ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ! அடுத்து என்ன ? | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் தூத்துக்குடி மக்களின் போராட்டம் குறித்தும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். இக்காணொளியை பாருங்கள்.. பகிருங்கள்...

ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு…! அடுத்து என்ன…? என்ற தலைப்பில் ஆகஸ்டு 23 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய இணைய வழிப்பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆற்றிய உரை!

இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு 60% முடிந்திருகிறது. இறுதியான முடிவிற்காக தூத்துக்குடி மக்கள் காத்திருக்கிறார்கள்.

மோடியின் ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இன்றை சூழல் என்பது பார்ப்பன – கார்ப்பரேட் மறுமலர்ச்சி காலமாக உள்ளது. இந்த அரசுக்கு அடிபணிந்து போவதால் ஏதேனும் மாற்றம் வருமா? வரப்போவதில்லை. எதிர்த்துப் போராட்டினால் மட்டுமே குறைந்த பட்சமாக நம்முடைய ஜனநாயகத்தை நம்மால் அடைய முடியும். எனவே இதற்கு முன் நடந்த மக்கள் போராட்டங்களை அனுபவமாக எடுத்துக்கொண்டு நாம் போராடாமல் வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து போராட வேண்டும்.

இதற்கு எடுத்துக்காட்டாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் இருக்கிறது. போராட்டத்தின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை மக்கள் தான் தலைமை தாங்கி எடுத்து சென்றார்கள். அதில் முக்கியமாக அனைத்து கிராம மக்களை ஓர் அமைப்பாக இணைத்துக் கொண்டு செயல்பட்டனர். போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போதும் மக்கள் யாரும் பயந்து பின்வாங்கவில்லை. அடுத்துத்தடுத்து இன்னும் போலீசின் அடங்குமுறைகள் அதிகரித்தன. அப்போதும் தூத்துக்கூடி மக்களின் போராட்டம் ஓயவில்லை. சாதி, மதங்களை கடந்து மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் களத்தில் தற்போது வரை போராடிக்கொண்டிருக்கின்றனர். அந்த போராட்டம் நடந்த விதத்தை பற்றியும், தூத்துக்குடி மக்களின் போர்க்குணம் பற்றியும் தோழர் வாஞ்சிநாதன் இந்த காணொளியில் விரிவாக விளக்குகிறார். பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க