கேரளாவில் பொழிந்த கடும் மழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கும், பெரும் நிலச்சரிவும் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து நிராதரவாக நிற்கின்றனர். பலரும் உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் மீனவர்களும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமே கேரள மக்கள் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், தமது வெறுப்பரசியலை கேரளத்தில் நிகழ்த்தியது மோடி அரசு. இரண்டு மாவட்டங்கள் தவிர பிற அனைத்து மாவட்டங்களும் கடுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு முதலில் நிவாரணத் தொகையாக வெறும் 100 கோடியை மட்டுமே ஒதுக்கியது மோடி அரசு. பின்னர் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழும்பிய பின்னர் கூடுதலாக ரூ.500 கோடியை மட்டும் ஒதுக்கியிருக்கிறது. ஆனால் கேரளத்தின் தேவையோ மிகவும் அதிகமானது.

இது ஒரு புறமிருக்க, மற்றொருபுறத்தில் சங்கிகளின் விசக்கொடுக்குகள் சும்மாயிருக்கவில்லை. ஹரி பிரபாகரன் என்ற சங்கி ஒருவர் டிவிட்டரில் சபரி மலை ஐயப்பன் கோவிலின் மூழ்கிய படத்தைப் போட்டு, ”சபரிமலை அய்யப்பன் கோவில் – எந்த சட்டமும் கடவுளுக்கு மேல் இல்லை. நீங்கள் அனைவரையும் உள்ளே அனுமதித்தால், அவர் அனைவரையும் புறக்கணிப்பார்” என்று பதிவிட்டார்.

குருமூர்த்தி - மனுஷ்ய புத்திரன் ஊழியின் நடனம்
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கான வழக்குதான் பெருவெள்ளத்திற்குக் காரணமாம்

அதாவது, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை முன்வைத்து அதன் கோபத்தால் ஐயப்பன் ஒட்டு மொத்த மக்களையும் புறக்கணித்து மழை வெள்ளத்தை ஏற்படுத்திவிட்டார் எனக் கூறியிருக்கிறார்

இதனை மீள்பதிவிட்டு கூடுதலாக தமது ’பொன்னான’ கருத்துகளையும் தமது டிவிட்டர் பதிவில் பின்வருமாறு உதிர்த்துவிட்டிருந்தார் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், ஆடிட்டர் குருமூர்த்தி.

“சபரிமலையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கும் இந்த வழக்கிற்கும் (சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவது குறித்த வழக்கு) ஏதேனும் தொடர்பு உண்டா என்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்க்க விரும்பலாம். இலட்சத்தில் ஒரு வாய்ப்பாக ஒரு தொடர்பு இருந்தாலும், மக்கள் இந்த வழக்கில் ஐயப்பனுக்கு எதிரான தீர்ப்பு வருவதை விரும்பமாட்டார்கள்”

இந்த மழை வெள்ளத்திற்கும் இந்த வழக்கிற்கும் இருக்கும் ’சம்பந்தத்தை’ உணர்ந்து நீதிபதிகள் பக்குவமாக செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கிறாராம் இந்த அரை டவுசர்.

இது சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்தைப் பெற்றது. சாதாரண நபர்களும் கூட காவிக் கும்பலை காரி உமிழ்ந்தனர். இந்நிலையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டார்.

Abdul Hameed Sheik Mohamed

ஊழியின் நடனம்
……………………………………………….
மனுஷ்ய புத்திரன்
…………………………………………………

தேவி
உன் விடாய் குருதி
ஊழிக் காலங்களை
உருவாக்க வல்லதா?

அது
ஊர்களையும்
நகரங்களையும்
அழிக்க வல்லதா?

அது
ஆலயங்களையும்
தெய்வங்களையும்
நீரில் மூழ்கச் செய்ய வல்லதா?

அது
பாதைகளை அழித்து
வழிகளை மறைத்து
தனித் தீவுகளை
உருவாக்க வல்லதா?

தேவி
உன் விடாய் குருதி
நிலத்தைக் கடலாக்கும்
கடலை ஊராக்கும்
மகா சக்தியா?

அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்
எந்த அணையிட்டும் தடுக்கவியலாத
இயற்கையின் ஊழி நடனமெனெ
உனது ஒரு சொட்டு விடாய் குருதியை
அவர்கள் அஞ்சுகிறார்கள்

தேவி
உன் குருதியிலிருந்தே
உயிர்கள் பிறக்கின்றன
உன் குருதியிலேயே
உயிர்கள் தஞ்சம் கொள்கின்றன

உன் விடாய் குருதியை
அசுத்தம் என்றார்கள்
தீட்டு என்றார்கள்
உன் குருதியின் வெள்ளம்
இந்த நிலத்தின் மீதிருக்கும்
அத்தனையையும்
முழுமையாக கழுவிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு தூய்மை
எங்களுக்கு வேண்டாம்

தேவி
சற்றே ஓய்வுகொள்
இது கருணைக்கான வேளை

18.8.2018
பகல் 2.15
மனுஷ்ய புத்திரன்

மனிதர்களைப் படைத்தருளும் தாய்மையின் மாத விடாய்க் குருதிதான், இத்தனைப் பேரிடருக்கும் காரணமோ, அந்த தாய்மையை தேவியாக தொழுபவர்கள் தீட்டு, அசுத்தம் என்று களங்கப்படுத்தியவர்கள், அந்தக் களங்கத்தின் அத்தனை அழுக்கையும் இயற்கைத் தாய் கழுவுவதாக உருவகப் படுத்தி கவிதையை எழுதியிருக்கிறார், மனுஷ்யபுத்திரன்.

மக்கள் அனைவரும் கேரளாவின் துயரில் பங்கெடுக்கும் போது காவி பயங்கரவாதிகளுக்கு அது கவலையை ஏற்படுத்துகிறது. முடிந்த மட்டும் கேராளாவைக் கொச்சப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் முயல்கிறார்கள். அதனுடையை வெளிப்பாடே ஐயப்பன் பழிவாங்கினார் எனும் கருத்து. அதற்கு மேல் எச்ச ராஜா களத்திற்கு வருகிறார். மனுஷ்யபுத்திரன் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தியதாக கிளப்பி விடுகிறார்.

குருமூர்த்தி - மனுஷ்ய புத்திரன் ஊழியின் நடனம்
எச். ராஜா

அவரது முகநூல் பக்கத்தில், மனுஷ்யபுத்திரனை முசுலீம் மதவெறியன் என்றும், பெண்ணை தேவி என்று குறிப்பிட்டு மனுஷ்யபுத்திரன் எழுதியதை இந்து பெண் தெய்வங்களைப் பற்றி எழுதியதாகவும் திரித்துக் கூறி, சக சங்கிகளை காவல்நிலையங்களில் புகார் கொடுக்கக் கூறியிருக்கிறார். கூடுதலாக #ArrestManushiyaPutran என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டிருக்கிறார்.

H Raja

 தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன் இந்துக்களின் பெண் தெய்வங்களை இழிவாக பேசிய போது இந்துக்கள் சரியாக எதிர்வினையாற்றாத காரணத்தால் இன்று திமுக வின் ஊடக முகம் அப்துல் ஹமீது என்கிற முஸ்லிம் மதவெறியன் மனுஷ்யபுத்திரன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டு இந்து பெண் தெய்வங்களை இழிவு படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே இந்து பெண்கள் அணியும் புனிதமான தாலியை இழிவு படுத்தியவர். இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய இவருக்கு எதிராக இந்து உணர்வாளர்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் செய்யவும்.

H Raja

#ArrestManushiyaPutran

இதனைத் தொடர்ந்து சங்கிகள் மனுஷ்யபுத்திரனின் முகநூல் பக்கத்திலும் அவரது செல்பேசியிலும் ஆபாசமாகப் பேசியும், கொலை மிரட்டல்களைவிடுத்தும் வந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் குறித்தும் ஆபாச வசவுகள் குறித்தும், ” என்னை அவர்கள் கொல்ல விரும்புகிறார்கள் ” என்ற சிறு பதிவு ஒன்றை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மனுஷ்ய புத்திரன். மேலும் தமது பாதுகாப்புக்கான பொறுப்பு தமிழ்ச் சமூகத்திற்கானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

 Abdul Hameed Sheik Mohamed

என்னை அவர்கள் கொல்ல விரும்புகிறார்கள்
…………….
எனது கவிதையில் எந்த இந்து தெய்வம் குறித்தும் எந்த நிந்தனையும் கிடையாது. அது பெண்ணின் பேராற்றல் குறித்த கவிதை என்பதை எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவார்கள்.என் வாழ்நாளில் எவருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் எதையும் நான் எழுதியதில்லை.

நேற்று ஹெச்.ராஜா எனக்கு எதிராக அவதூறாக ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தூண்டிய வன்முறை காரணமாக ஏராளமான கொலைமிரட்டல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேரடியாக குறுஞ்செய்திகளாக ஆபாசச்செய்திகள், கொலை மிரட்டல்கள் அனுப்பப்படுகின்றன. எனது அலைபேசி எண் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இடையறாத தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து ஹெச்.ராஜா முயன்றிருக்கிறார். அவர் எனக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் இந்த பொய்யான பிரச்சாரத்தின் மூலம் எனக்கு நேரிடக்கூடிய எந்த அபாயத்திற்கும் ஹெச்.ராஜாவே பொறுப்பு.

ஜனநாயகத்திற்காகவும் கருத்துரிமைகாகவும் தொடர்ந்து போராடி வந்திருப்பவன் என்ற முறையில் எனது பாதுகாப்பிற்கான பொறுப்பை தமிழ்சமூகத்திடமே ஒப்படைக்கிறேன். ஜனநாயக சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் மற்றொரு நிகழ்வு இது.

மனுஷ்ய புத்திரன்

 மேலும், இது குறித்து சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து புகார் மனுவும் கொடுத்துள்ளார்.

Abdul Hameed Sheik Mohamed

இன்று மதியம் காவல்துறை ஆணையரை சந்தித்து எனக்கு எதிராக எச்.ராஜாவின் தூண்டுதலின் பெயரில் சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசி வாயிலாகவும் நேற்று மதியத்திலிருந்து தூண்டப்படும் வன்முறை மற்றும் கொலைமிரட்டல்கள் குறித்து புகார் அளித்தேன். சமூக வலைதளங்களில் மற்றும் குறுஞ்செய்திகளில் எனது உடல் நிலை குறித்தும் என்னை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் விதமாகவும் எனக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையிலும் எழுதபட்ட மிரட்டல் பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்கள் மற்றும் நேரடியாக தொலைபேசியில் மிரட்டல் விடுப்பவர்களின் எண்கள் ஆகிய ஆதரங்களுடன் என் புகாரை அளித்தேன். காவல்துறை ஆணையர் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மனுஷ்ய புத்திரன்

இது குறித்து பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினரும் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Vijayasankar Ramachandran

மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதையில் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி விட்டார், அவர் ஒரு முஸ்லிம் மதவெறியன், அவருக்கு எதிராக எல்லா காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கவும் என்று சங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். Arrest Manushyaputhiran என்கிற ஹாஷ்டாக் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் எச். ராஜா. தெய்வத்தின் பெயரைச் சொல்லி பேரிடரில் சிக்கித் தவிக்கும் ஒரு மாநில மக்களை இழிவுபடுத்தும் இந்தக் கூட்டம், மனுஷ்யபுத்திரனுக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி மிரட்டல்களையும் விடுத்துக் கொண்டிருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#standwithmanushyaputhiran

 Keetru Nandhan

சங்கிகளுக்கு எதிராக சளைக்காமல் கருத்துச் சண்டை நடத்துபவர்… சங்கிகளால் எதிரியாகப் பார்க்கப்படுபவர்…

இந்த ஒரு புள்ளி போதும், நாம் மனுஷ்யபுத்திரன் பக்கம் நிற்க…
கல்புர்கி, கவுரி லங்கேஸ் சம்பவங்களின் தொடர்ச்சியை தமிழகத்தில் எதிர்பார்க்கிறார்கள் ‘எச்சை’கள்.

திராவிடம், தமிழ்த் தேசியம், கம்யூனிசம் என நமக்குள் ஆயிரம் சகோதரச் சண்டைகள் இருக்கலாம். அதற்காக ஒரு நாளும் காவிகளின் கை ஓங்க அனுமதித்துவிட‌க் கூடாது!! #stand_with_manushyaputhiran

 Sugumaran Govindarasu

கேரள மழை, வெள்ளப் பாதிப்புக்குச் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுதான் காரணமென ஆடிட்டர் குருமூர்த்தி எழுதினார். இதற்குப் பலரும் எதிர்வினை ஆற்றினர். அந்த வகையில் எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அவர் மீது இந்துக் கடவுளை அவமதித்துவிட்டார் என்றுக் கூறி காவல்நிலையங்களில் புகார் கொடுக்கும் செயலில் இறங்கியுள்ளனர் இந்துத்துவவாதிகள். இதன் பின்னணியில் எச்.ராஜா உள்ளார். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டிப்போம்.

Anush

இந்தியாவின் தேசிய பேரிடர் எச்.ராஜா அவர்கள். I Stand with Manusya Puthiran.

கே. என். சிவராமன்

‘ஊழியின் நடனம்’ கவிதைக்காக கவிஞர் மனுஷ்யபுத்திரனை Abdul Hameed Sheik Mohamed மதவாதிகள் சிறைக்கு அனுப்ப வேண்டும்… கொலை செய்ய வேண்டும்… என குரல் உயர்த்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மனுஷுக்கு ஆதரவாக பலரும் நிலைத்தகவல் பதிந்து வரும் நிலையில் கவிஞர் சுகுமாரன் Sukumaran Narayanan ‘தேவி மகாத்மியம்’ என்ற கவிதையை எழுதி தன் சுவற்றில் பதித்திருக்கிறார்.

இதனையடுத்து பெருமாள்முருகன் பெருமாள்முருகன் ‘கவிஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு ‘தேவி’ கவிதை எழுதி ‘ தேவி கவிதை இயக்கம்’ தொடங்கலாமா? நூறு இருநூறு என எழுதி எழுதி மேற்செல்வோமா?’ எனக் கேட்டிருக்கிறார்.

நல்ல யோசனை. கவிஞர்கள் களமிறங்கி மதவாதிகளை இந்த வகையிலும் அலற வைத்தால் என்ன?

Mahendhiran Kilumathur

எந்தப் பெரியாரின் வரலாற்றை ஒழிக்க முயன்றீர்களோ அவரை நாங்கள் தூக்கிச் சுமந்தோம், எந்த அண்ணாவை தேசத்தை பிரிக்க வந்தவர் என்று பிரச்சாரம் செய்தீர்களோ அவரை நாங்கள் எங்கள் அறிஞர் ஆக்கினோம், எந்தக் கலைஞரை அழிக்க முயன்றீர்களோ அவர்களைத்தான் நாங்கள் எங்கள் அரக்கனாக்கினோம், எல்லாம் நீங்கள் கற்றுக் கொடுத்த மனு நீதிப் பாடம். நாங்கள் நீங்கள் இல்லை என்பதற்காகவே நாங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் முகத்தில் உதைத்துச் சொல்வோம்.

இது எங்களின் நிலம்.
புத்தம், இந்து, இஸ்லாம், கிருஸ்த்துவம் எல்லாம் இங்கே இல்லை …மனுசபுத்திரன்கள் மட்டுமே உண்டு.

ஆண்டாள் விவகாரத்திலேயே பொய்களின் மூலம் கலவரத்தை உண்டாக்க முயன்றனர் எச்சை ராஜாவும் அவரது சங்க பரிவாரங்களும். அதில் பலத்த பதிலடி கொடுக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வாலை நீட்டிக் கொண்டு மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறது காவிக் கும்பல். ஒட்ட நறுக்க வேண்டியது நமது பொறுப்பு.

  • வினவு செய்திப் பிரிவு

23 மறுமொழிகள்

  1. எச் ராஜாக்கும் வேற வேலை இல்லை, மனுஷ்ய புத்திரனுக்கும் வேற வேலை இல்லை. சமூகத்தளங்களில் கண்டதையும் எழுதி தேவையில்லாமல் மக்களிடையே பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்.

    இதை தொலைகாட்சிகள் விவாதங்கள் என்ற பெயரில் மேலும் சிக்கலாக்குகிறார்கள். இவர்கள் எல்லாம் வாயை மூடிட்டு இருந்தாலே அனைத்தும் சரியாகப் போகும்.

    • Mr.கிரி ஒன்று வலதாக இருங்கள் அல்லது இடதாக இருங்கள் மைய்யமாக நடிக்க வேண்டாம்.உங்களது மறுமொழி எச்ச.ராஜாவை மறைமுகமாக ஆதரிக்கிறது.

      • இதுல என்னங்க முரளி மையமாக நடிக்க இருக்கு!

        இரண்டு பேரையுமே எனக்கு பிடிக்காது. சமூகத்தளங்களில் இவர்களால் ஏகப்பட்ட பிரச்சனை, தேவையற்ற விவாதங்கள்.

        எச் ராஜாவை ஆதரிக்கிறேன்னு சொன்னீங்க பாருங்க.. ஏங்க இப்படி.. 😀

        • உங்கள் கருத்துலிருந்தே எனது விமர்சனம் நண்பரே உங்களுக்கு மனுஷ்ய புத்திரன் மீது விமர்சனம் இருந்தால் அதை தெளிவாகவும் கடுமையாகவும் பதிவு செய்யலாம்.ஆனால் எச்ச.ராஜாவையும் (பார்ப்பன பாசிச பயங்கரவாதி ) மனுஷ்ய புத்திரனையும் ஒரே தரத்தில் வைத்து விமர்சனம் செய்தது சரியல்ல.மேலும் விவாதிக்கலாம் . நன்றி நண்பரே 🙏

  2. மனுஷ்ய புத்திரன் ஹிந்து பெண் தெய்வங்களை பற்றி இழித்து கவிதை எழுதியது தவறு தான் ..

  3. இந்த கவிதை திறனை டுபாக்கூர் புத்திரன் இசுலாமிய ஜாமத்திலோ மேரி சர்ச்சில் செய்ய வேண்டியது தானே.ஏன் எப்பொழுதும் ஹிந்துக்கள் சம்பத்தை மாகவேய இவர்கள் கல் எறிகிறார்கள்.சிறு பான்மையர் அவ்வாறு இல்லாமல் மதவெறியை , மத மாற்றத்தை ஊக்கு வைப்பது யாரையும் அதுவும் பெரும்பாண்மை சமுதாயத்தை தூண்டும் பாகிஸ்தானில் இது போன்று ஒரு வரிகள் அங்கு எழுத பட்டாள் தத்தி புத்திரனுக்கு, கையும் போகும். வாயும் உடையும்

    • ராஜா என்று பெயர் வைத்ததால் எச்ச.ராஜா மாதிரியே எழுதுறீங்க.
      மனுஷ்யபுத்திரன் இந்த நாட்டின் பூர்வ குடிமகன்.அவர் ஏன் போய் பாகிஸ்தானில் தனது கவிதைகளை எழுதவேண்டும்? வேறு மதம் என்று அவருக்கு முத்திரை குத்துகிறீர்கள்.சரி அப்துல் கலாம் அவர்கள் இந்துமதத்தை ஆதரிக்கும் போது அவர் இஸ்லாமியர் என்று தெரியாதா? அது உங்களுக்கு இனிமை தந்திருக்கும்.
      சரியான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப் படவேண்டியவை.தங்களது மறுமொழி ஆத்திரமாக வேண்டும் உள்ளது.வெறும் ஆத்திரம் அறிவை அழித்துவிடும்.
      பின்குறிப்பு: மனுஷ்ய புத்திரன் டூபாக்கூர் கவிஞர் என்பதை விளக்கினால் வினவு வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

    • பாஸ் நீங்க ஏன் தேவை இல்லாமல் பாகிஸ்தானை இங்கே கொண்டு வருகிறீர், இஸ்லாத்துக்கு எதிராக பல கருத்துக்களை மனுஷ்யபுத்திரன் சொல்லி கண்டனத்து உள்ளாகியுள்ளனர்

    • பாரதியார் “தில்லி துருக்கர் செய்த வழக்கமடி முகமலர் மறைத்தல்” என்று எழுதினாரே ? அதை அவரது கருத்து சுதந்திரம் என்றுதானே அன்றும் இன்றும் இஸ்லாமியர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள்.
      பாரதியார் பிறப்பால் என்ன மதம் என்று அனைவருக்கும் தெரியும்.

  4. இரண்டு தகவல்கள்:
    முதலில்
    1. மனுஷ்ய புத்திரன் அந்த கவிதையை பதிவிடவில்லை. அவருடைய “அட்மின்” அவருக்கு தெரியாமல் பதிவிட்டுள்ளார்.
    அதற்கு “பரிகாரமாக” அவருடைய அட்மினை அவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
    இது குறித்த செய்தி தினத்தந்தியில் “எட்டாம்” பக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது.
    இரண்டாவது மற்றும் இறுதியாக
    2. ஐயப்பன் ஒரு கள்ளக்குழந்தை ( illegitimate child – அம்மையப்பனுக்கும் ஆயர்குடி கண்ணனின் பெண் அவதாரமான மோகினிக்கும் “தகாத உறவில் பிறந்தவன்” ) ஆவான். ஹிந்து மதப் படி கள்ளக்குழந்தைகளுக்கு கல்வியுரிமை, கொள்ளிபோடும் உரிமை, சொத்துரிமை, பெண்களை விலக்கி வைக்கும் “தீட்டுரிமை” என எதுவும் கிடையாது.
    எனவே ஹிந்து மதப் படி ஐயப்பன் கன்னிப்பெண்களை அவமதிக்க உரிமைற்றவன்.
    எனவே பெண்களை இழிவுபடுத்தும் “தீட்டுரிமை” இல்லாத ஐயப்பனை இழிவுபடுத்துவது, நல்வழியில் பிறந்த ஹிந்துக்களை இழிவுபடுத்தும் செயல் ஆகும்.

    பி.கு: தமிழ் “கலைஞர்”களின் புகழ் பாடும்
    திருச்சிக் கவிஞரே புனைப்பெயரை
    தமிழல்லாமல் வடமொழியில் வைத்திருப்பதேனோ?
    தெள்ளுதமிழில் “மாந்தன்மகன்” என மாற்றிக்கொள்வீராக.

  5. RSS பா.ஜ.க. கும்பல் தமிழகத்தில் கௌரிலங்கேஷ், கல்புர்கி,… போல படுகொலைகளை நிறைவேற்ற கடுமையாக முயற்சி செய்கிறது.அவர்களால் எந்தவிதத்திலும் வெற்றி பெறமுடியவில்லை என்று நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
    ஜனநாயக சக்திகள் ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.உதாரணமாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஐக்கியத்திற்க்கான முயற்சியை தொடர்ந்து செய்வதை அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிக்கவேண்டும்.அது ஒன்றே எதிரிகளை வீழ்த்த வழி.

  6. ஐயப்பன்-பெண் பக்தைகள், இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கும் நீதி வழங்கியவர்க்கும் தண்டனை இல்லாததே கடவுளுக்கும் கேரள இயற்கை சீற்றத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெளிவு.
    இயற்கை சீற்றம் என்பது அது தன்னை சமபடுத்திக் கொள்வதற்கான ஏற்பாடே தவிர வேறொன்று இல்லை. இந்தச் சீற்றம் 100 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட போது எந்த மனித (தற்காலம் போன்று) தவறு காரணமாயிற்று!

  7. பரிசாேதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதால் தான் இப்படி நடக்கிறது …ஒரே ஒரு முறை தக்க பரிசாேதனைக்கு அனுப்புவார்களா …?

  8. தேவியின்ஒருதுளிகுருதி தீட்டாகுமோஎன்றது குருமூர்த்தி ,
    ராஜாக்களால்விவாதபொருளானது! உடலில்மற்ற இடங்களில்வந்தால்இரத்தம் பிறப்புருப்பில்வந்தால் தீட்டா? உன்சொல்லில்சொல்கிறேன் தீட்டின்றிபோனால் மனிதன் விரைவில் தீர்ந்து போவான். உன்நாளைய அய்யனுக்குஅபிஸேகம்செய்ய ஆளின்றிபோகும்அகன்டபாரதகனவும்அனாதையாய்திரியும். தீட்டுகாலத்திலும்அய்யப்பனை பெண்கள் தீண்டவேண்டும் ஒருவேளைதீட்டுபட்டால்தேசத்தை மூழ்கவைப்பான் என்றால் தீட்டானவர்கள்துணைக்கொண்டு கேரள தேசத்தைதிரும்பமீட்போம்! நமக்கு கையில்பிறந்தவனைவிட உலகைகருத்தறித்தறிக்கவைப்பவளே முக்கியம்! தீட்டுநல்லது!

  9. Islamiya thozhugai/palli idangalil pengalukku anumadhi illai. Islamiya samoogathil pengalukku endha urimaiyum illai. Kothadimai pola thaan vaazhgirargal. Adhellam manushya puthiranukku kavidhaiya ezhudha thonaliyo? Aambalaiya irundha eppadi oru kavidhai ezhudhuda paarkalaam.

  10. தேவி கவிதை மனுஷ்ய புத்திரன் ஆதரவு கூட்டமைப்பு…..
    Boss( எ)
    பாஸ்கரன்.8531028728

    தேவி….

    மோகினி மைந்தனுக்கு
    உன்
    விடாய் குருதியின்
    பயம் ஏன்?

    ஐயப்பன்
    என்றால்
    கருணை என்ற
    இவர்களே
    ஏன்?🤔
    ஐயப்பன்
    கொலை செய்கிறான்
    என்கிறார்கள்….

    தமிழ்நாட்டு
    கருவறைகளில்
    பெண்களை
    தேவநாதன்கள்
    அனு(பவி)(மதி)க்க
    கடவுள் கண்களை
    மூடிக் கொள்கிறாரா?
    சிவ…சிவா…

    நித்தியானந்தங்களின்
    ரஞ்சித மலர் பஜனைகள்
    குருமூர்த்தி
    குருகுலதின் அனுஷ்டான யோகங்களா?

    இங்கெல்லாம்
    பெண்களின்
    யோனிக்கு
    புனித யாகம்
    நடத்துகிறதோ?
    பூணூல் கூட்டங்கள்…

  11. முதலாவது விஷயம் என்னவென்றால், “சபரி மலையில் பெண்கள் நுழைய அனுமதிகேட்டு நீதிமன்றத்தை அணுகியதால் ஐயப்பனுக்கு ஏற்பட்ட சீற்றத்தின் விளைவே இந்த கேரள வெள்ள பேரிடர்” என்ற
    கடைந்தெடுத்த ஆணாதிக்க உளறலின் எதிர் வினையே மனுஷ்ய புத்திரனின் கவிதை.
    மனுசியபுத்திரன் அந்த கவிதையில் எந்த ஹிந்து கடவுளின் பெயரையும் குறிபிடவில்லை.மழையை பெண்ணாக உருவக்கிதே எழுதியுள்ளார்.
    பெண்மையை இயற்கையின் பேராற்றல் என்று தன் கவிதையில் புனைவதன் மூலம் , அவளை அசுத்தம் என்று இழிவு செய்பவர்களுக்கு சரியான எதிர்வாதம் செய்கிறார். அதேவேளையில் பெண்சமூகத்தை உயர்வாக சித்தரிப்பதன் மூலம் அவர்களை தன்னம்பிக்கை கொள்ள செய்கிறார்.
    மனுஷ்யபுத்திரனின் (அப்துல் ஹமீது ) இயற்பெயரை தோண்டி எடுத்து அவரை முஸ்லீம் என்று முத்திரை குத்துகிறவர்களுக்கு என் கேள்விகள் சில ..
    ஒரு முஸ்லீம் எப்படி ஹிந்து சமயத்தில் உள்ள பெண் அடிமைத்தனத்தை
    கேள்வி கேட்கலாம் என்பதே உங்களின் இந்த ருதரத்தாண்டவத்திற்கு
    மூலம். (நாம் கவிஞர்களை மதம் சாதி என்று பார்க்கவில்லை.
    அப்படி வாதம் செய்பவர்களை மடக்கவே வேறு வழியின்றி இப்படி கேள்வி கேட்கவேண்டி இருக்கிறது. )
    பாரதியார் பிறப்பால் என்ன மதம் என்று அனைவருக்கும் தெரியும்.

    பாரதியார் “தில்லி துருக்கர் செய்த வழக்கமடி முகமலர் மறைத்தல்” என்று எழுதினாரே ? அதை அவரது கருத்து சுதந்திரம் என்றுதானே அன்றும் இன்றும் இஸ்லாமியர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள்.

    கவிஞர் சிற்பி பால சுப்பிரமணியன் ஓரு கவிதையில் அளவற்ற அருளானும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லா தலை குனிந்து கொண்டான் என்று எழுதினார் .
    சிற்பி பால சுப்பிரமணியன் நேரடியாக முஸ்லிம்களின் கடவுள் பெயரை குறிப்பிட்டர். அல்லா முஸ்லிம்களின் கடவுள். நபிகள் அவரின் தூதர்.
    ஆனால் மனுஸ்யபுத்திரன் மழையை பெண் உருவமாய் உருவகித்து எழுதியுள்ளார். நாட்டையும் ஆறுகளையும் பெண்களாய் தாயாய் உருவகம் செய்வது கவிதை மரபே. மழையை பார்த்து உன் கோபம் போதும் தாயே என்கிறார்.
    ஏன் கவிஞர் சிற்பி பால சுப்பிரமணியன் அப்படி எழுதினார்? எந்த சூழலில் அப்படி எழுதினார்? பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஓரு பெண் ராணுவ வீரர்களால் வல்லுறவு செய்யப்பட்ட போது அதை காண சகியாத அல்லா தலை குனிந்து கொண்டதாக குறிப்பிட்டார். அந்த கதை கவிதையை முழுமையாக படித்தவர்களுக்கே அது புரியும். அதில் அல்லாஹ்வை அவர் இகழவில்லை.
    வெறும் குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொண்டு அவரை தவறாக கருதுவது எப்படி தவறோ அப்படித்தான் மனுஸ்யபுத்திரனையும் குற்றம் சுமத்துவது.

    பிறப்பால் முஸ்லிம்களான காலம் சென்ற கவிஞர்கள் இன்குலாப் மற்றும் ரசூல் இஸ்லாத்தில் உள்ள பெண்ணடிமைதனத்தை தங்களின் கவிதைகளில் சாடி உள்ளார்களே? அதன் காரணமாக கடும் தொல்லைக்கு ஆளானார்களே?

    தஸ்லிமா நஸ்ரின் குறித்த இன்குலாப் கவிதை ஒன்றில்
    நூலாம் படைகளை துடைப்பம் துடைத்து விடும்
    சமவெளி காற்றில் பூக்கள் சிரித்திடும்
    இன்னமும் எங்கே அலைகிறாய் ?
    தீட்டிய ஆயுதமும் தினவெடுத்த ஆணாதிக்கமுமாய்…
    என்று கூக்குரல் இட்டாரே ?
    ரசூல் தன் கவிதையில்,
    ஒருவர்கூட பெண் நபி இல்லையே ?
    என்று கேள்வி எழுப்பியதற்காக தன் கிராமத்தில் (தக்கலை )
    இருந்து ஊர் விலக்கம் செய்யப்பட்டு கடும் இன்னல் அனுபவித்தாரே ?

    சாலமோன் பாப்பையா மச்வாதி கல்லறை குறித்து தன் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளாரே?

    கவிஞர் மு.மேத்தா பிறப்பால் ஒரு இஸ்லாமியர்தான்.
    “பர்தாவுக்குள் பர்தாவை மறைக்கும் பரக்கத்துக்கள்” என்று பெண்களின் வேதனையை உணர்வு பொங்க தன் கவிதையில் பதிவு செய்து உள்ளாரே?
    பிறப்பால் முஸ்லிம்களான கவிஞர்கள் இன்குலாப் , மு .மேத்தா மற்றும் ரசூல் ஆகியோர் மிக மிக தாங்கள் ஏற்றுக்கொண்ட இலக்கிய பணிக்கு நேர்மையாக தங்கள் மதத்தையே சுய ஆய்வு செய்து தத்தமது கவிதைகளை படைத்துளார்கள்.
    மனுஷ்யபுத்திரனும் தன் சமயத்தை சுய ஆய்வு செய்து கவிதைகளை படைத்துளார்கள்.

    கவிஞர்கள் எல்லோரும் நாடோடி பறவைகள்.
    அவர்கள் நாடு , மதம் என்ற எல்லைகளுக்குள் சிக்காமல் சிறகடிப்பவர்கள்.

    அவர்களுக்கு மனிதர்கள் முக்கியம். மனித உரிமைகள் முக்கியம்.

    நீ மனுசி நமது மானுடம் என்று கவிஞர் இன்குலாப் பெண்கள் குறித்து முழங்கியது அதனாலதான்.

      • அன்புள்ள நண்பர் முரளி அவர்களுக்கு ,
        என் கருத்துரையை படித்துவிட்டு பாராட்டியதற்கு நன்றி .
        நான் மணப்பாறையில் ஆரம்பப்பள்ளி படித்த நாட்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் என் வலைப்பூ கட்டுரையில்,
        பதிவின் URL http://saravananmetha.blogspot.com/2018/08/blog-post_24.html
        என் ஆசிரியை நூர்ஜகான் அவர்களை பற்றி குறிப்பிட்டு , அவரின் கவிதை எழுதும் ஆற்றலையும் இஸ்லாம் சமூகத்தின் தேச பக்தி திட்டமிட்டு மறைக்க படுவதையும் , சமூகத்தின் அனைத்து மதத்தினரோடும் நல்லுறவை பேண விளையும் அந்த சமூகத்தின் மாண்பையும் ஒரு நூலிழையாக தொட்டு காட்டி இருந்தேன்.
        அதில் மனுஷ்யபுத்திரன் ஒரு இஸ்லாமியர் என்று முத்திரை குத்தப்படும் மதவெறி கயமையையும் சாடியிருந்தேன்.
        அந்த பதிவை, என்னோடு தொழில் நுட்ப கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களின்
        நண்பர்களின் WHATSUP குழுமத்தில் பகிர்ந்தேன்.
        அதில் ஒரு பழைய நண்பர் மதவெறி நஞ்சை உமிழ , மிகுந்த கோபத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளானேன்.
        அதன் விளைவாக எழுந்ததே நீங்கள் படித்த கருத்துரை .
        இதை எழுதுவதற்காக,
        கவிஞர்கள் இன்குலாப் , மு.மேத்தா மற்றும் சிற்பி ஆகியோரது கவிதை நூல்களை பரணியில் இருந்து சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தேடி எடுத்தேன்.
        குறிப்பிட்ட அந்த கவிதை பக்கங்களை SCAN செய்து ஆதாரத்தோடு மதவெறிக்கு எதிர்வாதம் வைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
        பிறகு அப்போது இருந்த விவரங்களை மட்டும் கொண்டே அந்த கருத்துரையை வினவிலும் என் வலைப்பூவிலும் பகிர்ந்தேன்.
        இயற்கையின் பேராற்றல் பதிவின் URL http://saravananmetha.blogspot.com/2018/08/blog-post_27.html
        ஆதாரங்களாக சில விவரங்கள் கீழ்வருமாறு
        “ஊர்வலம் ” கவிதை தொகுப்பு – கவிஞர் மு.மேத்தா
        “சர்ப்ப யாகம்” கவிதை தொகுப்பு – கவிஞர் சிற்பி
        ” கூக்குரல் ” கவிதை தொகுப்பு – கவிஞர் இன்குலாப்

  12. இதில் விவாதிக்க என்ன இருக்கிறது. ஒரு மாநிலமே நீரீல் மூழ்கிறது.காப்பாற்ற வக்கற்ற அரசும் மத அமைப்புக்களும் பிரச்சனையைத் திசைதிருப்பித் தப்பித்துக் கொள்ளும் கேவலமான முயற்சி தான் ஐயப்பன் மழையை வரவழைத்தார் என்பதும் மனுஷ்ய புத்திரன் மேலான வன்மமும்.
    அந்தக் கவிதை அற்புதமானது.அதில் எந்த தப்பும் இருப்பது தெரியவில்லை ஆனாலும் அதை எழுதியவர் பிரசுரிக்க வில்லை.யாரோஇடையில் உள்ளவர் பிரசுரித்ததால் அவரை வேலையில் இருந்து தூக்கி விட்டோம் என்கின்றார்கள் இது உண்மையில் அபத்தமானது.
    நல்ல கவிதையை பிரசுரித்த அவருக்கு ஏன் இந்த தண்டனை.????

Leave a Reply to கிரி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க