கேள்வி : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனில் தமிழகம் முழுதும்  ஆர்.கே நகர் தானே, அப்போ தேர்தல் புறக்கணிப்பு ஒன்று தானே வழி ?

– ஆர் ராதாகிருஷ்ணன்

ன்புள்ள ராதாகிருஷ்ணன்,

காசு வாங்கி ஓட்டுப்போடும் மக்களை திட்டுவதில் கமலஹாசன் போன்றோர் கூட ’தைரியமாக’ திட்டுகிறார்கள். முன்னதை விட பின்னதுதான் பிரச்சினை.

ஒரு தோராயமான மதிப்பீட்டின் படி 2 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட தமிழக சட்டமன்ற தொகுதி ஒன்றில் 65 முதல் 70% வாக்குகள் பதிவாகின்றன. அதில் வெற்றி பெறும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் முப்பது முதல் நாற்பது சதவீத வாக்குகளைப் பெறுகிறார். இதன்படி தொகுதி மக்களில் 56,000 பேர் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த 56,000 பேர்களில் அதீத ஏழைகள், உதிரிப்பாட்டாளிகள் பத்து சதவீதம் என்றால் சுமார் 5,600-ம் பேர் இருப்பார்கள். என்றால் இவர்களுக்கு மட்டும்தான் அந்த வேட்பாளர் பணம் கொடுக்க வேண்டும். 5,600 பேர்களுக்கு ரூ 500 கொடுத்தாலே மொத்தம் 28 இலட்ச ரூபாய் வருகிறது. சரி 10,000 பேர்களுக்கு கொடுப்பது என்றால் 50 இலட்சம் வருகிறது. 234 தொகுதிகள் என்றால் 117 கோடி ரூபாய் வருகிறது. அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் போன்று பில்லியனர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இந்த சராசரி கூடலாம்.

எல்லா தொகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை. அது சாத்தியமும் இல்லை. நலிந்த பிரிவினரில் நமக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் என்பதை உறுதி செய்தே பணம் கொடுக்கிறார்கள். இரண்டு இலட்சம் மக்கள் தொகையில் 5000 பேர்கள் பணம் வாங்குவதால் முழு மக்களும் வாங்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில ஊர்கள், பகுதிகளில் ஊர்க் கமிட்டி மூலம் மொத்தமாகவும் பணம் வாங்குகிறார்கள். அல்லது கோவில் கொடை, திருப்பணி என்றும் வாங்குகிறார்கள். எனவே பணம் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது உண்மைதான்.

பணம் வாங்குவது மூலமாக சமீப ஆண்டுகளில் மக்களின் நேர்மை வீழ்ச்சியடைந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த வீழ்ச்சி எந்த அளவுக்கு சரிந்திருக்கிறது என்றால் இரு கட்சிகளிடம் காசு வாங்குவது, எல்லா கட்சிகளிலும் காசு வாங்கி காசுக்கேற்ற மாதிரி குடும்பத்தின் வாக்குகளை பங்கு வைப்பது, அதிக வாக்காளர்கள் இருந்தால் அந்தக் குடும்பத்திற்கு பத்தாயிரம், ஐயாயிரம் ரூபாய் பெறுவது என்று இந்த ஏற்பாடுகளுக்கு முடிவே இல்லை.

படிக்க:
♦ ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் !
♦ அரசியல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம் : மக்கள் அதிகாரமே மாற்று !

பணம் வாங்கினாலும், வாங்கா விட்டாலும் மக்களுக்கு இந்த தேர்தல் அரசியல் மூலம் தம் வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதில்லை. மேற்கண்ட நேர்மையின்மைக்கு இதுவும் ஒரு காரணம். எவனோ எவளோ ஜெயிக்கட்டும், அவனால் அவளால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றாலும் சில நூறு ரூபாய் பணம் வருவதை ஏன் இழக்க வேண்டும் என்று மக்கள் ‘பொதுநலம் கலந்த காரியவாதமாக’ எண்ணுகிறார்கள். தமது அரசியல் அமைப்புக்கள் சரியில்லை எனக் கருதும் மக்கள் அதை மாற்றுவதற்கு தாமும் போராட வேண்டும் எனக் கருதுவதில்லை. யாராவது ஒரு தேவதூதன், சூப்பர் ஸ்டார் வந்து அபயமளிப்பாரா என எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய எதிர்பார்ப்பில்தான் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் துணிந்து கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

இந்த அனாமதேயங்களும் சரி இந்த அரசியல் அமைப்புகளை ஜனநாயகம் என்று கருதுவோரும் சரி, வாக்களிப்பதை ஜனநாயகக் கடமையாகவும், காசு வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமெனவும் கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம். காசு வாங்குவது மட்டுமே பிரச்சினை அல்ல.

vote politics
நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம்.

அரசியல் உலகை சாக்கடை என பொதுப்புத்தியில் ஒரு அரசியலற்ற கருத்தியலை உருவாக்கும் ஊடகங்களே, மற்றொரு புறம் வாக்களிப்பதில் நேர்மையை வேண்டும் என கூறிகின்றன. அரசியலில் மக்கள் இறங்குவது என்பத தேர்தல் அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள், ஊடகங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மல்லுக் கட்டும் போது அதை எதிர்த்து நிற்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கருதுகிறார்கள் அல்லவா அவர்கள் யாரும் ஸ்டெர்லைட்டின் பிரச்சினையை தேர்தலோடு தொடர்புடையதாக கருதுவதில்லை. மேலும் தேர்தல் அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் கையாலாகதவர்கள், கைவிட்டவர்கள் என்பதை அவர்களுடைய அனுபவமே கற்றுத் தந்திருக்கிறது. கூடவே அரசின் நீதிமன்றம், அதிகாவர்க்கம் போன்ற அமைப்புக்களும்தான்.

ஊடகங்கள் உருவாக்கும் அரசியலற்ற கருத்துருவாக்கத்திற்கு லஞ்சம் பற்றிய சித்தரிப்பு மற்றொரு சான்று. அன்றாட அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்க வேண்டிய அவஸ்தையை மாபெரும் ஊழலாக சித்தரித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்புடைய மாபெரும் ஊழலை ஏதோ புரியாத புள்ளிவிவரமாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு முறைகேடாக  காரியங்களை சாதித்து தொழில் நடத்தும் நாட்டில் அரசு அலுவலகங்களில் ஒரு சாதி சான்றிதழ் வாங்குவது பணம் கொடுக்காமலா கிடைக்கும்? காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லும் போலீசை தண்டிக்க முடியாத நாட்டில் போலீசால் நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? அல்லது ஒரு ரவுடியை எதிர்த்து எப்படி மக்கள் சண்டையிட முடியும்? நாட்டில் அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் மேல் மட்டங்கள் அத்தனையும் முறைகேடு செய்வதோடு அதை மறைப்பதை சட்டப்படி செய்யும் போது கீழ்மட்ட நிர்வாக செயல்பாட்டில் என்ன தரம் வந்து விடும்? மேல அடிக்காமல் கீழே என்ன மாற்றம் வந்து விடும்? ஆனால் ஊடகங்கள் அனைத்தும் கீழே அடித்தால் நாடே உருப்பட்டுவிடும் என்று உளறுகிறார்கள்.

தேர்தல் புறக்கணிப்பு என்பது காசு வாங்குவதோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல, அது நமது உரிமைகளை பெறுவதற்காக மாற்று அரசியலை யோசிப்பதோடும் தொடர்புடையது.

ஆகவே தமிழகம் முழுவதும் தூத்துக்குடி மக்கள் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போல மக்கள் தமது கோரிக்கைகளை உரிமைகளை புரிந்து கொள்ளத் துவங்கினால், பிறகு ஆர்.கே.நகர் மட்டுமல்ல, தேர்தல் மூலமாக மட்டுமே மாற்றம் வரும் என்ற அறியாமைகளும் அலகத் துவங்கும்.

இறுதியில் மக்கள் தமது அதிகாரத்தை தாமே கையிலெடுத்தால்தான் சமூகத்தில் பரந்து பட்ட ஜனநாயகம் அமலுக்கு வரும். இதை மக்கள் புரிந்து கொள்வதற்கு காலம் எடுக்கும். அந்த காலத்தை துரிதப்படுத்துவது எப்படி என்பதே நம் முன் உள்ள பிரச்சினை!
♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

19 மறுமொழிகள்

 1. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமே ஒரு தவறான நேர்மையில்லாத கிறிஸ்துவ கம்யூனிஸ்ட்கள் தூண்டுதலால் நடக்கும் போராட்டம்… அங்கே சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பல தொழிற்சாலைகள் உள்ளன ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஸ்டெர்லைட் மட்டும் குறிவைத்து இந்த கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் இயக்கங்கள் செயல்படுகின்றன… முதலில் இந்த மாதிரியான போராட்டங்களில் பின்னணியில் இருக்கும் நேர்மையின்மையை பற்றி பேசபட வேண்டும். ஊழல் சரி செய்ய கூடியது ஆனால் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் செயல்களால் தூத்துக்குடியில் பல அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகி இருக்கின்றன… ஊழலை விட கம்யூனிஸ்ட்கள் நேர்மையின்மையை பற்றி பேச வேண்டும் ஆனால் அது பற்றி ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள் என்பது தான் வேதனை.

 2. மணிகண்டன இப்படி தனியாக புலம்ப விட்டுட்டீங்களேப்பா . .
  ஆனாலும் இந்த மாட்டுமூளை மடையர்கள் கட்டுரைகளை ஆழ்ந்து படிக்காமல் sterio type ஆக எழுதி குடைச்சல் கொடுக்கிறார்கள்.
  மற்ற தொழிற்சாலைகளின் மாசிற்கும் sterlite ன் lead மற்றும் arsenic போன்ற கொடிய நஞ்சுகளால் நிலம் மற்றும் நீர் மாசுபட்டு அங்குள்ள மக்களை எவ்வாறு காவு வாங்கிக்கொண்டு இருக்கிறது என்ற வினவில் பல கட்டுரைகள் வந்துள்ளன.
  மேலும் sterlite மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதில் ஒரு serial offender என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
  அவைகளை எல்லாம் எடுத்து பாயிண்ட் பாயின்டாக தவறு என்று நிரூபித்தால் நாமும் வினவை விட்டுத் தொலைத்துவிட்டு RSS ல் சேர்ந்து ” பாரத் மாதாகீ ஜொய் . . ” என்று கூச்சலிட ஏதுவாக இருக்கும்.

  • தூத்துக்குடியில் இருக்கும் வைகுண்டராஜனின் தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் குளம் போல் 1 கிலோமீட்டருக்கு மேல் இருக்கிறது அதில் ஆய்வு செய்த போது

   The water was found to have total dissolved solids of 170,865 milligrams per litre (mg/l), nearly 90 times the permissible limit of 500 mg/l. Acidity level was at least 1.75 times more than the permitted level, while phosphate level was 186 mg/l and lead 3.36 mg/l – all much above the maximum limit. Presence of fluoride, boron, sulphate and nitrate were far higher than the stipulated levels.

   VV Minerals தொழிற்சாலையால் உருவான இந்த கழிவு நீரை சுற்றி வேலி அமைத்து ஆட்களை போட்டு யாரும் அங்கே செல்ல முடியாதபடி வைத்து இருக்கிறார்கள்… அப்படியும் சில ஆடு மாடுகள் சென்று அந்த நீரை குடித்து இறந்து இருக்கின்றன…

   ஏன் VV Minerals பற்றி உங்களை போன்ற ஆட்களோ வினவு போன்ற கம்யூனிஸ்ட்களோ வாய் திறக்கவில்லை — பதில் வேண்டும். ஸ்டெர்லைட்டை விட அதிக மாசை உருவாக்கும் SPIC மற்றும் TACL பற்றி ஏன் பேசுவதில்லை.

   எல்லாவற்றுக்கும் மேலாக ஒட்டுமொத்த தூத்துக்குடிக்கு மாசை உருவாகும் நிலக்கரியால் செயல்படும் அனல் மின் நிலையத்திற்கு எதிராக ஏன் போராடவில்லை ?

   கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களிடம் இருந்து பதில் வேண்டும்.

   • https://plus.google.com/share?url=https://www.vinavu.com/2013/12/18/meeting-against-sand-mafia-tuticorin/
    வினவு தோழர்கள் VV Minerals வைகுண்ட ராஜனின் டவுசரை கழற்றியதற்கான ஆதாரங்கள்.
    ஆகவே நீங்கள் கூறும் SPIC மற்றும் TACL ஆகியவை ஆபத்தென்றால் நிச்சயம் வினவு தோழர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ஸ்டெர்லைட் இப்போது ஆபத்தில் முதன்மையானது என்பதால் அதற்கு முன்னுரிமை.
    மற்றபடி மாசு ஏற்படுத்தும் மற்ற நிறுவனங்களை தண்டிக்க வேண்டும் ஆனால் ஸ்டெர்லைடை விட்டு விட வேண்டும் என்கிற உங்கள் வாதம் ஆபாசமானது.

    • நான் எங்கே சொன்னேன் ஸ்டெர்லைட்டை விட்டு விட வேண்டும் என்று ? நான் சொல்வது எல்லாம் தொழிற்சாலைகளை மூடுவது பிரச்சனையின் தீர்வு அல்ல என்பதே… சுற்றுசூழல் மாசுபடுத்துகிறது என்றால் உலகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மூடிவிட்டு கற்காலத்திற்கு போக வேண்டியது தான். விமானம் பைக் ட்ரெயின் பஸ் லாரி கார் என்று அனைத்தையும் தடை செய்ய வேண்டியது தான். பிரச்சனைக்கான தீர்வு இது அல்ல.

     சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்… தொழிற்சாலைகளை கண்காணிக்க நேர்மையான அமைப்புகளை உருவாக்க வேண்டும்… இதில் கம்யூனிஸ்ட்களையும் கிறிஸ்துவர்களையும் தள்ளி வைக்க வேண்டும் காரணம் அவர்களிடம் நேர்மை துளியும் கிடையாது. தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்…

     என்னை பொறுத்தவரையில் ஒரு பக்கம் விமானத்தை கண்டுபிடித்த போது இன்னொரு பக்கம் விமானம் கீழே விழுந்தால் உயிர் போகும் என்று பயந்து பாராச்சூட் கண்டுபிடித்தார்கள்…

     இது தான் சரியான தீர்வு, விமானத்தை தடை செய்வது தீர்வு அல்ல.

     ஸ்டெர்லைட் மூடுவது பிரச்சனைக்கான தீர்வு அல்ல. அது கம்யூனிஸ்ட் கிறிஸ்துவ மிஷனரிகளின் உள்நோக்கம் கொண்ட நேர்மையற்ற போராட்டம்.

     • //தொழிற்சாலைகளை கண்காணிக்க நேர்மையான அமைப்புகளை உருவாக்க வேண்டும்… இதில் கம்யூனிஸ்ட்களையும் கிறிஸ்துவர்களையும் தள்ளி வைக்க வேண்டும் //
      திராவிடர்களையும், முஸ்லிம்களையும் சேர்த்துக் கொள்ளலாமா ?
      //தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்…//
      கடைப்பிடிக்கவில்லை யென்றால் என்ன செய்வது மாட்டுமூளையாரே ? இப்போது அதுதானே பிரச்சினை.
      //விமானத்தை கண்டுபிடித்த போது இன்னொரு பக்கம் விமானம் கீழே விழுந்தால் உயிர் போகும் என்று பயந்து பாராச்சூட் கண்டுபிடித்தார்கள்…//
      இராவணன் சீதையை புஸ்பக விமானத்தில் தூக்கி கொண்டு போனபோது அதில் பாராசூட் இருந்ததா? ‘ஆம்’ என்றால் அதற்கு கம்பரோ காளியப்பனோ எழுதிய பாடல்களில் இருந்து சான்று தரவும். ‘இல்லை’ என்றால் பாராசூட் தயாரிக்க காலதாமதமானது மாதிரி மாசு தடுப்பு நடவடிக்கைகளில் நேரவிரயமானால் என்ன செய்வது?

      • எப்படி கம்யூனிஸ்ட்கள் 1962 இந்தியா சீனா போரின் போது சீனாவை ஆதரித்து இந்திய மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தார்களோ அதற்க்கு சற்றும் குறையாத நம்பிக்கை துரோகம் இந்த ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம். கம்யூனிஸ்ட்களின் ஈன செயலுக்கு அப்பாவி மக்களை தூத்துக்குடியில் பலியிட்டு இருக்கிறார்கள், குடியிருப்பு பகுதியை கொளுத்தி இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை தூண்டிய அனைவரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

   • https://www.vinavu.com/2013/12/18/meeting-against-sand-mafia-tuticorin/
    வினவு தோழர்கள் VV Minerals வைகுண்ட ராஜனின் டவுசரை கழற்றியதற்கான ஆதாரம்.
    நீங்கள் கூறியபடி SPIC மற்றும் TACL போன்றவையால் பிரச்சினை என்றாலும் வினவு தோழர்கள் விட்டுவைக்க மாட்டார்கள். ஸ்டெர்லைடால் ஆபத்து அதிகம் என்பதால் அதற்கு முன்னுரிமை.
    மற்றபடி மாசு ஏற்படுத்தும் மற்ற நிறுவனங்களை தண்டிக்க வேண்டும் ஆனால் ஸ்டெர்லைடை மட்டும் விட்டு விட வேண்டும் என்ற உங்கள் வாதம் ஆபாசமானது.

    • என் கேள்வி எல்லாம் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடியது போல் ஏன் வைகுண்டராஜனுக்கு எதிராக போராடவில்லை என்பதே… அதற்கு கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.

     ஸ்டெர்லைட்டை விட மிக அதிக சுற்றுசூழலை மாசுபடுத்துவது VV Minerals தான் ஆனால் அது பற்றி எந்த அய்யோக்கியர்களும் வாய் திறக்கவில்லை.

     உங்களின் நோக்கம் சுற்று சூழல் மாசு என்றால் நீங்கள் முதலில் போராடி இருக்க வேண்டியது VV Minerals எதிராக தான் ஆனால் அதை கம்யூனிஸ்ட் மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகள் செய்யவில்லை.

     உங்களின் நோக்கம் சுற்றுசூழல் மாசு அல்ல என்பதை நிச்சயம் சொல்வேன்…

     • //என் கேள்வி எல்லாம் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடியது போல் ஏன் வைகுண்டராஜனுக்கு எதிராக போராடவில்லை என்பதே… //
      என்னாங்க . .! பொசுக்குனு இப்படி கேட்டுப்புட்டீங்க . . !
      ஆனா நீங்க கேட்டதுல இருக்குற நியாயத்தப் பார்த்து எனக்கே கோபம் வந்து டக்குனு வினவுக்கு போனப் போட்டு நறுக்குனு கேட்டுப்புட்டேங்க !
      அவங்களும் இதுவரைக்கும் அவங்கள யாரும் இந்த மாதிரி கேட்டதில்லைன்னு சொல்லி ரகசியமா சில விபரத்தை சொன்னாங்க.
      வைகுண்டராஜன் வினவு கிட்ட “என்ன அண்ணாச்சி நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆனா இந்த ஸ்டெர்லைட் கிருத்துவ பாவாடைப் பயல கொஞ்சம் கவனிங்க”ன்னு கேட்டுக்கிட்டாராம். அதுனாலதான் இந்த போராட்டமெல்லாமாம் !
      அப்புறம் நாஞ்சொன்னேன் நறுக்குனு “ஏங்க ஸ்டெர்லைட் வேணும்னா கிருத்துவ இங்கிலாந்து பாவாடை நாடா இருக்கலாம் ஆனா அதை நடத்துற அகர்வால் நம்மவா இல்லையா? மணிகண்டன் வேற கோவிச்சுக்கிறாரு” ன்னு சொன்னேன். தீவிரமா யோசிக்கிறோம்னு சொல்லியிருக்காங்க . . !
      நீங்க இதை யாருகிட்டயும் சொல்லிறாதீங்க . . ! அடிச்சுகூட கேப்பாய்ங்க . . . சொல்லிறாதீங்க . . . . !

      • ஏண்டா VV Minerals எதிராக போராடவில்லை என்று கேட்டால் பதில் சொல்ல வக்கில்லை…

       வேதாந்தா நிறுவனத்தில் Church of England முதலீடு செய்து இருந்தது, அதன் முதலீடு திரும்ப பெற்ற பிறகு தான் ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. மோடி இங்கிலாந்து சென்ற போது அவரை அகர்வால் வரவேற்றார், அதன் பிறகு தான் இங்கே 100 நாள் போராட்டம் நடத்தப்பட்டது. வன்முறையை தூண்டியது முதல் அப்பாவி மக்கள் இறந்தது வரையில் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் சமூகவிரோதிகளான வினவு கூட்டங்களும் கிறிஸ்துவ மிஷனரிகளும் தான்.

       நிச்சயம் உங்களின் நோக்கம் சுற்றுசூழல் அல்ல.

       • //மோடி இங்கிலாந்து சென்ற போது அவரை அகர்வால் வரவேற்றார், //
        இதையேதான் இந்த வினவுக்காரங்க புடிச்சி தொங்குறாங்கப்பா . .
        மோடிக்கும் அகர்வாலுக்கும் கனெக்சன் இருக்குன்னு . .
        நான் இல்லைன்னு சொல்லி சத்தியம் பன்னியிருக்கேன்.
        இப்ப பாருங்க மணிகண்டனே எழுதியிருக்காருன்னு சொல்றாங்க . . . !

        • சரி அதுக்கு என்ன இப்போ ? ஏன் அகர்வால் மோடியை வரவேற்க கூடாதா ? வினவு கூட்டங்களின் இந்த பாசிஸ்ட் மனநிலையை விட கேவலமான மனநிலை உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. இவர்கள் தொழிலார்களுக்கு ஆதரவு என்று சொல்வார்களாம் பிறகு போராட்டம் என்ற பெயரில் தொழிற்சாலைகளை மூடி ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருவார்களாம் கேட்டால் அதற்கு பெயர் புரட்சி புடலங்காய் என்று சொல்வார்களாம்.

         உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாது.

     • அம்பி மணிகண்டா நோக்கு நாக்குல சனி பகவான் குந்திண்டிருக்காருன்னு தோணுது! நோக்கு ஒரு சமாச்சாரம் சொல்றேன், நன்னா கேட்டுக்கோ! மானனிய வைகுண்டராஜன்ஜி நம்ம மானனிய சுப்ரமணியஷுவாமிஜிக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். மதிமாறனை டிவி டிபேட்டுல சேக்காதேள்னு மானனிய எஸ்.வி.சேகர்ஜி ஃபோன்ல கூப்ட்டு பேசினதை எப்படி நீ மறந்துண்டாயோ நேக்கு தெரியலை! விவி மினரல்ஸ் கம்பெணியண்ட நம்மவா டொனேஷன் வாங்குனதெல்லாம் நோக்கு தெரியாது. கேசவன் ஜிகிட்டயோ, தூத்துக்குடி விபாக் கார்யவாஹ் அண்டயோ கேட்டான்னா குருபூஜையில மானனிய வைகுண்டராஜன் ஜி வெள்ளை கவர்ல எத்தனை ரோஸ்கலர் நோட்ட கட்டு கட்டா வெச்சார்னு வெலாவராயி சொல்வர். படியளக்குற பகவானப் போய் இப்படி அபாண்டமா பழி சுமத்தாதடா அம்பி!
      பொருட் குறிப்பு: மானனீய – ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை “பூஜைக்குரிய” என்ற பொருளில் அழைக்கும் பதம்
      விபாக் கார்யவாஹ் – ஆர்.எஸ்.எஸ்-ன் மூன்று மாவட்ட செயலாளர்.
      பேட்டா: மணிகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ் ட்ரோல்களுக்கு தினசரி 300 ரூபாய் கொடுக்கிறார்கள். புத்தாண்டில் 100 ஏற்றியதால் இந்தத் தொகை, போன வருஷம் 200 ரூபாதான் கொடுத்தார்கள்.

 3. வினவு கம்யூனிஸ்ட் வேடம் தரித்த ஒரு கிறிஸ்துவ மிஷனரி உலகில் மாற்று மதங்கள் உள்ள அனைத்து நாடுகளிலும் கிறிஸ்துவம் செய்த அழிவை தூத்துக்குடியில் கிறிஸ்துவ மிஷனரிகள் ஆரம்பித்து இருக்கிறார்கள்… அதற்கு கம்யூனிஸ்ட் வேடம் போட்ட வினவு போன்றவர்கள் கையாளாக செயல்படுகிறார்கள். இதில் மக்கள் நலன் எதுவும் இவர்களுக்கு கிடையாது… இது முழுக்க முழுக்க நேர்மையற்ற பொய்களின் அடிப்படையில் நடக்கும் போராட்டம்.

  • ஏண்டாப்பா அம்பி, செத்த நா லீவுன்னு போயிட்டு வர்றதுக்குள்ள ஏதாச்சும் படிச்சு கொஞ்சம் அப்டேப் பண்ணிண்டிருப்பேன்னு பாத்தா, ஏண்டா இப்டி படுத்துறே?
   கிறிஸ்டின் சதி, கிறிஸ்டின் சதின்னு மூச்சுக்கு மூண்ணூறு தடவை ஏகாத்மதா ஸ்தோத்திரம் மாதிரி சொன்னா போதுமா, செத்த யோசிக்க மாட்டியோ என்ன? வேதாந்தா கார்வாள் லண்டன்ல ஒரு விதேசி, கிறிஸ்டீன் தேசத்துலதானே ஹெட் ஆபீஸ் வெச்சுண்டு கல்லா கட்றாள்! ஜீசஸ் தேசத்துல குப்பையை கொட்டிண்டு வியாபாரம் செய்துண்டு இங்கே நம்ம தூத்துக்குடி ஊரையும் குப்பையாக்குறா? மணிகண்டா நோக்கு பஞ்சவடி சேத்துப்பட்டுல இருந்து படியளக்குறாளே டெய்லி 300 ரூபா பேட்டா, அதுவே சாட்சாத் வேதாந்தா பகவான் அருளியதுன்னு நேக்கு தெரியாதோ? எல்லாம் நம்ம வினாயக்ஜிய சொல்லணும், புத்தியே இல்லாத முட்டாளெல்லாம் ட்ரோலா இறக்கி பேரை கெடுக்க விடுறாள்!

   • வினவு ரொம்ப மோசம் !
    நமக்கெல்லாம் பேட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க . . !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க