Monday, August 8, 2022
முகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !

டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !

டெங்கு காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வேளையில், அதுகுறித்த வதந்திகளும் வேகமாக பரவுகிறது, அவற்றுக்கு விடையளிக்கிறது இக்கட்டுரை.

-

முழங்காலுக்கு கீழ் தான் டெங்கு பரப்பும் ஏடிஸ் கடிக்கும். அதனால் முழங்காலுக்கு கீழ பாதம் வரைக்கும் தேங்காய் எண்ணெய் தேய்க்கணுமாம். அந்த கொசுவால் முழங்காலுக்கு மேல பறக்க முடியாதாம்

இது சிரிக்கிற மெசேஜ் தான் ஆனாலும் இதையும் சீரியசா பகிர்ந்துக்கிறாங்க;

ஒரு விசயம் உங்களிடம் பரப்பப்பட்டால் அது உண்மையா இல்லையானு நல்லா ஆராய்ஞ்சு முடிவு எடுக்கணும்.

படிக்க :
மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !
டெங்கு ஒழிப்பு : விடை மறுக்கப்படும் கேள்விகள் !

சும்மா ஒரு ஷேர் பட்டன் இருக்குனு அழுத்திவிட்டா நாளைக்கு இந்த மெசேஜ பாத்துட்டு ஒருத்தர் தன்னோட காய்ச்சல் அடிக்குற பிள்ளைக்கு முழங்காலுக்கு கீழ தேங்காய் எண்ணெய மட்டும் தேய்த்து விட்டு அதுவே தன்னை காக்கும் என்று அலட்சியமாக இருந்துவிட வாய்ப்பு இருக்கிறது.

சரி இந்த செய்தியில் துளியாவது உண்மை இருக்கானா அதுவும் இல்லையே..

டெங்கு பற்றியும் அந்த கொசு பற்றியும் சில முக்கிய தகவல்கள் இதோ

1. டெங்குவை பரப்பும் கொசுவின் பெயர் – ஏடீஸ் எஜிப்டி.

2 . இந்த கொசு பகலில் மட்டும் கடிக்கும். புலி போன்று கால்களில் வரிகள் இருக்கும். இரவிலும் நாம் வெளிச்சமான விளக்குகளை உபயோகிப்பதால் இப்போது இரவிலும் கடிக்குமாறு பரிணமித்து வருகிறது.

3. சுமார் அரை கிலோமீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டது.

4. வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட கொசு ஆரோக்கியமான மனிதனை கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது.

5. ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு கொசு கடிப்பதால் மட்டுமே பரவும். இருமல், தும்மல் போன்றவற்றால் பரவுவதில்லை.

ஏடீஸ் கொசு

6. வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் கொசு தனது முட்டைகளுக்கும் வைரஸை கடத்தி விடுகிறது. இதனால் புதிய கொசு பிறக்கும் போதே வைரஸோடு பிறக்கிறது. தனது வாழ்நாளில் சுமார் 600 முட்டைகளை ஈன்று அந்த 600 குஞ்சுகளுக்கும் டெங்கு வைரஸை பரப்புகிறது.

7. குழந்தைகள் மற்றும் வயோதிகர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இவர்களுக்கு டெங்கு வரும் வாய்ப்பு அதிகம். ஆகவே அதிக பாதுகாப்பு இவர்களுக்கு தேவை.

8. தங்கள் பகுதியிலோ தெருவிலோ ஒருவருக்கு டெங்கி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு 15 தினங்களுக்குள் அந்த தெருவில் பிறர்க்கு வரும் காய்ச்சலை டெங்குவாகத்தான் நினைத்து சிகிச்சை பெற வேண்டும்.

9. நில வேம்பு குடிநீர்/ பப்பாளி இலைச்சாறு போன்றவை காய்ச்சலையும் உடல் வலியையும் குறைக்கும். இருப்பினும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. நில வேம்பு குடித்து விட்டு காலம் தாழ்த்தி மருத்துவமனையை அடைவது தவறு.. டெங்கு ஜூரத்தில் முதல் ஐந்து நாட்களுக்குள் சிகிச்சை பெற வேண்டும் என்பது விதி.

10. காய்ச்சல் தொடங்கியது முதல் சரியான மருத்துவரிடம் காட்டி சரியான சிகிச்சை பெறுவது நம் பொறுப்பு. வீண் வதந்திகளையும், அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளையும் நம்பி சிகிச்சையை புறக்கணித்தால் டெங்கு விசயத்தில் நிலைமை ஆபத்தாகி விடக்கூடும்.

படிக்க :
டெங்கு பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை !
டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !

டெங்கு பற்றிய பொய் மற்றும் உண்மை பின்வருமாறு

பொய் 
உண்மை 
டெங்கிவை பரப்பும் ஏடிஸ் கொசு முழங்காலுக்கு கீழ் மட்டுமே பறந்து கடிக்கும். ஏடிஸ் கொசு நமது உடலில் அனைத்து பகுதிகளையும் கடிக்கும்.
ஏடிஸ் கொசு மாடிகளுக்கு ஏறாது. கீழ் வீடுகளில் இருக்கும் மக்களையே தாக்கும். மாடிகுடியிருப்பு மக்களுக்கு பிரச்சனையில்லை ஏடிஸ் கொசுவிற்கு உயரம் பிரச்சனையில்லை. 20 டிகிரி முதல் 30 டிகிரி வரை சீதோஷ்ன நிலை உள்ள இடங்களில் வாழும். அதற்கும் கீழ் வெப்பநிலை இருக்கும் இடங்களில் ஏடிஸ் வாழாது
சாக்கடைகள், கூவம் போன்ற இடங்களில் இருந்து டெங்கி கொசு பரவும் நம் வீட்டிற்கு வெளியேவும் உள்ளேயும் சேமித்து வைக்கும் நல்ல தூய நீரில் மட்டுமே இந்த கொசு வளரும்.

 

உண்மைகளை மட்டும் பரப்புவோம்… சமுதாய பொறுப்புடன் செயல்படுவோம்…

நன்றி : ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

  1. தோழர்களே… நீங்களும் இந்த கொசு கதையையே பரப்புறீங்களே… இதற்கும், வதந்தி பரப்புவோருக்கும் என்ன வேறுபாடு? டெங்கு காய்ச்சலுக்கு கொசு தான் காரணம் என்பதற்கு நீங்களாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க