டந்த ஏப்ரல் 16 அன்று, ரசியாவைச் சேர்ந்த சுதந்திரமான லெவடா கருத்துக் கணிப்பு மையம் நடத்திய வாக்கெடுப்பின் முடிவு வெளியிடப்பட்டது. இந்த வாக்கெடுப்பு ரசிய வரலாற்றில் தோழர் ஸ்டாலினின் பங்களிப்பு குறித்து ரசியர்களின் கருத்தை அறிவதற்காக நடத்தப்பட்டது. மார்ச் 21 – 27 காலகட்டத்தில் 1,600 பேரிடமிருந்து இந்த வாக்கெடுப்பை நடத்தியுள்ளது இந்நிறுவனம்.

இந்த வாக்கெடுப்பில் சுமார் 70% ரசியர்கள், ரசிய வரலாற்றில் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் நேர்மறையான பங்களிப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

2019-ம் ஆண்டு லெவடா மையம் எடுத்த கருத்துக் கணிப்பில், சுமார் 70% ரசியர்கள், ரசியாவின் வளர்ச்சியில் ஸ்டாலின் ஒரு நேர்மறையான பங்களிப்பு செய்திருக்கிறார் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

தோழர் ஸ்டாலின்ஸ்டாலின் குறித்த கருத்தாக்கம், கடந்த 2000-ம் ஆண்டிலிருந்தே ஒரு சர்வாதிகாரி என்ற நிலையிலிருந்து தனிச்சிறப்பான தலைவர் என்பதாக உயர்ந்து வந்திருக்கிறது. மக்கள் மத்தியில் சோவியத் காலகட்டத்தின் மதிப்பு அதிகரித்திருப்பதன் தாக்கத்தால், சோவியத் கீதம், சோவியத் செம்படைகளை ஒத்த இராணுவ அணிவகுப்புகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சோவியத் காலகட்டத்தை ஒத்த பதக்கம் அளிப்பது என பல சோவியத் மாடல்களை ரசிய அதிபர் விளாடிமிர் புதின் மீள்நடைமுறைப்படுத்தியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டில் ஸ்டாலினின் பங்களிப்பு நேர்மறையானது என்போரின் அளவு வெறும் 54%-ஆகத்தான் இருந்தது. 32% பேர் ஸ்டாலினின் பங்களிப்பு எதிர்மறையானது என்று கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்த எதிர்மறையான பங்களிப்பு என்ற கருத்து 2019-ம் ஆண்டு 19%-ஆக குறைந்திருக்கிறது.

“மோசமான, கொடூரமான, மற்றும் மக்களைப் பற்றி கண்டுகொள்ளாத தற்போதைய அரசாங்கத்திற்கு மாற்றாகவும், நீதியின் அடையாளமாகவும் ஸ்டாலினைப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்” என்று அறிவியல் கல்வி நிலையத்தைச் சேர்ந்த சமூகவியலாளர் லியோண்டி பைசோவ் கூறியிருப்பதாக ஆர்.பி.சி. செய்தித் தளம் தெரிவிக்கிறது.

தோழர் ஸ்டாலின் குறித்து ஏகாதிபத்திய, முதலாளித்துவக் கும்பல் பரப்பியுள்ள அவதூறுகளுக்கு இதன் மூலம் தக்க பதில் தெரிவித்திருக்கின்றனர். ஸ்டாலின் பெரும் குற்றங்களைச் செய்துள்ளார் என்ற அவதூறை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2008-ம் ஆண்டு 60 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு அது 45 சதவீதமாக குறைந்துள்ளது, ஏகாதிபத்தியத்தின் சாயம் வெளுத்து வருவதைக் காட்டுகிறது.

படிக்க:
மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை !
♦ தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

ஸ்டாலினுக்கு ஆதரவாக வாக்களித்த 51% பேரில் 41% பேர் அவரை மரியாதையோடு பார்ப்பதாகவும், 6% பேர் அவரின் ஆதரவாளர்கள் என்றும், 4% பேர் அவரை வியந்து பாராட்டியும் உள்ளனர். 26% பேர் அவர் குறித்து நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ கருத்துக்களை கொண்டிருக்கவில்லை. மொத்தத்தில் 13% பேர் மட்டுமே ஸ்டாலினை வெறுப்பதாகவும் விரும்பவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக, ரசிய சமூகம் ஸ்டாலின் குறித்த பார்வை மூன்று பெரும் மாற்றங்களைத் தாண்டி வந்துள்ளது என்கிறார் கரினா பிபியா. 2000-களில் நேர்மறை, எதிர்மறைப் பார்வை இரண்டுமே சம அளவில் இருந்தது. 2008 – 2014 காலகட்டங்களில் இப்பார்வை நடுநிலைப் பார்வையாக மாறியது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு நடுநிலை மற்றும் எதிர்மறைப் பார்வைகள் குறையத் தொடங்கியுள்ளன என்கிறார் கரினா பிபியா.

முதலாளித்துவம் ஏற்படுத்தியிருக்கும் மாயையும், பரப்பியிருக்கும் பொய்களும், மக்கள் மத்தியில் முதலாளித்துவத்தின் சாயம் வெளுக்கும்போது சேர்ந்து கரைந்து போகும் என்பதற்கு ரசிய சமூகம் ஒரு கண்கூடான சாட்சி !


நந்தன்
நன்றி : த மாஸ்கோ டைம்ஸ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க