காத்திருப்பு எனும் கருவில் வாசகர்கள் அனுப்பிய புகைப்படங்கள் இவை. நண்பர்களுக்கு நன்றி!

படம் : பிரபு

கவலைகளுக்கு பஞ்சமில்லாத நாட்டில் கலங்கி என்ன பயன்?
மனநல ஆலோசனை மையம், சென்னை சைதாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

படம் : பிரபு

வங்கி நிறைய பணம், மனம் நிறைய வெறுமை!
சென்னை, சைதாப்பேட்டை மார்க்கெட் அருகே உள்ள வங்கி.

படம் : பிரபு

பலருக்கும் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை இங்கு ஒடிந்து போயிருக்கிறது.
சென்னை, சைதாப்பேட்டை இரயில் நிலையம்.

படம் : பிரபு

திவசத்தின் தட்சணைக்காக காத்திருக்கும் வாழ்க்கை!
சென்னை, சைதாப்பேட்டை தேரடித்தெரு காரணீஸ்வரர்  கோயில்.

படம் : எழில்

கடலில் குளிக்கப் போன அப்பாவின் பொருட்களை பொறுப்பாக பாதுகாக்கும் காவலாளி!
பாண்டிச்சேரி ஆரோவில் கடற்கரை.

படம் : எழில்

கடைவிரித்தேன் கொள்வாரில்லை!
சென்னை – மாதவரம் சாலை.

படம் : கோகுல்

மேயச்சென்ற ஆடுகள் திரும்பி வரும், பயமில்லை!
ஏலகிரி மலை, முதலைத்தளவு சிற்றருவியில் விவசாயி.

படம் : தமிழன்பன்

நேரம் இருட்டிவிட்டது, வீடு அழைக்கிறது!
சென்னை, கிண்டி பேருந்து நிறுத்தம்.

படம் : தமிழன்பன்

ஓடிக் களைக்காத ரயிலும், ஓடிக் களைப்பதற்காக காத்திருக்கும் பயணிகளும்!
சென்னை, குரோம்பேட்டை ரயில் நிலையம்.

படம் : தமிழன்பன்

இன்றைக்காவது காலியாக பேருந்து வருமா?
சென்னை, குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம்.

படம் : சிவா

காய்ந்து போன மாலையை கழட்டக் காத்திருக்கும் நேரு!
சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம்

படம் : சிவா

சூரியன் அஸ்மித்துப் போன பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து, அஞ்சலி செலுத்த இனி யார் வருவார்கள்?
சென்னை, நந்தம்பாக்கம்.

படம் : சிவா

வியாழக்கிழமை போராட்டம் – வெள்ளிக்கிழமையோ ஜெபம்!  படிக்க காத்திருக்கும் சுவரொட்டிகள்!
சென்னை, கிண்டி

படம் : சிவா

ஊழலின் சிரிப்பு ஆளும் போது – அவலத்தின் இருப்பு காத்திருந்து என்ன பயன்?
சென்னை, கிண்டி.

படம் : மாறன்

காலையிலேயே காற்று வாங்க வருவார் யாருமில்லை!
சென்னை, பறங்கிமலை

படம் : ராமச்சந்திரன்

உறையும் பனி எப்போதும் உருகும்?
கன்சாஸ் மாகாணம், அமெரிக்கா.

படம் : ராஜி

நீங்கள் வாங்கினால் என் சுமை குறையும் – காத்திருக்கிறேன்!
சென்னை கிண்டி போரூர் சாலை

படம் : தமிழரசன்

மழை நிற்பதற்காக இங்கு யாரும் காத்திருக்க முடியாது!
குரோம்பேட்டை இரயில் நிலையம், சென்னை.

படம் : வினவு களச்செய்தியாளர்.

கஜா புயல்: நிவாரண பொருட்களுக்கு காத்திருக்கும் மக்கள்.
அதிராம்பட்டினம் – ஏரிப்புறக்கரை – மீனவ கிராமம்.

படம் : வினவு களச்செய்தியாளர்.

எங்களுக்குள் பேசுவதற்கு ஒன்றுமில்லை  – உங்களிடம் பேச செல்பேசிகள் சார்ஜ் ஏற்றுகின்றன!
கஜா புயல்: அதிராம்பட்டினம்.

படம் : வினவு களச்செய்தியாளர்.

வீசியழித்த புயலில் எங்களிடம் மிஞ்சியவை!
கஜா புயல், முத்துப்பேட்டை- ஆலங்குடி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. அடுத்து தலைப்பு என்ன என்பதில் ஆர்வம் மிகுதியாக உள்ளது. விடுமுறை நாட்களோ சனி, ஞாயிறு மட்டும் தான்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க