பகத்சிங்!
இன்று தூக்கிலிடப்பட்ட நாள்.
இல்லை!
கோடிக்கணக்கான இளைஞர்கள்
பகத்சிங்குகளாக
தட்டி எழுப்பபட்ட நாள்.
பகத்சிங் என்றால்
நமக்குத் தெரிந்தது,
இளம் வயதில்
தூக்கு மேடை ஏறியவன்.
தேச விடுதலைக்காக போராடியவன்
தியாகம் செய்தவன்.
அவ்வளுவுதானே!
வணிகம் செய்ய வந்த
பிரிட்டிஷ்காரன்
சொந்த நாட்டு மக்களை
அடிமைப்படுத்தியதையும்,
அதிகாரம் செலுத்தியதையும்,
அனைத்து வளங்களையும் சுரண்டி
தன்னுடைய நாட்டிற்கு
எடுத்துச் சென்றதையும் கண்டு
கோபம் கொண்டவன்தான்
பகத்சிங்.
தன்னுடைய
விடுதலைக்காகப் போராடிய
இந்திய மக்களை
ஜாலியன் வாலாபாக் எனும் இடத்தில்
படுகொலை செய்த
பிரிட்டிஷ் அதிகாரிகளை கண்டு
சினம் கொண்ட சிறுவன் அவன்.
அந்தப் படுகொலையின்
ரத்தம் தோய்ந்த மண்ணை
உற்று நோக்கி
உணர்வேற்றிக் கொண்டவன்.
இனி நம்முடைய வேலை
கோடானுக்கோடி உழைக்கும் மக்களின்
விடுதலைதான் என
சிந்தனை தெளிவுடன்
மனப்பூர்வமாக
பொறுப்புகளை
தன் தோள்களில் சுமந்தவன்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!