ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உடனடியாக ஆவன செய்யவேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த சனிக்கிழமை (15-12-2018) தீர்ப்பளித்தது.

இதனைக் கண்டித்து, ”டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று !” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பாக மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! நேரலை !

பாருங்கள் பகிருங்கள் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. இந்த மாதிரியான போராட்டங்கள் தோல்வி அடைய வேண்டும். படித்த இளைஞர்களின் வாழ்க்கை இந்த மாதிரியான தொழிற்சாலைகளால் தான் உள்ளது. இப்படி எதாவுது பொய் காரணங்களை சொல்லி ஊரில் இருக்கும் தொழிற்சாலைகளை எல்லாம் மூடிவிட்டால் பாதிக்கப்பட போவது இளைஞர்கள் தான்.

    ஸ்டெர்லைட் அலையால் உருவாகும் மாசை கட்டுப்படுத்த போராட்டம் நடத்த வேண்டும்… ஸ்டெர்லைட் மட்டும் அல்ல தூத்துக்குடியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளிலும் உருவாகும் மாசை கண்காணித்து கட்டுப்படுத்த புதிய மாசு கட்டுப்பாடு தொழில்நுட்பங்களை உருவாக்க அரசு சாரா பொதுநல அமைப்பு உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு நேர்மையாக பாரபட்சம் இல்லாத ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் அரசும் இந்த அமைப்புகளும் இணைத்து செயல்பட்டால் தூத்துக்குடி மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை உருவாக்கி அதை கண்காணிக்கலாம்.

    இந்த மாதிரியான தொழிற்சாலையை மூட வேண்டும் என்ற போராட்டங்கள் மூலம் யாருக்கும் எந்த பலனும் கிடைக்க போவதில்லை, அதிகமாக பாதிக்க பட போவது இளைஞர்கள் தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க