கேரளாவுக்கு 700 கோடி நிதியுதவி செய்த ஐக்கிய அரபு அமீரகம் ! கருத்துக் கணிப்பு

முசுலீம்களும், கிறித்தவ மக்களும் கணிசமாக வாழும் கேரளாவிற்கு நிதியுதவி செய்யக் கூடாது என ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் விஷம் கக்கியது வேறு இவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தி விட்டது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக, முதலமைச்சர் பினரயி விஜயன்  தெரிவித்துள்ளார். உருக்குலைந்த கேரளாவை மீண்டும் கட்டியமைக்க இந்த நிதி உதவி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 20 இலட்சம் இந்தியர்கள் பணியாற்றுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள் தொகையில் 30% ஆகும். இதில் கணிசமானோர் கேரள மக்கள். “ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் கேரள மக்கள் எப்போதும் பங்காற்றி வருகின்றனர்” என்றும் கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் அமீரகத்தின் துணை அதிபர் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து டிவிட்டரில் “Rs 700” எனும் ஹேஷ் டேக் பிரபலமாகியுள்ளது. இந்திய மக்கள் பலரும் அமீரக நாட்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.-வினர் நிலையோ இஞ்சி தின்ற டி ரெக்ஸ் டயனோசர் கதையாக மாறிவிட்டது.

ஏனெனில் மோடி கடைசியாக கேரளாவில் விமானத்தில் பாதுகாப்பாக பறந்து தரையிறங்கிய போது 500 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்திருந்தார். பினரயி விஜயன் கேட்டதோ 2,000 கோடி ரூபாய். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னர் அளித்த 100 கோடி ரூபாயைச் சேர்த்தாலும் மொத்தம் 600 கோடி ரூபாய்தான். இதை ஒரு வளைகுடா நாடு அதுவும் முஸ்லீம் பாய் நாடு விஞ்சியதை சங்கி டயோனசர்களால் தாங்க இயலவில்லை. கேரளாவில் தயிர் சாதம் வழங்கும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் புகைப்படங்களை பிரதமர் மோடியே விளம்பரப்படுத்தினாலும் இவர்களின் விளம்பர மோசடி செல்ஃப் எடுக்கவில்லை. உலகமும், இந்திய மக்களும் கேரளாவின் துயரத்தில் இயல்பாக பங்கெடுத்து வரும்போது இவர்கள் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஊர்வலத்தில் சுமார் நான்கு கி.மீட்டரை மோடி நடந்தே வந்தாராம். ஆனால் கேரளாவில் அவர்  கால் பாதத்தில் கூட வெள்ள நீர் படவில்லை.

முசுலீம்களும், கிறித்தவ மக்களும் கணிசமாக வாழும் கேரளாவிற்கு நிதியுதவி செய்யக் கூடாது என ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் விஷம் கக்கியது வேறு இவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தி விட்டது.

போதாக்குறைக்கு இப்போது ஒரு ‘பாய்’ நாடு 700 கோடியை அளித்து முகத்தில் கரி பூசிவிட்டது!

கேள்வி: கேரள மக்களை நேசிப்பது 600 கோடி ரூபாய் பா.ஜ.க. மோடி அரசா, 700 கோடி ரூபாய் வளைகுடா ‘பாய்’ அரசா?

பா.ஜ.க. மோடி அரசு
வளைகுடா பாய் அரசு

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. ஆர் எஸ் எஸ் பிஜேபி என்பது இந்தியாவிற்கு பிடித்த சனி , சீக்கிரம் அழித்து ஒழிக்கப்படவேண்டியது நமது கடமை , விடுதலை போராட்டத்தின் பொது சொந்த மக்களுக்கு எதிராக (பிரிட்டாஷாருக்கு சாமரம் வீசினார்கள்) செயல்பட்டார்கள் , பல கலவரம் செய்து சொந்த நாட்டு மக்களை கொன்றார்கள், பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் , ஜி எஸ் டி மற்றும் பணமதிப்பிழப்பால் நாட்டை குட்டி சுவராக்கினார்கள் , பத்தாததுக்கு கொலை கொள்ளை பசுவின் பேரால் கொலை கற்பழிப்பு என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார்கள் , நீட்டை கொண்டுவந்து தமிழர்களை காவு வாங்கினார்கள், இப்பொழுது கேரளாவை குறை வைத்து செயல்படுகிறார்கள்.

    ஹைட்ரோகார்பன் , நியூட்ரினோ , பசுமைவழிச்சாலை என்று அடுத்த அழிவு திட்டம்

    வியாபம் ஊழல் , சவப்பெட்டி ஊழல் , பணமதிப்பிழப்பு ஊழல் , கார்ப்பெட்டு கொள்ளையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல், அவர்களின் கடனை தள்ளுபடிசெய்தல் , அதானி அம்பானிகளுக்கு அடிமை சேவகம் செய்வது என்று வரலாறு முழுக்க மனித குல விரோத செயல்களுக்கு சொந்தக்காரர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க