வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்திச் செல்வதும், மணமக்கள் வீட்டார், வந்தவர்களுக்கு சுவையான விருந்தளித்து வாசல்வரை தாம்பூலப் பை கொடுத்து வழியனுப்பி வைப்பதும் இன்றைய திருமணங்களின் வழக்கமான நடைமுறை.
வழக்கமாக தாம்பூலப்பை வழங்கப்படும் இத்தகைய திருமணங்களில் கலந்து கொள்வோருக்கு புத்தகங்களையும்கூட பரிசாகக் கொடுக்கலாமே. முற்போக்கு முகாமில் மணம் செய்வோருக்கு இந்த முறை அறிமுகமாகியிருக்கலாம். அதிலும் மண நிகழ்வில் கலந்து கொள்வோர் மணமக்களுக்கு பரிசளிக்கும் விதமாக புத்தக விற்பனை செய்யப்படும். கூடவே வருவோர் அனைவருக்கும் முற்போக்கு நூல்களை வழங்குவது இன்னும் சிறப்பு.
ஏனெனில் பெரும்பாலான மக்கள் அனைவரும் இன்னும் நேரடியான அரசியல் அமைப்புக்கள், கருத்துக்கள், நூல்களுக்கு வெளியேதான் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புரட்சிகர அரசியல் மற்றும் பண்பாட்டை அறிமுகம் செய்யும் வண்ணம் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்கலாம்.
குறிப்பிட்ட தலைப்பில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு கட்டுரைகளை தொகுத்து அழகிய நூலாக்கி மாதந்தோறும் வெளியிட்டு வருகிறோம்.
முப்பது ரூபாய் விலையில் எண்பது பக்கங்களில் மேப்லித்தோ தாளில், ஃபெர்பெக்ட் பைண்டிங், மேட் லேமினேசன் ஆர்ட் பேப்பர் அட்டையுடன் அழகிய புத்தகமாக வெளிவருகிறது புதிய கலாச்சாரம். இத்தகைய கட்டமைப்பில் ஒரு நூலை இந்த விலையில் நீங்கள் எங்கேயும் வாங்க முடியாது. அச்சிடும் செலவை மட்டும் விலையாக வைத்து இந்த நூல் வெளியாகிறது என்றால் மிகையல்ல. தற்போது தாள்கள் விலை, அச்சக கட்டணங்கள் உயர்ந்திருந்தாலும் அதே முப்பது ரூபாயில் தொடர்ந்து வெளிவருகிறது புதிய கலாச்சாரம்.
இது வரை வெளிவந்த நூல்கள் பல்வேறு தலைப்புகளில் செறிவான கட்டுரைகளை கொண்டிருக்கின்றன. சினிமா விமரிசனம், பெப்சி கோக், குப்பை உணவு, எது காதல், மீடியாவை நம்பலாமா, விவசாயத்தின் அழிவு, மாட்டுக்கறி துவேசம் என சமகால அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளில் முக்கியமானவற்றை இந்த நூல்கள் பேசுகின்றன.
ஆகவே தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம். கைவசம் இருக்கும் நூல்களின் இருப்பை வெளியிட்டுள்ளோம். அதிலிருந்து உங்கள் தலைப்புக்களை தெரிவு செய்யலாம். அவை ஒரே தலைப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. எவ்வளவு வேண்டுமானலும் (இருப்பைப் பொறுத்து) வாங்கிக் கொள்ளலாம்.
ஏற்கனவே வெளிவந்த நூல்களில் குறைந்தபட்சம் 500 படிகள் வாங்குவதாக இருந்தால் அதை மீண்டும் அச்சடித்து தருவோம். சில நூல்களை திருமணங்களைத் தாண்டி பள்ளிகள், கல்லூரிகள், ஊர்க்கூட்டங்களிலும் விநியோகிக்கலாம். தேவைப்படுவோர் உடன் தொடர்பு கொள்க.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
குற்றங்களின் அம்மா புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 95 புத்தகங்கள்
|
|
அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ? விலை: ரூ.20 கையிருப்பு : 100 புத்தகங்கள் |
|
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா… ஹீரோவா ஜீரோவா…? புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2016விலை: ரூ.20 கையிருப்பு : 330 புத்தகங்கள் |
|
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 116 புத்தகங்கள் |
|
விடாது கருப்பு – மோடியின் கபட நாடகம் விலை: ரூ.20 கையிருப்பு : 33 புத்தகங்கள் |
|
மோடியின் டிஜிட்டல் பாசிசம் விலை: ரூ.20 கையிருப்பு : 30 புத்தகங்கள் |
|
எதிர்த்து நில் ! விலை: ரூ.20 கையிருப்பு : 56 புத்தகங்கள் |
|
கோக் – பெப்சி : கொலைகார கோலாக்கள் ! புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 118 புத்தகங்கள் |
|
|
மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 34 புத்தகங்கள் |
கல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க ! புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 51 புத்தகங்கள் |
|
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 39 புத்தகங்கள் |
|
ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள் புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 110 புத்தகங்கள் |
|
|
நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி ! புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 210 புத்தகங்கள் |
ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 218 புத்தகங்கள் |
|
|
போர்னோ : இருளில் சிக்கும் இளமை புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 245 புத்தகங்கள் |
பேரிடர் : புயலா – அரசா ? புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 96 புத்தகங்கள் |
|
ரஜினி : வரமா – சாபமா ? புதிய கலாச்சாரம் விலை: ரூ.20 கையிருப்பு : 212 புத்தகங்கள் |
|
காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! புதிய கலாச்சாரம் விலை: ரூ.30 கையிருப்பு : 212 புத்தகங்கள் |
|
|
காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் விலை: ரூ.30 கையிருப்பு : 421 புத்தகங்கள் |
இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் விலை: ரூ.30 கையிருப்பு : 416 புத்தகங்கள் |
|
|
தூத்துக்குடி முதல் நியமகிரி வரை : புதிய கலாச்சாரம் விலை: ரூ.30 கையிருப்பு : 436 புத்தகங்கள் |
ஆன்மீகக் கிரிமினல்கள் ! புதிய கலாச்சாரம் விலை: ரூ.30 கையிருப்பு : 460 புத்தகங்கள் |
|
தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ?புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2018விலை: ரூ.30கையிருப்பு : 500 புத்தகங்கள் |
|
மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் விலை: ரூ.30 கையிருப்பு : 235 புத்தகங்கள் |
|
புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்க:
இதழ்களுக்கான தொகையை அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC. NO. – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
இதழ்களுக்கான தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com