சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களைக் காட்டிலும் உடல் நலனும்  ஆயுளும் குறைவாக பெற்றிருக்கிறார்கள் என்கிறது ஆஸ்திரிய மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு. இறைச்சி உண்ணாதவர்களுக்கு உடல் மற்றும் மனநல குறைபாடுக்கான சாத்தியங்கள் அதிகளவு உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த கிராஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.  சைவ உணவு பட்டியலில் நல்ல கொழுப்புச் சத்து குறைவாக உள்ளதும், அதிகப்படியாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் உண்பதும் கேன்சர், ஒவ்வாமை மற்றும்  மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது என்கிறது மருத்துவப் பல்கலை ஆய்வு.

இறைச்சி உண்பவர்கள், காய்கறிகள் உண்பவர்களின்  உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் வேறுபாடுகளை ஆராய்ந்ததில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. காய்கறிகளை உண்பவர்கள் குறைவான மது அருந்துவதாகவும் சராசரி உடல் எடையைவிட குறைவான எடையை கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது. ஒட்டுமொத்தத்தில் இவர்களின் உடல் நலனும் மனநலனும் மிகவும்  பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். குறைவான இறைச்சி உண்பவர்களும்கூட உடல்நலனில் அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கிறார்களாம்.

“எங்களுடைய ஆய்வின்படி, காய்கறிகளை உண்ணும் ஆஸ்திரிய இளம்பருவத்தினர் குறைவான ஆரோக்கியம் உள்ளவர்கள். (புற்றுநோய், ஒவ்வாமை, மனநல குறைபாடுகளை பெற்றிருக்கிறார்கள்) மேலும் அவர்கள் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இல்லை. அவர்களுக்கு அதிகப்படியான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது” என ஆய்வின் முடிவில் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

படிக்க:
தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி
மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ

இந்துத்துவ அடிப்படைவாதிகள் சைவமே சிறந்தது என முன்னெடுக்கிற அரசியல் மூலம் பெரும்பகுதி உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சைவ உணவுப் பழக்கம் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் ஆகியவற்றில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் சைவம் உண்ணுகிறவர்களாக உள்ளார்கள்.

குரங்கிலிருந்து மனிதர்களை பரிணமிக்கச் செய்ததில் இறைச்சியின் பங்கு முக்கியமானது என அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. உண்மையில், சங்கிகளின் சிந்திக்க திராணியற்ற ‘மாட்டு மூளை’க்கு அவர்களின் சைவ உணவுதான் காரணமா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிச்சயம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக்கூடும்.

செய்தி ஆதாரங்கள்:
Vegetarian India A Myth? Survey Shows Over 70% Indians Eat Non-Veg, Telangana Tops List
♦ Vegetarians are ‘less healthy and have a lower quality of life than meat-eaters’, scientists say