நினைத்தாலே
இயக்கும்!
பெரியார் சிந்தனை.

நினைத்தாலே
முடிக்கும்
பெரியார் செயல்.

Thanthai Periyarநினைத்தாலே
பூக்கும்
பெரியார் கேள்விகள்.

நினைத்தாலே
இணைக்கும்
பெரியார் பதில்கள்.

நினைத்தாலே
வலிக்கும்
பெரியார் பாடுகள்.

நினைத்தாலே
சிலிர்க்கும்
பெரியார் தேடல்கள்.

நினைத்தாலே
அணைக்கும்
பெரியார் வார்த்தைகள்.

நினைத்தாலே
கட்டுடைக்கும்
பெரியார் கருத்துகள்.

நினைத்தாலே
அச்சம் அறும்
பெரியார் பேச்சு.

நினைத்தாலே
நமதாகும்
பெரியார் மூச்சு.

நினைத்தாலே
மதம் உடையும்
பெரியார் பாதை.

நினைத்தாலே
சாதி கூசும்
பெரியார் பார்வை.

நினைத்தாலே
காதல் வரும்
பெரியார் அறிவு.

நினைத்தாலே
உறவாகும்
பெரியார் தெளிவு.

நினைத்தாலே
பனிக்கும்
பெரியார் அன்பு.

trichy periyaar rallyநினைத்தாலே
பிறக்கும்
பெரியார் தெம்பு.

நினைத்தாலே
பலர்க்கும்
பெரியார் சுயமரியாதை.

நினைத்தாலே
வெளுக்கும்
பெரியார் தர்க்கம்.

நினைத்தாலே
சுரக்கும்
பெரியார் மனிதநேயம்.

நினைத்தாலே
துளிர்க்கும்
பெரியார் உணர்வு நயம்.

நினைத்தாலே
அழைக்கும்
பெரியார் களம்.

நினைத்தாலே
தொடரும்……
இது
பெரியார் நிலம்!


கவிஞர் துரை. சண்முகம்

5 மறுமொழிகள்

  1. கேள்வி பதில் பகுதியில் பெரியார் பற்றி கேள்வி ஒன்று கேட்டிருந்தேன்.இந்த கவிதை அக்கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது. கேள்வி பதில் பகுதியில் என்னுடைய கேள்விக்கும் விரைவில் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்

  2. “பெரியார் நினைவு கவிதாஞ்சலி”

    மு.கார்க்கி

    ஆடம்பரம்அற்றவார்த்தை-அதேபோல்
    அல்லவா உம் எளிய வாழ்க்கை அலங்காரம் அற்ற சொற்கள்அதில்
    உள்ள அர்த்தம் மூடநம்பிக்கை முற்றும் முழுதாய் தகர்த்து வீழ்த்தும்

    தமிழ்நாட்டில் அம்பேத்கர், பெரியார் மார்க்ஸ்படங்கள்,திறக்கும் சேரிகளில்
    சாதிஆதிக்கம் தீண்டுவதேயில்லை

    அச்சேரிகளில் கற்சிலை காவல் தெய்வங்களுக்கும் வேலையே இல்லை

    கருப்பு சட்டை, கசங்கிய லுங்கி – உம் மேடைப்பேச்சை கேட்பார்கள் கிறங்கி

    உம் கொள்கைகள் கொழுந்து விட்டு எரிந்த போதும்- உம் தெண்டர்களால் அக்கிரஹாரத்துக்கு “சிறு கீறல் கூட” விழந்த்தே இல்லை ஐயா உம் மனிதாபிமானத்துக்கு ஏது எல்லை!..

    குஜராத் இந்துத்வா சோதனைச் சாலை
    மோடி எரித்தபிணத்திற்குகணக்கில்லை?

    அகிம்சா மூர்த்தி காந்தி பிறந்தும் கூட அம்மண்ணில் வன்முறைக்கு
    பஞ்சமேயில்லை

    உம்மை இன்றும் வெறியன் – என்று
    அழைக்கும் எச்சை பார்ப்பான் – அன்று
    நீ தொண்டர்களுக்கு சைகை காட்டியிருந்தால் இன்று
    உயிரோடு இருந்திருப்பான்!!??

    இருண்ட தமிழ்நாட்டில், சாதி மதத்தை துவைத்து தொங்கவிட்டது உம் பேச்சு

    மௌடிக மூடர்கள்,சாதிமத வெறியர்கள் வீசினார்கள் – செருப்பு சீமார் வீச்சு

    ஐயா ,நீ செத்து அரை நூற்றாண்டாச்சு
    ஆளும் வர்க்கத்தின் எச்சில் காசுக்கு உம்மைகொச்சைப்படுத்தும்
    சீமானின் நாற்றமெடுக்கும் பேச்சு

    இந்திய தேசியமும் – தெய்வீகமும்
    இரண்டு கண்கள்
    உ.முத்துராமலிங்கம் “தேவர்”
    சாதிவெறியின் ஊற்றுக்கண்கள்

    தமிழ்நாடு தமிழருக்கு – என்று கருத்தை ஆழ விதைத்தாய்,அடித்தட்டுமக்களையும் தமிழ்மண்ணைஆளாவைத்தாய்.

    நீ தமிழ் மீட்சிக்கும்,தமிழர் ஆட்சிக்கும் ஆயிரம் ஆயிரம் தியாகம் புரிந்திருந்தும்

    பார்ப்பன்,கி,வெங்கிட்டராமனேடு
    கை கோர்த்துபெரியாரை தோண்டித் துளாவி எடுத்து தூக்கில் ஏற்றும்
    தமிழ் தேசியம் “பேசும்” பெ.மணியரசா

    உ.முத்துராமலிங்கத்திற்கு எதிராய்
    ஒற்றை வார்த்தை எங்கு உதிர்த்தாய்?

    பக்கம் பக்கமாய் பெரியார்க்கு எதிராய்
    தப்பும் தவறுமாய் புத்தகம் போடும் பெ.மணியரசா

    உ.முத்துராமலிங்கத்தை எதிர்க்காமல்
    தமிழ்தேசியத்தை எப்படி விதைப்பாய்?

    பெரியார் உயிரோடு இருந்தபோது
    கல்லடி, சொல்லடி,கணக்கற்ற எதிரிகள்
    துரோகிகளின் நெருக்கடி

    பெரியார் மறைந்து அரைநூற்றாண்டு கடந்தபின்னும் சோக்கள், சீமான்கள், மணியரசன்கள் எச்சை ராசாக்கள் உம் கொள்கைக்கெதிரான கொசுக்கடிகள்

    மூடநம்பிக்கை ஒழிக்கும்
    மருத்துவமுறை நீ -ஐயா

    உம்மை இகழ்பவரை, பழிப்பவரை, எதிர்ப்பவரை வெல்லும் வரை

    உம் கொள்கை நெறியே எமக்கான வாழ்க்கை வழிமுறை

    பெரியாரின் கைப்பிடித்து – உம் கைத்தடி எடுத்து நீன் தத்துவத்தை கடைபிடித்து தமிழர் உரிமை மீட்டெடுப்போம்!திருச்சியில் சங்கமிப்போம்!

    • அருமை . . ! அருமை. . . . !!
      கார்க்கி !
      பேரன்பாளன் தந்தை பெரியாருக்கு துரை சண்முகம் சூட்டியது தங்கக் கிரீடம் என்றால் உங்கள் கவிதை அதில் வைரக்கல் . . !

  3. தேடித்தேடி பார்த்தாலும் நினைத்தாலே “இனிக்கும்”ஐ தவிர்த்திருக்கும் தோழர் துரை. சண்முகத்தின் கவிதை ‘சிறப்பு’

Leave a Reply to Mayilsamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க