மோடி என்றால் பீதி என்று அர்த்தம் !

க்களவை தேர்தல் நெருங்க இருக்கிற நிலையில், மோடி தலைமையிலான  பாஜக அரசு பதட்டத்தில் உள்ளது. எதையாவது செய்து மீண்டும் பதவியில் அமர்ந்துவிட வேண்டுமென மோடி-பாஜக கும்பல் துடித்துக் கொண்டிருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான தேசபக்தி முழக்கங்கள் புஸ்வானமாகிவிட்ட நிலையில், புதன்கிழமை காலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

“இன்று 11.45 லிருந்து 12 மணிக்குள் முக்கிய அறிவுப்பு ஒன்றை அறிவிக்கப்போகிறேன். அனைவரும் தொலைக்காட்சி/சமூக வலைதளங்கள்/வானொலி வாயிலாக கட்டாயம் அறிந்து கொள்ளவும்” என்ற அந்தப் பதிவைப் பார்த்து, நாடே பதட்டத்தில் உறைந்தது. ‘பதட்டம்’ என்கிற வார்த்தையை பிரயோகிக்க தயங்கிய வெகுஜென ஊடகங்கள் ‘நாடே ஆர்வமாக’ உள்ளதாக பயந்துபடியே பிரேக்கிங் நியூஸ் போட்டார்கள்.

மக்களின் பதட்டத்தை ரசித்த ‘சாடிஸ்ட்’ மோடி நண்பகல் 12.10 வாக்கில் ‘முக்கிய’ அறிவிப்பை வெளியிட்டார். எதிரிகளின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி என்பதைத்தான் மோடி ‘முக்கிய’ செய்தியாக சொன்னார்.  பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதை அறிவித்த வாஜ்பாயி, பணமதிப்பு நீக்கத்தை அறிவித்த மோடி என இந்தியாவை ஆண்ட பாசிச பாஜகவினரைத் தவிர வேறு எந்த பிரதமரும் இத்தகைய ‘முக்கிய’ அறிவிப்புகளை செய்து மக்களை பதட்டமடைய வைக்கவில்லை. பாசிசத்தின் சிறப்பே அதுதானே?!

படிக்க:
செயற்கோளைத் தாக்கும் ஏவுகணை | மோடியின் தேர்தல் வான வேடிக்கை !
பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

மோடியின்  ‘முக்கிய’ அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் மக்கள் எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டார்கள். ஐந்தாண்டுகால மோடி ஆட்சியின் மிகப் பெரும் இழிசாதனைகள் பலவற்றை நினைவுபடுத்தி மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.

“இது வான்வெளி தொடர்பானது நண்பர்களே, உங்களுடைய பணம் பத்திரமாகிவிட்டது, போய் வேலைப் பாருங்கள்” என்கிறார் பத்திரிகையாளர் சகரிகா கோஷ்.

“மோடியின் ஏவுகணை சோதனையால் நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே…!” என கேட்கிறார் சிவராமன்.

“அவென்சர்ஸ் முன்னெடுப்பில் மோடியும் மூழ்கிப்போயிருக்கிறார். எனவே, கருந்துளைகள் திறந்துகொண்டு அதிலிருந்து தனோசும் அவருடைய இராணுவமும் தாக்கினால், இந்தியா அதை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றும்” என்கிறார் ஸ்காட்சி.

செயற்கோள்களை வீழ்த்தும் ஏவுகணை குறித்து 2012-ம் ஆண்டிலேயே இந்தச் செய்தி வெளியாகிவிட்டதை சுட்டிக்காட்டுகிறார் மகேஷ் லங்கா.

“ஓ…இன்னைக்கு உலக நாடக தினமா? இதுவே அனைத்தையும் சொல்லிவிடுகிறதே மோடிஜி!” என்கிறார் துஷ்யந்த்.

பிரதமர் மோடி ஏலியன்களுடன் உரையாடுகிறார்…

“எனக்குத் தெரிந்த கார் ஓட்டுநர் அண்ணன் ஒருவர்,

ப்ரோ அவசரப்பட்டு ஏடிஎம்ல இருந்த காசு எல்லாத்தையும் எடுத்துட்டேன்…2400தான் வெச்சிருந்தேன்

ஏன் ப்ரோ

ஏதோ அறிவிப்புன்னு சொன்னாங்க, அதான் பழைய ஞாபகம் வந்துடுச்சு…உடனே எல்லாத்தையும் எடுத்துட்டேன்.

நான் வாயை மூடிக்கொண்டேன்” என்கிறார் சஞ்சீவி சடகோபன்.

இந்திய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இன்றிரவு டிவி ஸ்டுடியோக்களில் இப்படி மிதக்கப்போகிறார்கள்…

வின்வெளி உடையிலும், செயற்கோளில் அமர்ந்தும், இந்திய கொடி பறக்கும் ஏவுகணை மீது அமர்ந்தும் – என பகடி செய்கிறார் மேக்நாத்.

பிரதமர் மோடியின் அறிவிப்பை கேலி செய்யும் மக்கள் மிகவும் மோசமானவர்கள். வரிசையில் நிற்க வைக்கப்படவில்லையே என்பதற்காக அவருக்கு நன்றி அல்லவா சொல்லியிருக்க வேண்டும்? என்கிறார் ஆதித்ய மேனன்

“சிறப்பான பணி DRDO. உங்களுடைய பணியால் பெருமை கொள்கிறேன்.

பிரதமருக்கும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்… உலக நாடக நாள் வாழ்த்துகள்!” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

“மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நான் DRDO சாதனை குறித்து மகிழ்கிறேன். நாம் இப்போது கையால் மலம் அள்ளும் முறையை தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஒழிப்பது குறித்து விவாதிக்கலாமா? மன்னிக்கவும், சொல்ல மறந்துவிட்டேன், மலக்குழி மரணங்களில் குஜராத் மாநிலம்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. உண்மையில் இது சாதனைதான்” என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி.

“விண்வெளியில் ராக்கெட்டை சுட்டுவீழ்த்தும் தொழிற்நுட்பம் கொண்ட நாட்டில் 350 கிலோ வெடிகுண்டு வண்டியை கன்டுபிடிக்க முடியவில்லை” என்கிறார் இவர்.

இதை அறிவியலாளர்களே அறிவித்திருக்கலாம் அல்லவா? அப்புறம் தலைமை காவலாளி என்னதான் செய்வார்?

”அமேசான் காட்டில், நீங்கள் நடு இரவில் மாட்டிக்கொண்டால், பயங்கரமாக குளிரும், உங்கள் உடல் உறைந்து போகும்! மரணிக்கவும் வாய்ப்புள்ளது!

Reaction:நாங்க ஏன்டா நடு ராத்திரி அமேசான் காட்டுக்கு போகப்போறோம் Moment! 🙊”

“அறிவிப்பு என்று சொன்னதும் வங்கி, ஏ.டி.எம். நோக்கி ஓடுகிறார்கள். ஜனநாயகவாதிகள் அஞ்சுகிறார்கள். எப்படியும் கேடுகெட்ட செய்தியைத்தான் சொல்லப்போகிறார் என்பதைத்தவிர யாரும் எதுவும் நினைக்கவில்லை. மக்களிடம் எவ்வளவு அவநம்பிக்கை, கெடு உணர்வு.! மோடி என்றால் இனி தமிழில் பீதி என்று அர்த்தம்”

தொகுப்பு: