தியாகிகளுக்கு செவ்வணக்கம் | வசந்தத்தின் இடி முழக்கம் | ம.க.இ.க. பாடல் காணொளி

சுரண்டப்படும் மக்களை முதலாளித்துவ, பார்ப்பனிய சுரண்டலில் இருந்தும் ஒட்டு மொத்த உலகையே பாசிச அபாயத்திலிருந்தும் மீட்டெடுத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம் !

லகம் முழுவதும் உழைக்கும் மக்களை, சுரண்டப்படும் மக்களை முதலாளித்துவ, பார்ப்பனிய சுரண்டலில் இருந்தும் ஒட்டு மொத்த உலகையே பாசிச அபாயத்திலிருந்தும் மீட்டெடுத்த தியாகிகளுக்கு செவ்வணக்கம் !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ’வசந்தத்தின் இடி முழக்கம்’ பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பாடல் !

***

பாடல் வரிகள் :

செவ்வணக்கம்! செவ்வணக்கம்!
செவ்வணக்கமே!
செவ்வணக்கம்! செவ்வணக்கம்!
செவ்வணக்கமே!
செவ்வணக்கமே!

தெலுங்கானாவில் நிஜாம் வம்ச
ஆதிக்க வேர் அறுக்கவே
குருதி சிந்தி உயிர் துறந்த
தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

நக்சல்பாரி எழுச்சி போரில்
துப்பாக்கிகள் ஏந்தியே
அதிகாரத்தை வென்றெடுத்த
தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

பண்ணைக் கொடுமை
மண்ணில் சாய
செஞ்சுடரை ஏந்தியே
இன்னுயிரை ஈந்து சென்ற
தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

பாசிசத்தை வேரறுக்க
பாட்டாளிகள் தலைமையிலே
அணி திரண்டு போர் தொடுத்த
தியாகிகளுக்கு செவ்வணக்கம்!

வட ஆற்காடு தர்மபுரியில்
வர்க்கப் போரின் களத்திலே
தோட்டாக்களை எதிர்கொண்ட
தோழர்களுக்கு செவ்வணக்கம்!

சாதிமதக் கொடுமைகளை
வேரறுத்து சாய்க்கவே
சமர் புரிந்து உயிர் துறந்த
தியாகிகளுக்கு செவ்வணக்கம் !

செவ்வணக்கம்! செவ்வணக்கம்!
செவ்வணக்கமே!
செவ்வணக்கமே!
செவ்வணக்கம்! செவ்வணக்கம்!
செவ்வணக்கமே!
செவ்வணக்கமே!

***

யூடியூபில் காண:

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க