“எழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி, மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்” என்று பொருளாதார அறிஞர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் பொருட்கள் சேவைகள் மட்டுமின்றி கிராமப்புற நகர்ப்புற ஏழைகளின் அடிப்படையான நுகர்வும் கணிசமாக குறைந்திருக்கிறது. ஐந்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டுகளின் விற்பனை வீழ்ச்சி, அதற்குச் சான்று பகர்கிறது.
பெரு நிறுவனங்களின் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் இதர நுகர் பொருட்களின் வீழ்ச்சியை பேசும் ஊடகங்கள் விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் மக்களின் நெருக்கடியைப் பேசுவதில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க, செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, “ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை 3-லிருந்து 5 ட்ரில்லியனாக உயர்த்தப் போகிறேன்; நாடு முழுவதும் 100 சுற்றுலா மையங்களை உருவாக்கப் போகிறேன்” என்று கூசாமல் சவடால் அடிக்கிறார். நாட்டு மக்களோ, சாப்பிடும் ரொட்டி-பிஸ்கெட் கூட கிடைக்கவில்லையே என்று பதறிக் கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடி குறித்து ஆளும்வர்க்கமே கூவத் தொடங்கியதால் வேறு வழியின்றிச் சில சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். அவை ரொட்டி வாங்க முடியாத இந்தியர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான சலுகைகள் அல்ல. பட்ஜெட்டில் போடப்பட்ட சூப்பர் ரிச் வரி நீக்கம், கருப்புப் பண முதலைகளுக்கு ஏஞ்செல் வரி ரத்து, சி.எஸ்.ஆர். மீறல் குற்றம் என்ற விதி நீக்கம், பொதுத்துறை வங்கிகள் மூலம் தாராளக் கடன் வழங்க ஏதுவாக ரூ, 70,000 கோடி மறுமூலதன உதவி, கார்ப்பரேட் கடனுக்கான வட்டி குறைப்பு, அரசு இலாகாக்கள் புதிய கார்களை வாங்குதல்… என அனைத்துமே பன்னாட்டு நிதி மூலதனச் சூதாடிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகள்.
இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு என்ற அறிக்கையை கவுன்சில் ஃபார் சோசியல் டெவலப்மென்ட் என்ற அமைப்பு ஜூன் மாதம் வெளியிட்டுள்ளது. 2000-களில் சமூக ஏற்றத்தாழ்வு 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் மக்கட்தொகையின் மேல்தட்டில் இருக்கும் 1 விழுக்காடு கோடீசுவரர்கள் நாட்டின் செல்வத்தில் 22% வைத்திருந்தனர். அது 2018-ல் 58.4% ஆக அதிகரித்து விட்டது என்று கூறுகிறது அவ்வறிக்கை.
மோடி அரசின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மக்களின் பொருளாதாரத்தை பேரழிவுக்குள் தள்ளுவதில் பெரும்பங்காற்றின என்பது உண்மையே. எனினும், இவற்றைத் தவிர்த்திருந்தால் நெருக்கடியே வந்திருக்காது என்பது உண்மையல்ல. இன்று ஏற்பட்டிருக்கும் வேண்டல் (demand), சுருக்கம் அல்லது மக்களின் வாங்கும் சக்தியின்மை என்பது அடிப்படையில் புதிய தாராளவாதக் கொள்கை தோற்றுவித்திருக்கும் விளைவு. இந்த அபாயத்தை தொகுத்துத் தருகிறது இந்நூல்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
***
மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி – புதிய கலாச்சாரம் அக்டோபர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .
அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.
“மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ.1,76,000 கோடி: யாருக்கு இலாபம்? யாருக்கு இழப்பு?
- தேங்கிக்கிடக்கும் கார்கள்! வேலையிழக்கும் தொழிலாளர்கள்! காரணம் என்ன?
- தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: மோடி வித்தைகள் பலிக்காது!
- முதலாளித்துவத்தின் சாதனை: டெட்ராய்ட் நகரம் திவால்!
- அமெரிக்கக் கடன் நெருக்கடி: மைனரின் சாயம் வெளுத்தது!
- தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்!
- செல்லாக்காசாகிறது ரூபாய்! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை!
- படுவீழ்ச்சியில் இந்திய சேவைத்துறை: ஓராண்டு காணாத பின்னடைவு!
- உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!
- பொருளாதார வீழ்ச்சி: மறைக்கும் நிர்மலா! வீதிக்கு வரும் ஆதாரங்கள்!
- மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம்!
- கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி!
- வாகன உற்பத்தி சரிவு: முதலாளிகளின் பொய் புரட்டுகள்!
- பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம்!
பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.
வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி:
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்:
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
____________
புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்