த்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான கவுரி லங்கேஷின் படுகொலையை திட்டமிட்டு நடத்தியது ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பே என கர்நாடக போலீசு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (23-11-2018) தாக்கல் செய்துள்ள 9235 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த 18 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கவுரி லங்கேஷ் படுகொலையில் சனாதன் சன்ஸ்தாவின் துணை அமைப்பான ஹிந்து ஜனஜக்ருதி சமிதியின் புனே பொறுப்பாளரான அமோல் காலே முக்கியக் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார். ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த பரசுராம் வாக்மர் என்பவர் இந்தக் கொலையை செய்ததாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

அழைத்துச் செல்லப்படும் விரேந்திர தவாடே

சனாதன் சன்ஸ்தா அமைப்பின் பத்திரிகையான ’சனாதன் பிரபாத்’-ன் ஆசிரியராக இருந்த விரேந்திர தாவ்டே 2010-11-ம் ஆண்டுகளில் படுகொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் தாவ்டே, நரேந்திர தபோல்கரின் கொலை வழக்கில் கைதான உடன், அந்த இடத்துக்கு அமோல் காலே வந்ததாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இவர்களே இந்தக் கொலையை செய்வதற்குத் தேவையான நிதி உதவியை அளித்ததாகவும் தெரியவந்துள்ளது.

படிக்க:
♦ சனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு விஷக் கொடுக்கு
♦ தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி !

இந்துத்துவ அமைப்புகளின் துணையுடன் சனாதன் சன்ஸ்தா படுகொலையை செய்ததாகவும் இந்தக் கொலையை ஐந்தாண்டுகளாக திட்டம் தீட்டி செய்ததாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ். பாலன் தெரிவித்துள்ளார்.

சனாதன் சன்ஸ்தா வெளியிட்டுள்ள ‘ஷத்திரிய தர்ம சாதனா’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ள ‘கொள்கை’களையும் ‘விதி’களையும் கண்டிப்புடன் கடைப்பிடித்து இந்தக் கொலையை செய்திருக்கிறது காவி வெறி கும்பல். அதன்படி கவுரி, ‘துர்ஜனம்’ அதாவது, ‘கெட்ட மனிதர்’. காவி வெறி கும்பலின் கொள்கை, விதிகளின்படி, தங்களை விமர்சிப்பவர்களை கொல்ல வேண்டும் என திட்டமிட்டு பட்டியல் தயாரித்துள்ளனர்.

சனாதன் சன்ஸ்தாவின் கொலைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சித்தார்த் வரதராஜன், அந்தாரா தேவ் சென், சமன்லால்

அந்தப் பட்டியலில் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன், அந்தாரா தேவ் சென்,  ஜேஎன்யூ பேராசிரியர் சமன் லால், பாஞ்சாபி நாடக எழுத்தாளர் அடம்ஜித் சிங் உள்ளிட்ட 26 பேர் அடக்கம். இதில் எட்டு பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், டி.என்.ஏ. மாதிரிகள், சிசிடிவி ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் 18 பேரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி ஆகியோரின் கொலையில் தங்களது தொடர்பை குற்றம்சாட்டப்பட்டோர் உறுதிசெய்ததாக போலீசு தரப்பு தெரிவிக்கிறது.  கல்புர்கியை கொல்ல பயன்படுத்திய அதே துப்பாக்கி, கவுரியை கொல்லவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என முந்தைய குற்றப்பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

பயங்கரவாத கருத்துக்களை பரப்பிவருவதோடு, அறிவுஜீவிகள் மீது திட்டமிட்டு படுகொலைகளை ஏவி வரும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு இன்னமும் தடை செய்யப்படாமல் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மாறாக, காவி அரசு காவி பயங்கரவாதிகளை ஊக்குவித்து வளர்த்து வருகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க