ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடு ! மக்கள் அதிகாரம் ஆர்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமியற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! - வினவு நேரலை

மக்களின் ரத்தம் குடித்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி !

தமிழக அரசே! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடு !

மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் நடைபெற்று வருகிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சமீபத்கிய நடவடிக்கைகள் இதனை உறுதி செய்கின்றன. பல்லாயிரக்கணக்கான தூத்துக்குடி மக்களை படிப்படியாக நோய்வாய்ப்படவும், மரணிக்கவும் செய்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தூத்துக்குடி மக்கள் நடத்திய – 13 பேரைப் பலிகொண்ட – வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். அதன் விளைவாக மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறப்பதற்கேற்ப ஒன்றுக்குமாகாத ஒரு அரசாணையை பிறப்பித்தது தமிழக அரசு. இதை அன்றே அம்பலப்படுத்தியது மக்கள் அதிகாரம்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் விதமாக சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுத்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை சட்டரீதியாக தமிழகத்தை விட்டு வெளியேற்ற முடியும். இதனை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது.

அதன் நேரலை வினவு இணையதளத்திலும், ”வினவின் பக்கம்” முகநூல் பக்கத்திலும், வினவு யூ-டியூப் சேனலிலும் ஒளிபரப்பப்படும்.

இடம் : வள்ளுவர் கோட்டம்

நாள் : 24.09.2018

 

பார்க்கவும் பகிரவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க