டக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட், காவி பாசிசம் எதிர்த்து நில் ! என்ற முழக்கத்தில் 23-02-2019 சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு திருச்சி உழவர் சந்தை திடலில் நடக்க இருந்த மாநாட்டிற்கு திருச்சி மாநகர காவல்துறை வழக்கம் போல் தனது அதிகார சட்ட வரம்புகளை மீறி கருத்துரிமையை மறுத்தது. போலீசாரின் உத்தரவிற்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு 13-02-2019 அன்று போலீசாரின் உத்தரவை ரத்து செய்து மாநாட்டிற்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (15-02-2019) திருச்சி காவல்துறை ஆணையரிடம் தீர்ப்பு நகலை கொடுத்து மாநாட்டிற்கு அனுமதி வழங்கக் கோரினோம். காவல்துறையும் அனுமதி வழங்குகிறோம் எனக் கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பொது மக்கள் ஆதரவுடன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் காவல்துறையினர் பொய் வழக்கு போடுவது, பிரச்சாரத்தை தடுப்பது, மாநாடு போஸ்டரை கிழிப்பது என செய்து வருகின்றனர். கருத்துரிமையைத் தடுக்கும், நீதிமன்ற உத்தரவை மீறும், அத்தகைய காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் அதிகாரம்

தோழமையுடன்,
வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. இல்லாததையும் பொல்லாததையும் கைதட்டுதழுக்காக கூறி எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றாமல் அறிவுடனும் ஆக்கபூர்வமாக நடந்து கொண்டால் நன்று.
    இந்தியாவை எதிர்போரும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முற்றாக ஆதரிப்போரும் பேசவுள்ளனர்.
    வரும் தேர்தலை நினைவில் கொண்டு பொறுமையுடனும் சமனிலையுடனும் பேசி எதிர்பை தேர்தல் வாக்கில் காட்டினால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் இருக்கும்.

    சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்க கூடாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க