மரணத்தை வென்றவன் | சிறு வெளியீடு

ரணத்தோடு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை முடிகிறது. ஆனால், அந்த மரணம்தான் மாவீரர்களைப் பிறப்பிக்கிறது. பொதுவாக, மரணத்தைக் கண்டு மனிதர்கள் அஞ்சுகிறார்கள். அந்த மரணமோ மாவீரர்களைக் கண்டு அஞ்சுகிறது.

மக்களுக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகவும் மரணத்தை நேருக்கு நேர் சந்தித்து, அதனை அச்சமடையச் செய்த ஒரு மாவீரன் இந்த மண்ணில் வாழ்ந்தான். அவனது வீரமும், தியாகமும் நிறைந்த கதை உங்களுக்குத் தெரியுமா?

தூக்குக் கயிறு இறுக்கிய போதும் தாய்நாட்டு மண்ணைப் பார்த்து புன்னகைத்த அந்த புரட்சியாளனை உங்களுக்குத் தெரியுமா? நாட்டுக்காக, நமக்காக துன்பங்களை சித்திரவதையை இன்முகத்துடன் ஏற்ற அந்த மாமனிதனை உங்களுக்குத் தெரியுமா?

நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய இன்பங்களை அற்ப சுகமென்று தூக்கியெறிந்த அந்த தியாகியை உங்களுக்குத் தெரியுமா?

அவன், சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம் என மார் தட்டிக் கொண்டு நின்ற கொள்ளைக்கார கொடுங்கோல் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை தூக்கு மேடையிலிருந்து காறி உமிழ்ந்தவன். தூக்குக் கயிற்றை முத்தமிட்டபடி, ஏ, வெள்ளைக்கார அதிகாரிகளே! நீங்கள் பாக்கியசாலிகள், இந்திய மண்ணின் வீரர்கள் தங்கள் நாட்டின் விடுதலைக்காக புன்னகையோடு சாவைத் தழுவும் காட்சியை நேரில் பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று உலகையே அச்சுறுத்திய வெள்ளை அதிகாரிகளை எள்ளி நகையாடிய உண்மையான வீரன் அவன்.

அவன், தன்னைப் பெற்று வளர்த்த தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்த மகன். அவனது வாழ்வும், மரணமும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் போராட்டத் தீயை மூட்டியது. இன்றும் இந்த நாட்டின் விடுதலைக்காகவும், புரட்சிக்காகவும் போராடும் போராளிகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக திகழ்கிறது அவனது வாழ்க்கை.

அவன்தான் பகத்சிங். மரணத்தை வென்றவன். தான் ஏற்றுக் கொண்ட நாட்டு விடுதலையென்ற லட்சியத்தைக் கொண்டு மரணத்தை கூறு போட்டவன்.

மக்களின் வாழ்க்கையை சீரழித்த சுயவவர்களை அறிவாளிகளென்றும், மக்களை கொன்ற கோழைகளை மாவீரர்களென்றும், நாட்டுக்கு துரோகம் செய்த துரோகிகளை தேசத்தலைவர்களென்றும் நமது பாடப்புத்தகங்கள் பொய் பரப்பி வருகின்றன. வெள்ளைக்காரன் தன் ஆசன வாயால் சொன்ன பொய்தான் வரலாற்று அறிவாக நமது மூளையில் பதிய வைக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையான மாவீரனைப் பற்றி பாடப் புத்தகங்கள் மௌனம் சாதிக்கும் மர்மமென்ன?

வெளியீடு :
மரணத்தை வென்றவன்

வெளியிடுவோர் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு

முதல் பதிப்பு : செப்டம்பர் 2024

நன்கொடை : ₹ 20
G-Pay No: 9444836642

தொடர்புக்கு : 9444836642
மின் அஞ்சல் : rsyftamilnadu@gmail.com

முகவரி :
எண். 464, ரோட்டு தெரு,
வெங்களத்தூர் கிராமம்,
வெண்பாக்கம் தாலுக்கா,
திருவண்ணாமலை மாவட்டம் – 604 410.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க