ர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணை தொடங்கியிருக்கிறது. தனது தொடக்க நிலை வாதங்களை அரசின் சிறப்பு வழக்கறிஞர் பாலன் முன்வைத்திருக்கிறார்.

அரசின் சிறப்பு வழக்கறிஞர் பாலன்

“கொலையாளிகளுக்கு கவுரி லங்கேஷுடன் எந்த முன்விரோதமும் கிடையாது. வலதுசாரி பயங்கரவாத குழு ஒன்றின் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கிறது.

துர்ஜனர்களை (தீய சக்திகளை) கொலை செய்வதென்பது வன்முறையல்ல என்றும் அது ஒரு புனிதமான ஆன்மீக நடவடிக்கை என்றும் கொலையாளிகள் நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர்.  கொலையில் நேரடியாக தொடர்புள்ளவர்கள் 18 பேர். இவர்களில் பத்து பேர் கர்நாடகத்தையும் மற்றவர்கள் மகாராட்டிரத்தையும் சேர்ந்தவர்கள்.

படிக்க:
கவுரி லங்கேஷை படுகொலை செய்த சனாதன் சன்ஸ்தா ! குற்றப்பத்திரிகை தாக்கல் !
♦ விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா !

கொலையாளிகள் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பின் கொள்கை அறிக்கையான க்ஷத்ர தர்ம சாதனாவை பின்பற்றுபவர்கள். 1995-ல் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, துர்ஜனர்களின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும் என்றும் அவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்றும் கூறுகிறது. அந்த அடிப்படையில் இடது சாரி சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் செயல்வீரர்களுமான 30 பேரின் கொலைப் பட்டியலை இந்தக் குழு  தயாரித்திருக்கிறது.

கவுரி லங்கேஷைக் கொலை செய்த குற்றவாளிகள் இந்த கொள்கை அறிக்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஒரு தெய்வீக அரசு நிறுவப்படும் என்று அந்த கொள்கை அறிக்கை கூறுவதை தீவிரமாக நம்புகிறவர்கள்” என்ற முன்னுரையுடன் தனது வாதத்தை தொடங்கியிருக்கிறார் வழக்கறிஞர் பாலன்.

இது இன்னும் ஒரு கொலை வழக்கு அல்ல. பார்ப்பன பயங்கரவாதம்தான் இதற்கு அடிப்படையாக இருக்கின்ற சித்தாந்தம் என்பதை வழக்கறிஞர் பாலனின் வாதங்கள் தெளிவுபடக் கூறுகின்றன.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழுவின் குற்றப்பத்திரிகை, மிக முக்கியமான இன்னொரு உண்மையையும் வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கும் சனாதன் சன்ஸ்தாவுக்கும் ஆயுதப்பயிற்சி வெடிகுண்டு பயிற்சி அளித்தவர்கள் ஒரே குழுவினர்தான் என்பதும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு பேர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புள்ளவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

பிரக்ஞா சிங் தாகூரை நாடாளுமன்ற உறுப்பினராக நிறுத்தியதன் மூலம் இந்து பயங்கரவாதம் என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக கூறியிருந்தார் மோடி.

இந்து பயங்கரவாதமும் பாசிசமும் அதிகாரபூர்வ அரசுக் கொள்கைகளாக அறிவிக்கப்படவேண்டியதுதான் பாக்கி. அவ்வாறு அறிவித்து விட்டால், அரசே க்ஷத்ர தர்ம சாதனாவை அமல் படுத்த தொடங்கிவிடும் என்பதால், தனியே ஒரு சனாதன் சன்ஸ்தா தேவைப்படாது.

மோடி வென்றாலும் தோற்றாலும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அபாயம் இதுதான்.


வைரம்


இதையும் பாருங்க…

கவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை

முதல் பாகம் :

இரண்டாம் பாகம் :

3 மறுமொழிகள்

  1. நேர்மையின்மை பொய் பித்தலாட்டங்களின் மொத்த உருவம் இந்திய கம்யூனிசம், கேட்டால் நேர்மையின்மைக்கு பெயர் தான் புரட்சி என்று சொல்வார்கள்.

    • இந்தக்கட்டுரைக்கும் உங்களோட பின்னூட்டத்துக்கும் தொடர்பு ஏதாவதும் இருக்கிறதா? கருத்து சொல்றதுலேயே நேர்மையில்ல. இதுல கம்யூனிசத்தை நேர்மையில்லைன்னு ஒரு கருத்து வேற.
      நல்ல பக்தாள். நொள்ளை கருத்து!

    • என்ன மணி மாமா,

      சவுண்டு பலமா இருக்கு ? டவுசர் கிழிஞ்ச சத்தம் கேட்டதே ?..

      ஓ… காவிக் கோமணத்தில இருக்க இரத்தக் கறை தெரிஞ்சிடுச்சேன்னு வருத்தமா இருக்கா?

      நீ ஏன் மணி மாமா கவலப் படுற ? .. சிபிஐ, என்.ஐ.ஏ, உச்சநீதிமன்றம் எல்லாம் உங்காளுவதான குந்திக்கினுக்கிறானுங்க … கவலப்படாத உன் கூட்டாளிகள சீக்கிரம் விடுவிச்சிடுவாங்க …

      பதட்டத்துல பயங்கரமா உளறுரேலே???

Leave a Reply to அனானியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க