டந்த ஜூலை மாதத்தில் ஓரிரு நாட்களில் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தவர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டத்தை வெளியிட்டால், அவருடன் இணைந்து அரசியலில் பயணிக்கத் தயாராக இருப்பதாகப் பேட்டியளித்தார் அண்ணாமலை.

வழக்கம்போல சங்கிகளும், ரஜினிகாந்தின் விசிலடிச்சான் குஞ்சு ரசிகக் கண்மணிகளும் அண்ணாமலையை ஜாக்கி வைத்துத் தூக்கிக் கொண்டாடினர். அண்ணாமலையோ, தாம் ‘நடுநிலைவாதி’ என்றும் எந்தக் கட்சியும் சாராதவர் என்றும் கூறி வந்தார். ஆனால் மோடியை மட்டும் பிடிக்குமாம்.

அண்ணாமலையின் ‘நடுநிலையை’ அலசி ஆராய்ந்து பிரித்து மேய்ந்து சமூக வலைத்தளங்களில் புட்டுப் புட்டு வைத்தனர் முற்போக்காளர்கள். இரண்டு மூன்று நாட்கள் பரபரப்பாகச் சென்ற இந்த விவகாரம் பின்னர் அத்தோடு அடங்கியது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியிடமிருந்து, அரசியல் கட்சி துவங்கும் செய்தி தன் காதில் வந்து தேனாகப் பாயும் என இலவு காத்த கிளியாகக் காத்திருந்த  ‘சூப்பர் காப்’ அண்ணாமலையின் காதுகளில் “எள்ளுவய பூக்கலையே” பாடல்தான் ரீங்காரமிட்டது. அதனைத் தொடர்ந்து பாஜக-வில் இணைந்துள்ளார் அண்ணாமலை.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ! அடுத்து என்ன ? | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை
♦ காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை !

நமது ‘நடுநிலை’ அண்ணாமலையைப் பற்றி ஒரு பார்வை பார்த்துவிடலாம். 2013-ம் ஆண்டு கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பதிவியேற்ற அண்ணாமலை, கடந்த 2019-ம் ஆண்டு வரை அங்கு பல்வேறு பகுதிகளில் போலீசு அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் போலீசு அதிகாரி பதவியிலிருந்து விலகி சொந்த ஊருக்குச் சென்று இயற்கை விவசாயம் செய்துவருவதாக பத்திரிகைகள் செய்தி தெரிவிக்கின்றன. சரி இயற்கை விவசாயம் செய்யும் ஐ.டி இளைஞர்கள் இருக்கையில் ஒரு ஐ.ஏ.எஸ். இருக்கக் கூடாதா ?

தனது பதவி விலகல் கடிதத்தில் பணியிலிருந்து விலகுவதற்கான காரணத்தைப் பற்றி குறிப்பிடுகையில், “கடந்த ஆண்டு கைலாஷ் மான்சரோவருக்கு நான் சென்றதுதான் எனது கண்களைத் திறந்தது. அது எனது வாழ்க்கையில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விசயங்களை மறுபரிசீலனை செய்ய உதவியது.” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.

பாபா திரைப்படத்தில், ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்று ’அருள்’ பெற்று வந்தது போல, அண்ணாமலையாரும் கைலாஷ் மான்சரோவருக்குச் சென்று “ஞானோதயம்” பெற்றிருக்கிறார். வந்த பின் சில மாதங்களில் பணியை உதறிவிட்டு இயற்கை விவசாயியாகி இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் தமிழக தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இயற்கை விவசாயி அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார்.

சட்டத்தைக் காக்கும் கடமையைத் தோள் மேல் ஏற்றி போலீசு அதிகாரியாக செவ்வனே பணிபுரிந்த அண்ணாமலையார், தற்போது தமிழகத்தைக் காக்க அரசியல்வாதியாக பரிணமித்துள்ளார். ரஜினி கட்சி துவங்குவார் என, பி.பி, சுகர் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு காத்திருக்கும் அவரது ரசிகக் குஞ்சுகளின் நிலைமையை உணர்ந்ததாலோ என்னவோ சட்டென முடிவெடுத்து பட்டென பாஜகவில் சேர்ந்திருக்கிறார் அண்ணாமலை.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திராவிட அரசியல் கட்சிகள் ஊழல் மிக்கதாக இருப்பதாலும், குடும்ப அரசியல் நீடிப்பதாலும், ‘பரிசுத்தமான’ பாஜக-வைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறியிருக்கிறார். “எனது கொள்கைகள் அவர்களுடன் ஒத்துப் போவதால், அவர்கள் இயற்கையாகவே எனக்கு இயைந்தவர்களாக இருக்கின்றனர்”  என்று கூறியிருக்கிறார்.

அதாவது இயற்கையாகவே சங்கியாக வாழ்ந்துவந்த அண்ணாமலை, இப்போது அங்கீகரிக்கப்பட்ட சங்கியாக மாறியிருக்கிறார். அபின் கடத்துபவனும், கலவரம் செய்பவனும் பாஜக-வில்! முன்னாள் போலீசு அதிகாரியும் பாஜகவில்! இப்போது ஒத்துக் கொள்வீர்களா ? பாஜக உண்மையிலேயே அனைவரையும் ‘அரவணைத்துச்’ செல்லும் கட்சிதான் என்று!

நந்தன்

செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்

9 மறுமொழிகள்

  1. கர்நாடகத்தின் சிங்கம், உடுப்பியின் சிங்கம் என பாராட்டப்பட்ட தொழில் நேர்த்தி மிக்க ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி தன்னைபாஜகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டிருப்பது விசனத்துக்கு உரியது. இந்தக் கட்டுரை ஆசிரியர் நொந்தன் என்பவர் விபரீதத்தை புரிந்து கொள்ளாமல் நக்கல் அடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து கடின உழைப்பின் மூலம் முன்னேறிய பலர் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையும் ஒழுக்கமும் கொண்டவர்கள் பாஜகவின் பக்கம் பார்வையை திருப்ப ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறி அல்ல. பாஜகவில் சேர்ந்ததன் மூலம் அடுத்தத் தேர்தலிலேயே அண்ணாமலை வெற்றி பெறுவார். பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் என்பதல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிலுமே நீண்டகால திட்டம் கொண்டவர்கள். தமிழ்நாட்டில் படித்தவர்கள் பண்பாளர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் திராவிட கட்சிகளின் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் அராஜகங்கள் ஆகியவற்றால் பெரும் வெறுப்படைந்து உள்ளார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் முற்போக்கு முகமூடி போட்டுக் கொண்டு இவர்களை திட்டுவதாலும் நக்கல் அடிப்பதாலும் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. இந்த செய்தி அச்சம் தரக்கூடியது. பாஜகவில் கிரிமினல்கள் இருப்பது உண்மை. ஆனால் திராவிட கட்சிகளில் கிரிமினல்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதுதான் பிரச்சனை.

  2. பெரியசாமி சார்…கட்டுரையாளர் நந்தன் அவர்களை நொந்தன் என்று அழைப்பது கண்டனத்திற்குரியது…அண்ணாமலையாரின் பாஜக அவதாரத்தை மக்கள் மன்றத்தில் மிகச் சரியாகவே அம்பலப்படுத்தியிருக்கிறார் நந்தன்…கட்டுரையைப் படிக்கும் போது..பாஜவை நினைத்து கோப உணர்ச்சிதான் சுட்டுகிறது…திருடனை திருடர் என்று அழைத்ததுவிட்டால் அது நக்கலாகி விடுமா என்ன? உண்மையில் உங்கள் பதிலின் இறுதி மூன்று வரிகள்தான் நக்கல்..முதலில் இந்துத்துவ திராவிட கம்யூனிச கொள்கைகளுக்கிடையேயான வேறுபாடுகளை அறிய முற்படுங்கள்…அண்ணாமலை வருகிறார் மக்களுக்கு ஆபத்து என்று மேல்ஸ்தாயில் அலறிவிட்டு கீழ்ஸ்தாயில் பாஜவை காப்பாற்றும் உங்களின் இந்த செயல்தான் உண்மையில் அக்மார்க் நக்கல்..அண்ணாமலையார்களை நாம் “பார்த்துக்கொள்வோம்”…பெரியசாமி அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்க மாட்டாரா என்ன?

  3. “அண்ணாமலையார்களை நாம் “பார்த்துக்கொள்வோம்”

    நீங்கள் பல ஆண்டுகள் பார்த்து கிழித்ததால் தான் மத்தியில் பாஜக இரண்டு முறை அறுதி மெஜாரிட்டி உடன் ஆட்சி மில் உள்ளது. இனி மாநிலத்தில் வர வேண்டியது தான் பாக்கி. வெட்டி பந்தாவுக்கு குறைச்சல் இல்லை.

  4. உங்கள் கூற்று உண்மைதான் பெரியசாமி சார்..நாம் பார்த்துக் கொள்வோம் என்பதில் உள்ள “நாம்”என்பதில் பெரியசாமி சார்உள்ளிட்ட பெருந்திரள் மக்கள் இணைந்து “நாம்” ஆகும் போதுதான் பாசிஸ்ட்டுகள் வீழ்த்தப்படுவார்கள்…அதுவரை மக்களை ஒரணியில் இணைக்கும் அவர்களை அரசியல் படுத்தும் போராட்டங்களே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்… உங்கள் மொழியில் இந்த நடவடிக்கைக்கு பெயர் வெட்டி பந்தா என்றால் இருந்து விட்டுப் போகட்டும்… இந்த “வெட்டி பந்தா”காரர்கள்தான் தங்கள் சக்திக்கேற்ப மக்களுக்காக அனுதினமும் களத்தில் நிற்கிறார்கள் என்பதையும் “வெட்டி பந்தா”துளியுமின்றி உங்களிடம் பகிர்வதில் மகிழ்கிறேன்…

  5. Periyasamy says that all members in Dravidian parties are criminals.Whether this man did the background check of all those members and who gave the license to him to be the inspection agent?Periyasamy is known for this type of sweeping statements.Let us ignore him.He is the type of person who will encourage fascism.There is no use in entering into debate with him.It will be sheer waste of time.He uses these columns to pour his vengeful hatred on dravidian parties.Dravidian parties,particularly DMK faced this type of unfounded criticism right from its birth in 1949.This type of criticism was used by it as manure for its gigantic growth.

  6. This is not 1949 gentlemen. Those grand old days with a strong party and tall leaders like annadurai are gone. Today it is the likes of udayanidhi stalin and you in the battle field. Your foe is very cunning. Your enemy is destroying the basic foundation of the old castle on which you are vigilant. Have day dreaming.

  7. Nothing can be done to our mighty organization.Instead of supporting this secular organization,you are glad at sabotaging efforts being made by the fascist forces.Do not under estimate Udayanidhi just because he is the son of Stalin.The present leaders are also following the ideal of old tall leaders. KURUKKUSAAL OTTADHEER

  8. இவர் காவல்துறை பணியிலிருந்து விலகி அரசியல் கட்சியில் சேர்ந்துள்ளார்… இவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்று காவல்துறை விடுவித்துள்ளதா ??? தகுந்த காரணங்கள் இன்றி காவல் நிலை ஆணைகள் (police standing order) பணியிலிருக்கும் எவரையும் சும்மா விடுவிப்பதில்லை, சொல்லப் போனால் போலீஸ் வேலை என்பது புலி வாலை முடித்த கதை போலவே… மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட துறையிடம் விண்ணப்பித்து விபரம் அறிந்து கொள்ளலாம்… நாட்டில் விவாதங்கள் செய்து அலசி ஆராயவேண்டிய சம்பவங்கள் எவ்வளவோ இருக்க…வெத்து பிரச்சினை விரிவாக செல்வது… காலம் பதில் சொல்லும்…!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க