்கு நடப்பது போல் பொறியியலுக்கும் நீட் மாதிரியான தேசிய அளவிலான தேர்வு தேவை. இல்லாவிட்டால் சமூக நீதி, ஏழை மக்களின் நலன் என்னும் பெயரில் தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியின் தரம் இப்பொழுது இருப்பதை விடவும் குப்பைமேடாக ஆகிவிடும்.