சியப் புரட்சியின் 101-வது ஆண்டையொட்டிமக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 5

சென்னை

டந்த நவம்பர் 7 ஆம் தேதி அன்று சென்னை மதுரவாயல் பகுதியில் நவம்பர் புரட்சி நாளையொட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தம் அருகில் பறை இசையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சி நடைபெரும் இடம் ஆசான்களின் படங்கள், பலூன், தோரணங்கள் கட்டப்பட்டு கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பு.மா.இ.மு.-வின் சென்னை கிளை செயலாளர் தோழர் சாரதி நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தினார். பறை இசையுடன் துவங்கிய நிகழ்ச்சியில் அமைப்பின் பாடல்கள் பாடப்பட்டது. பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் செங்கொடி ஏற்றி உரையாற்றினார். அதன் பின் இனிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்சியில் 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

காலை 10 மணிக்கு மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நொளம்பூர் கிளை செயலாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். பறையிசை இசைக்கப்பட்ட பின் செங்கொடியேற்றப்பட்டது. இனிப்புகள் வழங்கியதுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

மதியம் 2 மணிக்கு மதுரவாயல் பிள்ளையார்கோவில் தெரு பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுகறித்திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை பிள்ளையார்கோவில் தெரு கிளை செயலாளர் தோழர் செந்தில் தலைமையேற்று நடத்தினார். கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. உணவுத் திருவிழாவில் தோழர்கள் பகுதிமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நவம்பர் விழா நிகழ்ச்சிகள்

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நவம்பர் விழா நிகழ்ச்சியை நடத்தின.

நவம்பர் புரட்சியினை நினைவுகூரும் வகையில் நடத்தப்படும் குடும்பவிழாவை நடத்தக்கூட அனுமதி மறுத்தனர் போலீசார். மண்டப உரிமையாளரை மிரட்டுவது என்ற அளவிற்கு இறங்கி கீழ்த்தரமாக நடந்துகொண்டனர். இத்தகைய அரசின் அடக்குமுறைகளை கடந்து, திட்டமிட்ட படி நவம்பர் 11 ஆம் தேதியன்று சென்னையில் திருமண மண்டபம் ஒன்றில் நவம்பர் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தோழர் சாரதி தலைமை தாங்கி நடத்தினார். பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னைக் கிளை செயலாளர் தோழர் செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூக அநீதிகளுக்கு அதிராக இசை சமர் பறை இசைக்குழுவின் பறை முழங்கியது. சென்னை ம.க.இ.க. இளந்தோழர்கள் பரவிவரும் பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக பாடல், பேச்சு, நடனம், நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

“நவம்பர் 7 என்ற தினமின்று – மக்கள் விடுதலைக்கான தினமொன்று !” என்ற பாடலும் “நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் ? தொட்டால் என்னடா ? ” என்ற பாடலும்  “நீரில்லா நெல்வயலும் வெம்பி அழுகுதம்மா!” என்ற பாடலும் சேர்த்து மூன்று புதிய பாடல்களை தயாரித்து பாடினர்.

பு.மா.இ.மு.வின் பள்ளி மாணவிகள் “காடுகளைந்தோம்” என்ற அமைப்பின் பாடலுக்கு நடனமாடினர். கல்லூரி மாணவர்கள் “பாசிச பா.ஜ.க.வும் நாட்டுல பன்னுராங்க அராஜகமும்” என்ற கானா பாடலை எழுதி பாடினர். சட்டக்கல்லூரி மாணவி பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான “இது நீ வாழ அருகதை இல்லா பூமியோ” என்ற பாடலை எழுதி பாடினார்.

சென்னை சட்டக்கல்லூரி மற்றும் தியாகராயா கல்லூரி மாணவர்கள் இணைந்து சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக ஓர் நாடகத்தை அரங்கேற்றினர். சென்னை பெ.வி.மு தோழர்கள் சமரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக்கூடாது என சொல்லும் இந்துதுவக்கும்பலுக்கு எதிராக ஓர் நாடகம் அரங்கேற்றினர்.

தொழிலாளர்களுக்கு நடக்கும் அடக்குமுறைகளை பற்றி பு.ஜ.தொ.மு-வின் தோழர் தெய்வீகன் உரையாற்றினார். இறுதியில் “ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் முறியடிப்போம்” என்ற தலைப்பில் பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் சிறப்புரையாற்றினார்.

நூற்றுக்கணக்கான தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்ற விழாவாக இது அமைந்திருந்தது.

***

புதுச்சேரி

துவெல்லாம் சாத்தியமற்றது என முதலாளிகளும், மதவாதிகளும் சொல்லி வந்தனரோ அதை எல்லாம் சாதித்துக் காட்டியது லெனின் தலைமையிலான ரசியப் பாட்டாளி வர்க்க அரசு.

இன்று உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு பலியாகி வருகின்றனர். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல தான் உருவாக்கிய நெருக்கடியைத் தீர்க்க முயன்று, மீண்டும் நெருக்கடிகள் அதிகமாகி சிக்கித் தவிக்கிறது முதலாளித்துவம். இன்று முதலாளித்துவம் உயிர் வாழ்வதற்காக உலகம் முழுவதிலும் மதவெறி, இனவெறி பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

அன்று இனவெறி பாசிஸ்டான கொடுங்கோலன் ஹிட்லரைக் கண்டு உலகமே அச்சத்தில் இருந்த போது, அந்த ஹிட்லரை ஓட ஓட விரட்டி இந்த பூமிப் பந்தை மீட்டது ஸ்டாலின் தலைமையிலான மக்கள் ராணுவம். இன்று இந்தியாவின் மதவெறி பாசிஸ்டான மோடியை மட்டுமல்ல, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துள்ள பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேவை மீண்டும் ஒரு மக்கள் புரட்சி.

எனவே, மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்! என்ற முழக்கத்தை முன் வைத்து, ரசியப் புரட்சியின் நோக்கத்தை மக்கள் மத்தியில் தொழிலாளர் குடும்பங்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மாட்டுக்கறி விருந்துடன் குடும்ப தின விழாவாக கொண்டாடியது.

கடந்த நவம்பர் 11 அன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்திற்கு பு.ஜ.தொ.மு. தலைவர், தோழர் சரவணன் தலைமை தாங்கினார். பு.மா.இ.மு. புதுச்சேரி அமைப்பாளர் தோழர் மோகன், பு.ஜ.தொ.மு. தமிழ்நாடு மாநில இணைச் செயலாளர் தோழர் பழனிச்சாமி, பு.ஜ.தொ.மு. புதுச்சேரி இணைச் செயலாளர் தோழர் ஆனந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் ஆதரவாளர்கள், தொழிலாளர்களின் குடும்பங்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நவம்பர் – 4 அன்று வாலிபால் போட்டியும், நவம்பர்-7 அன்று குழந்தைகளுக்கான ஓவியம், கதை போட்டிகளும், ஓட்டப்பந்தயம், சதுரங்கம் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தனியார் கல்வியும், வேலையில்லாத் திண்டாட்டமும் என்பதை விளக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியை பார்த்தனர். மாட்டுக்கறி விருந்துடன் விழா நிறைவு பெற்றது. வந்திருந்த அனைவர் மத்தியில் நவம்பர் புரட்சி தினத்தின் அவசியத்தை பதிவு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.

தொகுப்பு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க