நாடார்கள் வரலாறு – கறுப்பா? காவியா? என்ற இந்த புத்தகம் மிக முக்கியமான ஒரு வரலாற்றுச் சூழலில் வெளிவந்திருக்கிறது. காவி கார்ப்பரேட் பயங்கரவாதம் நாட்டை சூழ்ந்து வரும் நிலையில் முந்தைய வரலாற்றுக் காலங்களில் காவியை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தின் சுருக்கத்தை இந்த நூல் முன்வைக்கிறது.

இந்த நூலை  படிப்பதன் மூலம், நடைமுறையில் நாடார் சமூக மக்கள் வரலாறு கறுப்பா காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா? தென்தமிழக இந்து நாடார் மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா? திராவிட இயக்கம் ஆலய நுழைவை அரசியல் இயக்கமாக எடுப்பதற்கு முன் 1897-ம் ஆண்டில் நடந்த கமுதி ஆலய நுழைவுப் போராட்டம், அதற்கும் முந்தைய திருச்சுழி கோவில் நுழைவுப் போராட்டம் ஆகியவைதான் தமிழ்நாட்டில் முதல் ஆலய நுழைவுப் போராட்டங்களா? ஆகிய கேள்விகளுக்கு பதில்களை அறியலாம்.

மேலும் நாடார்கள் சமூக ரீதியாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தின் இதர சாதி மக்களுக்கும் இது எப்படி பொருந்தும், தோள் சீலை போராட்டம், திருச்சுழி கோவில் நுழைவு போராட்டம், விவேகானந்தருக்கு புரவலராக இருந்த பாஸ்கர சேதுபதியின் பார்ப்பனிய ஒடுக்குமுறை ஆகியவற்றையும் அறியலாம். பார்ப்பனிய கொடுங்கோன்மையிலிருந்து விடுபடுவதற்கு நாடார்கள் இதர சாதி மக்கள் கிறித்த மதத்திற்கு மதம் மாறியது, அய்யா வைகுண்டநாதரின் சுயமரியாதை வழிபாட்டுப் போராட்டம் ஆகியவற்றையும் அறியலாம்.

நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா? என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

நூல்: நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ?
நூலாசிரியர்: வழக்கறிஞர் தி. லஜபதிராய்

பக்கம்: 140
விலை: ரூ. 100

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Read more

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)


Paypal மூலம்-வெளிநாடு: 5$ (தபால் கட்டணம் சேர்த்து)


தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered Book post)  முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும்.

வெளிநாட்டிற்கு Airmail – வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும்.