பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

பத்திரிகையாளர் மு.வி. நந்தினி தோழர் மருதையனிடம் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. இதில் பெண்களின் இணையப் பயன்பாடு, ஆதிக்க சாதி சங்கங்களின் அமைதி, கொங்கு பகுதியின் சமூக பொருளாதாரம் குறித்து விரிவாக பேசப்படுகிறது.

1

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையனை நேர்காணல் செய்கிறார் பத்திரிகையாளர் மு.வி. நந்தினி ! நேர்காணலின் இரண்டாம் பகுதி இது.

இதில் கொங்கு பகுதியின் சமூக பொருளாதார அரசியல் பின்னணி குறித்து தோழர் மருதையன் விரிவாக விளக்குகிறார். ஈமு கோழி பெயரில் ஏமாற்றுவதும் சொந்த சாதிப் பெண்களை பாலியல் பண்டமாக பயன்படுத்துவதும் எப்படி ஒரே மனநிலையில் வெளிப்படுகிறது என்பதை விளக்குகிறார். மேலும் ஆதிக்க சாதி சங்கங்கள், இந்துமதவெறி அமைப்புகள் எவையும் பொள்ளாச்சி கொடூரம் குறித்து எந்த வினையும் ஆற்றவில்லை. அதன் மர்மம் குறித்தும் பேசுகிறார்.

இறுதியாக பெண்கள் இணையத்தையே பயன்படுத்தாமல் இருந்தால் பாதுகாப்பாக இருந்து விடலாம் எனும் கருத்தின் அபத்தத்தை விரிவாக விளக்குகிறார். எனில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது எப்படி, குற்றவாளிகளை யார் தண்டிப்பது என்பதையும் விளக்குகிறார்.

பாருங்கள், பகிருங்கள்!

இரண்டாம் பாகம்:

முதல் பாகம்: