பொள்ளாச்சி பெண்கள் பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகளை பாதுகாத்து வரும் துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனையும் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பாண்டியராஜனையும் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும்; உயர்நீதிமன்ற நீதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இவ்வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விருத்தாச்சலம் பகுதி மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்டு கட்சி, சி.பி.எம். விடுதலை, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சார் ஆட்சியர் பிரசாந்த் அவர்களை சந்தித்து மனு கொடுத்ததோடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம்.


மார்ச் 23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளில் காவி பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் திருவள்ளூர் –   டி ஐ மெட்டல் ஃபார்மிங் ஆலையில் வாயில் கூட்டம் நடைபெற்றது.

பு.ஜ.தொ.மு. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் ச.மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலை வாயில் கூட்டத்தில், சங்கத்தின் சிறப்புத் தலைவரும் பு.ஜ.தொ.மு.வின் மாநில பொருளாளருமான தோழர் பா. விஜய குமார் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தேர்தல் பாதையில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதையும் நாம் ஏன் பகத்சிங் பாதையில் செல்ல வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார். 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு அரசியல் முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக சங்க பொருளாளர் தோழர் சரவணன் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.

படிக்க:
நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?


தகவல்:
பு.ஜ.தொ.மு.,
திருவள்ளுவர் மேற்கு மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க