அனிதா முதலாமாண்டு நினைவேந்தல் | வினவு நேரலை | Vinavu Live

அனிதா தன் மரணத்தில் தமிழகம் முழுவதும் போராட்டத் தீயைப் பற்ற வைத்தாள். இன்று நீட் நம் குழந்தைகளைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்ன செய்யப் போகிறோம் | வினவு நேரலை | காணுங்கள் ! பகிருங்கள் !

றக்க முடியுமா கடந்த 2017-ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தை ? தமிழகம் முழுவதும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தீயாய் கொழுந்து விட்டு எரிந்தன !

அப்பெரும் நெருப்பைப் பற்ற வைத்த சிறு பொறி எது? அது அனிதா என்ற 12-ம் வகுப்புப் படித்த ஒரு சிறுமிதான். தமது லட்சியம் தன் கண் முன்னேயே கருகியதைக் கண்டு தாங்கமுடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டதன் மூலம் இந்த அதிகார வர்க்கத்தின் மீது காறி உமிழ்ந்தாள் அனிதா!

தமிழகமெங்கும் போராட்டத் தீ பற்றி எரிந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் நீரோக்கள் ஆட்சி செய்யும் காலகட்டத்தில் நெருப்புக்கும் மதிப்பு இல்லை. இன்று அனைவரின் குரல்வளையும் நெறிக்கப்படுகிறது. என்ன செய்யப் போகிறோம் ?

அனிதா முதலாமாண்டு நினைவேந்தல் | நிகழ்ச்சி ஏற்பாடு : தன்னாட்சித் தமிழகம்.

பாருங்கள், பகிருங்கள் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

5 மறுமொழிகள்

  1. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்கள் உள்ளிட்ட எந்த மாநிலமும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இந்த விடயத்தில் யாரிடமும் எந்த ஆதரவும் தமிழ்நாட்டுக்கு இல்லை. எதார்த்த நிலைமை இப்படி இருக்கும்போது நினைவேந்தல் எனும் பெயரில் ஏன் பித்தலாட்டம் செய்கிறீர்கள்? ஏன் தீவிரவாதத்தை தூண்டுகிறீர்கள்? அனிதாவின் மரணத்திற்கு சமச்சீர் கல்வியை கொண்டுவந்த கருணாநிதி கூட்டமும் அதை ஆதரித்த வினவு கூட்டமும் ஒரு காரணம். அவருக்கு பதினோராம் வகுப்பு பாடத்தை சரியாக நடத்தாத அவர் படித்த தனியார் பள்ளி இன்னொரு காரணம். அவருக்கு பிளஸ் டூ மார்க் அடிப்படையில் அண்ணா பல்கலையில் பொறியியல் படிப்பும் கால்நடை மருத்துவப் படிப்பும் கிடைத்தது. இவற்றில் எதைத் தேர்ந்தெடுத்து இருந்தாலும் அனிதாவுக்கு நல்ல எதிர்காலம் உருவாகி இருக்கும். ஆனால் அவர் அநியாயமாக தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முதல் காரணம் அவரை வழிநடத்திய பிரின்ஸ் கஜேந்திரபாபு என்னும் கயவன் தான். நீட் தேர்வில் பல பிரச்சினைகள் உண்டுதான். ஆனால் அதற்கு எதிராக போராடுவதற்கான தகுதி திமுகவிற்கும் வினவிற்கும் நிச்சயம் கிடையாது. இவர்கள் மிகப்பெரிய மோசக்காரர்கள். இப்போது மக்களை தூண்டி விட்டுக் கொண்டு அரசியல் லாபம் தேட பார்க்கிறார்கள். அறிவு நாணயம் என்பது இவர்களிடம் துளிகூட கிடையாது.

    • எனக்கு ஆரிய அடிவருடி என்னும் லேபிள் கொட்டுவதால் உண்மை மறையாது.

  2. இதே வேளையில் உச்ச
    (மனு)நீதிமன்றம் தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் தர முடியாது என தெரிவித்திருப்பதன் மூலம் தமிழக மாணவர்களின் நலனில் எள்ளளவும் அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
    வேதனையான தருணத்தில் இன்னும் வேதனை.

  3. பெரியசாமி உன் பெயரில் பெரய இருந்தால் மட்டும் போதாது அதை உன் செயலில் காட்டு பரம்பரைபரம்பரையாக ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் தலைமுறையே இப்போது தான் கல்வி வேலைவாய்ப்பு என உருவாகிறது இதற்கான அடித்தளம் இந்த தி.மு.க வினவு போன்ற சமூக அறிவே இல்லாமல் வாய்க்கு வந்ததை உலராதே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க