ணிக வாடகை கட்டிடங்களுக்கு பாசிச பா.ஜ.க அரசு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதித்திருப்பதைக் கண்டித்து, பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் திரு.ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் 11-12-2024 அன்று புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், “வாடகையின் மீதான 18% GST வரி விதிப்பு மற்றும் மாநிலத்தில் சொத்துக்கள் மீதான 6% வரி உயர்வை திரும்பப் பெற கோரியும் வணிக உரிமக் கட்டண உயர்வு தொழில் வரி உயர்வு போன்றவற்றை திரும்பப் பெற கோரியும் மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள கட்டிடங்கள் மீதான வாடகையின் மீது 18% சேவை வரி அனைத்து தரப்பு வணிகர்களையும் குறிப்பாக இணக்க வரி செலுத்தும் வணிகர்கள் கூட கட்ட வேண்டும் என்கிற அறிவிப்பை எதிர்த்தும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

கட்டிட உரிமையாளர்கள் மட்டும் இன்றி வாடகைக் கட்டிடத்தில் வணிகம் செய்து வரும் வணிகர்களும் இதனால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதோடு அறிவிக்கப்பட்டுள்ள வரி உயர்வு பல வகையிலும் பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு மிகப்பெறும் சுமையாக மாறிக் கொண்டிருக்கிறதை கருத்தில் கொண்டும் வணிகர்கள் மீதான சட்டங்கள் வணிகத்தை வழிநடத்தும் சட்டங்களாக மட்டுமே இருக்க வேண்டும். வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விடும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்திடவும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்ட்டிருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரமைப்போடு ஒருங்கிணைப்புச் சங்கங்களான தமிழ்நாடு ஹோட்டல் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு பர்னீச்சர் சங்கம், தமிழகம் தழுவிய சேம்பர் ஆஃப் காமர்ஸ், தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு பேக்கரி வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு டீக்கடை வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு டிஜிட்டல் சங்கங்கள் ஆகியன ஒத்துழைப்பும் ஆதரவும் தருவதாக அறிவித்துள்ளன.

தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து மாற்று போராட்டங்களுக்கான தேதியை பின்னர் அறிவிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க